Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களால் சூழப்படுவன் எவனோ அவனே மகான் !”

Featured Replies

[size=1]

mgr_44.jpg”[size=4]என்னைத் தெரியுமா?,உலகறிந்த உன்னத மக்களிடம் தன்னைப் பற்றி கேட்கிறார் ஒரு படத்தில். அதே பாட்டின் மற்றொரு வரியில் “நான் ரசிகன்... உங்கள் ரசிகன்” என்று சொல்லுகிறார் தன் ரசிகர்களிடம். சுமார் முக்கால் கோடி இளைஞர்கள் செம்மலின் ரசிகர்களாக உலகில் மூலை முடுக்கெல்லாம் இருந்தும் அவர்களிடம் தன்னை ரசிகர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

செம்மல் பெயரில் ரசிகர் மன்றம் துவக்கியவர் கல்யாணம். ஒரு நடிகருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டதே, மக்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்ட செம்மலுக்கே, பிறகு அம்மன்றம் முசிறிபுத்தன் கைக்கு வந்ததும் கல்யாணம் அஸ்திவாரமாகிவிட்டார். புராணப்படி பிரம்மாவுக்கு கோயில் இல்லை. படைப்பவனின் மதிப்பும் அடிப்படையில் தானிருக்கும்.

ரமணன் ஒலிப்பதிவு விற்பன்னர். வாகினியில் ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பில் அவரைத்தான் வேண்டும் என்று கேட்டு, தன் படம் பூராவுக்கும் ஒலிப்பதிவாளராக இருக்க வைத்தார். பிறகு அவர் தனியாக ஷியாமளா ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு நிறுவனம் வைத்திருந்தார்.

அப்போது செம்மல் சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியில் இருந்தார். ஷியாமளா படப்பிடிப்பு நிலையத்தில் பாம்பு, தேள் பலவகை பூச்சுகளும் குடியிருக்கும். செம்மல் ஒய்வாக உட்கார்ந்து இருக்கும் போது எறும்புகள் சாரை சாரையாகப் போய் கொண்டிருந்தன. அதை ரசித்த செம்மல். தன் உதவியாளராயிருந்த ஸ்ரீதர் என்ற பெரியவரிடம் காண்பித்து “நம் சிறுசேமிப்பின் விளம்பரத்துக்கு இந்த எறும்புகளையே போடலாம்” என்று சொன்னார். ”நாம் மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்கள். இருந்தாலும் இந்த சிறு எறும்புகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சேமிப்பு குணம், ஒற்றுமை, வரிசையைக் கூட எறும்பை பார்த்தபின் தான் நமக்கும் முக்கியம் என்று சொல்லியிருக்காங்க போல இருக்கு” என்றார்.

பெரும் வசூல் படைத்த ‘ஹாத்தி மேரே சாத்தி’ பட்த்தை தேவர் எடுக்கும் போது, அதில் நடித்த மிருகங்களைப் பார்க்க செம்மல் அழைத்திருந்தார். அம்மிருகங்கள் அடங்கி நடப்பதைக் கண்டு வியந்து பேசினார். அப்போது தேவர் “தம்பி மிருகங்க எப்போ கடிக்கும், எப்போ பாயும்னு எனக்கும் தெரியும். பாழாப் போன மனுஷங்கதான் எப்போ சிரிப்பான், சீறுவான்னு தெரியாது. ஆனா உன்னை சொல்லலேப்பா; உனக்கு நான் அடக்கம். எனக்கு நீ அடக்கம்பா. மனுஷன்களை உயர்வாய் படைச்சுட்டேன்னு தேவன் சொல்றது பொய்யாய்டுது” என்று சொன்னார்.

அதற்கு செம்மல் “நீங்கள் சொல்வதும் சரிதான். ஏன்னா உதாரணம் காட்டும் போது யானையைப் போல் அறிவு, சிங்கத்தைப் போல் வீரம்னு தான் மனஷனுக்கு உதாரணம் சொல்றோம். மனுஷனை காட்டி மிருகங்களுக்கு உதாரணம் சொல்லலே” என்றார்.

அங்கிருந்த புலி, சிங்கம் சிறுத்தைகளை விட ஒரு குரங்கை ரசித்துக் கொண்டிருந்தார் செம்மல். அக்குரங்கு உயரமாகவுள்ள ஒரு கிளையை தாவித்தாவிப் பிடித்து வெற்றி அடைந்தது. ”இந்த முயற்சி மனிதருக்கும் இருக்கணும்” என்றார்.

