Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை'

Featured Replies

[size=5]"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்[/size]

[size=4]பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.[/size]

[size=4]முக்கியத்துவம்: இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்,79, கடந்த மூன்று ஆண்டுகளாக, மவுனமாகத் தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, டைம் பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது வாக, இப்பத்திரிகை வெளியிடும் அட்டைப் படம் தாங்கிய செய்திக்கு, உலக அளவில் அதிக முக்கியத்துவம் உண்டு.[/size]

[size=4]அதில் கூறப்பட்டிருக்கும் விவரம் வருமாறு: சுரங்க ஊழல் போன்றவற்றில், மன்மோகனுக்கு சம்பந்தமுண்டு என, சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால், ஏற்கனவே மன்மோகன் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. ஊழல் அமைச்சர்களை, இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் ஆட்சி யில், ரூபாயின் மதிப்பு குறைந்த விட்டது. பண வீக்கம் அதிகரித்துள்ளது.[/size]

[size=4]சந்தேகம்: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங், நிதிஅமைச்சர் இலாகாவை கூடுதலாக கவனிக்கிறார். இருப்பினும், இன்றைய சூழ்நிலையில், அவரால் சாதனை படைக்க இயலுமா என்பது, சந்தேகமாக உள்ளது. [size=5]ஏனென்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவுடன், அதிகாரப் பகிர்வு முறையில், மன்மோகன் சிங் செயல்படுவதால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. டம்மி போல செயல்பட வேண்டிய நிலை உள்ளது. [/size]மற்றும் முக்கிய மந்திரிகளை எதிர்த்தும், அவரால் செயல்பட முடியவில்லை. இவர் ஆட்சியில், விலைவாசி உயர்வு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை, வரும் 2014ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும். இப்போது, சற்று விழிப்படைந்து அவர் செயல்பட்டாலும், அது அதிக பலன் தராது. அதிக வளர்ச்சியை எட்ட, தற்போது அவர் கூறும் தகவல்கள், தாமதமான முடிவுகள். இந்தியாவின் நொறுங்கிப் போன பொருளாதாரம், பிரதமருக்கு கவலை தரும் அம்சம். இவ்வாறு, டைம் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.[/size]

[size=4]பா.ஜ., புகார்: பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிடுகையில், டைம் பத்திரிகை சொன்னது போல, மன்மோகன் சிங் சாதனையாளரே இல்லை. அவர் சாதித்ததெல்லாம் ஊழல், மோசமான அரசியல் தான் என்றார். டைம் பத்திரிகையின் விமர்சனத்தை மறுத்துள்ள, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிடுகையில், கடந்த எட்டு ஆண்டு காலமாக, பிரதமராக உள்ள மன்மோகன் சிங், அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஆட்சியில், சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள் பலப்பட்டுள்ளன. எனவே, டைம் பத்திரிகை குறிப்பிட்டுள் ளது, கற்பனையானவை என்றார்.[/size]

[size=4]லாலு ஆதரவு: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், அன்னா ஹசாரே குழுவினரின் தூண்டுதல் பேரில் தான், இந்த செய்தியை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்கள், பாராட்டுக்குரியவை. அமெரிக்காவின் பொருளாதார நிலையே நிலைகுலைந்துள்ளது. இதுபற்றி, அந்த பத்திரிகை என்ன சொல்கிறது? என்றார். நாட்டில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங் என, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.[/size]

http://tamil.yahoo.c...-180300123.html

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]இந்தியாவின் அத்தனை துயரங்களுக்கும் சோனியாதான் பொறுப்பு[/size]

[size=3][size=4]July 9, 2012[/size][/size]

[size=2][size=4]இந்தியா சந்தித்து வரும் அத்தனைத் துயரங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,[/size][/size]

[size=2][size=4]இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். இந்தியா இன்று சந்தித்து வரும் அத்தனை கஷ்டங்கள், துயரங்களுக்கும் சோனியா காந்தியே பொறுப்பாவார்.[/size][/size]

[size=2][size=4]இந்த மாபெரும் குற்றச்சாட்டிலிருந்து சோனியா காந்தியால் தப்பவே முடியாது. அவரது தவறான வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் தவறான ஆட்சியால்தான் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=109655

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.

அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.

ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.

போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

-தட்ஸ்தமிழ்

நாட்டில என்ன நடக்குது என்று தெரியாதவன் எல்லாம் காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் கட்சி இன்னும் உயிரோடை இருக்கு. விடயம் தெரிந்தவன் என்றால் இப்பவோ விலகி போய் இருப்பான்.

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]பொதுவாகேவே எந்த நாடிலும் இப்படி ஒட்டுண்ணி அரசியல் செய்பவர்களை மக்கள் இனம்காணத்தவறுவதே ஜனநாயகம் என்ற பெயரில் மக்களை வதைக்க முடிகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]இந்தியாவில் நேரு குடும்பம் என்ற வியாதி மிகவும் ஆழமாக பாதித்துள்ளது. அதை மக்கள் உணர்ந்து மருந்து தேடும்வரையில் உய்வில்லை. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.