Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிக்கால் ஜி: டேய் சுண்டல் உங்க மாமா அமெரிக்கா போனாரே அங்க என்னவா இருக்கார்......

சுண்டல் ஜி; அங்கயும் எங்க மாமாவா தான் இருக்கார்:D

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply

என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவன துப்பாக்கிக்குள்ள போடா முடியா ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு நூறுவீதம் அவ்வளவும் உண்மை.எனக்கு தெரிஞ்ச சொந்த அனுபவத்திலை உதுவும் ஒண்டு :lol::D

அதுவும் திங்க கிழமை மேட்டர் ரொம்ப சரியா இருக்கு :D

அம்மாடியோவ் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது, பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு பைலட்டிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது பைலட்டை தொடர்பு கொண்ட போதும், பதில் கிடைக்கவில்லை.

நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள், தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது பைலட் தூங்கி கொண்டே தான் இருந்தார்.

இவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது.இது குறித்து, பைலட்டுகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், "விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்' என்றனர்.விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இவங்கள நம்பி விமானங்கள்ள ஏறி இருக்க முடியாம இருக்கே உசிர கைல வைச்சிட்டு தான் இருக்கணும் என்னமா flight ஓட்டுறாங்க

இதெல்லாம் ஒரு உதாரணம் இப்பிடி அறியப்படடாத செய்திகள் இன்னும் ஏராளம்

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் தானியங்கி முறையில் (Auto pilot) பறப்பதால் ஒருத்தர் நித்தா கொள்ளலாம்.. தப்பில்லை..

ஒருமுறை கிரேக்க விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது, அதனுள் பிராணவாயு அளவு குறைந்ததால் எல்லோரும் மயங்கி விட்டனர், விமானிகள் உட்பட.. :blink: விமானப் பணி ஆள் ஒருத்தனுக்கு மட்டும் சிறிது நினைவு இருந்தது. அவன் ரேடியோவில் தொடர்புகொள்ள முயன்றான்.. பிறகு அதை விட்டுவிட்டு, மயங்கிக்கிடந்த காதலியின் அருகில் உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவனும் மயங்கிவிட்டான்.. :(

விமானம் விமான நிலையத்துக்கு அருகில் வந்ததும் வானில் வட்டமிட ஆரம்பித்தது. அதை இறக்குவதற்கான முயற்சிகளை விமானிகள் மேற்கொள்ளாவிட்டால் தானியங்கி முறையில் வட்டமடிக்கும். இது வட்டமடிப்பதைக் கண்ட அதிகாரிகள் இரண்டு போர் விமானங்களை அனுப்பினார்கள். அவர்கள் அருகில் பறந்து பார்த்தபோது, எல்லோரும் அசையாமல் கிடந்திருக்கிறார்கள். இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. :huh:

கடைசியில், எரிபொருள் முடிந்து விமானம் கீழே விழுந்துவிட்டது.. :blink: காதலி கையைப் பிடித்தவன் சில நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் செய்திருந்தான் என்றால் ஒருவேளை இழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்று இறுதி அறிக்கை கூறியது. இவன்ர காதலால் பலர் பரலோகம் போய்விட்டார்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னும்

தன் மனைவியை காதலிக்கிறானாம்

- என் நண்பன் -

வேறொருவனுக்கு மனைவியானபினும்

உன்னைகாதளிகிறேன் - நான் !

*************************************************************************************************************************

உலகிலியிருந்து நான் விடை பெற்ற பின்பு,

நீ விடைக் கொடுத்த என் நினைவுகளுக்கு ,

உயிர் கொடுத்து விடாதே .....

ஏனெனில் உறங்கிய என் இதயம் எழுந்து விடும்,

நீ என்னை நினைத்தால்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காதலிதுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்க கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்".!

தினமும் செய்தித்தாளின் ஏதாவது ஒரு பக்கத்தில் காதலை பற்றிய செய்தி வந்துகொண்டு தான் இருக்கிறது. சில காதல் தோல்விகளுக்கு மத்தியிலும் பல காதல்கள் வெற்றிபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது!

ஆணோ / பெண்ணோ முதலில் காதல் வயப்ப்படுமுன் பல விசயங்களை பற்றி சிந்தித்து செயல்படுவது முக்கியம்.

