Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணி பற்றாக்குறை...

விஜயகாந்த்.

பார்ரா காப்ட்டனுக்கு வந்த சோதனைய

வேணும்னா அம்மாகிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு பக்கமாவே ஒரு டாஸ்மாக்க ஓபன் பண்ண சொல்லவா

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊரை சொந்த நாடை விட்டு கடல் கடந்து எவன் ஒருவன் இன்னுமொரு நாட்டில் வசிக்க ஆரம்பிகின்றானோ அவன் எல்லாம் அகதி தான்

அவன் படிக்கிற விசாவில் வந்தால் என்ன

வேலை செய்யிற விசாவில் வந்தால் என்ன

உயிருக்கு பயந்து ஓடிவந்தால் என்ன

வருமானத்தை பெருக்க பிசினஸ் விசாவில் வந்தால் என்ன

இல்லை தங்களின் படிப்பை வைத்து skilled விசாவில் வந்தாலென்ன

ஏன் கல்யாணம் கட்டி வந்தால் என்ன சொந்த நாடை விட்டு வந்தால்

நீயும் #அகதி தான்

  • கருத்துக்கள உறவுகள்

05-1404537190-3copy.jpg

 

சின்ன சாடியை... படமெடுக்கப் போய், பெரிய சாடி போச்சே......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தொலைபேசியில் என்னை அச்சுறுத்துகின்றனர்: அஸ்வர் எம்.பி

நம்ம பசங்க யாரோ போன் போட்டு நீங்க வெறும் அஸ்வரா..... இல்லை மாமா அஸ்வரா எண்டு கேட்டிருப்பாங்க போல......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுவிக்க எதிர்ப்பு - காங். பாதையில் பாஜக அரசும்!

எதிர் பார்த்தது தான் அதனால் ஏமாற்றம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊரை சொந்த நாடை விட்டு கடல் கடந்து எவன் ஒருவன் இன்னுமொரு நாட்டில் வசிக்க ஆரம்பிகின்றானோ அவன் எல்லாம் அகதி தான்

அவன் படிக்கிற விசாவில் வந்தால் என்ன

வேலை செய்யிற விசாவில் வந்தால் என்ன

உயிருக்கு பயந்து ஓடிவந்தால் என்ன

வருமானத்தை பெருக்க பிசினஸ் விசாவில் வந்தால் என்ன

இல்லை தங்களின் படிப்பை வைத்து skilled விசாவில் வந்தாலென்ன

ஏன் கல்யாணம் கட்டி வந்தால் என்ன சொந்த நாடை விட்டு வந்தால்

நீயும் #அகதி தான்

இப்படி நானும் யோசித்ததுண்டு. ஆனால் கதியற்றவனைத்தான் அ(கதி) என்று அழைக்க வேண்டும். இப்படி மேம்போக்காக அர்த்தம் கொண்டால் அமெரிக்கா சென்ற கோத்தாவும் அகதி ஆகிவிடுவார். :D

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தொலைபேசியில் என்னை அச்சுறுத்துகின்றனர்: அஸ்வர் எம்.பி

நம்ம பசங்க யாரோ போன் போட்டு நீங்க வெறும் அஸ்வரா..... இல்லை மாமா அஸ்வரா எண்டு கேட்டிருப்பாங்க போல......

 

120 பக்கங்களைத் தாண்டிட்டீங்கள் என்று உங்களை யாரோ விஸ் பண்ண நேரம் தெரியாமல் எடுத்திருக்கீனம் என்று நான் நினைச்சுட்டன் சுண்டு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் பிரச்சினைக்காக "7 நாள் உண்ணாவிரதம்" தொடங்கினார் திக்விஜய் சிங்!

மாப்ளைக்கு புதுசா கல்யாணம் ஆக போகுதில்ல ஒடம்ப குறைக்க ஐடியா பண்ணுறாப்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தே மு தி க புரட்ச்சிப்படை :

தேமுதிக ஒரு அரசியல் கட்சி மட்டுமே என்கிற ஒரு முகமே உங்களுக்கு தெரியும்.

ஐந்து நாட்டின் ரானுவத்துக்கு ஈடாக எங்கள் கட்சியை உருவாக்கி உள்ளார் கேப்டன் என்கிற மறுமுகத்தை இங்கே பதிவு செய்கிறேன்..

சுண்டல்: அட எடுபட்ட பயலுகளா 5 நாட்டுக்கு இணையான இரானுவத்த வைச்சுக்கொண்டு எதுக்குடா தமிழ் நாட்டோட நிக்குறீங்க இந்தியா , பாகிஸ்தான் சீனா , சொறி லங்கா , நேபாளம் என்று 5நாடு மீது போர் தொடுத்து ஆட்சியை காப்டன் பொறுப்பெடுக்கலாமே ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கடைசியில் அடுத்த கட்டத்துக்கு போக முடியாமல் வெளியேறும் அதிக குழந்தைகள் அழுவது ஐயையோ போட்டியில் இருந்து வெளியேறி விட்டோமே....வீட்ட போனா அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்கணுமே என்ற காரணத்தால் தான் போல.....

