Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தொடர்.....

Featured Replies

இது தமிழக அரசியல் இதழில் புலவர் புலமைபித்தன் எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும்?? தொடர் (அரசியல் தொடர் )

இந்த தொடர் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணைக்க முடியுமா தெரியவில்லை என்னால் முடிந்தவரை இணைக்கிறேன் குறைகள் இருப்பின் மன்னிக்கவும்

*******************************************************************************************************************************************************************

[size=4]நெஞ்சமும் இல்லாமல்; நீதியும் இல்லாமல் இருக்கிறவர்கள் எல்லாம் நெஞ்சுக்கு நீதிஎன்று சுயசரிதம் எழுதிக் குவிக்கிறார்களே! [/size]

[size=4]அதனால்தான் நெஞ்சத்துக்குள்ளேயே இருட்டில் கிடந்த ஒரு சிலவற்றையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைத்து எழுதுகிறேன். [/size]

[size=4]அசல்கள் அடங்கிக் கிடப்பதும் நகல்கள் நாட்டாண்மை செய்வதும் எல்லாக் காலங்களிலும் நடைபெறும் காரியம்தானே! [/size]

[size=4]தமிழ் ஈழப் பிரச்னை காரணமாக என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவரும் நானும் எந்த அளவுக்கு எதிரெதிர்த் துருவங்களாக நிற்க வேண்டியிருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? [/size]

[size=4]அந்த மன்னாதிமன்னனை... துன்பப் படுத்த நேர்ந்த நேரங்களில் என் மனம் எப்படி வலித்தது; எப்படித் துடித்தது என்பதை எல்லாம் இன்றுபோய் நான் அவரிடமா சொல்லமுடியும்! [/size]

[size=4]ஏறத்தாழ 80 ஆம் ஆண்டில் இருந்து இறுதிவரை அந்த மனிதனுக்கு நான் தீராத தொல்லைகளையே கொடுத்துவந்திருக்கிறேன். [/size]

[size=4]ஆனால் அத்தனை தொல்லைகளையும் அவர் தாங்கிக் கொண்டார். ஒரு நாள் கோபித்தார்... ஒரு நாள் சண்டை போட்டார். ஒருநாள் அந்த மனிதனே என்னை சமாதானப்படுத்தினார். அப்படிப்பட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா! எதை எதை நான் சொல்ல, எதை எதைச் சொல்லாமல் தள்ள! இந்த ஏழைப் புலவன் மீது ஏன் அவர் அத்தனை அன்பு வைத்தார்! [/size]

[size=4]நான் தொல்லை தந்தும் ஏன் தாங்கிக் கொண்டார்? என்னையும் தாங்கிப் பிடித்தார். ஒரு சமயத்தில், என்னைக் கடிந்துகொண்டு அவர் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்! அவர் கேட்டார்... [/size]

[size=4]‘‘உங்களது கொள்கை வெறிக்கு எல்லையே இல்லையா?’’ நான் சொன்னேன்... [/size]

[size=4]‘‘பதவி வெறி இருந்தால் தவறு; பணவெறி இருந்தாலும் தவறு; கொள்கை வெறி இருந்தால் தவறா? கொள்கை வெறிக்கு என்ன உச்சவரம்பு?’’ அவர் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மிகவும் நொந்துபோய்... [/size]

[size=4] [/size]

[size=4]‘‘புலவரே... நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. ஊர் உலகத்தில் அவனவன் கொள்கை பேசுகிறவன் எல்லாம் பத்து தலைமுறைக்கு, நூறு தலைமுறைக்கு சொத்து சம்பாதித்து வைத்துக் கொண்டு பேசுகிறான்! அப்படி நீங்கள் என்ன சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்? எனக்குள்ள கவலை எல்லாம் நான் உங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன் என்பதுதான்’’என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தார். [/size]

[size=4]அப்போது நெஞ்சுக்கு அந்த வலி தெரியவில்லை. எனக்காக அவரது மனம் எப்படித் தவித்தது என்பது புரியவில்லை. தான் பெற்ற பிள்ளைமீது ஒரு தந்தைக்குள்ள அக்கறையும் ஆற்றாமையும் இப்படித்தானே இருக்கும்! அந்த அக்கறையும் அந்த ஆற்றாமையும் என் மேல் தலைவனுக்கு இருந்தது. [/size]

[size=4]உங்களை எப்படி நான் பாதுகாக்கப் போகிறேன்என்று இதயம் கனக்க என்னை நினைத்து கவலைப்பட்டாரே... அவருக்கும் எனக்கும் என்ன சொந்தம்? [/size]

[size=4]தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன் ([/size]தமிழக அரசியல்[size=4])[/size]

[size=4]என் கண்ணிலே கனவாகவும், நெஞ்சிலே நினைவாகவும், ஒரு கணமும் நீங்காமல் நிறைந்திருக்கும் என் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்டியிலே பிறந்தார்.

