Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாரதர்

நான் இந்த நண்பனைத் தாக்கிப் பேசவேண்டும் என்று எழுதவில்லை. ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களை எழுச்சி பெறச் செய்வதற்கு வழிகளைத் தேடாமல் தங்கள் பக்கத்தின் நியாயங்களை கற்பித்தலுக்காகத் தான் நிற்கின்றார்கள்.

பேராசிரியர் சொன்ன பிரச்சனைகளை மூடி மறைக்கின்றார்களே தவிர, அக் காயத்தை ஆற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்கவில்லை. ஆக சிந்திப்பது எல்லாம் சட்டத்தின் பின்னால் மறைந்து தங்களை நியாயப்படுத்துவது தான்.

இளையோர் அமைப்பு தொடர்பாக விழிப்பு வரவேண்டும். மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிக்கு அது வழி சமைக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகம் எப்படி தமிழ்மக்களுக்கு வழி காட்டியாக இருந்ததோ அது போல இதுவும் வெற்றி பெற வேண்டும். அப்போது பொங்குதமிழ் நடத்தும் போது தமிழ் உணர்வு வேண்டும் என்பதற்காக எல்லோரும் வேட்டி, சேலையோடு தான் வர வேண்டும் என்று யாரும் புலம்பியிருக்கவில்லை. ஏனென்றால் அப்போது தமிழ்மக்களின் வாழ்வாதாமே பிரச்சனையாக இருந்தது

இதைத் தான் இளையோர் அமைப்பு மீது சேறு புூசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று மிகப்பெரிய பிரச்சனை நடக்கும்போது இப்பவும் சின்னச்சின்ன விடயத்தை தூக்கிப் பிடித்து, பிரச்சனைகளின் திசைகளை மாற்றமடையச் செய்ய வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

ம்ம்ம்ம்ம்ம் ... குட்டுப்பட வேன்டியவர்களை குட்டாமல் உண்மையை சொன்னவர்களை குட்டப் பார்க்கிறார்கள்!

ஒரு சிறிய உதாரணம்...

ஈழத்தமிழ் மக்களின் போராட்டமோ அன்றி அடக்கு முறைகளோ எப்போதோ தோன்றி விட்டாலும், சிங்கள இனவெறியின் கோரமுகமும், தமிழர் போராட்டமும் உலகிற்கு தெரியத் தொடங்கியது 1983 யூலைக் கலவரத்திற்குப் பின் தான்!! அந்த கறுப்பு யூலையின் அதிர்வலைகளை நாம் மறப்போமாயின் எம் போராட்டத்தை மறந்ததற்குச் சமமானது! அந்த 83 யூலையின் பின் வருடா வருடம் "கறுப்பு யூலையை" நினைவூட்டி பாரிய ஆர்ப்பாட்டம், லண்டன் பிரபலமான வீதிகளினூடே நடைபெற்று, புகழ்பெற்ற "ரவல்கார் சதுக்கத்தில்" ஒன்று கூடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும். அந்திகழ்வில் பிரித்தானிய பாரளுமன்ற பல உருப்பினர்கள் கூட பங்கு பற்றுவார்கள். அந்த "கறுப்பு யூலை நிகழ்வு" லண்டனில் ஈழத்தமிழர்களின் ஓர் அடையாள நிகழ்வாக நடைபெற்று வந்தது. உணர்வு பொங்க ஆயிரக்கணக்கான எம்மக்கள் லண்டன் வீதிகளில் பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நிகழ்வாக நடைபெறும். ஆனால் இன்றோ ....??? பல ஆண்டுகளாக ...????

... என்ன நடந்தது!!!!! அந்த "கறுப்பு யூலை நிகழ்வு நிறுத்தப் பட்டதற்கு?????

யாராவது எந்த ஊடகத்திலாவது வந்து பதில் சொல்வார்களா??????...

கருப்பு யூலை நிகழ்வு, லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கு தடை விதிக்கப்படும் முன்பே கைவிடப் பட்டிருந்தது!!!!

இல்லை தடைதான் இருப்பினும், இப்படியான ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு லண்டனில் தடையுள்ளதா??????

...............

ஆயிரம் கேள்விகள் !!!!! ... விடைகள் ??????

இப்போ புரிகிறதா எங்கு பிழை என்று????????????

எம்மினத்திற்க்கான என்ன சாபமோ தெரியவில்லை!!!!! ... பலத்தில் தற்போதும் இதைப்போல பல பல தொடர்கதைகளாகத் தொடர்கின்றன ....

அரோ.....

தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.  

கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.  

நல்ல ஒரு கேள்வி தூயவன். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உண்டு.

கனடாவினிலே தடைசெய்யப்பட்டபோது எந்தவொரு முன்னணி அமைப்புக்களையும் தடைசெய்யவில்லை. மற்றும் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பில் ஓர் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்பட்டது. அதனால் கனடியத் தமிழராகிய நாம் சட்டஉதவி பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சட்ட உதவி என்பது உடனே கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்ந்து எவை செய்யக்கூடாது எவை செய்யக்கூடியது என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியது. கனடாவில் நாம் கனடியச் சட்டதிட்டங்களிற்கு மதிப்பளித்து செயற்படுவதன் மூலமே எதிர்காலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு தெளிவில்லாது காணப்படும் சட்டத்தின் முன்னால் நாம் ஏதாவது செய்யப்போய் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.

மற்றும் புலிகள் அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னணி அமைப்புக்களை தடைசெய்திராதிருந்தும் உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் சோதனை இடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். இதுவும் தமிழர்கள் இதுவரை வாய்மூடி மெளனித்திருப்பதன் ஒரு காரணம். நிச்சயமாக இத்தடைக்கு எதிராக கனடியத்தமிழ் சமூகம் தனது உச்ச எதிர்ப்பினைப் பதிவுசெய்யும். ஆயினும் அதற்கு முன் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளையும் மிகவும் நிதானமாகச் செய்து வருகின்றது. ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் அதனைச் செய்வதற்கும் பாதுகாப்புத்தரப்பினரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நடைமுறை.

அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்கள் என்று நினைக்கிறேன். அதாவது favourable court ruling கிடைத்தது என்று நினைக்கிறன். ஆனால் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முழுமையான விபரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

மற்றைய நாடுகளில் இப்படியான முயற்சிகள் நடக்கவில்லை.

அதிலே சட்டத்தரணி உருத்திரகுமாருக்கும் பங்கு இருக்கின்றது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அருவி!!

உங்கள் வாதத்துக்கு என்ன பதில் என்று யோசித்துக் கொண்டிருந்த போது பழ.நெடுமாறன் ஜயா தமிழீழத்தில் சிங்களப் படைகள் செய்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும், விமானக் குண்டுத் தாக்குதலுக்கும் எதிராக போராட்டம் செய்ய இருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது.

இந்தியாவிலும் புலித் தடை இருக்கின்றது.நீர் கனடாவில் சொல்லப் போகின்ற சட்டங்களை விட, ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தும் இந்தியாவின் சட்டங்கள் வன்மையானவை. வயது முதிர்ந்த நெடுமாறன் ஜயாவை ஒரு நாள் முழுக்க வாகனத்தில் ஓட்டிச் சென்று துன்புறுத்திக் கூட இருக்கின்றார்கள்.

அனால் நெடுமாறன் ஜயா வெளியிடப்போவது, மக்களுக்காக! அந்த உணர்வாவது எம்மிடம் இல்லையா??

எனவே நீர் சொல்வது போல நிதானம் பாவிக்கப்படவில்லை. ஏனென்றால் நிதாரனமாகச் செய்யப் போகின்றோம் என்பது வெறுமனே எதிர்ப்புக்களை சமாளிக்கும் ஒரு வித திருட்டுத்தனம்.

இலங்கையில் விசாரணைக் குழு அமைப்பார்களே அது போன்றது. பிரச்சனைக்காலத்தில் அமைக்கப்பட்டு, அது பின் மறந்து போய் விடும்.

எனவே உங்களின் நிதானமான சட்டத் தீர்வு இப்படியாகத் தான் போகும் என்பதே எனது கருத்து. ஆனால் கவலைப்படாதீர்கள். இப்போது நான் கேட்ட கேள்வியை என்னும் ஆறு மாதத்தில் கட்டாயம் ஞாபகப்படுத்துவேன். அப்போது பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.

உண்மையில் ஈழத்துக்காக, எங்களை விட தமிழகத்தமிழ் உணர்வாளர்கள் ஆவலோடு இருக்கின்றார்கள். அது ஒவ்வொரு ஈழத்தவனிடமும் உயிர் பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி "ஒற்றுமை வாரம்"

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி மே 8 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை "ஒற்றுமை வாரம்" கடைபிடிக்கப்பட உள்ளது.

கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது.

இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது. சிங்கள பேரினவாதிகளையும், இனவெறியாளர்களையும், இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிக்க அனுமதித்துள்ளது.

போரை நோக்கிய சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தடையின் பின்னான காலத்தில் தீவிரப்பட்டுள்ளது.

கனடா தடையின் பின்னான காலத்தில் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள் பெருமளவில் இலங்கைத்தீவில் அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தொடரும் தமிழர் இனப்படுகொலை, புத்தூர் படுகொலை, தற்போது கொழும்பில் நடைபெறும் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவது, கனடிய தமிழ் மக்களுக்கு தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெரிதும் அதிகரித்துள்ளது.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து, கனடிய குடிமக்களான கனடிய தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவர்களிற்கு உரிமை மறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக தமிழர் என்ற சொற்பதத்துடன் வெளியிடப்படும், செய்திகள் தமிழர் குறித்த தப்பபிப்பிராயத்தை ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதால், தொழிலிடங்கள் மற்றும் பயிலிடங்களில் கனடிய தமிழர் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

வழமையான தமிழர் செயற்பாடுகள் மீதும் திடீரென தேவையற்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.

தனிநபர் உரிமைகளை அரசியல் சாசனம் கொண்டே உறுதிசெய்யும் முதல்தர நாடான கனடாவில், இவ்வாறு தவறான முனைப்புக்கள் ஏற்புடையவையல்ல, உடன் தடுக்கப்பட்டாக வேண்டும்.

உண்மை நிலைமைகளை மறைத்து, உலகத்தை பொய்மைக்குள் தள்ள சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

இதன் ஒரு அங்கமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் சமாதான காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த எந்தவொரு கைதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மீதும், உண்மையை வெளியிடுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்கான பாய்ச்சலும், நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், உண்மையின் குரலாக, உரிமையின் குரலாக, சமாதானத்தின் குரலாக, கனடியத் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக சமாதானத்தை வேண்டிய கனடியத் தமிழர் ஒற்றுமை வாரம் அமையும்.

இந்த வாரத்தில் தமிழர் இல்லங்கள், வியாபாரத்தலங்கள், வாகனங்கள் தோறும், கறுப்புக் கொடிகளை பறக்க விடுவது என்றும், தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், சமாதானத்தை வேண்டியும், உரிமைகளின் காப்பை வலியுறுத்தியும், தமிழர் ஒன்றுகூடல்கள் பல நடைபெற உள்ளன.

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி "ஒற்றுமை வாரம்"

[செவ்வாய்க்கிழமை, 2 மே 2006, 05:31 ஈழம்] [புதினம் நிருபர்]

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.