Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன்

Featured Replies

[size=4]மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன்[/size]

[size=2][size=4]மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு உத்தரவினையடுத்து அவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பு பட்டிருப்பதாக நீதவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். [/size][/size]

[size=2][size=4]அதனையடுத்தே மன்னார் நீதவான் அச்சுறுத்தலுக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், [/size][/size]

[size=2][size=4]மன்னார் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனான தமிழ் நீதவானை தாம் சந்தித்ததே கிடையாது. அத்துடன் குறித்த நீதவானை கண்டதும் இல்லை, அவருடன் பேசியதும் இல்லை.[/size][/size]

[size=2][size=4]அவரை நான் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.[/size][/size]

[size=2][size=4]எனினும் நீதிமன்ற வளாகத்தில் எமது ஆதரவாளர்கள் குழுமியிருந்ததாகவும், அதன் போதே காவல் துறையினர் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர்.[/size][/size]

[size=2][size=4]அத்துடன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நான் மன்னாரிலேயே இருக்கவில்லை. சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டதன் பின்னரே மன்னாருக்கு விரைந்தேன்.[/size][/size]

[size=2][size=4]எவ்வாறெனினும், 1990 களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]இருப்பினும் மன்னாரில் தமிழ் சட்டத்தரணிகள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவானவர்கள். இதனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]இதேவேளை, மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு என்று சட்டத்தரணிகள் கிடையாது எனவும், அமைச்சரின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]http://onlineuthayan...261251322198270[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]மன்னார், நீதிவான் முறையிட்ட குற்றச்சாட்டு நிரூபனமானால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் -அஜித் ரோகண[/size]

[size=4]மன்னார், நீதிவானாக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனால் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். [/size]

[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் காவற்துறை அத்தியட்சகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின்படி,முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும், முறையிடப்பட்டுள்ளது. [/size][/size]

[size=2][size=4]மேலும்,மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இந்த பின்னணியில், நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]இந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவை காவற்துறையினர் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு, அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். [/size][/size]

[size=2][size=4]இதேவேளை, நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]நீதிமன்றங்கள் தாக்கப்பட்டால் பொதுமக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும்: கயஸ் பல்டானோ[/size]

[size=4]நீதிமன்றம் மீதான தாக்குதல் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்றிராத அநாகரிக செயல் எனவும் இச்சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடர் கதையாகவே இருக்கும் எனவும் மன்னாரின் சிரேஷ்ட சட்டத்தரணியும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான இ. கயஸ் பல்டானோ தெரிவித்திருக்கின்றார்.

சட்டத்துறையில் ஏறத்தாள 48 வருடங்களாகப் பணியாற்றிவரும் சட்டத்தரணி இ.கயஸ் பல்டானோ மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் இலங்கை வரலாற்றில் மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவங்களை தான் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதும் இல்லை.

மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மன்னார் சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதுதொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 'எமது மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றம் தாக்கப்பட்டிருக்கின்றமை மிகவும் கவலைக்குரியது இது வன்மையாகக் கண்டிக்கப்படவும் வேண்டியது.

ஏனெனில் நீதிமன்றத்தில்தான் மக்களுக்கு நீதி கிடைக்கின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும் நீதிமன்றங்கள்தான். அப்படிப்பட்ட நீதிமன்றங்களே தாக்கப்படுவதாக இருந்தால் பொதுமக்களின் சுததந்திரமும் பாதிக்கப்படுவதாகவே அமையும்.

அரசியல் யாப்பின்படி நாடாளுமன்ற சட்டங்களானது நீதிமன்றங்களின் ஊடாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. மக்களுடைய நீதி நிர்வாகக் கடமைகளை நீதிமன்றங்கள்தான் செய்து கொண்டிருக்கின்றன.

அதே மக்கள் நீதிமன்றங்களை அவமதிப்பதாக இருந்தால் அது தங்களது கையாலேயே தங்கள் கண்களைக் குத்துவது என்றுதான் சொல்ல வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பில் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான முறையிருக்கின்றது. அவைதான்; மேல்முறையீடு போன்ற சட்ட வழிகள். எல்லா வழக்குகளிலும் எல்லோரும் வெல்வது கிடையாது .ஏதோ ஒரு பகுதி தோற்கத்தான் செய்யும்.

அவ்வாறான சூழ்நிலையில் மேல்முறையீடு செய்வது அல்லது மீளாய்வு செய்வது ஒன்றுதான் சட்டத்தால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிவாரணமாக இருக்கின்றது.

அவ்வாறான சட்டரீதியான நிவாரணத்தை இவர்கள் மேற்கொள்ளாமல் வன்செயலில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனத்திற்கே கொண்டு செல்கின்றது.

இப்படிபட்ட விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.இது தவிர நீதவானைத் தனிப்பட்ட ரீதியில் தூசித்தமையும் யாரும் மன்னிக்க முடியாத ஒரு காரியமாகவே அமைகின்றது.

எனவே இவற்றைக் கண்டித்து எதிர்காலத்திலே எமது நீதித்துறைக்கு இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கக்கூடாது என்ற நோக்கோடு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் நீதிமன்ற விவகாரம் தொடர்பாக தக்க நடவடிக்கைகள், உரிய நிவாரணம் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் வரையிலும் மன்னார் போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உயரதிகாரிகளின் அசமந்தப்போக்கின் காரணமாகத்தான் இப்படியானதொரு துர்ப்பாக்கியநிலை நடந்தேறியிருக்கின்றது.

சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளுக்கு அதாவது அவர்களுடைய கடமையை உணரவைக்கும் வரையிலும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் எமது இந்தப் போராட்டம் தொடரும்" என்றார். _[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39570

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாத்....சரியாக..தான் என்ன இனம் என்று சொல்லியிருக்கிறான்...திருத்தவே முடியாத இனம்.....

இனத்துக்குரிய குணத்தைக் காட்டுகிறான்!

தமிழ் மக்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட போது அட்டூழியங்கள் பல செய்த ரிசாத் பதியுதீன் என்னும் இந்த முஸ்லிம் பயங்கரவாதியை நடுவெயில் தண்ணீர், உணவின்றி சில வாரங்கள் கட்டி வைக்க வேண்டும்!

அந்த மனிதன் இலங்கையின், தமிழீழத்தின் சட்டத்துறை தொழிளார்கள் அனைவரையும், தான் அப்படி மிரட்டவில்லை என்றுகூறி முட்டாள்கள் ஆக்கிவிடுகிறான். மகிந்த தனது வழமையான நாடகமாக இந்த விசாரணையை ஆரம்பிக்க சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு ஏமாற்று புது விசாரணை ஆரம்பிப்பதிலும் பார்க்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை கேட்டபடி LLRC விசாரணை செய்து கொடுத்த அறிக்கைக்கு ஒரு நடவடிக்கை எடுக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.