"என்னடா இவனெல்லாம் புத்தி சொல்ல புறப்பட்டுடானா"? என்று நினைக்காதீர்கள்.

சமீபத்தில் என்னை பாதித்த சம்பவத்தின் சிந்தனை,

நான் பார்த்த காதல்களை பற்றிய சிந்தனையின் வெளிப்பாடு!

காதலிக்க வேண்டும் என்ற அவசரத்தில் செய்யப்படும் தேர்வுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்கூடான உண்மை.!!!!

என்னை சுற்றயுள்ள நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம்!!!!

பத்து வருடங்களாக காதலித்து பெற்றோரின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தோழன்.!

பல வருட போராட்டத்திற்கு பின் பெற்றோரின் சம்மதத்துடன் காதலியை கரம்பிடித்த நண்பன்.!

மூன்று மாத காதலை நம்பி சென்று ஏமார்ந்த தோழி.!

பெற்றோரின் விருப்பமின்றி மணந்து நன்றாக வாழ்ந்து வரும் நண்பன்.!

பெற்றோரின் சம்மதம் கிடைக்காமல் காதலை மறந்து வேறு மணம் புரிந்து, வருந்தி வாழ்ந்து வரும் தோழி.

பல வருடம் காதலித்து பெற்றோரை சம்மதிக்க வைக்க "முடியாமலும், முயலாமலும்" காதலித்த பெண்ணை மறந்த தோழன்!

நான் கண்ட இந்த காதல்களில் மட்டுமல்ல அணைத்து காதல்களிலும் முக்கிய பங்கு பெற்றோர்களே!!!!

உண்மை ! அவர்களின்றி ஏதுமில்லை!!!!

காதலிக்க முடிவு செய்த முதலே அவர்களை பற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.....!

இந்த ஆண் / பெண் நமக்கு உகந்தவர்களா? நல்லவர்களா? நம் வாழ்க்கைக்கு துணையானவர்களா? உறுதியானவர்களா? இவர்களுடனான வாழ்க்கை சிறக்குமா? என்றெல்லாம் யோசிக்கும் முன் இவர்களை நம் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

முதலில் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள கூடியவர்களா?

ஏற்றுக்கொள்ளாவிடில் அவர்களை சமாதனம் செய்ய முடியுமா?

அதுவும் முடியாமல் போனால் அவர்களை மீறி திருமணம் செய்து கொள்ளலாமா ?

அது நம்மால் முடியுமா???????

இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா??

ஏதோ காதலிக்கனுமேனு காதலிச்சிட்டு 4 ,5 வருஷம் 25 மணிநேரம் போனில் பேசி, ஊர் சுற்றி, வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதும் பெற்றோரிடம் காதலை பற்றி சொல்லி அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்னதும் " நீ என்ன மறந்துட்டு வேறயாரையவது கல்யாணம் பண்ணிட்டு நல்ல இரு " இந்த மாதிரி வசனமெல்லாம் பேசிட்டு, வீட்ல பார்க்கிற நல்ல வசதியான அணையோ/பெண்ணையோ திருமணம் செய்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா????

ஏன் காதலிக்க நினைக்கும் போதே அப்பா ! அம்மா ! நியாபகம் வராதா?

அவர்களை சமாதனம் செய்ய (அ) மீற தைரியம் இல்லாதவங்க ஏன் காதலிக்கணும் ? மற்றவரை ஏமாற்றனும்?????

இது போல வழக்கமா சில பெண்கள் செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதையே சில ஆண்களும் செய்யும் போது ஜீரணிக்க முடியவில்லை.

இப்படி ஒருவரது வாழ்கையை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆணாகட்டும் / பெண்ணாகட்டும்!!!

அய்யா! அம்மா !

நாளைக்கு நீங்க உங்க பெற்றோர் மாதிரி இல்லாம குழந்தைகளை சுதந்திரமா, தைரியமா வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்களாவது அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அல்லது அவர்களிடம் மகனே / மகளே நீ காதலிக்க கூடாது, நான் உனக்கு பார்க்கிற, வசதி படைத்த, நம் சாதியை சார்ந்த ஆணையோ / பெண்ணையோ தான் நீ திருமணம் செய்ய வேண்டும். என்று சிறு வயது முதலே சொல்லி வளருங்கள்.

