Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிதை வளர்ச்சிபெறவேண்டும்: மேராவின் கவிதைதொகுப்பு வெளியீட்டில்-பேராசிரியர் செ.யோகரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிதை வளர்ச்சிபெறவேண்டும்: மேராவின் கவிதைதொகுப்பு வெளியீட்டில்-பேராசிரியர் செ.யோகராசா camera_icon.jpeg

[size=2]

[Monday, 2012-08-06 11:01:50][/size]

Poem-060812-news-150.jpg

இந்தியாவின் தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிஞர்கள் வளர்ச்சிபெறவேண்டும் அந்தவகையில் கவிஞர் மேராவின் கவிதைகள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்கிறார் பேராசிரியர் செ.யோகராசா பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மேராவின் மனக்காடு கவிதை நூல் அறிமுக விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு பேசினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

மட்டக்களப்பு மாவட்ட நவீன கவிதை வளர்ச்சிப் பின்புலத்திலே கவிஞர் மேராவின் கவிதைகள் பற்றிய சில அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொள்ள அவாவுகின்றேன்.

"ஈழத்திலே தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது அளவிற்சிறியவையெனினும் ஈழத்திலே 10 உப பண்பாட்டு(பிரதேச) அலகுகளை இனங்காணமுடிகின்றது." என்றார் பேராசிரியர் சிவத்தம்பி. இவ்வாறான பத்து உப பண்பாட்டு அலகுகளுள் மட்டக்களப்பும் ஒன்றாகும். இம் மட்டக்களப்பு மாவட்டமும் அதனோடு அம்பாறை மாவட்டமும் எனது பார்வையில், குறிப்பாக கலை, இலக்கிய வளர்ச்சி நோக்கில் தனித்தனியான,பல்வேறு பிரதேச அலகுகள் வழிப்பட்ட கலை, இலக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் புவியியல் சார்ந்த � போக்குவரத்துச் சார்ந்த காரணங்களும் பின்னர் உள்ளுராட்சி நிர்வாகம் சார்ந்த பிரிப்பு முறைகளும் தனித்தனிப் பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளன. போர்க்காலத் தடைகள் இடைவெளியை இன்னும் பெரிதாக்கின.தொண்ணூறுகளுள் உருவான கிழக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களும் சாதகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தின.

  • Poem-060812-news-001.jpg
  • Poem-060812-news-002.jpg
  • Poem-060812-news-003.jpg
  • Poem-060812-news-005.jpg
  • Poem-060812-news-006.jpg
  • Poem-060812-news-007.jpg
  • Poem-060812-news-008.jpg
  • Poem-060812-news-009.jpg
  • Poem-060812-news-010.jpg

இச்சூழலில் மட்டக்களப்பு � அம்பாறை மாவட்ட கலை இலக்கிய வளர்ச்சியிலே ஓட்டமாவடி � வாழைச்சேனை, ஏறாவூர், ஆரையம்பதி,கல்முனை,மருதமுனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று முதலான பல பிரதேசங்களிலும், ஊற்று அவதானிக்கும்போது அவ்வப் பிரதேச மேலாதிக்கம் சார்ந்த இலக்கிய வளர்ச்சி புலப்படுகின்றது. பட்டிப்பளைப்பிரதேசமும் கடந்த சில வருடங்களாக மேற்குறித்த பட்டியலுள் அடங்கி வந்துள்ளது. ஆக, இப்பிரதேச கலை,இலக்கிய எழுச்சியின் புதிய தலைமுறை சார்ந்த எழுச்சியின் முன்னோடி நிலைப்பட்ட கவிஞராகவே மேராவைக் காண்கிறேன்.

கிழக்கின் சமகால, முற்குறித்த பிரதேச புதிய கவிஞர்கள் பலரும் போன்றே மேராவின் கவிதைகளிலும் உள்ளடக்கரீதியில் சமகால அரசியல் சார்ந்த விடயங்களே முதன்மைபெற்றுள்ளன. அதேவேளையில் முற்றிலும் புதிய பார்வையில் அத்தகைய விடயங்களை நோக்குகின்ற முறைமையொன்று அவற்றினூடே இழையோடுவதை அவதானிக்கின்றேன்.முன்னிரு தொகுப்பக்களிலும் இது வெளிப்பட்டாலும் இத்தகைய பண்பு இத்தொகுப்பிலே ஓரளவு அதிகரித்துள்ளது.

