Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. குழுவுக்கு கொழும்பு வர அனுமதி கிடைத்தது - அடுத்தமாதம் வரும் குழுவினர் ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கைக்கு உதவிகளை வழங்குவர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un_logo150.jpg

[size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காகவே இந்தக் குழு வருகை தரவுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.[/size]

[size=4]நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்து வதற்கான "நடவடிக்கைத் திட்டம்" அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய நகர்வாக ஐ.நா. குழு கொழும்பு வருவதற்கான அனுமதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட மூன்று விடயங்களையும் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்தக் குழுவினர் வழங்குவர் என கூறப்படுகிறது.[/size]

[size=4]கடந்த மார்ச் மாதம் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்தக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை அரசு இதுவரை மறுத்து வந்தது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கும் அரசு எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்துமாறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துப் போகிறது என்பதை வெளிப்படுத்துமாறும் இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அலுவலகம் வழங்கும் ஆலோசனைகள் உதவிகளை இலங்கை அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஜெனிவா தீர்மானம் வலியுறுத்தி இருந்தது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

நம்பியாரோ அல்லது கிந்தியாரோ இல்லாவிட்டால் வரும் மனித உரிமைகள் சபை அதிகாரிகள் நியாயமாக இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா ஆலோசனைகுழுவினருக்கு இலங்கை செல்ல இவ்வளவு காலமும்

அனுமதி மறுத்த இலங்கை அரசு இப்போது எதற்காக அனுமதி அளித்தது ?

பணம் என்றால் மகிந்தவின் பிணமும் வாய் திறக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.