Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரத்தில் வெளவாலும் காகமும் தங்கியிருக்கின்றன. ஒருநாள் காகத்தைப் பார்த்து காக்கையாரே... காக்கையாரே... நீங்கள் ஏன் தலைகீழாய் நிற்கிறீர்கள் என்று வெளவால் வினவியது.

அதற்குக் காகம் வெளவாலாரே, நான் நேராகத்தான் நிற்கிறேன். நீர்தான் தலைகீழாய் தொங்குகிறீர் என்றது காகம். வெளவாலுக்கு ஒரே கோபம். காக்கையாரே காக்கையாரே ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது. நீர் தலைகீழாய் நிற்பது தான் உண்மை என்று வெளவால் இறுக்கமாகக் கூறியது.

காகம் மீளவும் சொல்லிற்று, வெளவால் அண்ணே! நீங்கள் தலைகீழாய்த் தொங்குவது இந்த உலகம் முழுவதற்கும் தெரியும். எனவே நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் தான் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறீர்கள் என்றது காகம்.

காகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத வெளவால், காக்கையாரே நீர் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை நீர் தலைகீழாய்த்தான் நிற்கிறீர் என்று கூறி, உண்மை நிலையை உணர முடியாமல் கதையை நிறைவு செய்தது .வெளவால் p

இந்த நிலைதான் இலங்கை இனப்பிரச்சினையிலும் காணப்படுகின்றது. அதாவது இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்கிறது அரசு.

ஆனால் முழு உண்மையும் இப்போ உலகுக்கு தெரிய தொடங்கிவிட்டது இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வெளவாலாகவே இருக்க முனைகின்றார்கள்....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கிறதால பெற்றோருக்கு ஒரு லாபம் இருக்கு கல்யாண செலவு மிச்சம்..... இப்போலாம் ஒரு கல்யாணத்துக்கு 30000 dollars ல இருந்து 50000 dollars வரைக்கும் செலவாகுதாம்..... சோ ஓடிப்போய் கட்டிக்கிறத ஊக்கப்படுத்துங்க மக்காள்ஸ்

#அப்போ நான் வட்டா....

இந்த ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கிறதால பெற்றோருக்கு ஒரு லாபம் இருக்கு கல்யாண செலவு மிச்சம்..... இப்போலாம் ஒரு கல்யாணத்துக்கு 30000 dollars ல இருந்து 50000 dollars வரைக்கும் செலவாகுதாம்..... சோ ஓடிப்போய் கட்டிக்கிறத ஊக்கப்படுத்துங்க மக்காள்ஸ்

#அப்போ நான் வட்டா....

 

கலியாணாங் கட்டுறதுதான் ஓடிப்போய். 

வயித்தில ஏறினதும் பிறந்த வீட்டுக்கு அனுப்பீட்டு... கலியாணச் செலவை வட்டியோடை கறந்திடுவாங்க!!  :o  :lol:

Edited by sOliyAn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் சத்தம் போடாமல் வெள்ளைக்காரரின் சட்ட திட்டங்களோடு ஒத்து வாழும் யாழ்ப்பான சமுகம் தான் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் இருந்த பொழுது வெளிநாடு

மாதிரியான கட்டமைப்புகளை அதாவது வரி அறவிடுதல், சுற்று சூழல் மாசடைவதை தடுத்தல் , மரங்கள் வெட்டும் முன் அனுமதி எடுத்தல் போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வரும் போது குத்தி முறிஞ்சவை....

#நாங்க வெள்ளையள் சொன்னா தான் கேப்பம் லே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்

அதோட ரகசியம் என்ன?

-

அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது

'சூர்யாவைத்தான்!

-

அது என்ன சோப்பா?