என் உள்ளத்தில் நுழைந்து உயிரிலே கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவன்; அவன் பேரைச் சொன்னால் உலகமே அதிர்ந்து போகும் பேராண்மை மிக்கவன் என் தம்பி பிரபாகரன் வல்வெட்டித் துறையிலே பிறந்தான்.

அந்த மாமனிதன் வடகடலில் இட்ட ஒரு நுகம்; அதன் துளையில் தென்கடல் இட்ட கழி சென்று கோத்ததுபோல தம்பி. சென்னையில் கண்டார்கள் பேரன்பும் நட்பும் கொண்டார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான நட்பும், உள்ளம் கலந்த உறவும், தனி மனிதர்களுக்கான நட்பும் உறவும் அன்று! அது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலான நட்பு; உறவு.

அடிமைச் சகதியில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை உலகம் முழுவதும் விடிந்தாலும் தங்களுக்கு விடிவே இல்லாமல் தவித்துக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்சிக்காக விடுதலைக்காக உருவான நட்பு. உன்னதமான உறவு.[/size]

[size=4]இரண்டு புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பொருத்தமான நட்பு. ஈழப்போராளிகள் என்று எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள். அத்தனை பேரும் என் வீடு தேடி வந்தவர்கள்தாம். எந்தப் போராளி இயக்கத் தலைவர்களையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

தமிழ் ஈழ விடுதலையை மீட்டெடுக்கப் போகும் பெரும் தளகர்த்தர் தம்பி மட்டும்தான் என்பதிலே அழுத்தமான உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்என்கிறார்களே... அதற்கு ஒருபடி மேலே போய்த் தம்பிக்காக, தட்டாமலே திறந்த கதவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு. கேட்காமலேயே கொடுத்த கரம், அந்த வள்ளலின் வாரி வாரிக் கொடுத்துப் பழக்கப்பட்டுப்போன கரம்.

சுதந்தரம் என்பது யாரிடம் இருந்தும் யாரும் வாங்குவது அல்ல; ரத்தத்தின் விலையாக மீட்டெடுப்பது. கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்ற சுதந்தரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. விலைகொடுத்து வாங்காத எதுவும் மரியாதைக்குரிய பொருள் அல்ல. சுதந்தரம் ஒன்றும் இலவச வேட்டி சேலை போல யாரோ கொடுக்க யாரோ வாங்கிக் கொள்வதல்ல.

நான் தம்பிக்கு அடுத்தபடியாக மதிக்கின்ற மரியாதை வைத்திருக்கிற போராளி சேகுவேராதான். அவர் கியூபாவை விட்டு வெளியேறும்போது தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்; சுதந்தரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி; ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் நடக்கிறேன். சிலர் என்னை சாகசக்காரர் என்று அழைக்கலாம்! நான் சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம்! தன்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரர் என்கிறார் போராளி சேகுவேரா.

தம்பியும், தன் மண்ணையும் மக்களையும் மீட்க, தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரன்தான். அந்த மாவீரனின் சாகசத்தில் மக்கள் திலகம் மாறாத நம்பிக்கை வைத்திருந்தார். நான் உனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன். ஆயுதங்கள் வாங்கிக் குவி. விடுதலைப் போரில் நின்று வெற்றிகளைக் குவி. உன்னால் மட்டும்தான் தமிழீழம் விடுதலை பெறும். தட்டிக் கொடுத்தார் தாவி அணைத்துக் கொண்டார். கோடானுகோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தார்.

ஒருநாள் தம்பியிடம், ‘‘ஆயுதப்-புரட்சியின் மூலம் ஈழ விடுதலையை மீட்டெடுக்க எவ்வளவு தேவைப்படும்?’ என்றார் புரட்சித் தலைவர். தம்பி, ‘நூறு கோடிஎன்றார். அதை நான் தருகிறேன்என்றார் புரட்சித் தலைவர்.

என் தலைவன் கொட்டிக் கொடுத்த செல்வம், அடிமைச் சிறையில் கிடக்கும் ஒரு தேசத்தை மீட்க ஆயுதங்களாகிப் பயன்பட்டது. என் தலைவனுக்கு நிகரான மாமனிதன் இல்லை; [/size]

[size=2][size=4]நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்[/size])[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை, இன்னொரு தொடரில் காண்பது, மகிழ்ச்சி!

தொடருங்கள்!

