Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோகத்தார்.. தொலைபேசியில்:

நான் இன்னைக்கு மதியம் வீட்டுக்கு ஒரு பிரண்டோட வரேன்... லஞ்ச் ரெடி பண்ணிடு...

அக்காவின் பதில்:

இருங்க இருங்க... என்னோட friend என்னை லஞ்சுக்கு கூப்பிட்டிருக்கா... அதுனாலே... நீங்களே வந்து சமைச்சு சாப்பிட்டுக்கோங்க.....

யோகத்தார் :

ம்... ஆஹா அப்படியா.. சரி சரி லஞ்சுக்கு நான் மட்டும் வரேன்... என்னையும் உன் பிரண்டு வீட்டுக்கே கூட்டிட்டு போயிடு..

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல கூட்டணி கட்சிகளை எதிர்வரும் தேர்தல்களில் கழட்டிவிட்டு தாங்களே நேரடியாக களம் இறங்கும் ஒரு முயற்சியாகவே புதிய மோடியின் அமைச்சரவை மாற்றம் இருக்கின்றது.....பஞ்சாபின் அதன் கூட்டணி கட்சியான பாதல் கட்சிக்கு போட்டியாக பாரதிய ஜனதாவை பலப்படுத்து ஒரு முயற்சியாகவே அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர்களை புதிய அமைச்சரவைக்குள் மோடி கொண்டு வந்திருப்பது தெளிவாக எடுத்துக்காட்டு கின்றது.....

ஆக மொத்தம் மோடியின் ஹிட் லிஸ்ட் இல் முதலில் இருந்தது

ஷிவ சேனா

இப்பொழுது பஞ்சாபின் பாதல்.....

மெல்ல மெல்ல மாநில கட்சிகளின் செல்வாக்கை குறைப்பதற்கு தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி நீண்டகால திட்டம் போட்டு செயல்ப்படுவது புரிகிறது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை இந்திரா காந்தி அம்மையாருக்கு பிறகு இந்தியா பெற்றிருக்கும் மிக சிறந்த உறுதி வாய்ந்த கடும் போக்கான தலைவர் மோடி என்பதனை மோடி அவர்களின் பிஜி நாட்டிற்கான ஒரு நாள் விஜயம் எடுத்துக்கூறி நிற்கின்றது , இந்திரா காந்தி அம்மையாரின் விஜயத்திற்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவரே.....

இந்தியாவில் இருந்து கரும்பு தோட்டத்தில் கூலி வேலைகளுக்காக கொண்டு சென்று குடியமர்த்தப்பட்ட இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பாலும் ...... புத்திசாலித்தனத்தாலும் அந்த நாட்டு மக்களை விட உயர்ந்தார்கள்.... அதனால் எரிச்சல் உற்ற அந்த நாட்டில் அடிக்கடி தோன்றும் இராணுவ ஆட்சியாளர்கள் காலம் காலமாக பிஜி நாட்டு இந்தியர்களை கொடுமைக்கு ஆளாக்க வசதி படைத்தவர்கள் வெளியேறி பல்வேறு நாடுகளில் வாழ முடியாதவர்கள் அங்கயே இன்னும் இருக்கின்றார்கள் .... மோடி அவர்களின் விஜயம் அவர்களுக்கு ஆறுதலை , அரசியல் தென்பை கொடுக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையாக இருந்த அர்னாப்பும் ராஜபக்சேவுடன் நட்பாக இருக்கும் நீங்கள் ஏன் 5 மீனவர்களை விடுதலை செய்ய முடியவில்லை என்று திரும்ப திரும்ப கேட்க கோபத்தின் உச்சிக்கு போனார் சுவாமி. இதனால் அர்னாப்பை 5 நிமிட நேரத்துக்கும் மேலாக பொய்யர், முட்டாள் என்று லைவ் நிகழ்ச்சியிலேயே வசைமாறி பொழிந்தார் சுப்பிரமணியன் சுவாமி/////

நல்லது ரெண்டு பேரும் தமிழினத்துக்கு எதிரானவங்க தான் அதானல ஒருத்தர ஒருத்தர் அசிங்க படுத்தியே சாகுங்க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழன் ஆரிய அடிமை - கீ வீரமணி /////

யோவ் அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல திராவிடர் கழக சொத்துக்கு கணக்கு காட்டுய்யா.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பினாமி முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே நா காக்க: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!////

சபாஷ் இப்ப தான் தமிழ்நாடு அரசியல் களம் நல்லா சூடு பிடிக்க தொடங்கி இருக்கு....