உதாரணம் -1

ஆராய்ச்சியாளனின் முன் திட்ட யோசனைக் கசிவு

எதிர்கால அகழ்வாராய்ச்சி

அதிசயமாய் அமையும்

நிச்சயம் நீ காண்பாய்

குருதி குடித்து நிறத்த

நிலத்தைத் தோண்டுகையில்

நிச்சயம் நீ இதனைக் காண்பாய்

அலையடிக்கும் இரத்தக் கிணறுகள்

அடுக்கடுக்காய் நிலக்கீழிருக்கும்.

தனியார் வைத்திய சாலை

இரத்ததான வங்கிகளும்

இலவச சேவை வழங்கும்.

நிச்சயம் உலகம்

நம்நாட்டிடம் மண்டியிடும்

மனிதப் புதைகுழிகளால்

புதையுண்ட நகரங்களின் முதன்மைக்கான

கின்னஸ் சாதனையும்

நமக்கே திண்ணம்.

உடல்களால் உயர்ந்த

புதை மேட்டில் நடும் பயிர்

உயர்ந்த பயன் தரும்.

விடயமறியார்

உரமானிய சேவையைப் பாராட்டுவர்.

பல்கலை ஆராய்ச்சித் துறை மறுத்தும்

பயனின்றிப்போகும்.

ஆராய்ச்சியாளர்கள் பலர்

காணாமல் போவர்.

தனித்தனியாக அவர்களுக்கு

பாராட்டு விழா நடைபெறும்.

அதையும் நீ காண்பாய் அதிசயமாய்....

உதாரணம்-2

கடவுள் பற்றிய சந்தேகங்கள்

ஆழி நீரிலும் குருதி கொப்பளிக்க

ஊழித்தாண்டவம் ஈழத்தை மேய்ந்தது.

கல் வைத்த பதியெங்கும்

கண் மூடி மன்றாடி

கூப்பிட்டுக் கட்டியழுதபோதும்

பலிகொண்ட துப்பாக்கி

தின்னத் துரத்த

உழன்று அலைந்து

கருகி எரிந்து

மக்கி மண்ணாகியபோதும்

காலம்தோறும்

அசுரரை அழிக்க

கதைகளில் வந்த

கடவுளர் ஒருவர் கூட பிறந்து வரவில்லை.

சூலமும் வேலும் ஏந்தி

வீரமும் தீரமும் காட்டி

வீற்றிருந்த கடவுளர் எவரும்

குண்டுகள் விழுந்து

கூரைகள் சிதைந்து

கோயில்கள் எரிந்தபோதும்

தம் அங்கங்கள் உடைந்து

அலங்கோலமாய்ப் போனபோதும்

தன் மானங் காக்கத் துணியவுமில்லை.

யுத்த அரக்கனை

எதிர்க்கப் பலமின்றி

ஓடி மறைந்த கடவுளருக்கு

சொந்தப்பதியில்

மீளக்குடியமர

துளியும் ஏனோ

இன்னும் துணிவு வரவில்லை.

அநீதியை அழிக்கும்

கடவுளரைத் தோற்றுவிக்கும்

என் கனவுகளில்

கருக்கொள்ளும் கடவுளர்களை

யாரோ கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மறுவாசிப்பிற்கு இடமளிக்கின்ற தன்மையும் இத் தொகுப்புக் கவிதைகளில் புதிதாகத் தலை காட்டுகின்றது.

அந்த நாய்க்கு அடிக்காதீர்

அந்த நாய்க்கு அடிக்காதீர்

பசியால் வாயூற

பாற்கிண்ணத்தில்

வாயூன்றியதற்காய்

பாவம் எத்தனை அடிகள்.

முகம் நோக்கி

வாலாட்டி

சுகம் விசாரித்து

உடல் உரசும்

செல்லப்பிராணிக்கு

அடிக்காதீர்.

எச்சில் நாசுவைத்து

நாதியற்றுத் திரியும்

தெருநாய்போல்

அந்த நாய் இல்லை.

எதிர்த் தெருவில் எலும்பெண்ணி

எமக்கெதிராய் குரைக்கவும் இல்லை அது.

உள் வீட்டுப் பண்டத்தை

ஊரார்க்கு முகர்ந்து காட்டி

உண்ட வீட்டுக்கு

இரண்டகம் செய்யவும் இல்லை

கல்லறையில் எழும் நம் வாசத்தில்

கண்ணீரோடு சினைவைப் பருகி

நன்றி சொல்லும் அந்த செல்லப்பிராணிக்கு

தயவு செய்து இனி அடிக்காதீர்.

