Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.

Featured Replies

மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.

மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்கும் போது இரு காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போதய மின்சார விலைப்பட்டியல்: பாவிக்கும் மின்சாரக் கூறுகள்( KwH ) மற்றும்,மின்சார பாவிப்பு விகிதம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகளை 10 நாற்களில் பாவிப்பதற்கும் அதே அளவு மின்சார அலகுகளை 20 நாற்களில் பாவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

மேலும் இது பற்றி விளங்கிக்கொள்ள‌ இலங்கை மின்சார சபை விலைப்படியல் தயாரிக்கும்முறை பற்றி அறிந்து கொள்வது அவசியம். மின்சாரக் கட்டணம் என்பது தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்படாமல் பொட்டலங்களாகவே கணிக்கப் படுகிறது. இது பின்வரும் அளவுகளில் பிரிக்கப்பட்டு விலைப்பட்டியல் தயாரிக்கப் படுகிறது.

30 நாற்களுக்கான கட்டணம்.

அலகுகள் அலகுக்கான கட்டணம் கட்டணம்+எரிபொருள் சரிப்படுத்தும் கட்டணம் 40% நிலையான கட்டணம்

(அலகுக்கான நிகரக் கட்டணம்)

0-30 3.00 40% (3.00*1.4) = 4.20 மொத்த அலகுகள் 30 வரை எனின் 30

30-60 4.70 40% (4.70*1.4) = 6.58 மொத்த அலகுகள் 60 வரை எனின் 60

60-90 7.50 40% (7.50*1.4) = 10.50 மொத்த அலகுகள் 90 வரை எனின் 90

90-120 21.00 40% (21.00*1.4) = 29.40 மொத்த அலகுகள் 120 வரை எனின் 315

120-180 24.00 40% (24.00*1.4) = 33.60 மொத்த அலகுகள் 180 வரை எனின் 315

180< 36.00 40% (36.00*1.4) = 50.40 (குறிப்பு:ஒரு முறை மாத்திரமே கூட்டப்படும்)

ஆக கட்டணம் பின்வருமாறு கணிக்கப்படும்

உதாரணம் 1

நீங்கள் ஒரு மாதத்தில் 30 அலகுகள் மாத்திரம் பாவிப்பவராக இருந்தால்

(4.20*30) + 30 **நிலையான கட்டணம்(30 அலகுக்கானது)= 156

உங்கள் மாதக்கட்டணம் 156 ரூபா

உதாரணம் 2

நீங்கள் ஒரு மாதத்தில் 60 அலகுகள் மாத்திரம் பாவிப்பவராக இருந்தால்

(4.20*30) +(6.58*30) + 60** நிலையான கட்டணம்(60 அலகுக்கானது)=383.40

உங்கள் மாதக்கட்டணம் 383 ரூபா 40 சதம்

உதாரணம் 3

நீங்கள் ஒரு மாதத்தில் 90 அலகுகள் மாத்திரம் பாவிப்பவராக இருந்தால்

(4.20*30) +(6.58*30) + (10.50*30) + 90** நிலையான கட்டணம்(90 அலகுக்கானது)=728.40

உங்கள் மாதக்கட்டணம் 728 ரூபா 40 சதம்

உதாரணம் 4

நீங்கள் ஒரு மாதத்தில் 120 அலகுகள் மாத்திரம் பாவிப்பவராக இருந்தால்

(4.20*30) +(6.58*30) + (10.50*30) +(29.40*30)+ 315** நிலையான கட்டணம்(120 அலகுக்கானது)=1835.40

உங்கள் மாதக்கட்டணம் 1835 ரூபா 40 சதம்

உதாரணம் 5

நீங்கள் ஒரு மாதத்தில் 180 அலகுகள் மாத்திரம் பாவிப்பவராக இருந்தால்

(4.20*30) +(6.58*30) + (10.50*30) + (29.40*30) + (33.60*60) + 315** நிலையான கட்டணம்(180 அலகுக்கானது)=3851.40

உங்கள் மாதக்கட்டணம் 3851 ரூபா 40 சதம்

இது தவிர நீங்கள் பாவிக்கும் மேலதிக ஒவ்வொரு அலகும் 50 ரூபா 40 சதம் என்ற விகிதத்தில் கணிக்கப்படும்

அதாவது : 3851.40 +( 50.40*X) (X=180 ற்கு மேலதிகமான அலகுகள்)

உங்கள் மின்பாவனை மாதத்திற்கு 240 அலகுகள் எனின் 3851.40+ (60*50.40)= 6875.40

உங்கள் மாதக் கட்டணம்: 6875 ரூபா 40 சதம்

உங்கள் மின்பாவனை மாதத்திற்கு 300 அலகுகள் எனின்

உங்கள் மாதக் கட்டணம்: 9899 ரூபா 40 சதம்

உங்கள் மின்பாவனை மாதத்திற்கு 420 அலகுகள் எனின்

உங்கள் மாதக் கட்டணம்: 15947 ரூபா 40 சதம்

உதாரணம் 3 ஐயும் உதாரணம் 4 ஐயும் கவனித்தால்..

