Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மோடி தலைமையிலான அரசை பதவிக்கு கொண்டுவந்ததில் மிகப்பெரிய பங்காற்றியது வெளிநாட்டு உள் நாட்டு தொழில் அதிபர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தான் சோ மத்திய அரசின் முடிவுகள் அவர்களின் நலன் சார்ந்தே இருக்கும் காரணம் அதிகமான நிதியை செலவு செய்து தான் பிஜேபி ஆட்சியை மத்தியில் கொண்டுவந்தார்கள்....அவர்களுக்கு நன்மை அளிக்க கூடிய முடிவுகளை தான் எடுப்பார்கள் உதாரணம் மருந்து விலையேற்றங்கள் .....

இந்தியா என்றில்லை அநேகமான நாடுகளில் எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பது மக்களை விட அந்த நாட்டின் மீடியா அதிபர்களும் வங்கிகளும் சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களும், ஆயுத முகவர்களும் தான்......

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மனங்களை வெறும் கோடிகளில் கொட்டி செய்யப்படும் அபிவிருத்தியூடாக வென்று விடலாம் என்றால் அது சிங்கள தலைவர்களின் கனவாக தான் இருக்க முடியும் ..... அபிவிருத்தி என்பது ஒரு அரசின் கடமை .... அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களின் உரிமை..... நாளையே தேர்தல் நடந்தாலும் அபிவிருத்தியை மட்டும் மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க போவதில்லை....மக்கள் கோருவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் தீர்வு அதனூடான அபிவிருத்தி...... மக்கள் மீது அழுத்தங்களை வைத்துக்கொண்டு அபிவிருத்திகளை அனுபவி என்றால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாது.....வெறும் ரெயில்களும் ரோடுகளும் மக்கள் மனங்களை வெல்லப்போவது இல்லை என்ற கசப்பான உண்மையின் தரிசனம் தான் நடந்து முடிந்த வடக்கு மாகான சபை தேர்தல் முடிவுகள்

ஆக எங்களுக்கு தேவை வெறும் அபிவிருத்திகள் மட்டுமல்ல அரசியல் தீர்வுடன் கூடிய அபிவிருத்தி....நீங்கள் தருவீர்களா? நீங்கள் தருவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போனாராம்.. சென்னை திரும்பியதும், தன்னை ஆசி கூறி அனுப்பிய ஆன்மீகப்புள்ளிக்கு தனது கைப்பட கடிதம் எழுதினாராம். அதில் "நீங்கள் அருள்வாக்கு கொடுக்கும் அன்று நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்காக காத்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இந்த கடித விஷயம் பாஜக தரப்புக்குத் தெரிய வந்த பிறகுதான், ரஜினியை நெருக்க ஆரம்பித்தனர் பாஜகவினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இந்திய நிறுவனமான flipkart நிறுவனத்தை மூட அல்லது அதை விற்க வைக்க மத்தியில் இருப்பவர்களின் உதவியுடன் மிகப்பெரிய சதி நடப்பதாகவே தோணுது.... இந்தியாவின் மிகப்பெரிய online வியாபார சந்தைய பிடிக்க நினைக்கும் உலகின் மிகப்பெரிய அந்நிய நாட்டு நிறுவனங்கள் இதன் பின்னால் இருக்கு.........

எல்லாம் அரசியல் எங்கும் அரசியல்... பலம் பொருந்தியவனால் எதையும் சாதிக்க முடியும் எதையும் வாங்க முடியும் அதற்க்கு மண்ணின் மைந்தர்களும் உதவி என்கின்ற நிலை தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சிறையில் இருந்து கிளம்பி வந்து எங்கே தங்க மீது சீற்றத்தை காட்டினாளுமோ என்ற பயத்தில தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் அடக்கி வாசித்துக்கொண்டு இருக்கும் நிலைமையில் ராமதாஸ் மட்டும் துணிந்து தினமொரு அறிக்கை கண்டனம் என்று வெளியிட்டு மிக சிறப்பா அரசியல் செய்கின்றார்