கிராமத்து மண்வாசனையை முன்னைய தொகுப்பக்களை விட இத்தொகுப்பில் கூடுதலாக சுவாசிக்க முடிகின்றது. கிராமத்திலுள்ள நாய்கள் தொடக்கம் அற்புதம் அக்கா வரை அது பரந்து செல்கின்றது. கிராமத்து வாழ்வியல் பிரச்சினைகளை நோக்குவதிலே கவிஞரது கவனம் இப்போதுதான் குவியத் தொடங்குகின்றது.

மண்முனைக்குப்பாலம்

"குருவே!

பாரச் சிலுவை தூக்கும்

படுவான் மக்களுக்கோர் பாலம் எப்போது?"

பரமார்த்த குரு பல முறை யோசித்தார்.

"உன்னெண்ணம் நல்லது சீடா

படுவான் வாழ்வுக்கோர் பாலம் அமைப்போம்."

83 இல் அடிக்கல்

இருபுறமும் கற்கள்....

பின்னொருநாள்

"குருவே குருவே

குவித்த கற்களை காணோம்

மலையறியா

இராவணர்களின் குரங்குகள்

களவாடிச் சென்றுவிட்டன."

நிஷ்டை கலைந்த குரு

"அடிக்கல்!!!"

"அப்படியே இருக்கின்றன"

"இருக்கட்டும்"

பலவருடங்களின் பின்

"குருவே இனியாவது பாலம் கட்டலாமே

காலம் பயணத்தில் வாழ்நாளை அழிக்கிறது."

"படுவான் வாழ்வுக்கோர் பாலம் அமைப்போம்"

2011 இல்

நீர் நில இயல்பறிய

மிதவை இரைந்தது..

எல்லோர்க்கும் சந்தோசம்!!

சிலநாட்களின் பின்

"குருவே கட்டறுந்து மிதவையெங்கோ ஓடிவிட்டது

காணோம் எங்கும் கவலையே மீதி"

சீடனே வேண்டாம் கவலை

வேண்டுமுனக்கென்போல் சாணக்கியம்

எல்லாம் நான் அறிவேன்.

கடல் காயும் உச்சி வெயிலில்

உடல் வாட

எல்லோரும் ஏறியும்

இம்மியும் அசையாது படகு

குந்தியிருப்பது....

பக்கத்துக் கண்ணாப்பற்றைக்குள்

கடிகார முள்ளசைவைப்பார்த்தபடி

படகோட்டி சோம்பியிருப்பது...

பாலம் எப்போது கட்டப்படுமென பயணிகள் கேட்பது...

அல்லலுற்றுப் பலர் இறந்ததும்

ஆற்றின் நடுவில் ஓடு பாதையில் குழந்தை பிறந்தும்

அந்தரத்தில் தொங்கியபடி பயணம் போய் பலர் சறுக்கி விழுவதும்

நேரம் வீணாக

எதிர்த்திசைப்பாதை வரவிற்காய்

குந்தியிருந்து காலம் கடத்துவதும்

மாலையில் மாட்டுப் பாதையோடு மனிதர்கள்

தம்பணி முடித்துச் செல்வதும் தெரியும்...

நீ சொல் பாலம் கட்டப்படும்???

மீண்டும் மீண்டும் சொல் பாலம் கட்டப்படும்.

இக்கவிதையும் புதிய பார்வையோடுதான் வெளிப்படுகின்றது.

அங்கதம் இங்கே சிறப்பாக விளையாடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். காதலிலும் கிராமத்து இயற்கைச்சூழல் சித்திரமாகத் தீட்டப்படுகின்றது.

உன்னினைவில் ஒரு நிமிடம்...

வில்லுக்குளத்தருகில்

நீ

தெத்துப்பல் தெரியச் சிரிக்க

நான்

நீந்தத்தெரியாமல்

நீரில் குதித்தது....

தாந்தாமலை

ஊர்த்திருவிழாவில்

தாவணியோடு அழகாய் நீ முன் செல்ல

பூவாளிச் சாரனுடன்

உன் பின்னால் நான் சுற்றியது....

ஊர்; சேர்ந்து தேர் இழுக்க

சன நெருக்கடிக்குள்

உன் மனசை நானிழுத்தேனென்று நீ சொன்னது...

உடன் பிறப்பையிழந்து

சோபிக்கக் கதறி நீயழ

உன்னழகு முகம் கசங்கியதென்று

நான் அழுதது...