முதல் 90 அலக்குக்கு நீங்கள் செலுத்தும் தொகையை விட இறுதி 30 அலகுகளுக்கு நீங்கள் செலுத்தும் தொகை அதிகம்

அதாவது

முதல் 90 அலகுகளின் விலை 728.40 ரூபா

இறுதி 30 அலகுகளிற்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 1107 ரூபா..

இதேபோல் உதாரணம் 4 ஐயும் உதாரணம் 5 ஐயும் கவனித்தால்..

முதல் 120 அலகுக்கு நீங்கள் செலுத்தும் தொகை 1835.40

ஆனால் நீங்கள் மேலதிகமாக 60 அலகுகளை பாவித்தீர்கள் என்றால் மேலதிகமாக 2016 ரூபாவை செலுத்த வேண்டும்.

இவ்வாறே வீடு இலக்கம் 1.. 120 அலகுகளையும் வீடு இலக்கம் 2.. 240 அலகுகளையும் உபயோகிக்கிறது என்போம்

வீட்டு இலக்கம் 1 1835 ரூபா 40 சதம் கட்டணத்தையும்

வீட்டு இலக்கம் 2 6875 ரூப 40 சதம் கட்டணத்தையும் அதாவது வீட்டிலக்கம் 1 ஐ விட 5040 ரூபா மேலதிக கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளும்.

** அரசிற்கு ஒரு மின்னலகை(1KwH) உற்பத்தி செய்ய செலவாகும் தொகை 23 ரூபா.

பிற்குறிப்பு: 90 அலகுவரை உபயோகிக்கும் ஒவ்வொரு வீடும் அரசிற்கு நட்டத்தையும்..

120 அலகுகளிற்கு மேலதிகமாக பாவிக்கும் ஒவ்வொரு வீடும் அரசிற்கு மேலதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்க.

சரி இப்போது இதை எப்படி முகாமைத்துவம் செய்து குறைந்த செலவில் நிறைந்த பலனை எடுப்பது தொடர்பாக ஆராய்வோம்.

மின்னொளியும் சேமிப்பும்

வகை 1

இது 2012 ஆம் ஆண்டு. உங்கள் வீட்டில் இன்னமும் மின் இழை குமிழ்களை(Incandescent ) பாவிக்கிறீர்களா.. உங்கள் ஒரு மின் இழைக்குமிழ் பயன்படுத்தும் அதே அளவு மின் சக்தியில் நீங்கள் CFL மின் குமிழ் பயன்படுத்தும் போது உங்கள் வீடு முழுவதையும் வெளிச்சமாக்க முடியும்.

அதாவது

ஒரு 100W இழை மின் குமிழில் இருந்து வரும் அதே அளவு வெளிச்சத்தை 15W-20W CFL மின்குமிழில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு வேளை நீங்கள் மேற்படி அறிவுரையை கவனத்தில் கொள்கிறீர்கள் என்போம், ஆக நீங்கள் எவ்வளவு பணத்தை மீதப் படுத்துகிறீர்கள் எனப் பார்ப்போம்.

ஓர் நாளில் நீங்கள் சுமார் 5 மணி நேரம் ஒரு மின்குமிழை பயன் படுத்துகிறீர்கள் என்போம்

ஆக ஒரு மின் குமிழை, CFL ஆல் பிரதியீடு செய்வதால் உங்களால் 0.425KwH அலகுகளை ஒரு நாளைக்கு மீதப் படுத்த முடியும் அதாவது ஒரு மாதத்திற்கு 12.75 மின் அலகுகளை மீதப் படுத்த முடியும்.

இதை பண வடிவில் பார்த்தால், ஆகக் கூடியது ஒரு மாதத்திற்கு 12.75*50.50 ரூபா அதாவது 645 ரூபாவையும் ஆகக் குறைந்தது 12.75*4.20 அதாவது 54 ரூபாவையும் மீதப் படுத்தலாம்.

