Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் படங்களுக்கு தடை விதித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம். : சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Seeman-4.jpg

[size=4]நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில், ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதில் கலந்து கொண்டு பேசினார்.[/size]

[size=4]அவர், ‘’ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடி யவர்கள் விடுதலைப்புலிகள். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாகத் துடைக்க, தம்மையே அழித்துக் கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள். [/size]

[size=4]அவர்கள் எம்மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர் களின் அழுகையை நிறுத்துவதற்காக செத்த வர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன்.

அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம். [/size]

[size=4]தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது மத்திய அரசு. எத்தனை தடைகள் போட்டாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக எமது மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவோம். [/size]

[size=4]இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை முடக்கிட முடியாது. அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கிடவும் முடியாது. நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கின்றோம், எங்களை சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்காதீர்கள். [/size]

[size=4]இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த உதவியால் எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது. எமது மக்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போதுகூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், சிங்கள படைகளை நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். [/size]

[size=4]தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சரியாக நிரப்ப வேண்டுமெனில் படித்தவர்கள் அரசியலிறகு வரவேண்டும். ஏழை, எளிய மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குகளை விற்றுக்கொண்டிருக் கின்றனர்.

இது அவர்களின் குற்றமல்ல, ஆயிரம், இரண்டாயிரத்துக்கு கையேந்தும் நிலையில் அவர்களை வைத்துள்ள இன்றைய அரசியலின் சூழ்ச்சி அது. இந்த நிலையை மாற்ற வேண்டும், [/size]

[size=4]அதற்கு ஒரே வழி, இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வரவேண்டும். ஒரு இலட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம், ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றோம்’’ என்று பேசினார்.[/size]

[size=4]http://www.nakkheera...ws.aspx?N=79858[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எமது போராட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட எம்மவர்களில் சிலர் இப்போது கொடுப்பதில்லை ....

ஈழ தமிழர்களிற்க்காக குரல்கொடுத்துவரும் சீமானவர்களிற்கு நன்றிகள் ..

[size=4]ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போதுகூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், சிங்கள படைகளை நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். [/size]

இன்றைய நிலைமையை யோசித்து கதையுங்கள் சீமான் அண்ணா. இருக்கிறவர்களையாவது உயிருடன் இருக்க விடுங்கள்.

இப்பிடி நீங்கள் கூற கூற அங்குள்ள மக்களுக்கு தான் அடி விழும். அதையும் கவனித்து கதையுங்கள்.

எத்தனை தடைகள் போட்டாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக எமது மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவோம்.

சீமான் அண்ணன் நமது நலனுக்காக இதை கவனமாக செய்கிறார் ....

  • கருத்துக்கள உறவுகள்

"இப்பிடி நீங்கள் கூற கூற அங்குள்ள மக்களுக்கு தான் அடி விழும். அதையும் கவனித்து கதையுங்கள்."

துளசி இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் துளசி.. 1953.. 54.. 58..72.. 77.. 81.. 83.. 00 (பண்டாரவள கலவரம்).. 01 (மாவனல்ல கலவரம்) என்று காலத்துக்கு காலம் அடிவாங்கேக்க.. சீமான் கத்தியா அடி வாங்கினனீங்க..! :icon_idea:

எனி துளசியும் சாந்தி சமாதானம்.. சக வாழ்வு.. அரசியல் பேசுவா.. ஏன்னா அவாக்கும் அசைலம் கிடைச்சிட்டு எல்லோ..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனி சிங்களவனுக்கு அடி தான் ஒரே வழி....

இதோட யாழ் களத்தில எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணி முடிஞ்சு இனி சீமானுக்கும் அட்வைஸ் பண்ண வெளிகிட்டாங்க

போய் எழுதி கொடுக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.