Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல்

Featured Replies

[size=4]குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடிவிடுமாறு அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கூறினோம்.

அத்துடன் அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் ௭ன்றனர். ___[/size]

  • தொடங்கியவர்

[size=4]மதகுருமார் எப்படி இருக்க வேண்டும்?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-24 09:52:02| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=5]அன்பே சிவம் என்கிறது சைவ சமயம்.[/size]

[size=1][size=5]உன்னைப்போல் பிறரையும் நேசி என்கிறது கத்தோலிக்கம். [/size][/size]

[size=1][size=5]பிற உயிருக்கு இம்சை செய்யாதே என்று பெளத்தம் மொழிகிறது. [/size][/size]

[size=1][size=5]எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று இறைவனைப் பெருமைபடுத்துகிறது இஸ்லாம்.[/size][/size]

இப்படியாக எல்லா சமயங்களும் நல்லதைப் போதிக்கின்றதாயினும் சமயக்கருத்துக்கள் மக்களைச் சென்றடையவில்லை. மாறாக மதவாதமே எஞ்சி மற்றவர்களின் தலையைக் கொய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் என்ன? மக்களைத்தவிர பெரும்பாலான மத குருமாருக்கு இறை நம்பிக்கை இல்லாமையே ஆகும்.

[size=1][size=4]இத்தகைய மதகுருமார் கோல உடை தரித்ததெல்லாம் மனித இரத்தத்தை இந்த மண்ணிற்கு தாரைவார்க்கவன்றி வேறெதுவும் இல்லை. அண்மையில் கூட ஒரு மதகுருவை பாடசாலை அதிபர் ஒருவர் சந்திக்க நேரிட்டது.மதகுரு என்பதற்கு அந்த அதிபர் உரியமதிப்பை செலுத்தினார். குறித்த மதகுருவோ தனது காரியத்தில் மட்டுமே கண்ணாயிரு ந்தார்.அதிபர் கூறிய எந்த விடயத்தையும் அவர் கேட்டதாக இல்லை. தனது காரியத்தை நிறை வேற்றுவதற்கு அதிப ரின் உதவியைப்பெற்ற பிரஸ்தாப மதகுரு, அதிபரை மட்டுமல்ல; அந்த ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த மக்களையே ஏமாற்றித் துரோகம் செய்துவிட்டார்.இப்போது அந்தப் பகுதியில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.

மோட்டார் சைக்கிள்களில் வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் நடமாட்டம் தீவிரமடைந்து வருகின்றது. எந்தநேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில், அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.கண்ணுக்கு முன்னாக ஒரு மதகுரு மதவெறி பிடி த்து அந்த ஊரில் மதச் சண்டையை ஏற்படுத்த அதிதீவிரம் காட்டிவருகிறார்.என்ன செய்வது! எந்த அநீதி இழைத்தா லும் கோல உடை அவர்களைப் பாதுகாத்துக்கொள்கிறது.இப்படியான மதகுருமார் தாமும் நரகத்திற்குச் சென்று மற்ற வர்களுக்கும் நரகம் செல்லும் பாதையைக் காட்டி நிற்கின்றனர்.உண்மையான மதகுரு தெய்வம் போன்றவர். அவரின் ஒவ்வொரு செயலும் மக்களை நல்வழிப்படுத்துவது. அவர்களுக்கு நல்லதை எடுத்துக் கூறுவது. இனம், மதம், மொழி என்ற பேதம் மறந்து ‘மனிதன்’ என்று நோக்குவது. இதைத்தான் மதகுருமாரிடம் எல்லாச் சமயங்களும் எதிர்பார்க்கின்றன.

ஆனால் அப்படி எதுவுமில்லை. ஓ! இறைவா இவர்களை மன்னித்தருளும். இவர்களின் ஆழ் மனங்களில் தேங்கிக்கிடக்கும் மதப்பேயை இல்லாது செய்ய உதவி புரியும். இத்தகையவர்களின் சகவாசம் கிடைக்காதிருக்க அருள்புரியும்.[/size][/size]

Edited by akootha

தமிழனை அழித்துவிட்டது இனி காளான் போல் பெரும் இஸ்லாமியரை அழிக்கலாம் எனப் புறப்பட்டுள்ளார்கள் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள்!

சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழினத்தை அழித்த இஸ்லாமியர்களுக்கு இது போதாது! அதுவும் இல்லாமல் சிங்களப் பயங்கரவாதிகள் போற்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் ஆர்ப்பாடங்கள் செய்த இஸ்லாமிய ஈனர்களின் அனைத்து பளிவாசல்களை மூடினாலும் நாம் அவர்களுக்கு உதவும் சூழ்நிலையை அவர்களே இல்லாமல் செய்து விட்டனர்!

சம்பந்தன், சுமந்திரன் போன்ற அரைவேக்காடுகள் இதுக்கு விழுந்தடித்து அறிக்கைகள் விடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
smiley-laughing018.gifsmiley-laughing001.gif

[size=4]பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.[/size]

பதியுதீன் திருகுதாளம் ஆடும்போது இப்படி எதையாவது மூடிமறைக்கவா என்ற சந்தேகம் இருந்ததுதான். இது சில நாட்களாக புகைந்துகொண்டிருந்திருக்கு. அதனால்தான் அதை வெளிவரவிடாமல் தடுக்க மேலிடத்து ஆணைகள் பதியுதீனுக்கு வந்திருக்க வேண்டும். பதியுதினுக்கு உலங்குவானூர்த்தியும் வழங்கப்பட்டிருக்கிறது. பொலிசும் தலையிடாமலிருந்திருந்திருக்கு. தம்புள்ள் தாக்குபட்ட சிலநாட்களின் பின்னரே பதியுதீன் மன்னர் ஆயர்மீது தாக்குதல் தொடக்கினார். அது பதியுதீனுக்கு தோல்வியாகத்தான் கருத வேண்டும். இந்த முறை நேரத்திற்கே செய்து வெற்றிகரமாக முஸ்லீம் மக்களின் கவனத்தை வேறு எங்கோ திருப்பிவிட்டார். இதை மூடிமறைப்பதில் பதியுதீன் நிச்சயமாகத்தான் வெற்றி கண்டுள்ளார் போலுள்ளது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]இனக்கலவரத்துடன் மதக்கலவரமும் சேர்க்கப்படுகின்றது. பொருளாதார பிரச்சனையும் தீவிரமடையும். [/size]

[size=4]லங்கா மாதா எவ்வளவு நாளுக்குத்தான் இத்தனையையும் தாங்குவா?[/size]

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல்

ஒ அப்படியா ..........எனக்கு இதைப்பற்றி எந்த ஆர்வமும் இல்லை .........

உங்கள் இணைப்பிற்கு நன்றி அகூதா..........நான் எழுதியது உங்களைப்புன்படுத்த இல்லவே இல்லை .........

என்னைப்புன்படுத்திய மாந்தரைப்பற்றி நான் கவலை கொள்வதே இல்லை.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.