இதை இரண்டு வகையாக ஆரய்வோம்

1. நீங்கள் ஆகக் கூடிய 645 ரூபாவை மீதப்படுத்துகிறீர்கள் எனின் உங்களது CFL குமிழிற்கான payback time 10 நாற்கள். அதாவது நீங்கள் உங்கள் CFL குமிழிற்காக செலவாக்கிய பணம் 10 நாற்களுக்குள் மீண்டுவிடும், எஞ்சிய ஆயுற்காலத்தில் ஒவ்வொரு மாதமும் 645 ரூபாவை மீதப் படுத்துகிறீர்கள். அதாவது ஏறத்தாழ நீங்கள் வங்கியில் 150,000 ரூபா பணத்தை இட்டு அதில் கிடைக்கும் மாத வட்டிக்கு இணையானது.

2.நீங்கள் ஆகக் குறைந்த 54 ரூபாவை மீதப் படுத்துகிறீர்கள் எனின் , நீங்கள் **மானிய விலையில் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்ட மிகக்குறைந்த விலை மின்சாரத்தை மேலும் உபயோகமான வழியில் உபயோகிக்க முடியும். உதாரணமாக ஒவ்வொரு நாளும் rice cooker பாவிப்பதன் மூலம் நீங்கள் அதே 54 ரூபா மின்சாரதில் ஒரு மாதத்திற்கு சோறு காய்ச்ச முடியும்.

** அரசிற்கு ஒரு மின்னலகை(1KwH) உற்பத்தி செய்ய செலவாகும் தொகை 23 ரூபா.

CFL மின் குமிழ்களால் உள்ள வேறு நன்மைகளை ஆராய்வோம்.

1. CFL மின் குமிழ்களின் ஆயுற்காலம் இழை மின்குமிழ்களின் ஆயுற்காலத்தை விட 5 மடங்கு அதிகம்

2. இவை பல நிறங்களில் கிடைக்கின்றன.

அதாவது. Warm white (yelloish white),Neutral white,Cool white,Daylight,Cool daylight( Pale Blue) போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

3.பெரும்பாலான மின் குமிழ் Hoders ( Screw small/big type, clip type) இல் பொருத்தும் வடிவில் கிடைக்கிறது.

4.இழை மின் குமிழுடன் ஒப்பிடும் போது அழகானது, மற்றும் பல அளவுகளில் கிடைக்கிறது.

பல வீடுகளில் இன்றுக்கூட CFL மின் குமிழ்கள் உபயோகிக்க தடையான காரணிகளும் அதைத் தவிர்க்கும் மார்க்கங்களும்.

1. அலங்கார விளக்குகளுக்கு CFL ஒவ்வாது ..

இது தவறான கூற்று, நீங்கள் உங்கள் வரவேற்பறை அலங்கார விளக்குகளில், இழை மின் குமிழிற்குப் பதிலாக CFL ஐ பாவிக்க முடியும்.

2.CFL இனை dimmer switch உடன் பாவிக்க முடியாது..

இதுவும் தவறான கூற்று, சற்று விலை கூடிய விசேட பிரத்தியேக CFL குமிழ்கள் சந்தையில் வழ‌க்கில் உள்ளது.

3.விலை அதிகம்.

இதுவும் தவறான கூற்று,இதற்கான விளக்கம் மேலே வள‌ங்கி உள்ளேன்.

தொடரும்...

-உதயம்

பி கு:எழுத்து நடையில் தவறிருப்பின் மன்னிக்கவும்.

உங்கள் ஊர் உறவுகளிற்கு விளக்குவது மட்டுமல்லாமல் நீங்களும் பின்பற்றலாமே

இது இப்போ நடைமுறையில் உள்ளதா?

  • தொடங்கியவர்

இது இப்போ நடைமுறையில் உள்ளதா?

ஆம் சிட்பி.. இது 05/08/2012 நிலவரம்...

[size=4]- அருமையான பதிவு. நன்றிகள் உதயம்.[/size]

[size=4]- இவ்வாறான தகவல்களை சாதாரண மக்கள் மத்தியில் ஊடகங்கள்/விழிப்புணர்வு கருத்தரங்குகள்/ பாடசாலைகள் மூலம் எடுத்து செல்லவேண்டும்.[/size]

[size=4]தாயகத்தில் CFL மின்குமிழியின் விலை என்ன?[/size]

[size=4]தாயகத்தில் இழை குமிழ்களை(Incandescent ) விலை என்ன? [/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

நன்றி அகூதா உங்கள் ஊக்கத்திற்கு..

15 w CFL குமிழ்: 250-325 ரூபா

100w இழை மின் குமிழ்: 60-80 ரூபா..