  • தொடங்கியவர்

தொடங்கியாச்சு முழுவதும் இணைக்க முடியுமான்னு தெரியல பார்க்கலாம் அண்ணா..:)

நன்றி ஈசன் அண்ணா

  • தொடங்கியவர்

[size=4]கொடியவன் ஒருவன், ஒன்றும் அறியாத அப்பாவி ஒருவனை கொலை செய்துவிட்டான்.

கொலைக்கு ஆளானவன் வீட்டில் மனைவி,குழந்தைகளின் ஓலம்; ஒப்பாரி. ஊரே இரங்கல் தெரிவித்தது!

இரங்கல் தெரிவிப்பதால் இறந்தவன் என்ன எழுந்தா வரப்போகிறான்? பாடை கட்ட மூங்கில் வாங்கக் கூட கையில் காசு இல்லை.

கொலை செய்தவனே இழவு வீடு தேடி வந்தான்.

பாவம்... பாடைகட்ட மூங்கில் கூட இல்லை. பச்சோலை இல்லை.கவலைப்படாதே... நானே வாங்கித் தருகிறேன். பாடையை சுமந்து செல்ல நான்கு பேரையும் நானே அனுப்பி வைக்கிறேன்’’ என்றான் அந்தக் கருணாமூர்த்தி. இது கட்டுக் கதை அல்ல...

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய இந்தியா என்கிற புண்ணிய பூமி தமிழ் ஈழ மக்களுக்கு உதவப் போகிறது என்பதைப் பார்க்கும்போதும்;படிக்கும்போதும்;இந்தக் கதையும் காட்சியும்தான் என் கண் முன்னே நிற்கின்றன!இந்தியா என்பது என்னைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன்களை பற்றி சிந்திக்காத தேசம்.

இந்தியாதான் தமிழ் ஈழத்துக்கு மாபெரும் தடைக்கல்லாக இருக்கும் என்பதை தம்பிபிரபாகரன் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் புரிந்து வைத்திருந்தார்.

ஒருநாள் மதுரையில் இருந்து வீட்டுக்கு வந்தவர்,

அண்ணே...நாங்கள் எல்லாம் என்ன இந்த நாட்டின் பார்வையில் கிரிமினல் குற்றவாளிகளா? என்று நான் சற்றும் எதிர்பாராத வகையில் கண்களில் நெருப்பெரிய கோபமாகவே கேட்டார் தம்பிபிரபாகரன்.

என்ன தம்பி, என்ன சொல்கிறீர்கள்?’’ என்றேன்.

அங்கே (மதுரையில்) நான் அறையில் தங்கியிருக்கும்போது காவல்துறையினர் எப்போதும் என்னை கண்காணித்தபடியே இருக்கிறார்கள். நான் கடிதம் எழுதிக் கொண்டிருந்தால் ஜன்னல் வழியாக அதை கவனிக்கிறார்கள், கண்காணிக்கிறார்கள்.அவர்களே வலியவந்து, ‘சிற்றுண்டி சாப்பிட போகவில்லையா?’ என்று கேட்கிறார்கள்.மதியவேளையில் வந்து, ‘சாப்பிடப் போகவில்லையா?’ என்கிறார்கள். இப்படி காவல்துறை எங்களை தொடர்ந்து கண்காணிப்பது பெரிய அவமானமாக இருக்கிறது.

ஒரு விடுதலைப் போராளியை கிரிமினல் போல இந்தத் தமிழ்நாட்டின் காவல்துறை பார்ப்பதுவெட்கமாக இருக்கிறது. தலைகுனிவாக இருக்கிறது! என்று கனல் கக்கும் கண்களோடு கொதித்துப்போய் பேசினார் தம்பி பிரபாகரன்.

சரி தம்பி பொறுமையாக இருங்கள். நாம் தலைமைச் செயலகம் போவோம். இதுபற்றி விசாரிப்போம்’’

என்று என் காரில் (அரசு கொடி போட்ட கார்)ஏற்றிக் கொண்டு மேலவைத் துணைத் தலைவருக்கான எனது அறைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.

அப்போதும் புரட்சித் தலைவருக்கும் எனக்கும் ஊடற்பருவம்தான். பெரும்பாலான காலமும் அப்படித்தானே போனது!என் அறையில் இருந்துகொண்டு அப்போது சட்ட அமைச்சராக இருந்த சகோதரர் பொன்னையன் அவர்களை இன்டர்காமில் அழைத்தேன்.அவரும் விரைந்து என் அறைக்கு வந்து சேர்ந்தார்.

தம்பி பிரபாகரன் என்னோடு அங்கு இருப்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

தம்பியைப் பார்த்தார். கொஞ்சம் ஆச்சரியம்,கொஞ்சம் அதிர்ச்சி.

தம்பியைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

பதிலுக்கு தம்பியும் வணக்கம் தெரிவித்தார்.

நாங்கள் மூவரும் வெளியே வந்து, ஒரே காரில் அமர்ந்தோம்.