பாராட்டுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாண்டவரோட கெளரவம் அவங்க காட்ல திரிஞ்சப்ப இல்லை சொந்த ஊர்ல சொந்த மக்களோட இருந்தப்ப தான்.... வெளிநாட்டு வாழ்க்கை என்பது பாண்டவரோட காட்டு வாழ்க்கை மாதிரி தான் உழைக்கும் மட்டும் உழைச்சு போட்டு சொந்த ஊர்ல வந்து செட்டில் ஆகிடறது தான் ஒவொரு மனுஷனுக்கும் கெளரவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.நல்ல நம்பிக்கை

2.நல்ல பேச்சு

3.நல்ல வாழும் வழி

4.நல்ல சிந்தனை

5.நல்ல முயற்சி

6.நல்ல நடத்தை

7.நல்ல செயல்

8.நல்ல தியானம்.

இவை அனைத்தையும் புத்தமதத்தை உயிர்மூச்சாக கொண்டு அப்பாவிகளை துன்புறுத்தாத கொலைகள் ஏதும் செய்தறியாத சிங்களத்திடம் இருந்து கத்துக்கலாம்.....

நீங்க செய்யவேண்டியது ஒன்றே ஓன்று தான் ஸ்ரீ லங்கன் airline ல டிக்கெட் புக் பண்ணி அங்க போய் இறங்க வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்

1.நல்ல நம்பிக்கை

2.நல்ல பேச்சு

3.நல்ல வாழும் வழி

4.நல்ல சிந்தனை

5.நல்ல முயற்சி

6.நல்ல நடத்தை

7.நல்ல செயல்

8.நல்ல தியானம்.

இவை அனைத்தையும் புத்தமதத்தை உயிர்மூச்சாக கொண்டு அப்பாவிகளை துன்புறுத்தாத கொலைகள் ஏதும் செய்தறியாத சிங்களத்திடம் இருந்து கத்துக்கலாம்.....

நீங்க செய்யவேண்டியது ஒன்றே ஓன்று தான் ஸ்ரீ லங்கன் airline ல டிக்கெட் புக் பண்ணி அங்க போய் இறங்க வேண்டியது தான்

 

 

இது  சொர்க்கம் - நரகம் என்றால் எப்படி  என அறிய

மேலே வாருங்கள் என்பது போலுள்ளது

ஏன் இந்த கொலைவெறி  ராசா....

 

தொடருங்கள்

ஒவ்வொரு நாளும் பார்க்கும் பதிவு இது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வசதியும் இருக்கிற யாழ் தேவியில் வெளிநாட்டில் இருந்து வந்த களைப்பு தீர குடிக்க கள்ளு கிடைக்குமா?

புலம் பெயர் டூரிஸ்ட் தமிழர்கள் கேள்வி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா புரியாணி வாங்கி கொடுக்க நிறைய செலவாகும் எண்டதுக்காக அம்மா விடுதலையாகும் மட்டும் மரக்கறி தான் சாப்பிடனும் எண்டு ஜோசியக்காரர் சொன்னதா கதை அள்ளி விட்டிட்டீங்களே டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட இன்று 7 G ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி சரியாக 10 வருடங்களாம்.....

படம் பாத்த அத்தனை pரையும் அந்த திரைப்படத்தின் முடிவு நிச்சயம் பாதித்திருக்கும் அதுவும் குறிப்பா இந்த பாடலை எத்தனை தரம் கேட்டிருப்போம் வந்த புதிதில்.....

பேசி போன வார்த்தைகள் எல்லாம்

உனது பேச்சில் கலந்தே இருக்கும்

உலகம் அழியும் உருவம் அழியுமா?

பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்...உனது விழிகள் என்னை மறக்குமா?

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும் ...

திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும்....

