Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

குடித்திட்டால் சந்தோசம்தான்........... :D

அடப்பாவிங்களா நான் குடிக்கவே போறதில்ல எண்டு முடிவு பண்ணிடிங்களா? :(:lol:

ஏதோ

குடித்திட்டால் சந்தோசம்தான்........... :D

அடப்பாவிங்களா நான் குடிக்கவே போறதில்ல எண்டு முடிவு பண்ணிடிங்களா? :(:lol:

ஏதோ

குடித்திட்டால் சந்தோசம்தான்........... :D

அடப்பாவிங்களா நான் குடிக்கவே போறதில்ல எண்டு முடிவு பண்ணிடிங்களா? :(:lol:

அதிர்ச்சி எக்கோ மூன்று தரம்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளின்ரை அக்காவயும் உப்பிடித்தான் விட்டு விட்டு வந்து, அந்த மாதிரி நாலைந்து மடிகளை தவறவிட்டிட்டு, கடசியில் இப்போ பால் புட்டியை குழந்தையின் வாயில் வைத்துவிட்டு குழந்தையின் மடியில் படுத்து தூங்குகிறார்கள்.

"வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று வேடிக்கை காட்டுது துக்கமின்றி முல்லைச்சரமே செல்லக் கிளியே.. கண்மூடித்தூங்கையா" :D

பேசாம போய் படுய்யா (நித்தா) எண்டு சொல்லுரிங்க :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா உங்களுடைய இந்த ஆக்கத்திற்கு " சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்" யாழ் களம் முக்கியத்துவம் கொடுத்து தனது முன்பக்கத்தில் அழகான வடிவமைப்புடன் பிரசுரித்திருக்கின்றது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி வளரட்டும் தமிழ் மொழி பரவட்டும் யாழின் புகழ் நிமிரட்டும் அதன் தன் உறுப்பினர்கள்.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆள் முரட்டு நாய் ஒன்ன அழைச்சுக்கிட்டு வாக்கிங் போனான்.. நாய் அத்துக்கிட்டு போனதோட இல்லாம ஒரு பொம்பளய கடிச்சு வேற வச்சுடிச்சு.. அவ தன் புருஷனை இழுத்துக்கிட்டு வந்துட்டா.. ஓங்கு தாங்கா பெரிய மீசையோட அவனைப் பாத்ததும் நாய்காரனுக்கு பேதி புடுங்கிகிச்சு.. பணத்தைக் கொடுத்து அசமடக்கிடலாம்ன்னு மெதுவா மீசைக்காரனை தனியா அழைச்சுட்டுப் போனான்..

" 1000 ரூபாய்லே இந்த விசயத்தை சமாதானமா முடிச்சுக்கலாம்ன்னு பாக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..?"

மீசைக்காரன் நாய்க்காரனை ஏற இறங்க பார்த்துட்டு, பையில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டு சொன்னான்..

" அடுத்த வாரமும் உன் நாயை அழைச்சுட்டு வா.. இன்னொரு 1000 ரூபாய் தரேன்.. என் மாமியார் வராங்க..!!!"

:D :d :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோட்ல ரெண்டு பேரு கட்டிப்புரண்டு சண்டை போட்டிட்டு இருந்தாங்க...... பக்கத்தில ஒரு சின்னப்பையன் நின்னுகிட்டு அப்பா அப்பா ன்னு அழுதுகிட்டு இருந்தான் ...... அந்த வழியா போன நம்ம நந்தன் ஜி அந்த பையன என்னவென்று விசாரித்தார்..... அப்போதும் அப்பா அப்பா என்று அழுதவனை இதில யாருடா உங்கப்பா? என்று கேட்டார் நந்தன் ஜி ....... பையன் சொன்னான் .......