இப்பொழுது பதில் அறிக்கையோடு பன்னீர் செல்வம் அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைகின்றோம் .......

பன்னீரு ஒருதரம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் இந்தியா வந்து புதிய நிறுவனங் களுக்குக் கோடிக் கணக்கில் காசோலை வழங்கிய "சாப்ட்" வங்கியின் தலைவர் மாசயோஷிசன், இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் அளவை விசாரித்திருக்கிறார். 12.76 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாட்டில் 200 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் கொண்டிருப் பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜப்பானைவிட பத்து மடங்கு பெரியதான இந்தியாவில் 40 மெகா ஹெட்ஸ் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அடிப்படையான இந்த உள்கட்டமைப்பின் அவசியம் குறித்து நாம் அனைவரும் வாய்மூடி மௌனிகளாகவே இருக்கிறோம். இதற்கான காரணம் மிகவும் எளிதானது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ‪#‎2G‬ விவகாரத்தில் சி.ஏ.ஜி., ரூபாய் 57 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை பல்வேறு தொகையைக் குறிப்பிட்டு, அதை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகத் தெரிவித்த போதுதான், அனைவரும் சி.ஏ.ஜி. அதிகப்பட்சமாகக் குறிப்பிட்ட தொகையையே அரசியல் காரணங்களுக்காகத் தேர்வு செய்து பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் நடத்தப்பட்ட புதிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மிகவும் சொற்பமான தொகையே அரசுக்குக் கிடைத்த போது, முதலில் பிரச்சாரம் செய்த 1.76 லட்சம் கோடியெனும் மலைக்க வைக்கும் கற்பனைத் தொகையை நியாயப்படுத்துவதற்கு ஏற்கனவே பூதாகாரமாகப் பிரச்சாரம் செய்தவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு இந்திய தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியும் இந்தியாவின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியும் கற்பனைக் கதவுகளினால் மூடி சிறைப்பிடிக்கப் பட்டுள்ளன. இதைச் சரி செய்வதில் பா.ஜ.க. அரசு மிகப் பெரிய சங்கடத்தை எதிர்கொள்ளவிருக்கிறது. ‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬ ‪#‎karunanidhi‬ ‪#‎BJP‬ #2G

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை அடைவதற்காக எந்தவித சுயநலமுமின்றி அகிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா, 2009ஆம் ஆண்டுவரை ஆயுதப் போராட்டத்தை நடாத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியவர்கள் மீது நான் உலகிலும் மிகுந்த மரியாதையுடன் உள்ளேன்.

அந்த வரலாற்றுப் பாதையில் வளர்ந்த போராட்டத்தை என் உயிரிலும் மேலாக மதிக்கிறேன்.

நான் கடும் போக்காளனோ அல்லது ஆயுதப் போராட்டத்தை விரும்புபவனோ அல்ல. ஆனால் ஆயுதப் போராட்டம் எந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டதென்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஒருவரும் தானாக விரும்பி கழுத்தில் சைனைட்டும் கையில் துப்பாக்கியையும் ஏந்தமாட்டான். மாறி மாறி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் விரத்தியடைந்த தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

கல்வியே தமது சொத்து என வாழ்ந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டமைக்கு பல காரணங்களிருந்த போதிலும் தரப்படுத்தல் சட்டம் முக்கிய பங்கை வகித்தது.

போராட்ட இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் இயக்கங்களில் இணைந்தவர்களும் 1950ம் ஆண்டிற்கும் 1957ஆம் ஆண்டிற்குள்ளும் பிறந்தவர்கள் தரப்படுத்தல் சட்டத்தினால் பாதிப்பிற்கு உட்பட்டவர்களுமேயாவர்.

தரப்படுத்தல் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். இழப்புக்களை, துன்பங்களை, வேதனைகளை சந்தித்தவர்களின் மன வேதனைகளை புரிந்து கொள்பவர்கள் உணர்ந்து கொள்பவர்களே அரசியலில் நிலைக்கமுடியும்.