பாவம் அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள்.!!!

காதலிப்பவர்களே, காதலிக்க நினைப்பவர்களே, முதலில் நம்பிக்கையும், தைரியமும் இருந்தால் மட்டும் காதலியுங்கள்.

காதலில் ஒரு சில படிகளை வேதனைகளோடு வெற்றியாக்கியவன் என்ற உரிமையில் சொல்லி விட்டேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி

விக்ரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு friend இருக்கான் நல்லா கவிதை எழுதுவான் அவனுக்கு ஒரு gf இருக்கா......

இவன் வந்து அந்த பொண்ணுட்ட.......

என்னோட கவிதையே கேள் உயிரே உயிரே........

உன்னால் நெஞ்சம் எரிதே எரிதே.

அதுக்கு அவள்......

அதுக்கு தான் தண்ணி அடிக்காதன்னு சொன்னான் கேட்டியா

:(

அவன் ராவா அடிச்சிருக்கான் போல..பச்சைக் குடிகாரன்.

Edited by nunavilan

டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?

வந்தவர் : நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா new south wales மாநில யாழ் உறவுகளுக்கு RTA விடுத்திருக்கும் அறிவித்தலை தருகின்றோம்

Please be aware of changes from 1 November 2012 to NSW road rules regarding use of mobile phones.

An extract is included below.

Link to RTA web page available here (http://www.rta.nsw.gov.au/usingroads/roadrules/index.html)

Copy of PDF of the main changes is attached.

Use of mobile phones

While a vehicle is moving or stationary (but not parked), a driver may only use a mobile phone to make or receive a call or use the audio playing function:

If the mobile phone is secured in a fixed mounting; or

If not in a mounting, use of the mobile phone must not require a driver to touch or manipulate the phone in any way.

All other functions including texting, video messaging, online chatting, reading preview messages and emailing are prohibited.

The new laws make it clear that a driver in a moving or stationary vehicle (unless parked) MUST NOT HOLD a phone in his or her hand other than to pass the phone to a passenger.

Penalty: 3 demerit points (4 in a school zone) and $298 ($397 in a school zone)

NOTE: Learner and Provisional P1 drivers are not allowed to use ANY function of a phone (including hands-free) while driving

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்டு: மச்சி சுண்டல் இந்த SMS , SMS எண்டு சொல்லுறாங்களே அதனோட அர்த்தம் என்னடா?

சுண்டு: ஓ அதுவா வண்டு

S - singam அனுப்பி

M - monkey படிக்கிற ஒரு

S - small file

இப்போ புருஞ்சிடிச்சா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிக்கால்ஜி: sorry சொல்லிட்டு லவ் பண்ணுறது boys style

சுண்டல் ஜி: love பண்ணிட்டு sorry சொல்லறது girls style

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலும் சுண்டலோட gf உம் பேசிக்கிறாங்க......

சுண்டலோட gf : ஏன்டா நா உன்ன விட்டிட்டு வேற ஆள கல்யாணம் பண்ணா என்ன பண்ணுவா டா?

சுண்டல்: செத்துறுவன்.........

சுண்டல்: ஏண்டி நா உன்ன விட்டிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணா நீ என்னடி பண்ணுவ?

சுண்டலோட Gf : நீ அத பத்தி யோசிக்காத.........நான் உனக்கு முன்னாலையே கல்யாணம் பண்ணிருவேன்......

அடி பாவிங்களா இப்பிடி எத்தின பேர் கெளம்பி இருக்கிங்க? கொய்யால :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலையே அதி ஆபத்தான அதிக கொலைகள் நடக்கும் முதல் பத்து நகரங்கள்