உன் வேலி ஓரத்தில்

நீயும் நானும் நின்ற

இருள் குவிந்த அந்நேரம்

பக்கத்துக் கத்தாமரத்தை

நண்பர்கள் உசுப்ப

பேயென்று நீயும் நானும் ஓடியது...

இத்தனையுமிப்போ உனக்கு நினைவிருக்கா?

என்னினைவால் உன்வாழ்வில்

ஐயோ ஒன்றுமில்லையே.

என் கல்லறையில் பூத்திருக்கும் காட்டுப்பூ

உன்னைப்போலவே

அழகாயிருக்கிறதென்று

எப்படி நானினிச் சொல்வேன்.

சுருங்கக்கூறின் இக்கவிதைகளினூடே கிராமத்திலிருந்து உயர்கல்வி கற்கப் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்று நகரத்தில் வாழ்கின்ற புதிய தலைமுறைக்கவிஞனொருவனது பார்வையிலே கிராமமும், அரசியலும்,சமூகமுமு; சார்ந்த பிரச்சினைகள் வெளிப்படுகின்றன எனலாம். எனினும் உயர்கல்வி ஏற்படுத்திய ஆளுமை மாற்றங்கள் இக் கவிஞனிடம் மென்மேலும் சுவற வேண்டிய அவசியமுண்டு. அப்போதுதான் இக்கவிஞனது கவிதைகள் மேன்மேலும் வளமும் வனப்பும் பெறமுடியும்.

இறுதியாக இன்னுமொரு முக்கியமான விடயம் பற்றி குறிப்பிட்டாகவேண்டும். அதுதான் கவிஞர் மேரா, எழுத்தாளனாக இருப்பது மட்டுமன்றி சமூகச் செயற்பாட்டாளனாகவும் இருப்பதாகும்.அதாவது பட்டிப்பளைப்பிரதேசத்தில் தன்னையொத்த இன்னொரு புதிய தலைமுறை உருவாகுவதற்கு மேரா ஆற்றிவரும் பங்களிப்பாகும். இன்றைய புதிய தலைமுறையிடம் இத்தகைய இயல்பு குடியிருப்பது குறைவே. இதுபற்றி என்னைவிட இங்குள்ள - இப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொருவரும் நன்கறிவீர்களதனை.அது பற்றி மேற்கொண்டு தொடர்ந்து எதுவும் பேச முற்படவில்லை.

மேராவின் மனக்காடு கவிதை நூல் அறிமுக விழா 04.08.2012 ஆந் திகதி முற்பகல் 9.45மணியளவில் பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா தலைமையில் மட்டக்களப்புபொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் முதன்மைவிருந்தினர்களாக பேராசிரியர் சி.மௌனகுருவும் பேராசிரியை சித்திரலேகாமௌனகுருவும் வைத்தியர் மா.கிரிதரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மங்கலவிளக்கேற்றலுடன் நிகழ்வு தொடங்கியது. வரவேற்புரையை ஆசிரியர் அ.கருணாகரன்நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியினை நூலாசிரியர் மேரா, பிரபல தொழிலதிபர்திரு.வி.றஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு வழங்கினார். நூல் அறிமுக உரையினைகிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை சிரே];ட விரிவுரையாளர் பேராசிரியர்செ.யோகராசா வழங்கினார்.நூலின் சிறப்புப்பிரதிகளை கவிஞர்கள், அதிபர்கள், வங்கிமுகாமையாளர்கள், ஆசிரியர்கள், கல்வி சார் அதிகாரிகள், இலக்கிய ஆர்வலர்கள்,விரிவுரையாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் பெற்றுக்கொண்டனர்.ஏற்புரையினை நூலாசிரியர் கவிஞர் மேரா வழங்கினார். நன்றியுரையினைஊடகவியலாளர் திரு.பா.இன்பராசா நிகழ்த்தினார்.

[size=2]நன்றி - [/size] செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எல்லாம் நிம்மதியாக இருக்கும் போது உட்கார்ந்து திங்க பண்னி எழுதுறது...ஏற்கனவே அவர்கள் கவிதை கட்டுரை எல்லாம் எழுதிகிட்டுத்தான் இருந்தாங்க..இப்போ வயிற்றில் பசி இருந்தால் எப்படிப்பா கவிதை வரும்..? ரெல் ரெல் மீ

டிஸ்கி:

முதலில் இந்த இலக்கிய குரூப்பு எல்லாம் அதற்கு குரல் குடுங்க...

<_< <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.