நேர்மையான அரசியல்வாதி கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் வழங்க வேண்டும். தம்பி ரவிராஜ் தனக்கு எதிரான கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் வழங்கியவர்.

ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டவர் நாம் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் விமர்சிக்கப்படுகின்றார் எனில் விமர்சனத்திற்குள்ளானவர் அங்கீகரிக்கப்படுகின்றார் என தெரிவித்தார்.

‪#‎சிரேஷ்ட‬ ‪#‎சட்டத்தரணி‬ ‪#‎தவராஜா‬ கொழும்பில், படுகொலை செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவுரையில் கூறியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துகளை நாம் எடுத்து இயம்பும் போது மிக்க கவனம் அவசியம்.

அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள்.

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம்.

இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

G20 மாநாட்டுக்கு வந்திருக்கும் தலைவர்கள் எல்லாம் பாதுகாப்பை காரணம் காட்டி ஹோட்டல் அறைகளிலையே பதுங்கி இருக்க German அதிபர் மட்டும் Brisbane வாழ் உள்ளூர் வாசிகளை சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடனில் ஒரு வைத்தியசாலையின் விளம்பரத்தில் இப்பிடி இருக்கு

A /C வசதியுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர் ......

இந்த விளம்பரம் தேவையா? அங்க உக்காந்து என்ன படமா பாக்க போறாங்க? இல்லது குடும்பத்தோட உக்காந்து பாமிலி மீல்ஸ் சாப்பிட போறாங்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வண்டலூர் பூங்காவில் மதில் சுவர் இடிந்து தப்பியோடிய புலி-//////

இந்த புலி தான் Paris வரைக்கும் சென்று France போலீஸ்க்கு போக்கு காட்டி இருக்குபோல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாக சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.//////

ஆக புலிகளை ஒழித்து விட்டீர்கள் என்று சொன்னாலும்.....உங்களுக்கு நிம்மதி இல்லை......இதற்க்கு ஒரே வழி தமிழர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்கின்ற ஒரு தீர்வை தருவது தான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ரஷ்ய அதிபர் புட்டின்....... ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மன்,பிரான்ஸ் ,அமெரிக்கா அதிபர்கள் வளைச்சு வளைச்சு தாக்கியதில் G 20 நாடுகளின் மதிய விருந்தை புறக்கணிச்சிட்டு கோவிச்சிட்டு போயிட்டாரு.....

இவிங்க மட்டும் தேவை இல்லாமல் ஈராக் , ஆப்கானிஸ்தான் என்று ஊர் வம்புக்கு போகலாம் ஆனா ரஷ்யா உக்ரேனியன் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாதாம்.....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ரஷ்ய அதிபர் புட்டின்....... ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மன்,பிரான்ஸ் ,அமெரிக்கா அதிபர்கள் வளைச்சு வளைச்சு தாக்கியதில் G 20 நாடுகளின் மதிய விருந்தை புறக்கணிச்சிட்டு கோவிச்சிட்டு போயிட்டாரு.....

இவிங்க மட்டும் தேவை இல்லாமல் ஈராக் , ஆப்கானிஸ்தான் என்று ஊர் வம்புக்கு போகலாம் ஆனா ரஷ்யா உக்ரேனியன் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாதாம்.....

 

ரஷ்யா பக்கம் நியாயம் இருக்கேக்கை ஒண்டுக்கும் மசிய மாட்டான் சிங்கன்... 