-

இல்லை...என் கணவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பொண்ணுங்களோட கதாநாயகன்கள் யாரு என்று கேட்டா அந்தந்த ஊர் வழியா போயிட்டு வார மினி பஸ் டிரைவர்களும் , கண்டக்டர்களும் தான் என்னதான் படிச்ச நல்ல வேலைகள் இருக்கும் பையன்கள் அந்த ஊர்களின் அழகான பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு திரிந்தாலும் கடைசியில் என்னமோ work out ஆகிறது இந்த டிரைவர் மாருக்கு தான் அதுக்கு தக்க மாதிரி இந்த பொண்ணுங்கள கவர இந்த டிரைவர் மார் படும் பாடு இன்னும் சூப்பர் ah இருக்கும் வேகமா பஸ்ஸ செலுத்துவது அப்பிடியே அந்த சடன் பிரேக் அடிக்கிறது.... தலைய அடிக்கடி கோதி விடுறது....... சிட்டிவேஷன் சாங் போடுறது என்று அமர்கலப்படுத்துவார்கள்.......

சில நேரம் பஸ்ஸில் இருக்கும் ஆச்சிமார் பஸ் படு வேகமா போறதா பாத்திட்டு அட அறுவாங்களா பாத்து போங்கடா என்று பேசுற வரைக்கும் போகும்.....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஜப்பானில் ஏற்பட போகும் மிகப்பெரிய அனர்த்தம் இதுவா தான் இருக்கும்..... அது என்னவா அப்பிடியே கொஞ்சம் கீழ போய் படிங்க.....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wife : பின்னாடி பிகர் இருந்தா

கண்ணு தெரியாதானு

லாரிகாரன் திட்டிட்டு போறான்.

நீங்க சிரிக்கிறிங்க?

Hus : உன்ன போய் பிகர்னு

சொல்றான் அவனுக்குதான்

கண்ணு தெரியல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.

மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?

கணவன்: no darling, the disk is full.

மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?

கணவன்: Access not allowed.

மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?

கணவன்: Bad command or file name

மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....

கணவன்: erroneous syntext

மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.

கணவன்: access denied

மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?

கணவன்: wrong password

மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்

கணவன்: data mismatch

மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது

கணவன்: by default

மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்

கணவன்: virus detected

மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?

கணவன்: too many parameters

மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி

கணவன்: press contl, alt & del

மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.

கணவன்: illegal operation, system shuts down

மனைவி: நான் தொலஞ்சு போறன்.

கணவன்: reboot

மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்

கணவன்: change user

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1986 களில் இந்த பாடல் வந்ததில் இருந்து 1990 களின் ஆரம்பம் வரை யாழ்ப்பாணத்தில் இந்த பாடல் ஒலிக்காத வீடுகளும் இல்லை.....பாடாத இளைஞர்களும் இல்லை.... ஏன் பாடித்திரியாத இயக்க அண்ணா மார்களும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களை கவர அம்மா உணவகம் , அம்மா தண்ணீர் என்ற வரிசையில் இப்போ அம்மா உப்பும் வருகின்றது ஆனால் இதெல்லாம் தமிழக மக்களை கவர.... அம்மா அவர்கள் உலகெல்லாம் இருக்கும் தமிழர்களை கவர வேண்டுமாக இருந்தால் விரைவில்

"அம்மா யாழ்ப்பாண கறித்தூள்" செய்து விற்றால் தான் முடியும் என்று பாரிசை சேர்ந்த பிரபல அரசியல் வித்துவான் சாரி அரசியல் விமர்சகர் மற்றும் அரசியல் அவதானி.... யோகோ அருணகிரி அவர்கள் கூறி இருக்கின்றார்

செய்வீர்களா ? செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களை கவர அம்மா உணவகம் , அம்மா தண்ணீர் என்ற வரிசையில் இப்போ அம்மா உப்பும் வருகின்றது ஆனால் இதெல்லாம் தமிழக மக்களை கவர.... அம்மா அவர்கள் உலகெல்லாம் இருக்கும் தமிழர்களை கவர வேண்டுமாக இருந்தால் விரைவில்

"அம்மா யாழ்ப்பாண கறித்தூள்" செய்து விற்றால் தான் முடியும் என்று பாரிசை சேர்ந்த பிரபல அரசியல் வித்துவான் சாரி அரசியல் விமர்சகர் மற்றும் அரசியல் அவதானி.... யோகோ அருணகிரி அவர்கள் கூறி இருக்கின்றார்

செய்வீர்களா ? செய்வீர்களா?