என் இடப்புறத்தில் தம்பி;

வலப்புறத்தில் பொன்னையன்!

எதுவும் விளங்காதது போல் என்னைப் பார்த்தார் பொன்னையன்.

தமிழகக் காவல்துறைக்கு (தமிழ்நாட்டு அரசு) நாம் சம்பளம் தருகிறோமா... இல்லை, ஜெயவர்த்தனே தருகிறானா?’’என்று எடுத்த எடுப்பிலேயே பொன்னையனிடம் கேட்டேன்.

தம்பி கோபமாக இருந்ததும், நான் இப்படிக் கேள்வி கேட்டதும் அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன.

‘என்னண்ணா சொல்கிறீர்கள்?’ என்றார்.

‘தம்பியை கிரிமினல் குற்றவாளியைப் போல தமிழ்நாட்டு காவல்துறை பார்க்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது?’ என்றேன்.

தம்பி அனைத்தையும் விவரமாக விளக்கிச் சொன்னார்.

அண்ணா உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. மைய அரசு கண்கொத்திப் பாம்பைப் போல பார்த்துக் கொண்டிருக்கிறது. நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யமுடியும்? என்றார் பொன்னையன்.

இதைக் கேட்டதும் தம்பி சீற ஆரம்பித்துவிட்ட்டார்.

எனக்குத் தெரியும். இந்தியாவும் எங்களுக்கு எதிராகத்தான் இருக்கும். ஒருகால், நாங்கள் இலங்கையை சந்திக்கும் கையோடு இந்தியாவை சந்திக்க வேண்டிய நெருக்கடி இன்று இல்லாவிட்டாலும் நாளை வரலாம்...

சாகத் துணிந்தவன் இலங்கை என்று பார்ப்பானா? இந்தியா என்று பார்ப்பானா? எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆவேசமாகப் பேசினார் தம்பி பிரபாகரன்.

நான் தம்பியின் தோளைத் தட்டிக் கொடுத்து,

தம்பி பொறுமையாக இருங்கள்’ என்றேன்.என் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை.

பொன்னையன்... நீங்கள் தலைவரிடம் சொல்லுங்கள். நான் அவரிடம் பேசும் நிலையில் இல்லை. கண்டிப்பாக தலைவரிடம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அனுப்பி வைத்தேன்.

இலங்கை போல இந்தியா எங்களுக்கு எதிராகத் திரும்பி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தால்... இந்தியாவுக்கும் நாங்கள் எதிராகத்தான் நிற்போம்! இலங்கை என்ன, இந்தியா என்ன?என்று தம்பி சொன்னதைக் கேட்டபோது,உண்மையிலேயே...தன் சக்திக்கு மீறி பேசுகிறார் நடைமுறைக்கு சாத்தியமற்றதைப் பேசுகிறார். இவர் பேச்சு ஒரு சின்னப் பிள்ளையின் பேச்சாக இருக்கிறது’என்றுதான் நான் எடுத்துக் கொண்டேன்.

உண்மையில் அந்தக் கணத்தில் அவரை குறைத்துதான் மதிப்பிட்டேன். இந்த சிறிய அக்கினிக்குஞ்சு 87-ல் இந்தியாவுக்கு அடிபணிய மறுத்து எரிமலையாக வெடிக்கும் என்று அறிந்துகொள்ளும் ஞானம் எனக்குத்தான் இருக்கவில்லை.

1987-ம் ஆண்டு இந்திய அழிவுப்படை ஈழம் போனபோது அதற்கு எதிராக அந்த மாவீரன் விண்ணுயர எழுந்து நின்றபோதுதான், அவனது உண்மையான அடையாளம் எனக்குத்தெரிந்தது.

நன்றி:புலமைப்பித்தன்.புரட்சித்தலைவர்-தம்பி-நான்.தொடரில்.[/size]

  • தொடங்கியவர்

ராஜீவ் காந்தி திட்டமிட்டவாறே சென்னையில் கத்திப்பாரா அருகில் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கான பாராட்டு விழா நடந்தது.

அந்தப் பாராட்டு விழாவில் நாவலர் நெடுஞ்செழியன்தான் கலந்துகொள்வதாகஏற்பாடாகி இருந்தது. சுவரொட்டிகள் எல்லாம் தயாராக இருந்தன.ஆனால் புரட்சித் தலைவர் கட்டாயம் அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும்என்று வற்புறுத்தப்பட்டார். வேறு வழியில்லாமல் அவர் அந்த விழாவில்கலந்துகொண்டார்.