ஏன்னா அவங்க அம்மா அப்பா குழந்தைங்கள பாத்து முறைக்கிற முறைப்பு அப்பிடி இருக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன். இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும் மேலாகப் புகழ் பெற்றவர்.

வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல். இதற்கு, 'வேதங்களைப் பிரிப்பவர்' என்று பொருள். வேதங்களை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என, பிரித்தவர் வியாசர். 'வியாசம்' என்றால், கட்டுரை என்றும் பொருளுண்டு. கட்டுரையில் பத்தி பிரித்து எழுதுவது போல, வேதங்களைப் இவர் பிரித்தார்.

இவரது நிஜப்பெயர் கிருஷ்ண துவைபாயனர். 'கிருஷ்ண' என்றால், கருப்பு. இதனால் தான், பவுர்ணமிக்கு பின், அமாவாசை வரை வரும் பதினைந்து தேய்பிறை நாட்களை, கிருஷ்ண பட்சம் என்கின்றனர். அதாவது, இருட்டை நோக்கி செல்லும் காலம். 'த்வைபாயனர்' என்றால், தீவில் பிறந்தவர் என்று பொருள். வியாசர் நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு தீவில் பிறந்தவர்.

இவரது தாய் சத்தியவதி. சேதிநாட்டு அரசனான உபரிசரவசுவின் மகள். இவள் ஒரு மீனின் வயிற்றில் பிறந்ததால், உச்சைச்ரவஸ் என்ற மீனவ தலைவர் வீட்டில் வளர்ந்தாள். இவள் யமுனை நதியில், படகு ஓட்டி பிழைப்பை நடத்தி வந்த சமயத்தில், ஒரு நாள், பராசர முனிவர் அங்கு வந்தார். அந்த நேரம் மிக நல்ல நேரமாக இருந்ததால், பராசரார், 'பெண்ணே... இந்த சமயத்தில் நாம் இணைந்தால், உலகம் போற்றும் ஒரு உத்தமக் குழந்தையைப் பெறலாம்...' என்றார். சத்தியவதி மறுத்தாள். பின், அவளைச் சமாதானம் செய்து, அவளுடன் இணைந்தார். அவ்வாறு பிறந்த பிள்ளையே வியாசர். இதனால் தான், நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே என்பர்.

வழி தவறாக இருந்தாலும், நல்லது நடக்க, சில சமயங்களில், நிர்பந்தங்களை ஏற்க வேண்டி வருகிறது. வியாசர் பிறக்காவிட்டால், மகாபாரதம் கிடைத்திருக்காது. இன்று கூட குழந்தை இல்லாதவர்கள், வேறு ஒருவரின் அணுவை ஏற்று, சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது, தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமே என்பதற்காகத் தான். இதை, இன்று உலகம் அங்கீகரித்து விட்டது. இதுபோல் தான், அன்றும் நடந்துள்ளது.

விஷ்ணுவே, வியாசராக பிறந்தார் என்றும் சொல்வதுண்டு. இவர் வேதங்களைப் பிரித்தவர் என்பதால், வேதம் ஓதுவோர் இவரை, குருவாக ஏற்றுள்ளனர். மடாதிபதிகள் இவரது பூஜை நாளில், சாதுர்மாஸ்ய விரதம் (நான்கு மாத தவம்) துவங்குவர்.

பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான்; பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான் என்பது போன்ற அற்புதக் கருத்துகளை உதிர்த்தவர் வியாசர். அவர் எழுதிய மகாபாரதத்தை படிப்போம். அதிலுள்ள சிறந்த தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கடைசியில் அடுத்த கட்டத்துக்கு போக முடியாமல் வெளியேறும் அதிக குழந்தைகள் அழுவது ஐயையோ போட்டியில் இருந்து வெளியேறி விட்டோமே....வீட்ட போனா அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்கணுமே என்ற காரணத்தால் தான் போல.....

ஏன்னா அவங்க அம்மா அப்பா குழந்தைங்கள பாத்து முறைக்கிற முறைப்பு அப்பிடி இருக்கு.....

