Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை ராஜபக்‌ஷ சகோதரர்கள் பதுக்கியுள்ளனர்?

Featured Replies

சுவிஸ் வங்கிகளில் இலங்கையரின் வைப்புக்கள் அதிகரித்துள்ளதாக சுவிஸ் பெடரல் வங்கி வெளியிட்ட 2002 – 2010ஆம் ஆண்டுகளுக்கான வங்கி அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கிய போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளின் போதும், இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களிலும் இலங்கையர்களினால் இந்த வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கியதை அடுத்து 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன.

இவற்றில் பெரும்பாலானவை எவ்வித நிபந்தனையோ, ஒப்பந்தமோ இன்றியே வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் சுமார் 30 வீதமானவை ஊழல், மோசடிக் காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஊடகச் செய்திகள் மூலம் பகிரங்கமாகியிருந்தன.

இவற்றில் பரபரப்பாக பேசப்பட்ட ஊழல் மோசடி, எட்டு கோடியே 26 லட்சம் ரூபா பணத்தை அந்நாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் அவரது பிரத்தியேக வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட சம்பவம் என்பது நினைவூட்டத்தக்கது.

”ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” என்ற வேலைத் திட்டத்தில் இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

2002 – 2010ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கையரினால் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்ட அதிகூடிய தொகை 2005ஆம் ஆண்டே பதிவாகியுள்ளது.

சுவிஸ் மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய அந்த நிதி, சுவிஸ் பிராங்க் 17 கோடியே 70 லட்சம் எனத் தெரியவந்தள்ளது.

இலங்கையரினால் அதிக கூடிய தொகை 2007ஆம் ஆண்டு வைப்பிலிடப்பட்டுள்ளது. இது 12 கோடியே 25 லட்சம் சுவிஸ் பிராங்க் ஆகும்.

குறித்த வருடத்தில் ரஷ்யாவிடமிருந்து இலங்கை, மிக் 27 ரகத்திலான ஆறு தாக்குதல் விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தது. இந்தக் கொடுக்கல், வாங்கலில், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தவிர 12 கோடியே 13 லட்சம் சுவிஸ் பிராங்க் நிதி 2010ஆம் ஆண்டு இலங்கையரினால் சுவிஸ் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

இந்த வருடத்திலேயே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை, சீனாவுடன் கையெழுத்திட்டது. இதன்போதும் பாரிய ஊழல் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் வாங்கிய கட்டிட தொகுதிகளும் இந்த லஞ்ச ஊழல் பணத்தில் வாங்கியவை தான்.

[size=4]இங்கே அடிப்படையில் இந்தப்பயங்கரவாதிகளுக்கு உதவுவது - சுவிஸ் வங்கியும் மேற்குலகமும்.[/size]

[size=4]ஆனால், சாதாரண குடிமகன் 10000 USD களுக்கு மேலாக வைப்பில் இட்டால் இல்லை அனுப்பினால் - ஆயிரம் கேள்விகளுடன் ஒரு குற்றவாளியை போன்று நடாத்துகிறார்கள்.[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாக்காரன் கொடுக்கும் காசு எங்கிட்டு போகுது..? புனர்வாழ்வு என்று மற்ற நாடுகள் கொடுக்கும் காசு எல்லாம் எங்கிட்டு போகுது..

டிஸ்கி:

இது என்னவோ கிந்தியாவில் நடக்குது அல்லவா சிறுவர் சிறுமிகள் கண்ணை குத்திவிட்டு பிச்சை எடுக்க விட்டு அந்த காசில் திண்னுகிறான் போல கிடக்கு

இவர்களின் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை கடத்தி கப்பம் கேட்டுத்தான் தமிழர்களிடம் பறித்த சொத்துக்களை மீட்க வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.