நடக்க இயலாமல் மேடையில் ஏறிச் சென்றார். புரட்சித் தலைவரது வலது கையை, வீங்கிப் போய் வலி எடுத்திருந்த கையை

பலவந்தமாக, ‘பாரதப் பிரதமர்தூக்கிப் பிடித்தார். எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்தபோது இவ்வளவு கல்நெஞ்சக்கார மனிதனின்

பெயருக்குப் பின்னால் காந்தி என்று சேர்த்து வைத்திருக்கிறார்களே என்றகடுமையான கோபம்தான் வந்தது.

என்ன செய்ய... இந்தியத் துணைக் கண்டத்தின் சர்வஅதிகாரங்களையும் கையில் வைத்திருப்ப வராயிற்றே... மூன்றாம் தேதியும் மிகுதியான களைப்பில், வலியில் தலைவர் அமெரிக்கா செல்ல இயலவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன்னுடன் அந்த பாராட்டு விழாவில்

கலந்துகொள்ள வேண்டும் என்று இராஜீவ் நினைத்தது கூட ஒருவகையில் அவருக்குபாதுகாப்பு கருதித்தான் இருக்கவேண்டும்.

அதாவது நாளைக்கு இந்த இந்திய- இலங்கை ஒப்பந்தத்தால் விளையப்போகும்பழிக்கு இவரும் காரணமாக இருந்தார் என்று காட்டுவதற்காகக் கூட இருக்கலாம். நான்காம் தேதி மாலையில் கலைவாணர் அரங்கில் இசைப்பேரறிஞர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தட்ட முடியாத நிலையில்தலைவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது கூட மிகுந்தசோர்வாகத்தான் இருந்தார்.

இருபத்து இரண்டு ஆண்டு காலம் நான் அவருக்கு நிழலாக இருந்து பழகிய நாட்களில்; பார்த்த நாட்களில் இப்படி நான் அவரை பார்த்ததே இல்லை.

கூட்டங்களுக்கு அவர் வரும்போது துள்ளிக் குதித்து ஓடிவருவாரே, இன்று ஏன்இப்படி என்று நான் துடிதுடித்துப் போயிருந்தேன். வெளியிலே வந்து காரிலே ஏறினார்.அமைச்சர்கள் பலரும் இடதுபுறமாக நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்கள் அருகே நின்றேன். என்னைப்பார்த்துவிட்டு கார் கண்ணாடியை இறக்கினார்.

என் கையைப் பிடித்து தன் நெஞ்சிலே வைத்துக் கொண்டு; என்னை ஒருவிதமானஅர்த்தத்தோடு பார்த்தார்.

‘‘நாளை நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்கள். காலையில் நான் குடும்பத்தோடுதோட்டத்துக்கு வருகிறேன். நாங்கள் பார்க்கவேண்டும்’’ என்றேன்.தலையை அசைத்து, பேச இயலாத நிலையிலும் வாங்கஎன்றார்.5 ஆம் தேதி காலை 9.30மணிக்கு நான், என் மனைவி, கோவையைச் சேர்ந்தஉறவினர் ஓர் அம்மையார் ஆகிய மூன்று பேரும் சென்றோம்.கூட்டத்தால் தோட்டம் நிரம்பி வழிந்தது.

நாவலர் உட்பட அமைச்சர்கள், தொழிலதிபர்கள், கழக முன்னணியினர் என்றுஏராளமானோர் திரண்டிருந்தார்கள்.நாங்கள் சென்று சேர்ந்த ஒரு பத்து நிமிடத்தில், முதல் தளத்தில் இருந்ததலைவர், இன்டர்காம் வழியாக தனது உதவியாளர் சம்பத்திடம் தொடர்புகொண்டு,

யார் யார் வந்திருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.நாவலரில் தொடங்கி மற்ற அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பெயர்களை எல்லாம்

சொல்லிக் கொண்டே வந்தார். பத்தாவது பெயராக என் பெயரைச் சொன்னார்.

புலவர் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறார் என்று சம்பத் சொன்னார்.

உடனே அவர்களை மேலே அனுப்புஎன்றார் தலைவர்.

நாங்கள் மூவரும் மின்தூக்கி அருகே சென்றோம். எங்களோடு சேர்ந்து

இன்னொரு அமைச்சரும் வந்தார்.

அவரைப் பார்த்த மாணிக்கம், (தலைவருக்கு உதவியாக இருந்த தம்பி) நீங்கள்இப்போது வரவேண்டாம். அண்ணனை மட்டும்தான் வரச்சொல்லி இருக்கிறார்என்றுசொல்லிவிட்டு, எங்களை முதல் தளத்தில் தலைவரின் அறைக்கு அழைத்துச்சென்றார்.