 

அதாரு ராசா.....? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நம்ம சகோதரன் உங்க ஊரு காரன் உங்க பாசக்கார தம்பி தான் .....:D

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நம்ம சகோதரன் உங்க ஊரு காரன் உங்க பாசக்கார தம்பி தான் ..... :D

 

அவரா..?

என் ஊர்க்காறன் பெயரும் புகழும் பெறுவதால்

உங்களுக்கு  பொறாமை....... :lol:  :D  

இந்த விடயத்தில் நான் உங்கள் எதிர்க்கட்சிக்குத்தான் வாக்கு  போடுவன்.. :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: லோக்சபாவில் காங்கிரஸுக்கு 44 எம்.பி.க்கள்தான் ..ஆனால் நாங்கள் பாண்டவர்கள் மாதிரி.. 100 கெளரவர்கள் இணைந்து மிரட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

சுண்டல்: அப்போ இதில திரெளபதை­ யாரு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுவரன்: என்ன அருணாசலம் 30

நாள்ல 30 கோடிய எப்படி

செலவு பண்ண போற?

ரஜினி: ஹ! ஹ! ஹ!

ஜுஜிபி..

"சிம்பு" வச்சி படம் எடுப்பேன்டா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?

JANUARY 3RD, 2014

மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விடயம் இது. அண்ணன் தம்­பிமார் ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் கூறு­போட்­டார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்?

தமிழர் பண்­பாடு ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான். ஆனால் திரெ­ள­பதை ஐவ­ருக்­கொ­ருத்­தி­யான மர்மம் இன்றும் பல­ருக்கும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

உண்­மையில் நடந்­த­துதான் என்ன? பாஞ்­சால தேசத்தின் மன்னன் துரு­பதன். தனது மகள் திரெ­ள­ப­திக்கு திரு­மணம் நடத்தி வைப்­ப­தற்­காக சுயம் வரத்தில் ஒரு போட்­டி­யையும் வைத்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் பாஞ்­சால தேசத்தில் நடை­பெற இருந்த சுயம்­வ­ரத்­திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வர­லாற்று உண்­மையை விப­ரித்தார். முனிவர் ஒரு­வ­ருக்கு அழ­கிய பெண் இருந்தாள், அவ­ளுக்கோ திரு­மணம் நடை­பெறக் கால­தா­மதம் ஆகிக் கொண்டே இருந்­தது. அப்­பெண்ணோ “தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்து தட­வைகள் “நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.

ஐந்தாம் முறை­யாக அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கண­வர்­களைப் பெறு­வா­யாக” என்று வர­ம­ரு­ளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென அருளிச் செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அரு­ளி­விட்டேன், அடுத்த பிற­வியில் நீ இந்த வரத்தின் படி கண­வர்­களைப் பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துரு­பதன் புத்­தி­ரி­யான திரெ­ள­ப­தை­யாவாள் என்று கூறி­மு­டித்தார் வியா­சக முனிவர்.

திரெ­ள­ப­தியை சுயம்­வ­ரத்தில் மணக்க துரு­பதன் ஒரு போட்டி வைத்­தி­ருந்தான். சுழலும் சக்­க­ரத்தின் நடுவில் உய­ரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்­கி­ய­ப­டியே மேலே சுற்றும் மீனைக் குறி­பார்த்து அம்­பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்­தனை.