அதை முடிவு பண்ணத்தான் ரெண்டு பெரும் அடிச்சிக்கிறாங்க

:D

ஒரு ஆள் முரட்டு நாய் ஒன்ன அழைச்சுக்கிட்டு வாக்கிங் போனான்.. நாய் அத்துக்கிட்டு போனதோட இல்லாம ஒரு பொம்பளய கடிச்சு வேற வச்சுடிச்சு.. அவ தன் புருஷனை இழுத்துக்கிட்டு வந்துட்டா.. ஓங்கு தாங்கா பெரிய மீசையோட அவனைப் பாத்ததும் நாய்காரனுக்கு பேதி புடுங்கிகிச்சு.. பணத்தைக் கொடுத்து அசமடக்கிடலாம்ன்னு மெதுவா மீசைக்காரனை தனியா அழைச்சுட்டுப் போனான்..

" 1000 ரூபாய்லே இந்த விசயத்தை சமாதானமா முடிச்சுக்கலாம்ன்னு பாக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..?"

மீசைக்காரன் நாய்க்காரனை ஏற இறங்க பார்த்துட்டு, பையில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டு சொன்னான்..

" அடுத்த வாரமும் உன் நாயை அழைச்சுட்டு வா.. இன்னொரு 1000 ரூபாய் தரேன்.. என் மாமியார் வராங்க..!!!"

:D :D :(:D

 

சுவிசில நாய் கடிச்சா தண்டனை உண்டு :lol:

சுவிசில நாய் கடிச்சா தண்டனை உண்டு :lol:

 

முறுக்கு மீசையோடை வாலாட்ட சுவிஸ் பொலிசுக்குத்தன்னும்  ஏலாது. மாமிக்கு மட்டும்தான் முடியும். :D

ஆனால் கருங்காலிக்கட்டைக்கு நாணாத அந்த மாமி இளிச்சவாய் நாய்க்காரனுக்கு மடக்கம்.

 

இதுதானையா உலகம். :rolleyes:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடிண்ணா எப்பிடி? சிரிச்சு சிரிச்சு முடியல்ல மலை அண்ணா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுடச் சுட பிட்ஸாவை கொண்டு வந்து கொடுத்தார் மல்லை அண்ணா .

வீட்டுக்காரர் கேட்டார்..

"எவ்வளவு டிப்ஸ் வேண்டும்..?"

அய்யா.. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளேன்.. இங்கு வரும்போது பழைய ஆட்கள் உங்களிடம் பைசா பெயராது என்று சொல்லி அனுப்பினார்கள்..

" அப்படியா சொன்னார்கள்..? இந்தா 100 டொலர்ஸ்.. வைத்துக்கொள்.."

"நன்றி அய்யா.. இது நான் எழுதிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவியாக இருக்கும்.."

"அப்படியா..? என்ன கட்டுரை எழுதுகிறாய்..?

" கஞ்சர்களிடம் காசைக் கைப்பற்றுவது எப்படி..!"

:D

*****************************************************************

ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்ம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

:( d

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எங்க நாட்டுசுண்டெலியை பார்த்து அமெரிக்கன் என்ன சொன்னான்? :D

  • கருத்துக்கள உறவுகள்
எங்க நாட்டுசுண்டெலியை பார்த்து அமெரிக்கன் என்ன சொன்னான்? :D

 

எங்க நாட்டு மக்டொனாட்டில் சாப்பிட்டதாக்கும்  என்றிருப்பான்.......... :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

:D :d :(:D

  • கருத்துக்கள உறவுகள்

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

 

இது எனக்கும் புத்தனுக்கும்............

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

 

இது

சுண்டலுக்கு.............

(நாங்கள்  கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பேச்சை  மாற்றுவதற்காக)

:D :D :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இதுக்கு இப்பிடி ஒரு அர்த்தம் கற்ப்பிபிங்க என்று நினைச்சு கூட பார்க்கல்ல முடியல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க ஒரு ரஷ்யர் வந்தார். ஒரு வழிகாட்டி அமெரிக்கப் பெருமைகளை சொல்லி ரஷ்யரை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான்.. கடைசியாக வெள்ளை மாளிகைக்கு வந்தார்கள்..

வழிகாட்டி ; இது எங்கள் அதிபரின் இருப்பிடம். இங்கு நின்று "புஷ் ஒரு கழுதை..!" என்று நாங்கள் சொல்லலாம்.. அந்த அளவுக்கு எங்கள் சனநாயகம் உயர்வானது.. உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் அதிபர் மாளிகையில் இவ்வாறு சொல்ல முடியுமா..?