 

ஏன் சுண்டு சுப்பர்சிங்கர்ல பங்குபற்றுகிற பிள்ளைகள் அழாமலா இருக்கிறார்கள்......சின்னக் குயிலுக்கு பிள்ளைகள் எப்படித் தான் பாடினாலும் ஒரு சின்ன பிழையாவது சொல்லாது விட்டால் திருப்தியாகவே இருப்பதில்லை...ஒரு சின்ன நோற் பிசகிட்டு என்று தொடங்கினால் எப்படியும் இரண்டு மூன்று பிழைகளைச் சொல்லித் தான் முடிப்பார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

08-1404796342-30copy.jpg

 

ஓடுற நாயைக் கண்டால்.... துரத்திற குதிரைக்கு, சந்தோசமாம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்யா பிரேசில் காரனுங்க ஒருத்தனும் கலவரத்தில இறங்கல இதுவே நம்ம நாடு பக்கமா இருந்திருந்தா காலி சோடா பாட்டில்ல இருந்து செருப்பு வரைக்கும் மைதானத்த நோக்கி பறந்திருக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக யுத்தத்தின் போது ஆஸ்திரேலியா க்கு அருகில் ஜப்பானிய படைகள் வந்து விட்டன ஆஸ்திரேலியா மீது அதன் போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலும் நடாத்த தொடக்கி விட்டார்கள்.... புயலென உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வெறியோடு அலை அலையாக ஜப்பானின் படைகள் விமானங்கள் கப்பல்கள் என்று தொடர் தாக்குதல்கள் .... அனுபவமே இல்லாத ஆஸ்திரேலியா படைகள் ஜப்பானின் படைகளை அருகில் இருக்கும் தீவுகளில் வழி மறித்து அதனுடைய வருகையை தாமதப்படுத்த தாக்குல் நடாத்து கின்றார்கள் ஜப்பானியர்களின் வேகத்துக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை பலர் கைதாகி..... யுத்த கைதிகளை கொல்லக்கூடாது என்ற உலக நியதிகளையும் தாண்டி கைதிகள் அனைவரையும் பட்டினி போட்டும் சித்திரவதைகள் மூலமும் படுகொலை செய்கின்றன ஜப்பானிய துருப்புகள்.... ஆஸ்திரேலியாவின் நேச நாடான அமெரிக்காவின் துருப்புகள் ஆஸ்திரேலியா பக்கம் இருந்தும் கள முனையை திறந்து போராடி ஜப்பானிய படைகளை பின்னகர்த்த பின்பு அணுகுண்டு வீச்சின் மூலம் ஜப்பானின் கோரத்தாண்டவம் அடங்கிற்று......

கைதிகளை படுகொலை செய்தது இன்றும் ஆஸ்திரேலியா மக்கள் மத்தியில் ஆறாத வடு ஆனால் இப்பொழுது முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஜப்பானுடன் மிக நெருக்கமான உறவுகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் மேற்கொள்ள தொடங்கிவிட்டன காரணம் சீனாவின் அசுர வளர்ச்சி ஒரு காலத்தில் இந்த நாடுகளுக்கு ஆபத்தாய் முடியும் என்பதால்....எதிரிக்கு எதிரி நண்பர்களாகி பழைய காயங்களை மனதோடு வைத்து விட்டு உறவாட தொடங்கி விட்டார்கள்....

ஆஸ்திரேலியாக்கு நேற்று விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் ஜாப்பானிய படைகள் கைதிகளை கொன்றதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு புதிய உறவுகளுக்கான அஸ்த்திவாரம் போடப்பட்டு விட்டது.....

இப்பிடியான நிகழ்வுகள் தமிழர் தரப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு பாடமாக அமையும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் :மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி என மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நேரத்தில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுண்டல்: எனக்கு என்னமோ இவிங்க 2016 தேர்தல் அரசியல் கூட்டணி பற்றி பேச போய் இருப்பாங்களோன்னு தோணுது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தை பின்பற்றுங்கள்! முஸ்லிம் இளைஞர்களுக்கு கலகொட அத்தே ஞான சார தேரர் அழைப்பு

மற்றவர்களுக்கு அழைப்பு விடுவது இருக்கட்டும் முதலில் புத்தர் போதித்த அகிம்சை , அமைதி பிற உயிர்களிடமும் இரக்கம் காட்டுங்கள் மற்றவர்களையும் உங்களுக்கு நிகராய் மதிக்க பழகுங்கள் போன்ற பண்புகளை நீங்கள் கடைப்பிடியிங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தை பின்பற்றுங்கள்! முஸ்லிம் இளைஞர்களுக்கு கலகொட அத்தே ஞான சார தேரர் அழைப்பு

மற்றவர்களுக்கு அழைப்பு விடுவது இருக்கட்டும் முதலில் புத்தர் போதித்த அகிம்சை , அமைதி பிற உயிர்களிடமும் இரக்கம் காட்டுங்கள் மற்றவர்களையும் உங்களுக்கு நிகராய் மதிக்க பழகுங்கள் போன்ற பண்புகளை நீங்கள் கடைப்பிடியிங்கள்

 

 

அழைப்பிலேயே  சண்டித்தனம் இருக்கே  சுண்டல்

அப்பறம் எப்படி ...?? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நாங்கள் அமெரிக்காவை திட்டி தீர்த்தாலும் அமெரிக்கா போன்ற ஒரு பெரியண்ணன் இல்லாத உலகம் எப்பிடி இருந்திருக்கும்?