இப்­போட்­டியைக் கண்­டு­ க­ளிக்­கவும் அதில் பங்­கு­பற்றி திரெ­ள­ப­தியை மனை­வி­யாக அடைய ஆவல் கொண்ட மன்­னர்­களும் கூடி­யி­ருந்­தனர். அக் கூட்­டத்தில் துரி­யோ­தனன், கர்ணன் இவர்­க­ளுடன் அந்­தணர் வேடத்தில் இருந்த பாண்­ட­வர்­களும் இருந்­தார்கள்.

போட்டி விறு­வி­றுப்­பாக ஆரம்­ப­மா­னது. பல நாட்டு மன்­னர்கள் வில்லில் நானேற்ற முடி­யா­த­வர்­க­ளாகத் தோற்றுப் போயினர். துரி­யோ­தனன் போன்­றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்­தனர். கர்ணன் தன்­னு­டைய திற­மையால் நானேற்றி மேலே சுழல்­கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்­சா­கத்­துடன் எழுந்தான்.

சபை­யிலே ஒரே உற்­சாகம் “நிச்­சயம் கர்ணன் வெற்­றி­பெற்று திரெ­ள­ப­தியை மணந்­து­கொள்வான்” என்று பேசிக் கொண்­டதும் திரெ­ள­ப­தியின் செவிப்­ப­றை­யிலும் முட்­டி­மோ­தி­யது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெ­ள­பதி தன் தோழி­யிடம் உரக்கக் கூறினாள்.

“ஒரு தேரோட்­டியின் மகன் இந்தப் போட்­டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்­ணனின் காது­களில் அவை இடி ஓசை­யாக ஒலித்­தது.

அக்­கினி மின்னல் அவன் உணர்­வு­களை ஊடு­ரு­விற்று. அவ­மா­னமும், வெறுப்பும் கர்­ணனைப் புடை­சூழ, வில்லை கீழே வைத்­து­விட்டு தனது இருக்­கையை நோக்கி நகர்ந்தான்.

அந்­தணர் வேடத்தில் இருந்த அர்ச்­சுனன் சுயம்­வ­ரத்தில் வென்று திரெ­ள­ப­தியை மணக்கும் தகுதி பெற்றான். துரு­பத மன்­னனின் ஆசி­யுடன் பெரி­யோர்­களின் வாழ்த்­துக்­க­ளு­டனும் அர்ச்­சுனன் திரெ­ள­ப­தி­யையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகா­தே­வ­னு­டனும் இல்லம் வந்­த­டைந்­தனர்.

வாயிலில் நின்ற வண்ணம் “தாயே!, நாங்கள் மாங்­கனி ஒன்றை கொண்டு வந்­தி­ருக்­கின்றோம்” என்று பாண்­ட­வர்கள் கூற குந்­தி­தே­வியும் இல்­லத்­துள்ளே இருந்­த­வாறே “அவ்­வா­றாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்­ளுங்கள்” என்று மொழிந்தாள்.

“அர்ச்­சுனா போட்­டியில் வெற்றி பெற்ற நீயே திரெ­ள­ப­தியை மணக்க வேண்டும் தாய் கூறி­யதை நீ தவ­றாக எடை­போட வேண்டாம்” என்­று­ரைத்­தார்கள் சுகோ­த­ரர்கள். “வியா­சக முனிவர் நமக்கு உரைத்­தப்­படி தாயின் வாக்கு பொய்ப்­ப­தற்­கில்லை எனவே ஐவ­ருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்­சுனன்.

பின்பு திரெ­ள­ப­தியின் முடிவை அறிய விழைந்த­ போது, தாய் குந்திமாதே­வியின் வாக்கை தெய்வ வாக்­காகச் சிர­மேற்று ஐவ­ரையும் மணக்க இசைந்தாள் திரெ­ள­பதி. பாண்­ட­வர்­களின் மனப் போராட்­டத்தைப் போக்க வியா­சகர் அங்கு வந்தார். பாண்­ட­வர்கள் தேவ­கு­மா­ரர்கள் என்றும் திரெ­ள­பதி லட்­சு­மியின் அம்சம் பெற்­றவள் என்றும் கூறினார். மேலும் பர­ம­சி­வ­னிடம் பெற்ற வரமே இது என விளக்­க­ம­ளித்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் திரெ­ள­ப­தியை மணந்து கொண்­டதும் தங்­க­ளுக்குள் ஒரு விதி­மு­றையை வகுத்துக் கொண்­டார்கள். ஒரு வருடம் ஒரு­வ­ரோடு திரெ­ள­பதி மனை­வி­யாக வாழ­வேண்டும். அவ்­வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்­ட­வர்­களும் அவர்­களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்­பார்த்தால் அவர்­களைப் பார்த்­தவர் ஓராண்டு கான­கத்தில் வசிக்க வேண்டும்.