10. Belem, Brazil

Homicides: 1639

Inhabitants: 2,100,319

Murder rate: 78.04

9. Durango, Mexico

Homicides: 474

Inhabitants: 593,389

Murder rate: 79.99

8. Chihuahua, Mexico

Homicides: 690

Inhabitants: 831,693

Murder rate: 82.96

7. Torreon, Mexico

Homicides: 990

Inhabitants: 1,128,152

Murder rate: 87.75

6. Caracas, Venezuela

Homicides: 3164

Inhabitants: 3,205,463

Murder rate: 98.71

5. Distrito Central, Honduras

Homicides: 1123

Inhabitants: 1,126,534

Murder rate: 99.69

4. Acapulco, Mexico

Homicides: 1029

Inhabitants: 804,412

Murder rate: 127.92

3. Maceio, Brazil

Homicides: 1564

Inhabitants: 1,156,278

Murder rate: 135.26

2. Juarez, Mexica

Homicides: 1974

Inhabitants: 1,335,890

Murder rate: 147.77

1. San Pedro Sula, Honduras

Homicides: 1143

Inhabitants: 719,447

Murder rate: 158.87

சுண்டலில் தொடங்கி, மாங்காயில் முடிகிறது ..KaDhaL :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்ததில மாங்க மடையன் என்றத நேர சொல்லுறது தானே பாஸ் ஏன் சுற்றி வளைக்கனும்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹென்றி போர்டு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? மோட்டர் தொழிலை மையமாகக் கொண்டு உழைத்து வாழ்க்கையின் உச்சிக்கு உயர்ந்த ஓர் அமெரிக்கக் கோடீஸ்வரர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் அவர் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஒரு பெரிய இயந்திரத் தொழிற் சாலையில், "பணிபுரிய ஆட்கள் தேவை' என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருப்பதை பார்த்தார் ஹென்றி.

அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகிகள் வேலைக்குச் சேருவதற்கான தகுதிகள் என்று இருபது அம்ச தகுதிகளை நிர்ணயித்திருந்தனர்.

அந்த இருபது தகுதிகளில் ஒன்று கூட தமக்கு இல்லை என்பதை உணர்ந்து அவர் மனம் வேதனைப்பட்டாலும், தன்னம்பிக்கையுடன் தொழிற்சாலையை நோக்கிப் புறப்பட்டார்.

தொழிற்சாலை நிர்வாகியை அவர் சந்தித்த போது ஹென்றி போர்டின் தோற்றமும், உடைகளுமே நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக அவருடைய தகுதிகளை விசாரித்தார்.

தங்கள் தொழிற்சாலைப் பணியாளருக்கு இருக்க வேண்டிய இருபது தகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தத் தகுதி அவருக்கு இருக்கிறதா? என்று நிர்வாகி விசாரித்தபோது, ""இல்லை... இல்லை!'' என்ற பதில்களே போர்டிடமிருந்து கிடைத்தது.

""ஒரு தகுதியும் இல்லாத நீ என்ன நோக்கத்தில் நம்பிக்கையுடன் இங்கே வந்தாய்?'' என்று ஏளனமாகக் கேட்டார் நிர்வாகி.

""நீங்கள் வகுத்து வைத்திருக்கும் இருபது தகுதிகளிலேயே உலகம் அடங்கி விட்டதாக நான் அறியவில்லை. உங்கள் தகுதிப் பட்டியலில் இல்லாத சில தகுதிகள் எனக்குள் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதனால் வந்தேன்,'' என்றார் ஹென்றி போர்டு.

""அப்படி என்ன சிறப்புத் தகுதி உன்னிடம் இருக்கிறது?'' என்று வியப்புடன் கேட்டார் நிர்வாகி.

""உங்கள் இருபது தகுதிகளில் ஒன்று கூட கடின உழைப்பைக் குறித்ததாக இல்லை. இருபது தகுதிகளும் பெற்ற ஒருவர், கடினமான உழைக்கக் கூடியவராக இல்லாமலிருந்தால் அந்த இருபது தகுதிகளால் அவருக்குத்தான் என்ன பயன்? உங்கள் நிறுவனத்துக்குத்தான் என்ன பயன்?'' என்று கேட்டார் ஹென்றி போர்டு.

இந்த பதில் நிர்வாகிக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

""நீ சொல்வதை விவாதத்திற்காக சரி என்று ஒப்பு கொண்டாலும், எங்கள் தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான குறைந்தபட்ச தொழிலியல் அறிவு அனுபவமும் உனக்குத் தேவையல்லவா!'' என்று கேட்டார் நிர்வாகி.

""என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் உங்கள் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே இந்தத் தொழிற்சாலையின் நிர்வாகிக்கான பயிற்சியைப் பெற்று வந்தீர்களா? இவ்விதம் கேட்பதற்காகக் கோபமடைய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!'' என்றார்.

