Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?

Featured Replies

[size=6]இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?- கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கேள்வி![/size]

[size=5]இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக முடியும். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.[/size]

அத்துடன், தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'போர் முடிவடைந்த பின்னராவது அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் எம்மை மாத்திரமல்ல சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகளோ, உதவிகளோ வழங்கப்படவில்லை. சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகளே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இலங்கை தமிழ் மக்களின் பூர்வீக நாடு என பௌத்தர்களின் புனித நூலான மகாவம்சமே கூறியுள்ளது. புத்தர் இரண்டாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்த போது யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்ததாகவும், புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது விஜயன் இலங்கைக்கு வந்தார் எனவும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நிலைமை மோசமாகி விட்டது. நாம் இலங்கை மக்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகின்றோம். இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களான சீக்கியரும், அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர்களான கறுப்பு இனத்தவரும் ஜனாதிபதியாக ஆகலாம். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர்கள் ஜனாதிபதியாக முடியாது.

1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இன்று ஆறு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

வடக்குக் கிழக்கு இணைந்த தீர்வுக்காகவே நாம் போராடி வருகின்றோம். கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் அனுபவித்து வரும் உரிமையினைக் கூட சொந்த நாட்டிலுள்ள தமிழர்கள் அனுபவிக்க முடியவில்லை. வடக்குக் கிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமி' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=70025989-ca93-45c1-8558-068ed2ca728e

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்களவர் புத்தமதம் இல்லாதவராக இருந்தாலே ஜனாதிபதியாக முடியாது.கிறிஸ்தவரான ஜே.ஆரே புத்தமதத்துக்கு மாறிய பின்னர் தான் ஜனாதிபதியாக முடிந்தது.இதற்குள் சிறுபான்மையினர் கனவில் கூட ஜனாதிபதியாக நினைக்கக்கூடாது.

திரு யோகேஸ்வரன் அவர்கள், இக்கேள்வியை நேரத்துக்கு நேரம் அரசியல் குத்திக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும், சிங்கக்கொடி ஏந்திய தானைத்தலைவர் திரு சம்பந்தரிடமும், பின் கதவால் உள் நுளைந்த முகமூடி மனிதன் சுமத்திரனிடமுமல்லவா கேட்க வேண்டும், எம்மிடம் எதற்கு??????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

பழைய கள்ளை ஏன் புது மொந்தயில் ஊத்தி கொடுக்கிறீர்கள்.. தந்தை செல்வா காலம் தொட்டு இப்படித்தான் அரசியல் வியாதிகள் பேசி பழகுறீங்க..

டிஸ்கி:

சரக்கு பழசு... அதை புது புது ஆட்கள் பேசறாங்க.. அப்படியே பேசிட்டே கிடைக்க வேண்டியதுதான் கடைசி வரைக்கும்...

[size=5]இந்தியக் காட்டுமிராண்டிகளின் ஜனாதிபதிப் பதவி - ஒரு செல்லாகாசுப் பதவி என்பதை அறியாமல் உளறிய யோகேஸ்வரனின் பேச்சு, அவரின் அரசியல் வறட்சியை காட்டுகிறது!

யோகேஸ்வரன் இந்தியக் காட்டுமிராண்டிகளை சரியாக விழங்கிக் கொள்ள வேண்டும். இந்திய அரச பயங்கரவாதிகளின் கைகூலிகளாக இயங்கும், தமிழனப் படுகொலைகளுக்கு துணை போன இந்து சேவா சங்கம், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புக்களுக்கு புலம் பெயர் ஈழத் தமிழரிடம் நிதி சேகரிக்கும் முயற்சியையும் உடன் கைவிட வேண்டும்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

ananda-300.jpg

பிக்குகளை, கைக்குள் போட்டால்...

ஆனந்தசங்கரி இலங்கை ஜனாதிபதியாக வர சந்தர்ப்பம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.