சாதாரணமான ஒரு கட்டில், அதில் ஒரு படுக்கை. அவரைப் பார்த்தவுடன் நான்பதறி நின்றேன். என் மனைவியும், உடன் வந்த அம்மையாரும் சோபாவில்அமர்ந்தார்கள். நானும் சோபாவில் அமரப் போனேன்.என்னைப் பிடித்துஇழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் தலைவர்.அவர் கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரை ஒட்டி நான்உட்கார்ந்து-கொண்டேன்.

தொளதொளவென்று ஒரு பழைய சட்டை,கட்டம் போட்ட ஒரு லுங்கி. நான் அவரதுகையைப் பிடித்தேன். இரண்டு புறங்கைகளும் நீலம் பூத்து மிகப்பெரிய அளவில்வீங்கியிருந்தன.லுங்கியை விலக்கி பாதங்களைப் பார்த்தேன். பாதங்களும்மிகவும் வீங்கிப் போயிருந்தன.

நான் கைகளைப் பார்ப்பதையும், பாதங்களைப் பார்ப்பதையும் கவனித்துக்கொண்டே இருந்தார். சிற்றுண்டி சாப்பிட்டீர்களா?’என்று கேட்டேன்.இல்லைஎன்று தலையை ஆட்டினார்.

மணி பத்துக்கும் மேலே ஆகிறது.இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றேன்.விரக்தியோடு கையால் சைகை காட்டினார். மாணிக்கத்தை நான் அழைத்து, இன்னும்ஏன் சிற்றுணவு தரவில்லை என்று சத்தம் போட்டேன்.

மாணிக்கத்தைப் பார்த்து தலைவர் கையை ஆட்டி வெளியே போகுமாறு சொன்னார்.என்னைத் தன் அருகே அழைத்து என் கையை அன்போடு பற்றிக் கொண்டு,‘நான் அமெரிக்கா சென்று திரும்பியதும் உங்களுக்கு ஏதாவது செய்கிறேன்என்று மிகவும் கஷ்டப்பட்டு சொன்னார்.

எனக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.என்னைப் பற்றி நீங்கள்

கவலைப்படாதீர்கள்! கோவையில் இருந்து அனாதையாக வந்த என்னை அன்போடுஆதரித்து ஆளாக்கி விட்டிருக்கிறீர்கள்.நான் எந்தக் குறையும் இல்லாமல்இருக்கிறேன்என்று நான் சொல்ல... இடைமறித்து,‘இல்லை.நான் ஏதாவது செய்யவேண்டும்என்றார்.

அப்படியானால் ஒன்று செய்யுங்கள்என்றேன்.என்ன?’ என்றார்.

நீங்கள் தைரியமாக நம்பிக்கையோடு அமெரிக்கா சென்று நலமோடு திரும்பிவாருங்கள்! அந்த உதவி ஒன்று மட்டும் எனக்குச் செய்யுங்கள். அதுபோதும்என்றேன்.

அதைக் கேட்ட அவர், குழந்தை போல அழத் தொடங்கிவிட்டார். என்னால்தாங்கமுடியவில்லை.நான் உறைந்துபோனேன். அவரது கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. நான் என் கைக்குட்டையால் அவரது கண்ணீரைத் துடைத்தேன்.

ஊர் உலகத்தில் இருக்கும் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேருக்கு, லட்சோபலட்சம் பேருக்கு நீங்கள் கண்ணீரைத் துடைத்திருக்கிறீர்கள். உங்கள்கண்ணில் இப்படி கண்ணீர் வரலாமா?’

எனது துக்கம் தொண்டையை அடைக்கத் தழுதழுத்த குரலில் கேட்டேன்.என் தோளோடு அவரை சேர்த்து தாங்கிக்கொண்டேன். என் மனைவியும், உடன்வந்த அம்மையாரும் இதைப் பார்த்து அழுதார்கள்.

அரசனிடம் ஆண்டி முறையிட்டு அழலாம்...இந்த ஆண்டியிடம் அந்த அரசன் அழுதானே..!அந்தக் கொடுமையை என் கண்களால் காண நேர்ந்ததே என்று இந்தக் கனம் வரை என்இதயம் சுடுகிறது. அதை நினைக்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன்.

பஞ்சைப் பராரியாய் சென்னைக்கு ஓடிவந்த என்னை, பாட்டுக்கு மேல் பாட்டெழுதவைத்து பணத்துக்குமேல் பணம்... நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும்கொடுத்தார்.பதவிக்குமேல் பதவி, தன் மனதுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டு பதவியில்

நியமித்துவிட்டு என்னிடம் தெரிவித்தார்.

நான் சண்டை போட்டேன்;அவர் சமாதானம் செய்தார். கொள்கை அடிப்படையில் நான் விடாப்பிடியாக இருந்து அவருக்கு தொடர்ந்துதொல்லை கொடுத்தேன். பலமுறை அவரை நெருக்கடிக்கு ஆளாக்கினேன். அத்தனையையும் அந்த மாமனிதர்தாங்கிக்கொண்டு என்னையும் விடாமல் தாங்கிப் பிடித்தார்.