நிர்வாகி தன்னை மறந்து சிரித்தார். ஹென்றி போர்டின் சாதுரியமான பதில் அவருக்கு ஹென்றி மீது ஒருவித நல்லெண்ணத்தை தோற்றுவித்தது.

ஹென்றி போர்டுக்கு அவர் தமது தொழிற்சாலையின் அடித்தள வேலை என்று கருதப்பட்ட ஒரு சாமானிய வேலையைக் கொடுத்தார்.

அவ்வாறு ஒரு சாமானிய தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்த ஹென்றி போர்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொழிற்சாலையின் பிரதம தொழில் நுணுக்கத் தலைவரானார். அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொழிற்சாலையையே அவர் விலைக்கு வாங்கிச் சொந்தமாக்கிக் கொண்டார்.

ஹென்றி போர்டுக்கு தொழில் செய்வதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்று தொழிற்சாலை நிர்வாகி கருதினார். ஹென்றி போர்டோ தம்முடைய உழைக்கும் சக்தியையே பெரிய தகுதியாகக் கருதினார். எனவே, நாம் வாழ்க்கையில் உண்மையிலேயே உயர்வு பெற வேண்டுமானால் அதற்குத் தேவையானது எது தெரியுமா?

"உழைப்பு! உழைப்பு! உழைப்பு!'

உழைப்பு என்ற ஒன்றை வைத்தே கோடீஸ்வரர் ஆனார் ஹென்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LOVE என்றால் என்ன?

(L ) lo lo ன்னு அலைய வேணும்

(O ) overa சீன் பண்ணனும்

(V ) veetukku தெரியாம maintain பண்ணனும்

(E ) eluthittu ஓடனும்

இது தான் love இது தேவையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் : நாங்க E -mail ல கூட கல்யாணம் பண்ணுவோம்

அதுக்கு நம்ம டிக்கால்ஜி

அட என்ன கொடுமை சார் இது

எங்க நாட்டுல நாங்க fe - male ல தான் கல்யாணம் பண்ணுவம்

ஐயோ ஐயோ நல்ல வேளை நமக்கு NASA ல வேலை செய்ய வாய்ப்பு வந்தும் London க்கு வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

:lol: :lol: உருண்டு பிரண்டு சிரித்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தோறும் எனது பிரார்த்தனை.....

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே......

என் அம்மாவிற்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும் அது போதும் எனக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தோறும் எனது பிரார்த்தனை.....

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே......

என் அம்மாவிற்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும் அது போதும் எனக்கு :D

'பிகர்', பிகர் எண்டு சொல்லிக் கூழ்ப் பானைக்குள்ள, குப்பிறக் கவுண்டு விழாமல், நல்ல குணமுள்ள மருமகளா, உங்க அம்மாவுக்கு வர வாழ்த்துக்கள்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் சுத்த தமிழில் பேச நாம் முயலும் போது நண்பன் கேப்பது " மச்சி சரக்கடிசிருக்கியா"

:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி தான் நம்ம தமிழ் நாட்டுக்காரங்க ரெண்டு பேர் பேசிக்கிறாங்க............

இவரு: என் மகனும் கரண்ட்டும் ஒன்னு.......

அவறு: அவளவு சுரு சுறுப்பா?

இவரு: அட நீ வேற ரெண்டுமே வீட்ல இருக்கிறதில்ல.....

இப்பிடின்னு நம்ம தமிழ் நாட்டுக்காரங்க இந்த கரண்ட் இல்லாம படுற பாடு பெரும் பாடு என்ன தான் இந்த eb யா வைச்சு காமடி பண்ணாலும் அவங்களுக்கு கரண்ட் கொடுக்கவே முடிதில்ல என்ன பண்ண இருந்த தானே கொடுக்க

இப்பிடி தா நம்ம பையன் ஒருத்தன் போய் இருக்கான் தமிழ் நாட்டுக்கு

என்ன சார் சுவிச் போர்டு க்கு தண்ணி ஊத்தி கழுவுறிங்க ஷாக் அடிசிரும்லா......

அதுக்கு அவரு என்ன தம்பி நீங்க தமிழ் நாட்டுக்கு புதுசா?

இப்பிடி அவங்க பாடு போயிட்டு இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.