5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?

5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.

5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து

தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.

************************************************

ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.

திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!

இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.

‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.

‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,

அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.

உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வடக்கு முதல் அமைச்சரும் இப்பிடி இலவச திட்டங்களை அறிமுகபடுத்தினா என்ன?

விக்கி உப்பு

விக்கி சர்க்கரை

விக்கி சாம்பிராணி

விக்கி உணவகம்

விக்கி தியட்டர்

etc etc

வடக்கின் நிரந்தர முதல்வர் ஆகிடலாம்..... விக்கியர் ...

எதுக்கும் சம்மந்தனும் சுமந்திரனும் கூடி கும்மி அடிச்சு நல்ல ஒரு ஆலோசனைய வழங்குங்கப்பா ..... மக்களுக்கு என்ன செய்றது எண்டு தெரியாமல் இருக்கிறார் விக்கியர்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எழுச்சிக்குயில் 2014 ஆக சுவிஸ் இல் தெரிவாகி இருக்கும் ரம்யாவிற்கு வாழ்த்துக்கள் இன்னும் பல விருதுகளை தனதாக்கி சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச கன்னியர்களாய் இருப்பவர்கள்.

 

அகலிகை , சீதை , தாரை , மண்டோதரி , திரௌபதி ஆகியோர்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் அடிக்கடி மலேசியாக்கு பறந்து போய்கிட்டு இருக்கிறதா பாத்தா தேர்தலுக்கு முதல் நிறைய பெட்டிகள் சேர்ந்திருக்கு போல......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமாயணம் அனேகமா எல்லாரும் படிச்சுருப்பீங்க இல்ல கேட்டு இருப்பீங்க......ராமாயணத்தில இப்பிடி ஒரு கரக்டர் இருக்கிறது எத்தின பேருக்கு தெரியும்....? என்னை கேட்டால் அந்த சீதைய விட உயர்ந்தவள் இவள் தான்.....முடிஞ்சா டைம் இருந்தா கொஞ்சம் வாசிச்சு பாருங்களன்

ராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன். சத்ருக்னன், ஹனுமன், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்-தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால் ராமாயணத்தில் ஊர்மிளை என்ற கதாபாத்திரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். யார் இந்த ஊர்மிளை? அவள் என்ன சாதித்தாள்? அவளையும் மேலே குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரங்களோடு சேர்த்து நாம் ஏன் நினைவுகூர வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோமா? சீதையின் சகோதரிதான் ஊர்மிளை, லட்சுமணனின் மனைவி, சீதா கல்யாணம் நிகழ்த்தியபோது ஊர்மிளைக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. திருமணமான பிறகு ராமன் வனவாசம் செல்ல நேர்கிறது. ராமனுக்குத் துணையாக லட்சுமணனும் வனவாசம் சென்றுவிடுகிறான். அதற்குப்பின் ராமாயணக் கதை ராமன், லட்சுமணன், சீதை ஆகியோரைச் சுற்றியே செல்கிறது. அதனால் அயோத்தியில் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.