ரஷ்யர் ; ஓ..சொல்லலாமே.. கிரெம்ளின் மாளிகை முன்பு நின்று "அமெரிக்க அதிபர் புஷ் ஒரு கழுதை" என்று சொன்னால் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆபிரேசன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை

ஆபிறேசனுக்கான ஆயதங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் "'நர்சும் " "டாக்டரும் ""

நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்

நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர் ..?

"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி"

இன்னும் ஒன்றை ஓட்டினார் ..இது எதக்கு டாக்டர் .?

"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி "

இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது

இதல்லாம் இயங்க "கரண்ட் தானே ""வேணும் டாக்டர் ....?

நிச்சயமா அதில் என்ன சந்தேகம் ?

ஆப்பிரேசன் செய்யும் போது "கரண்ட் " நிண்டா ?

என்ன செய்வீங்க டாக்டர் ?

டாக்டர் ...சிரித்தார் ..

அருகில் நின்ற "நர்சு " கேட்டார் ஏன்..? டாக்டர் சிரிக்கிரீங்க ..?

டாக்டர் சொன்னார் "இவர் கேட்கிறார் " கரண்ட் நிண்டா என்ன செய் வீங்கள் ?.? எண்டு ..!

நர்சு சொன்னா "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு "

:( :( :(:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் திலகம் நடித்த, "ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற, "தேவனே என்னைப் பாருங்கள் - என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்ற பாடலை மறக்க முடியுமா? எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் நடுவே...

"ஓ... மைலார்ட்... பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...' என்று, உணர்வுப்பூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

டி.எம்.எஸ்., பாடிய அந்த பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும், நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி., வேண்டுகோள் விடுத்தார்.

"இந்த வசனங்கள், பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை, பாடிக் காட்டுங்கள்...' என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க, உடனே எம்.எஸ்.வி.,

"ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம்... நீங்கள் அறிவீர்... மன்னித்தருள்வீர்...' என்று பாடிக் காட்டி...

"இந்த இடத்தில் தான் தாங்கள்... அந்த, வசனத்தை பேச வேண்டும்...' என்றார்.

"இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேன். வேறு பொருத்தமானவரை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வையுங்கள்...' என்றார் சிவாஜி.

வயலின் வாத்தியக் கலைஞரும், தம் உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆனால், அவரது குரல் அந்த பாடலின் வீச்சுக்குப் பொருந்தி வரவில்லை.

"பலகுரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு, இதே வசனத்தைப் பேச வைத்தார்.

ஆனால், அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப் போகாமல் தனித்து நின்றது. நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து, "பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே...' என்றார்.

எம்.எஸ்.வி., - டி.எம்.எஸ்., சிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.

டி.எம்.எஸ்., உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார். அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.

"உங்கள் சிம்மக்குரலில்... அந்த வசனங்களை, ஒரு தடவை எனக்கு பேசிக் காட்டுங்கள் அய்யா...' என்றார்.

நடிகர் திலகம், அந்த வசனங்களை தம் பாணியில் டி.எம்.எஸ்சிடம் பேசிக் காட்டினார்.

அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும், ஏற்ற இறக்கங்களையும் உணர்வுக் குமிழிகளையும், உன்னதங்களையும் அப்படியே தம் மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.,

"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?' என்று டி.எம்.எஸ்., சொன்னதும்... எம்.எஸ்.வி., கையசைத்தார்.

ஏக்கமும், விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின், "ஞானத் தேடல்' விளங்கும் விதமாக, உணர்ச்சிப் பிழம்பாக மாறி, அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்.,

"அருமை டி.எம்.எஸ்., அற்புதம்...' என்று பாராட்டினார் சிவாஜி.

நடுத்தெரு நாராயணன்

கள உறவுகள் அந்த பாடலை மீண்டும் ஒரு முறை கேட்க இங்கே அழுத்துங்கள்

http://m.youtube.com/watch?v=tu5MR9X3t14

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: நீ எங்களை தாக்கினால் நாங்கள் திரும்ப தாக்குவோம்

இஸ்ரேல்: நீ எங்களை தாக்கினால் நாம் உங்களை துடைத்தழிப்போம்.....