என்னைப் பற்றி பல பேர் அவரிடம் புகார் செய்திருக்கிறார்கள். நான்

கூட்டங்களில் பேசிய பேச்சுக்களை சொல்லி எங்களைப் பிரிக்கப்

பார்த்திருக்கிறார்கள். புகார் சொல்லும்போதே, ‘யார், புலவர்தானே இப்படிப் பேசினார். அவர்எனக்காக இந்தக் கட்சியில் இருக்கிறார். நீங்கள் உங்கள் வேலையைப்பாருங்கள்என்று புகார் சொன்னவர்களிடமே கோபித்துக் கொண்டிருக்கிறார்.

எங்கேயோ அலைந்து வறுமையில் கிடந்த என்னை, காலம் அந்த கருணைத் தேவனின்கைகளில் அடைக்கலமாகக் கொடுத்து வைத்தது.என்னை மேலவையில் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தார். நான் அவைக்குவரும்போது முதலமைச்சராக இருந்த அவரே எழுந்து நின்றார். ஒரு பஞ்சாலையில்துப்புரவுத் தொழிலாளியாக இருந்த நான், கற்பனையில் காண இயலாத உயரத்தை, பெருமையை எனக்கு என் தலைவன் வழங்கினான்.

அது என் மேலவைத் துணைத் தலைவர் பதவி முடிந்துபோயிருந்த நேரம்...தலைவர் மூகாம்பிகை கோயிலுக்கு இயக்குநர் சங்கர்,அமைச்சர்கள்பொன்னையன், ஹண்டே ஆகியோருடன் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.பயணத்தில்,

இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்என்ற பாட்டை டேப்

ரெக்கார்டரில் போட்டுக் காட்டுகிறார்.

இந்தப் பாட்டை யார் எழுதியது சொல்லுங்கள்?’ என்று அவர்களைப் பார்த்து கேட்கிறார்.டைரக்டர் சார் நீங்க சொல்லாதீங்கஎன்றும் சொன்னார்.அமைச்சர்களுக்குத் தெரியவில்லை.

நம்ம புலவர் எழுதின பாட்டு. அவரை நான் மிக உயரமான இடத்தில்

உட்காரவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன்.ஆனால் இயலவில்லை. நம்கட்டுப்பாட்டில் அவர் நிற்க மாட்டார். முரட்டுத் தனமானவர்.ஆனால் கள்ளம்கபடம் -சூது- வாது அவருக்குத் தெரியாது. என் வாழ்நாளில் அவரைப்போல உண்மையானவிசுவாசியை நான் பார்க்கவில்லைஎன்று சொல்லியிருக்கிறார்.இதை, இயக்குநர் சங்கர் என்னிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

இயக்குனர் சங்கர் அவர்கள்தான் என்னை என் தலைவரிடம் சேர்த்தவர்.டிசம்பர் மாதம் 15-ம் தேதி வாக்கில் நான் தோட்டத்தில் தலைவரைச் சென்றுசந்தித்தேன்.நீண்ட நேரம் பேச இயலாத நிலையில் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.

பிறகு ‘22 ஆம் தேதி என்னை வந்து பாருங்கள்என்று சொல்லிவிட்டு,

சம்பத்தைப் பார்த்து, ‘புலவர் மட்டும் அன்று வரட்டும்என்றார்.

அன்று நான் அவரைப் பார்க்க இயலவில்லை.இனி எப்போதும் பார்க்க

இயலாமற்போகும் என்று எனக்கு எப்படித் தெரியும்?காலத்துக்குக் கண்ணும் இல்லை, கருணை மனமும் இல்லை...எப்படிச் சொல்வேன்... எப்படிச் சொல்வேன்..?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில் தேவையான தொடர்

நன்றி

முடிந்தவரை தொடருங்கள். வாசித்து பயன் அடைவோம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணையுங்கள் முடிந்தவரை..நன்றி பகிர்விற்க்கு...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]நான் பெர்த்திலிருந்தபடி என் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன் என்று சொன்னேன் இல்லையா... அந்தக் கடிதத்தை தலைவர் படித்து விட்டு, ‘‘புலவர் எவ்வளவு கோபக்காரர் பார்த்தீர்களா?’’ என்று அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, அக்கடிதத்தை தனது ஜிப்பாவில் வைத்துக்கொண்டதாக பின்னர் தெரிந்துகொண்டேன்.[/size]

[size=3]