ஆனால் ராமன் வனவாசம் செல்லுமுன் நிகழ்த்திய சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஊர்மிளை பற்றிய ஒரு முக்கியத் தகவல் தெரியவருகிறது. அதை விரிவாகப் பார்ப்போம். தனக்குப் பட்டாபிஷேகம் இல்லை; வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவானதும், தாய் கோசலையைச் சமாதானப்படுத்தி, அவள் ஆசி பெற்ற பின், சீதையிடம் அதுபற்றிச் சொல்லச் சென்றான் ராமன். சீதையோ தானும் காட்டுக்கு வருவதாகப் பிடிவாதம் செய்தாள், அதற்காக ராமனோடு வாதிட்டாள். ஸ்வாமி! தாங்கள் கானகம் செல்லும் செய்தி கேட்டு, தங்களை விட்டுப் பிரிய மனமில்லாத காரணத்தால், தங்கள் தாயும் தங்களுடன் கானகம் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால், கூட்டிச் செல்ல மாட்டீர்களா? என்று கேட்டாள். ஆம் சீதா அன்னை கவுசல்யாதேவியும் நீ கூறியபடியே என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடித்தார்கள். நான் அவர்களுக்கு ஸ்திரீ தர்மத்தை எடுத்துச் சொன்னேன். திருமணமான பெண் கணவனை விட்டுப் பிரியக்கூடாது. அதனால், என் தந்தை தசரதனுடன் அயோத்தியில்தான் தாங்கள் இருக்கவேண்டும் என்று விளக்கினேன். அவரும் அந்த நியாயத்ததை ஒப்புக்கொண்டார் என்றான் ராமன். நன்றாகச் சொன்னீர்கள் நியாயம்! நீங்கள் எடுத்துச்சொன்ன அந்த ஸ்திரீ தர்மம் எனக்கு மட்டும் பொருந்தாதா? என் பதிக்கு சேவை செய்ய நான் அவருடன் இருக்க வேண்டாமா? என்று வாதிட்டு ராமனை அவனது சொற்களாலேயே மடக்கி, அவனுடன் வனவாசம் செல்லும் அனுமதி பெற்றாள் சீதை.

லட்சுமணனுக்கு ராமனோடு தர்ம நியாய அடிப்படையில் வாதாடி, தானும் ராமனுடன் காட்டுக்கு வர அனுமதி பெற்று விடுகிறான். இந்நிலையில் சீதாதேவியும் ராமனுடன் கானகம் செல்ல முடிவெடுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டு, லட்சுமணனின் மனத்தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. அதாவது, அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேவை செய்வதற்காகவே கானகம் செல்லும் தன்னோடு தன் மனைவி ஊர்மிளையும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்பதே அவன் கவலை. இந்தக் கலக்கத்துடனேயே மனைவி ஊர்மிளையை அவளது அந்தப்புரத்தில் பார்க்கச் சென்ற லட்சுமணனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராமனின் வனவாசச் செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில், ஊர்மிளை மட்டும் சீவி முடித்து, சிங்காரம் செய்துகொண்டுல பொன்னாடைகளும் அணிகலன்களும் தரித்து மஞ்சத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். கோபத்தால் கண்கள் சிவந்த லட்சுமணன், இது என்ன கோலம் ஊர்மிளா? ஊரே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உனக்கு ஏன் இந்த ஆடம்பரம்? என்று கேட்டான். அதற்கு அவள் நேரடியாக பதில் சொல்லாமல், ஸ்ரீராமன்தானே காட்டுக்குச் செல்ல வேண்டும்? உங்களை யாரும் போகச் சொல்லவில்லையே! நீங்கள் ஏன் மரவுரி தரித்து அலங்கோலமாக நிற்க வேண்டும்? என்று திருப்பிக் கேட்டாள். ஊர்மிளைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என ஒரு கணம் பதறினான் லட்சுமணன், சமாதானமாகப் பேசி, பல நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவள் செய்வது சரியல்ல என்று விளக்கினான். ஆனால் ஊர்மிளை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