இந்தியா: நீ எங்களை தாக்கினால் நாங்க உங்க கூட cricket விளாட வரமாட்டம் ....,,.,

ஆவ்வ்வ் ........:):D

ஆவ்வ்வ் ........ :D  :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிமனிதனாக மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை ஆண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு; பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என். ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காட்டு மனிதனில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது வேட்டையாடும் விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, தப்பிக்கவிடாமல் வேட்டை யாடுவது போன்றவை குறித்து தெரிந்து கொள்ள ஆணுக்கு கூர்மையான பார்வை யும், குறி பார்த்து தாக்கும் தன்மையும் இருந்தன.

பெண்களுக்கு குழந்தையை பாதுகாக்கும் போது விலங்குகளால் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதற்கு ஏற்றார்போல, பெண்களின் பார்வை ஆண்களின் பார்வை போல கூர்மையாக இல்லாமல், ஒரே பார்வையில் அதிகமான பரப்பை பாக்கும் திறன் பெற்றிருந்தனர். பெண்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் பெற்றிருந்தனர். ஆண்கள் ஒரு பொருளை வார்த்தைகளை கொண்டு தேடுகின்றனர். அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் தடுமாறுவார்கள். ஆனால், பெண்கள் பார்வை சிக்கலான வடிவங்களை மூளையில் கொண்டு தேடுவதாகவும், அதற்கு ஆஸ்டோஜன் என்ற ஹார்மோன் காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். பெண்களால் பொருட்களை எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையில் அறிந்து கொள்ள முடியுமாம். ஆண்களைப் போன்று திரும்பத்திரும்ப பார்க்க வேண்டியதில்லை. ஆணின் கூர்மை யான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நம்மை-தீமை இரண்டுமே உள்ளன.

ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும் பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்க வாட்டிலேயே அதிகமான விபத்துக்கள் நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால், பெண்களால் ஏற்படும் விபத்துக்கள் நேருக்கு நேர் மோது வதாகவே இருக்கும். சாலையில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும், வீட்டில் சீப்பு, சாவி போன்ற பொருட்களை கண்டுபிடிக்க பெண்களுக்கு உதவுகிறது. இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும், பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை அறிந்து கொண்டு, மற்றவர்களை புரிந்துக்கொண்டால் சின்னச்சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண், பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்பதுதான் விஞ்ஞான வாதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கர்கள்

பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள்

அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”

தமிழர்களும்

தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள்,

“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று...!

:( :( :D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்...

:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே !

நீ ஒரு இட்லி ...!

நான் உனக்கு சட்னி

நீ ஒரு பொங்கல்.....!

உன் -அப்பா எனக்கு -அங்கிள்

நீ ஒரு தயிர்...!

நான் உன்னோட -உயிர்

நீ ஒரு ரசம் -ஆனால்

என்னை லவ் பண்ணாட்டி

வைப்பேன் உனக்கு -விஷம்

நீ ஒரு பரோட்டா ...!

உன்ன நான் பார்க்க வரட்டா ...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்ரடீஸ். எதிரில் தென்பட்ட ஒருவர், ''உங்கள் நண்பனைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றார்.

உடனே சாக்ரடீஸ், ''நீங்கள், என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா!'' என்றார் சாக்ரடீஸ்.

''தெரியவில்லை... கேள்விப்பட்ட தகவல்!'' என்றார் அவர்.

''அது நல்ல விஷயமா?''

''இல்லை. எதிர்மறையானதுதான்''

''அந்த ரகசியத்தை கேட்பதால் ஏதேனும் பலன் உண்டா?''

''கிடையாது''

இதைக்கேட்ட சாக்ரடீஸ், ''நீ சொல்லும் ரகசியம் உண்மையல்ல; நல்ல விஷயமும் அல்ல; அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீ அதை என்னிடத்தில் சொல்ல வேண்டியதே இல்லை'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.