[size=4]நான் சென்னையில் டிசம்பர் திங்களில் வந்து இறங்கினேன். வந்த பின்னால் என்னை வழியனுப்பக் கூட மனம் இல்லாமற்போன அந்த மனிதரை, என் மனம் நிறைந்து நிற்கும் மணாளனை, அன்புக் குணாளனை நான் சந்திக்கச் செல்ல வேண்டுமென்று நினைக்கவே இல்லை.[/size][/size]

[size=3]

[size=4]இவரை என்ன போய்ப் பார்ப்பது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நான் அவரைப் பார்க்கவும் இல்லை. ஒருநாள்... எந்த நாட்டு அதிபர் என்று நினைவில் இல்லை. ஓர் அதிபர் சென்னைக்கு வருகை தந்தார். மரபுப்படி நானும் சென்று அவரை வரவேற்க வேண்டும். [/size][/size]

[size=3]

[size=4]கவர்னர், முதல்வர், மேலவைத் தலைவர், பேரவைத் தலைவர், மேலவைத் துணைத் தலைவர் (நான்), பேரவைத் துணைத் தலைவர், பிறகு அமைச்சர்கள் என்று அணிவகுத்து நின்று வரவேற்கவேண்டும். வரவேற்பில் நானும் கலந்து கொண்டேன். தலைவர் அந்த அதிபரிடம் ஒவ்வொருவரையாக அறிமுகம் செய்து-கொண்டே வந்தார். என் பக்கம் வந்ததும், சற்று திகைத்துப் போய் நின்றார். பிறகு சமாளித்துக் கொண்டு, ‘‘He is poet Pulamaipithan, Duputy chairman of Legilslative council'‘ என்று என்னை அறிமுகம் செய்தார். அந்த அதிபரும் நானும் கைகுலுக்கிக் கொண்டோம். வரவேற்பு வைபவம் முடிந்தது. [/size][/size]

[size=3]

[size=4]நான் என் காரில் ஏறுவதற்காகச் சென்றேன். என் பின்னால் இருந்து ஒரு கை தோளில் விழுந்தது. திரும்பிப் பார்த்தால் தலைவர். ‘எப்போது வந்தீர்கள்?’ என்றார். ‘நான்கைந்து நாட்களுக்கு முன்னர் வந்தேன்’ என்றேன். ‘ஏன் நீங்கள் வந்ததை என்னிடம் தெரிவிக்கவில்லை?’ என்றார். ‘போகும்போது நான் என்ன உங்களைப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டா போனேன்?’ என்றேன். [/size][/size]

[size=3]

[size=4]என் தோளைத் தட்டிச் சிரித்தபடி தாவி அணைத்தபடி அவரது காருக்கு அழைத்துச் சென்றார். நண்பர் ஹண்டே அவர்களையும், நண்பர் பொன்னையன் அவர்களையும் காரின் முன் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு, பின் இருக்கையில் அவருக்குப் பக்கத்தில் என்னை உட்காரவைத்துக் கொண்டார். [/size][/size]

[size=3]

[size=4]நான் மௌனமாகவே இருந்தேன். கார் இராமாபுரம் தோட்டத்தைச் சென்றடைந்தது. தரைத் தளத்தில் கூடத்தில் சென்று அமர்ந்தோம். சுடச்சுட மீன் வறுவல் ஒரு பெரிய தட்டில் கொண்டுவந்து வைத்தார்கள். என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘உம்... சாப்பிடுங்கள்’’ என்றார் தலைவர். நான் சாப்பிட்டேன். [/size][/size]

[size=3]

[size=4]‘‘ஆமாம்.... தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க-விழாவில் என்ன கவிதை வாசித்தீர்கள்?’’ என்றார் தலைவர். நான், ‘‘சஞ்சயினை இழந்துவிட்ட...’’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை முழுவதுமாகச் சொன்னேன். ‘‘ஆமாம்... இதில் என்ன தவறு இருக்கிறது?’’ என்று அங்கிருந்த இருவரில் யாரையோ கேட்க நினைத்து என்னிடமே கேட்டார். ‘‘தவறு என்று எனக்குத் தண்டனை கொடுத்தவருக்குத்தானே தெரியும்? நீங்களே சொல்லுங்கள்’’ என்றேன் சற்று கோபமாக! அவர் சிரித்துக் கொண்டு, ‘‘சரி... அதையெல்லாம் மறந்துவிடுங்கள்’’ என்று என்னை சமாதானப்படுத்தினார். [/size][/size]

[size=3]

[size=4]அது நடந்து முப்பத்தோரு ஆண்டு காலம் முடிந்துபோனது! எல்லாமே முடிந்துபோனது! இனி நான் சண்டை போட்டுக் கொள்ளத்தான் யார் இருக்கிறார்கள்... என்னை சமாதானப்படுத்தத்தான் யார் இருக்கிறார்கள்..? [/size][/size][size=3]

[size=4]புலமைப்பித்தன்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.