நினைச்ச நேரத்துக்கு ஒவ்வொரு நாடும் இன்னுமொரு நாட்டின் மீது படையெடுத்து இருக்கும்.....

வடகொரிய அணுகுண்டால் விளையாடி இருக்கும்.....

ஜப்பான், ஜெர்மனி, சீனா என்று மாறி மாறி படையெடுத்துக்கொண்டு இருப்பார்கள்.... ஈரானும் தன்னுடைய விளையாட்டை காட்டத்தொடங்கி இருக்கும்

etc etc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை மேலெடுத்துச் செல்பவர்கள் வாழ்க்கைத் தத்துவம், இலக்கியம் முதலியவைபற்றிப் பேசும் அறிவுஜீவிகள். சமூகம் பேசும் மொழியில் அவர்களுடைய அறிவு வெளிப்படவில்லை என்றால், அந்தச் சமூகத்தின் உயர் கலாச்சார வாழ்வில் நம்பகத்தன்மை இருக்காது; சமூகத்தின் கலாச்சாரம் பிளவுபட்டதாக இருக்கும். ஆங்கிலம் மட்டுமே முறையாகப் படித்தவர்களின் கலாச்சாரப் பார்வை தமிழ் இலக்கிய, வாழ்க்கைத் தத்துவப் பாரம்பரியத்தில் முளைத்ததாக இருக்காது; இது தமிழ் மொழி சார்ந்த கலாச்சாரப் பார்வையிலிருந்தும், அதிலிருந்து விளையும் படைப்பிலிருந்தும் விலகி நிற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் தமிழ் தேவையா என்ற கேள்விக்குத் தேவை என்பதே பதில். மாணவர்களே தேவையை உணர்வதுதான் பதிலைத் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கும். ‘தமிழ் வாழ்க!' என்பதல்லாமல் ‘தமிழ் வாழ வைக்கும்!' என்பதே அந்த உணர்வு; வாழ்தல் என்பது பணத்துக்கு அப்பாலும் உள்ளது என்னும் உணர்வு அது. தமிழைக் கட்டாயப் பாடமாக்கிச் சட்டம் இயற்றுவது மட்டுமல்ல அரசின் கடமை, தமிழை மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் தமிழ்ப் பாடத்திட்டத்தை அமைப்பதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கண்டிப்பாக தேவை என்று எந்த நாட்டு நிலவரத்தை சொல்கிறீங்கள்....அதையும் தெளிவு படக் கூறினால் நன்றாக இருக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்கழே விடிஞ்சிரிச்சு.....

தேமுதிக புரட்ச்சிப்படையின் பக்கம் போய் அவிங்க கழுவி ஊத்திறத பாக்கணும்......

ஆனா நாம என்ன தான் கழுவி ஊத்தினாலும் ...... கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வும் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க தவமாய் தவமிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை..... ஆனால் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார்...... ஒரு எதிர்க்கட்சியாக இருந்தும் ஆளும்கட்ச்சிக்கு எதிராக எந்தவித பாரிய போராட்டங்களையும் அவரால் ஒழுங்கமைத்து செய்யமுடியவில்லை..... அதேநேரம் 7 மாடி கட்டிடம் விழுந்ததுக்கு கூட தி மு க போராட்டம் அறிவிக்குது..... அரசியலில் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் பலமுனை போராட்டக்களங்கள் அவசியம்...... ஓன்று விஜயகாந்துக்கு நல்ல அரசியல் ஆலோசகர் தேவை இல்லது தலைமைப்பதவியை பிரேமலதா அவர்களிடம் கொடுத்த்துவிட்டு ... இவர் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்யலாம்..... மீண்டும் தன்னையும் கட்ச்சியையும் சுய பரிசோதனை செய்யாதவரை கட்சி மேலெழுவது கஷ்டம் ஏன் காலப்போக்கில் காணாமல் போய்விடவும் கூடும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா தன்னுடைய அனைத்து புலனாய்வு நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டை பல நூறு கோடி டாலர்களால் அதிகரித்திருக்கு........

நாம இங்க இருக்கிறதால அரசாங்கத்துக்கு இம்புட்டு செலவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.