நீங்கள் கோசல நாட்டின் இளைய ராஜகுமாரன், உங்கள் ராணியாக அரச போகங்களை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தான் உங்களைத் திருமணம் செய்துகொண்டேன். அரச போகங்களைத் துறந்து செல்வது ஸ்ரீராமனின் விதி என்றால் அதில் நீங்கள் ஏன் பங்குகொள்ள வேண்டும்? நான் ஏன் என் சவுபாக்கியங்களை இழக்க வேண்டும்? என்று கேட்டாள். லட்சுமணனின் ரத்தம் கொதித்தது. தாடகையைவிடக் கொடிய அரக்கிபோல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மிளை. பெண் இனத்துக்கே அவளால் அவமானம் எனக் கருதினான். அவளை மனைவியாக அடைந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்து கொண்டான். அடிப் பாவி! நீ கைகேயியைவிடக் கொடியவளாக இருக்கிறாயே! அரசு போகத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஆசை கொண்டவள் நீ. பதிபக்தி இல்லாதவள். உன்னை மனைவி என்று சொல்வது கூடப் பாவம். இக்கணம் முதல் உன் சிந்தனையை என் மனத்திலிருந்து அகற்றிவிட்டேன். இனி நமக்குள் பந்தமில்லை, உறவில்லை. ஊர்மிளை என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை. இன்று முதல் நீ யாரோ, நான் யாரோ! என்று கோபத்தில் கொந்தளித்தவன் போய்வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல், போகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். தன் உணர்ச்சிகளை எல்லாம் கொன்றுவிட்டு, அவனுடன் உரையாடிய ஊர்மிளை, கணவன் லட்சுமணனின் தலை மறைந்ததும் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினாள்.

ராமனுக்கும் சீதைக்கும் 14 ஆண்டுகள் பணிவிடை செய்யப்போகும் லட்சுமணனுக்குத் தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள், காதல் நினைவுகள் ஏற்பட்டு, அதனால் அவர் செய்கின்ற பணிக்கு இடையூறு வராமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவள் இப்படியொரு நாடகமாடி, தன் மீது அவனுக்கு முழு வெறுப்பு ஏற்படும்படியாகச் செய்துகொண்டு, கணவன் ஏற்றுக்கொண்ட கடமை எனும் யாகத் தீயில் தன்னையே நெய்யாக்கி ஆஹூதி தந்தாள் ஊர்மிளை, 14 வருடங்கள் அன்ன ஆகாரமின்றி மிக எளிமையாக சனியாசியாக வாந்தாள். தான் செய்த இந்த தியாகத்தைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. லட்சுமணனுக்கும் ஊர்மிளை செய்த இந்தத் தியாகம் தெரிகிறது. வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அப்போதும் லட்சுமணன் ஊர்மிளையை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்களுக்குள் உள்ள மனபேதத்தை ஊகித்தறிந்த சீதாதேவி, ஒருநாள் ஊர்மிளையை அழைத்துக் காரணம் கேட்டாள். அப்போதும் ஊர்மிளை சொல்ல மறுத்தாள். சீதா மிகவும் வற்புறுத்த தான் செய்த செயலையும் அதற்கான காரணத்தையும் விளக்கினாள் ஊர்மிளை சிதை பிரமித்து நின்றாள்.