ஒருதருணம் என்னடா காதலா

உன்னில் வாழ்கிறேன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் பல நல்லதுகளை இந்தியாவிற்கு செய்திருந்தாலும் அவர் செய்த மிகப்பெரிய நல்லது சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமர் ஆகவிடாமல் தடுத்தது......

‪#‎பிறந்தநாள்‬ வாழ்த்துகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ட‌ல் நல்லாய் இருக்குது தொட‌ருங்கோ.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, தமிழன் மற்றும் தமிழ்நாடு முன்னேறியது தமிழனின் தனி திறமை. இதற்க்கு எந்த அரசியல்வாதியாவது உரிமை கோருவேரானால் அவர் மீதி சமூக நீதி வழக்கு தொடுக்க தயாராகவே உள்ளது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஹிந்தி மொழி இந்தியாவில் பெரும்பாலும் பேசப்படுவது, ஆனால் அந்த ஹிந்தி மொழி உலகின் வேறு எந்த நாட்டிலும் ஆட்சி மொழி அல்ல. தமிழ் மொழி ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் பேசப்படுவது, ஆனால் அதுதான் ஆசியாவின் பணக்கார நாடான சிங்கப்பூரில் ஆட்சி மொழி தெரியுமா உங்களுக்கு? மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் தமிழர். இலங்கையின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மலேசியா மற்றும் மொரிசியஸ் ஆகிய‌ நாடுகளில் பெரும்பான்மையோர் (இந்திய இனத்தில்) தமிழர்களே !!

இந்திய மொழிகளில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமை , அதாவது உலகத்தில் உள்ள நாடுகளிலேயே , அதுவும் பணக்கார நாடான சிங்கப்பூரில் ரூபாய் நோட்டில்($$$) இடம் பெற்றுள்ள ஒரே மொழி தமிழ்தான். ஹிந்தி அல்லது எந்த லாடு லபக்கர் மொழிக்கும் இந்த பெருமை கிடையாது. (நினைவூட்டல் நன்றி நண்பரே)

இங்கே எல்லாம் உங்கள் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போய்தான் அவற்றை வளர வைத்தாரா? இல்லை வேறு எந்த தமிழகத்தின் அரசியல் "வியாதியாவது "அந்த நாட்டு தமிழரை எல்லாம் வளர வைத்ததா?

இவர்கள் எல்லாம் அங்கே இல்லாததால் தான் சிங்கப்பூர் போன்ற நாட்டில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக முடிந்தது , தமிழன் வளர முடிந்தது என்பதை நான் அடித்து கூறுவேன் !

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு.!

தமிழனும் தமிழ்நாடும் மற்ற இந்திய மாநிலங்களில் முன்னேறி உள்ளார்கள் என்றால் அதற்க்கு தமிழனின் தனி சிறப்பும் அவனது விடா முயற்சியும் , அறிவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால்தான் சொன்னார்கள் :

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!"

கருணாநிதியும் , ஜெயாவும் இல்லை என்றால் தமிழகம் என்றோ வளர்ந்திருக்கும், இலவசங்களாலும் , டாஸ்மார்க் ஆகியவற்றால் தமிழகம் சீரழிந்திருக்காது அதுவே உண்மை. அவரும் ஜெயாவும் தமிழகத்துக்கு செய்த அனைத்தும் கொட்டாம்பட்டி குமரேசன் முதல்வராக இருந்தாலும் செய்திருக்க கூடியதே ! அதை நினைவில் கொள்ளுங்கள்!

Thanks karthik

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்கு ஓரளவு வயது வந்திட்டு அவர் இன்னும் ஒரு 10 படத்தில் நடிச்சு 100 கோடி சம்பாதிப்பதை விட சிரஞ்சீவி மாதிரி ஒரு கட்சியை ஆரம்பிச்சு தேசிய கட்சியிடம் அதை ஒரு நல்ல விலைக்கு கூட விற்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று டெல்லியில் இது தொடர்பான பணியிலே இருக்கின்ற வழகறிஞர் நண்பர் ஒருவர் கூறி இருக்கின்றார் பாப்போம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று டெல்லியில் இது தொடர்பான பணியிலே இருக்கின்ற வழகறிஞர் நண்பர் ஒருவர் கூறி இருக்கின்றார் பாப்போம்......