Vladmir-Putin-Dance-Gif-In-a-Snappy-Suit

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலபரப்பு, மக்கள்தொகை, வாழ்வாதாரம், கலாச்சாராம், ஆட்சி அதிகாரங்கள் இவைகள் எல்லாம் பல்கி பெருகி இருக்கின்ற ஒரு பேரினவாத சக்தியிடம் அகப்பட்டுக்கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மை சக்தியினால், தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைந்து, அதிகாரப் பகிர்வுகளின்றி, அரசியல் உரிமையின்றி, மனித உரிமைகளின்றி, பண்பாட்டு விழுமியங்களை தொலைத்து, நிலங்களை இழந்து, மொழியினை மறந்து, அதிகாரவர்க்கங்களின் ஆளுமைக்கு உட்பட்டு, உறளில் அகப்பட்டுக்கொண்ட எறும்புகளைப்போல், அன்றாடம் நசுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களை சுமந்து, தொலைந்துகொண்டு இருக்கிற சிறுபான்மை இனம். இனியும் இப்படி இருக்க இயலாது, எங்களை உங்கள் பிடியில் இருந்து விட்டுவிடுங்கள். எங்கள் நிலம் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளை நாங்கள் காப்பாற்றிக்கொண்டு, சுயாட்சியோடும் சுய உரிமையோடும் வாழவேண்டும் என்று வெகுண்டு எழுந்து நிற்பதே விடுதலை போராட்டமாகும், உங்களோடு எங்களால் வாழ இயலாது தயவு செய்து உங்களின் கோரப்பிடியில் இருந்து விட்டுவிடுங்கள் என்று கேட்கும் சிறுபான்மை மக்களை.

தங்கள் பிடியில் இருந்து விடுவித்து அவர்களும் வாழ்ந்து போகட்டும் என்று என்னாத பேரின வேரிவாதம், விடுதலைக் கோரும் மக்களை தங்கள் கூலிப்படைகளின் மூலம் அடக்கி ஒடுக்க முற்படும், விடுதலை தாகத்தில் வீறுகொண்டு எழும் மக்களை அடக்க, அதிகாரக் கூலிப்படைகள் ஆயுதங்களை பிரயோகிக்கும், இதன் விளைவு, அந்த ஆயுத அதிகாரவர்க்கத்திடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள விடுதலைபோராட்ட சிறுபான்மை இனம் தங்கள் கையிலும் ஆயுதம் எடுக்கும்.

ஆனால் இவர்கள் ஆயுதம் எடுத்தது குற்றம் என்று பேரினவாதம் கூறும். ஒரு மனித இனம் இன்னொரு மனித இனத்தை தாழ்மையானவர்கள் என்று கருதுவதோ, அவர்களை சரிசமமான முறையில் நடத்தப்படாமல் ஒடுக்குவதோ மிகப்பெரிய குற்றம் என்பதை இதுவரை எந்த ஒரு பேரினவாத சக்தியும் ஒப்புகொண்டதே இல்லை.

பிரிவினைவாத கோட்பாடுகளை கொண்ட அதிகார வர்க்க ஆளுமைகள் இருக்கும்வரை, சிறுபான்மை இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் தொடரும்.

எனவே, ஒரு பேரினவாத சக்தியிடம் அகபட்டுகொண்ட சிறுபான்மை இனம், அவர்களின் கொடூர ஆளுமையின் போக்கை பொறுக்க முடியாமல், ஐயோ சாமி எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிகேட்டு, அதில் முடியாமல் போனால், கடுமையான போராட்டத்தின் மூலம் தம்மை பேரிவாத பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள முயலுவதே விடுதலை போராட்டமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.: ரஜினி காந்த்///////

ரஜனி சாகும் மட்டும் இதை தான் சொல்லிட்டு இருப்பாரு மீடியாவும் இதை பெருசா போட்டிட்டு இருப்பாங்க ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பாஜக அலுவலகத்திற்கு அல் கொய்தா வெடி குண்டு மிரட்டல்!!/////

இல கணேசனுக்கு கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் இதய அறுவை சிகிச்சை நடந்தது இப்பிடி எல்லாம் அதிர்ச்சி செய்திகள பரப்பி மனுஷன மறுபடியும் நெஞ்ச பிடிக்க வைச்சுடாதேல்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாமியார் என்றாலே மூச்சு முட்டிப் போய் விடும். இதில் குண்டு குண்டாக, முரட்டுத்தனமாக பல மாமியார்களை ஒரே நேரத்தில் பேச விட்டால் எப்படி இருக்கும்.. இவர்களின் பேச்சைக் கேட்க கேட்க, இவர்களுக்கு மருமகள்களாக வாய்த்த அந்த சகோதரிகளின் தினசரி வாழ்க்கை ஒரு "செகன்ட்" மனதில் மின்னல் மாதிரி ஓடி பெரும் கிலியை ஏற்படுத்தி விட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோபிநாத் வைத்த பெயர் நான் கண்டிப்பான மாமியார், நான் தோழமையான மாமியார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவிருக்கும் இசை படத்தின் சில காட்சிகளை பார்த்தால் யாரோ இரண்டு இசை அமைப்பாளர்களின் உண்மை கதை மாதிரி இருக்கு..... இந்த படத்தில் sj சூரியா தலை வாரியிருக்கும் முறையை பார்த்தால் இளையராஜாவின் இளமைக்கால ஹேர் ஸ்டைல் மாதிரி இருக்கு.... அப்போ வில்லனா நடிக்கும் சத்தியராஜ் MSV யா இருக்குமோ?