ஊர்மிளா! ஆயிரம் சீதைகளுக்கு உனக்கு ஈடாக மாட்டார்கள். விரைவிலேயே நான் லட்சுமணனிடம் நடந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, உங்கள் இருவரின் பிரிவுத் துயரைத் துடைக்க வழி செய்கிறேன் என்றாள் சீதா. இதற்கான தருணத்தை சீதை எதிர்நோக்கியிருந்தாள். அப்போதுதான் ஸ்ரீராமன் கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு அழைத்துச் சென்று வால்மீகி ஆஸ்ரமத்தில் விட்டு வருமாறு லட்சுமணனுக்குக் கட்டளையிட்டான். இந்தத் தகவலை சீதைக்குத் தெரிவிக்காமல் மனசுக்குள் புழுங்கியபடி, கண்ணீரோடு லட்சுமணன் தேரைச் செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் அவனிடம் ஊர்மிளையின் தியாகத்தை எடுத்துக் கூறி அவளை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னாள் சீதை. ஒரு பக்கம் துயரமும், மறுபக்கம் ஊர்மிளை பற்றிப் பெருமிதம் கொண்ட லட்சுமணன், அண்ணி எனக்கொரு நல்ல செய்தியைச் சொன்னீர்கள். அதற்காக நன்றி! ஆனால் இந்தப் பாவி உங்களுக்கொரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். என் அண்ணனின் ஆணைப்படி, தங்களை இந்தக் கானகத்திலேயே விட்டுச் செல்ல வந்திருக்கிறேன். என்னை மன்னியுங்கள்! என்று கூறி கதறி அழுதான். அப்போது சீதை அதிர்ச்சியில் மனமுடைந்து சொன்னாள். லட்சுமணா! ஸ்ரீராமன் எது செய்தாலும் அதில் ஒரு தர்மம் இருக்கும்; ஒரு நியாயம் இருக்கும் அயோத்தியின் ஒரு பிரஜைக்கு நியாயம் வழங்க எனக்கு இந்த இரண்டாவது வனவாசம் தந்திருக்கிறார். பரவாயில்லை. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள். எக்காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் உன் மனைவி ஊர்மிளைக்கு இதுபோல் தண்டனை எதுவும் தந்துவிடாதே! தர்மம் அதை ஒருக்காலும் தாங்காது! பாவம் லட்சுமணன்! தாங்க முடியாத துயரத்துடன் அயோத்தி வந்தவன். நேராக ஊர்மிளையைச் சந்தித்து, அவள் தன் மனைவி என்றும் பாராமல் அவள் கால்களில் தடாலென விழுந்து, அவள் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான்.

ராமன் இருக்குமிடமே அயோத்தி என்ற கணவனின் திருவடிகளைப் பின்பற்றிக் கானகம் சென்று, பல துயரங்களை அனுபவித்து, பின்பு அக்னிப்பிரவேசம் செய்யவும் தயாரான சீதை தியாகியா? தாய் பெற்றுத் தந்த ராஜ்ஜியத்தைத் துச்சமாக மதித்து, தனயன் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து, அயோத்தியின் சேவகனாக 14 ஆண்டுகள் வாழ்ந்த பரதன் தியாகியா? அரச போகம் அனைத்தையும் துறந்து, அண்ணன் ராமனுக்குச் சேவை செய்ய 14 ஆண்டுகள் இமைக்காமல், கானகத்தில் தொண்டு செய்த லட்சுமணனின் தியாகியா? இவர்கள் அனைவரும் தியாகிகள் என்றால், கணவன் ஏற்றுக்கொண்ட தியாகப் பணி தடையின்றி நடக்க தன்னையே அவன் வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை உருவாக்கி, அந்தத் துயரத்தைத் தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டு, 14 ஆண்டுகள் ஊண் உறக்கமின்றி அரண்மனைக்குள்ளேயே அக்ஞாதவாசம் செய்து வாழ்ந்த ஊர்மிளையும் இவர்களுக்கு ஈடான தியாகிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடிப்பான எம்.பிக்கள் வரிசையில் முதலிடம் ரவி கருணாநாயக்காவுக்கு! தமிழர்களில் சுமந்திரன் 31 சிறிதரன் 33ஆவது இடம்

முதல் 10 இடத்துக்குள்ள ஒரு தமிழ் MP யும் இல்ல..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் என்னத்த சொல்ல எல்லாம் முடிஞ்சு போச்சு......

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொய்யாலே மூஞ்சி புத்தகத்தில் "like " வாங்க நடக்கிற அக்க போர பாத்தா இதால ஒரு காலத்தில அங்கங்க கலவரம் வந்து இரத்த களறி எல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கு மக்காள்ஸ்..... ஆளாளுக்கு அம்புட்டு வேகமா இயங்கிட்டு இருக்காங்க likes வாங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.