Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 நாள் கைலாய யாத்திரை புறப்படும் நித்யானந்தா..!: அப்போ ஆண்மை பரிசோதனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார்.

நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம்.

இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர்.

பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வழியனுப்பி வைக்கவே நாம் இங்கு வந்தோம். நமக்கும், நித்யானந்தருக்கும் எந்த கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ இல்லை. எனவே, எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றும் எண்ணம் நமக்கு இல்லை.

நித்யானந்தர் நம்மை வசியப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். என்னை நம்மை வசியப்படுத்தவில்லை. யாராலும் வசியப்படுத்தவும் முடியாது. நமக்குத் தான் மற்றவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

மதுரை ஆதீனத்தில் முதியவர் யாரும் தாக்கப்படவில்லை. ஆதீனத்தில் மரகத லிங்கம் இருப்பதாக கூறப்பட்ட தகவல் பொய்யானது. ஸ்படிக லிங்கம் மட்டுமே உள்ளது. மான், புலித் தோல்கள் எல்லாம் அங்கு இல்லை என்றார்.

பின்னர் திடீரென சீரியஸாகி, முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு தர வேண்டும். அணையில் தமிழக அரசு மட்டுமே பராமரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது விஷயமும் பேசினார்.

கைலாய யாத்திரைக்கு பின் ஆண்மை சோதனை செய்யலாமே-நித்யானந்தா:

இதையடுத்து நித்யானந்தா நிருபர்களிடம் பேசுகையில், என் மீதான ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை. தனது மகனை மீட்டுத் தருமாறு மதுரை ஆட்சியரிடம் பெற்றோர் புகார் கொடுத்துள்ளது, அந்த பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே இருந்த பிரச்சனை. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.

பெங்களூரில் இம்மாதம் 30ம் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். நான் கைலாய யாத்திரைக்குச் செல்வது 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, யாத்திரை முடிந்து வந்த பிறகு பரிசோதனைக்கு ஆஜராவதாக போலீஸில் மனு கொடுத்துள்ளோம். இது குறித்த வழக்கில் எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விவரங்களைத் தெரிவிப்பார்.

நான் புதன்கிழமை (இன்று) மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கிறேன். அங்கிருந்து நேபாளம் சென்று கைலாயம் செல்வேன். என்னுடன் கைலாயத்தில் 200 பக்தர்களும் 3 வாரம் தங்கியிருந்து வழிபாடு செய்ய உள்ளனர்.

ஆதீன விதிமுறைகளை கடைப்பிடித்து, முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தேர்வு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை.

என் பெயரைப் பயன்படுத்தி யாரும் புதிய நிறுவனமோ, ஹோட்டலோ, டிராவல் ஏஜென்சியோ தொடங்கக் கூடாது என்று என் பக்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன் என்றார் நித்யானந்தர்.

Thanks to thatstamil

200 பக்தர்கள்? கட்டாயம் அவர்கள் பெண் பக்தர்களாக தான் இருக்கும். :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா தான் இருக்க போது நல்ல சான்ஸ் அ மதுரை மிஸ் பணிட்டுது கைலாய வீடியோவ பாத்திட்டு தான் யோசிக்க போறார் தானும் மலை ஏறி இருக்கலாம்னு :D

நித்திண்ட க்ரூப்ல இருக்குற பொண்ணுங்களுக்கு லக்கு தான் கொடைக்கானல் கைலாயம்னு டூர் கூடிட்டுல திரியுறாரு

  • கருத்துக்கள உறவுகள்

ரண்டு ரண்டு மலையா ஏறப்போகுது நித்தி குடுத்துவைச்சவன் . :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்!

வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.

எப்போ யார் மூலம் அடுத்த டேப்போ.. எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி!

Thanks to Tamil movies

எங்கையோ மச்சம் இருக்கையா எங்கனு தான் தெரியல்ல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.