 

எனது தற்போதைய பார்வையில் ஜெயலலிதாவின் ஊழல்கைது ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னணியாகவே தெரிகின்றது. இறுதியாக நடந்த ஜாமீன் சம்பந்தப்பட்ட வழக்கில் தில்லுமுல்லுகள் அதிகம் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. இந்த செய்தி விவகாரத்தில் சாமர்த்தியமாக பிபிசி ஊடகம் வெளியேறியது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
 
பெரியபெரிய பிலாப்பழ திருடர்கள் வெளியே இருக்கும் போது ஒரு அரசியல் உச்சத்தில் இருக்கும் மக்கள் சக்தியுள்ள ஒருவரை ஒரு கதலிவாழைப்பழ திருடியை போல் நடத்துவது பலத்த சந்தேகத்தையே எழுப்புகின்றது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரை இழிவுபடுத்திய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 'நாட்டைமை' சரத்குமார்/////////

முந்தைய ஆளுநர் சென்னா ரெட்டி சேலையை பிடித்து இழுத்தவர் என்று சொன்னதை விட கருணாநிதி சொன்னது பருவாயில்லை....செம்பு....சரத்குமார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு இன்று கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என்று இந்த வழக்கில் பணியாற்றிய என்னுடைய நண்பன் சொன்னதாக நான் நேற்றே எழுதியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அம்மா"

திரைப்படம் இன்று வெளியாகின்றது

காணத்தயராகிங்கள்

அதிரடி , action , செண்டிமெண்ட்

என்று அனைத்தும் கலந்த மசாலா திரைப்படம்......

கதையின் கதாநாயகி சும்மா பாய்ந்து பாய்ந்து அடிப்பதால் எத்தனை தலைகள் உருள்கின்றன என்பதனை திரையில் பார்த்து மகிழுங்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் bail அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் சோ அவர் bail ல ஜெயில் ல விட்டு வந்தாலும் கிட்டத்தட்ட வீட்டுக்கைதி போல தான் இருக்கணும்.....யாவருடைய நடவடிக்கைகள் அனைத்தையும்

கண்கொத்தி பாம்பா எதிர்கட்சிகள் பாத்திட்டு இருக்கும்....,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருக்க கூடிய ஓரளவு சுதந்திரமான நீதித்துறை இலங்கையில் இருக்குமானால் பல அரசியல் வாதிகள் இப்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருப்பார்கள்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா தொடர்பான இந்த வழக்கில் ஒரே ஒரு தவறான தகவல் தந்ததுக்கு மட்டும் மனம்வருந்துகின்றேன் ஆரம்பத்தில் ஹரிஷ் சால்வே இந்த வழக்கில் ஆஜராவார் என்று குறிப்பிட்டுருந்தேன் எனினும் அவரால் 21 ஆம் திகதிக்கு பிறகு தான் லண்டனில் இருந்து வரமுடியும் என்றதனால் ஜெயா சார்பில் நரிமன் அமர்த்தப்படார்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கி, எலி என்று சுப்ரமணிய சுவாமி சொல்லுவதை எல்லாம் இந்திய நீதிமன்றங்கள் கண்டுக்காதா?

இல்லது இதை நீதிமன்றம் வரை எடுத்து செல்ல யாருக்கும் துணிவு இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இரத்தத்தின் இரத்தங்களே நீங்க கேட்ட மாதிரியே கர்நாடகா உங்க அம்மாவ திருப்பி உங்க கிட்டயே குடுத்தாச்சு ஆனா நீங்க சொன்ன மாதிரி இனிமேல் காவிரில தண்ணி கேட்டு அடம்பிடிக்க கூடா ஓகே வா?

வேணும்னா டாஸ்மாக் தண்ணி தரலாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.