எதுக்கும் படம் வந்தா தான் தெரியும் அந்த இசையமைப்பாளர்கள் யார் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாமியார் என்றாலே மூச்சு முட்டிப் போய் விடும். இதில் குண்டு குண்டாக, முரட்டுத்தனமாக பல மாமியார்களை ஒரே நேரத்தில் பேச விட்டால் எப்படி இருக்கும்.. இவர்களின் பேச்சைக் கேட்க கேட்க, இவர்களுக்கு மருமகள்களாக வாய்த்த அந்த சகோதரிகளின் தினசரி வாழ்க்கை ஒரு "செகன்ட்" மனதில் மின்னல் மாதிரி ஓடி பெரும் கிலியை ஏற்படுத்தி விட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோபிநாத் வைத்த பெயர் நான் கண்டிப்பான மாமியார், நான் தோழமையான மாமியார்.

 

உண்மையாக இந்தக் காலத்திலும் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, ஆண்டவா ஒரு விடையத்திலயாது கடவுள் என்னைக் காப்பாத்திட்டான் என்று சந்தோசப்படுகிறன்..நான் பழகிய வட்டத்தில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களும் ஒரு மனிதப் பிறப்பாக இருக்க கூடியவர்களுக்கு உள்ள உணர்வுகளை கொன்று விட்டது என்றும் சொல்லலாம்.கோபி நாத்தின் நிகழ்சிகளில் அனேகமானவை பெண்களை,பெண்களே இழிவு படுத்தும் நிகழச்சிகளாகவே அமைவது ஏனோ பார்க்க வெறுப்பை ஊட்டும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சீன ஜனாதிபதி ஆஸ்திரேலியா பாராளுமன்றில் பேசிய பொழுது 2050 ஆம் ஆண்டுக்குள் முழுக்க முழுக்க சீனா ஜனநாயாக நாடாக மாறிவிடும் என்று கூறி இருக்கின்றார்......சீனா இப்பொழுது பெற்றிருக்கும் தலைவர் ஒரு சீர்திருத்த வாதி.....ஊழல்களை அடியோடு வெறுப்பவர்....மக்களை நேசிப்பவர்.....வாழ்த்துக்கள்......

இப்பொழுது இந்தியாவும்...சீனாவும் இரண்டு நல்ல தலைவர்களை நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களை பெற்றிருக்கின்றார்கள்...என்பது தான் வெளிநாட்டு தலைவர்களின் பொதுவான கருத்து.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகும் telegraph பத்திரிகையில் நேற்று மோடிக்கு திரண்ட கூட்டத்தை பார்த்து இன்றையை செய்தியில் பெரிதாக இப்பிடி போட்டிருந்தது.....

YOU could have been forgiven for thinking the Rolling Stones were back in town as thousands of screaming fans last night packed out Allphones Arena to hear an address from visiting Indian Prime Minister Narendra Modi.

மோடி டா அதிரடி டா சரவெடி டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை அண்ணாச்சி இப்போ ரொம்ப தொய்ய விட்டிட்டார்......கிட்டத்தட்ட அதே பாணியில் ஆனால் சினிமா டயலாக் மட்டும் பேச வைச்சு எடுக்கப்படும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியை ஆதவன் அந்த மாதிரி நடத்திறார்.......மொத்தத்தில் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிடிச்சு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே அழகும் அதே இளமையோடும் இருப்பது நயன்தாரா தான்

#ஹாப்பி பர்த்டே நயன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.