[size=4]தாயகத்தில் LED குமிழ்கள் பாவிக்கலாமா? பாவிக்கப்படுகின்றனவா?? இதன் மூலம் மேலும் மின்சாரத்தை சேமிக்கலாம்? [/size]

[size=4]- இந்தமாதிரியான குமிழ்கள் துவிச்சக்கரவண்டியில் உள்ள குமிழ்களிலும் பாவிக்கலாம்.[/size]

[size=4]- அத்துடன் கையில் கொண்டுதிரியும் டோர்ச்ச்லைர் / அரிக்கன் இலாம்புகளிலும் கூட பாவிக்கலாம்.[/size]

  • தொடங்கியவர்

LED மின் குமிழ்கள் இங்கு பாவனையில் உள்ளன எனினும் அவற்றின் கொள் விலை மிக அதிகம். 5w LED குமிழ் 3000 ரூபா வரையில் விற்கப் படுகிறது. அத்துடன் தற்போது இங்குள்ள பெரும்பாலான மின் சூழ்கள் LED மின்சூழ்களே.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

இன்றைய எமது மக்களுக்குத்தேவையான பதிவு

தொடருங்கள் உதயம்.

கருத்து எழுதாவிட்டாலும் கண்ணுக்குள் உள்ளது

[size=4]ஆம், LED குமிழ்களை விடவும் CFL குமிழ்களே விலையளவில் சாத்தியம்.[/size]

[size=4]அத்துடன் புதிய மின்சார மின்குமிழ் வசதிகளையும் ஆராயவேண்டும்.[/size]

http://isanglitrongliwanag.org/

[size=4]முன்பும் ஒருமுறை இது பற்றி இந்தக்களத்தில் எழுதப்பட்டது.[/size]

[size=4]பிளாஸ்ரிக் தண்ணீர்ப்போத்தல் உதவியுடன் மின்சாரம் பிறப்பிக்க முடியும்.[/size]

  • தொடங்கியவர்

அருமையான

இன்றைய எமது மக்களுக்குத்தேவையான பதிவு

தொடருங்கள் உதயம்.

கருத்து எழுதாவிட்டாலும் கண்ணுக்குள் உள்ளது

நன்றி விசுகு அண்ணா...

[size=4]ஆம், LED குமிழ்களை விடவும் CFL குமிழ்களே விலையளவில் சாத்தியம்.[/size]

[size=4]அத்துடன் புதிய மின்சார மின்குமிழ் வசதிகளையும் ஆராயவேண்டும்.[/size]

http://isanglitrongliwanag.org/

[size=4]முன்பும் ஒருமுறை இது பற்றி இந்தக்களத்தில் எழுதப்பட்டது.[/size]

[size=4]பிளாஸ்ரிக் தண்ணீர்ப்போத்தல் உதவியுடன் மின்சாரம் பிறப்பிக்க முடியும்.[/size]

மெத்தச்சரி அகூதா.. அத்துடன அந்தக் கட்டுரையின் படி plastic போத்தல் முறை வெளிச்சத்தை பெறும் முறை.. மின்சாரம் பெறும் முறை அல்ல.

Edited by uthayam

[size=4]நேரத்தை கட்டுப்படுத்தக்கூடிய கருவிகள் மூலம் எமது தேவையான நேரத்தில் மட்டும் மின்சாரத்தை பாவிக்கலாம். இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.[/size]

[size=4]10332013c.jpg[/size]

[size=4]ஒளித்திறனை கூட்டி குறைக்கக்கூடிய கருவிகளை பாவிப்பதன் மூலமும் மின்சார செலவை குறைக்கலாம். ஆனால், இவை குமிழிகளை பதிக்கலாம் எனக்கூறப்படுகின்றது. [/size]

220px-Electric_residential_lighting_dimmer_switch.JPG

http://wiki.answers...._of_electricity

  • தொடங்கியவர்

[size=4]ஒளித்திறனை கூட்டி குறைக்கக்கூடிய கருவிகளை பாவிப்பதன் மூலமும் மின்சார செலவை குறைக்கலாம். ஆனால், இவை குமிழிகளை பதிக்கலாம் எனக்கூறப்படுகின்றது. [/size]

220px-Electric_residential_lighting_dimmer_switch.JPG

http://wiki.answers...._of_electricity

(Dimmer switch)இதுபற்றி மேலே விளக்கி உள்ளேன் அகூதா.

[size=4]நேரத்தை கட்டுப்படுத்தக்கூடிய கருவிகள் மூலம் எமது தேவையான நேரத்தில் மட்டும் மின்சாரத்தை பாவிக்கலாம். இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.[/size]

[size=4]10332013c.jpg[/size]

ஆம் உங்கள் ஆலோசனையையும் அடுத்த தொடரில் எழுதும்போது இணைக்கிறேன்

Edited by uthayam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.