MGR_with_director20V20Shantaram.jpgசெம்மல் தன் தோட்டத்திலேயே ஒரு கரடிக்குட்டியை வளர்த்தார். காலையில் எழுந்ததும் அதற்கு ஃபீடரில் பால் புகட்டி அதன் சேஷ்டைகளை ரசிப்பார். அவரது பொன்னிறத்துக்கும் கரடியின் கறுப்புக்கும் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அது இறந்து விட்டது. பிறகு ஒரு மான் குட்டியை வளர்த்தார். அது அவரது கையால் தான் காபி குடிக்கும். அதுவும் ஒடிவிட்டது. ’எங்க வீட்டு பிள்ளை’யில் நடித்த நாயின் குட்டியை வாங்கி, வளர்த்தார். அங்கேயே பொமரேனியன் வர்க்கத்து ஆண், பெண் நாய்களை வளர்த்தார். ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது. அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார். அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்: ’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை. இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை” என்று கண் கலங்கிச் சென்னார் செம்மல்.

ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து “மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை. மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும். ஸ்மோகிங் இல்லை. காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை. என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா? அது அறவே கிடையாது. நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.

அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.

மைசூர் மகாராஜா தமிழகத்தின் கவர்ணராக இருந்தார். அப்போது ஒரு படப்பிடிப்புக்காக மைசூர் சென்ற செம்மல் வழக்கமான பிருந்தாவன ஓட்டலில் தங்கியிருந்தார். மகாராஜாவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த மகாலிங்கம் செம்மலின் நண்பர். மகாராஜாவின் மகள் கல்யாணி, தன் கல்லூரி தோழிகளுடன் பிருந்தாவனத்திற்கு வந்திருந்தார். மன்னர், மகளை மாகாலிங்கம் செம்மலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சற்று நேரம் செம்மலுடன் பேசிவிட்டுப் போனார். அவரது தோழிகள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். ஒரு பெண் தன் முந்தானையில் போடச் செல்ல, செம்மல் மறுத்து “இந்த முந்தானை உண் கணவருக்கே சொந்தம். நான் கை எழுத்திட மாட்டேன்.” என்று தன் டைரியிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை கிழித்துப் போட்டுக் கொடுத்தார்.

ஒரு சமயம் காரில் செம்மலுடன் நானும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் போய்க் கொண்டிருக்கிறோம். வட ஆற்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரைக் கடந்து வேலூர் நோக்கிப் போகிறோம். காலை வேளை “பசிக்குது இங்கே எங்கேயாவது காரை நிறுத்தி டிக்கியில் இருக்கும் டிபனை சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றதும் காரோட்டி கதிரேசன் அங்கு தென்பட்ட ஒரு மாதா கோயில் காம்பவுண்டுகுள்ளே காரை செலுத்தி நிறுத்துனார். பெரிய கோவில். சோலைக்குள் இருந்தது.

செம்மலின் கார் நம்பர் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும் கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தைக் கண்ட ஒரு பாரதியார் உள்ளிருந்து வந்தார். செம்மலைக் கண்டதும், “வாங்க, ஏன் இங்கேயே நின்று விட்டீங்க! உள்ளே வந்து சாப்பிடுங்க” என்று அழைத்துப் போனார். கோயில் பணியாட்களிடம் சொல்லி. காரில் இருந்து சிற்றிண்டிகளைக் கொண்டு வரச் சொன்னார்.

உள்ளே அழைத்துப் போய் பேராயரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ரோமிலிருந்து வந்திருந்த பெரியவர். கம்பீரத் தோற்றம். அறிவுக்களை அருள் நிறைந்த முகம். செம்மலை அழைத்துப் போய் தன் உணவறையில் அமரவைத்து, தனக்கென வந்த உணவுகளையும் பரிமாறினார். அவரும் எங்களுடன் உண்டார். செம்மல் அவரையே பார்த்துக் கொண்டு சிற்றுண்டியைப் புசித்தார். பேராயாருக்கு இருபுறமும் இரு பூனைகள் வந்து மேசை மேல் அமர்ந்தன. பொசு பொசு என்றும் வால் மொத்தமாக முடி நிறைந்தும் பார்க்க அழகாக இருந்தது. செம்மல் அதனை ரசித்து இப்பூனைகள் எங்குள்ளவை என்று கேட்க. ”ஜாவா நாட்டுப் பூனை. ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்தார்.” என்று பெரியவர் சொன்னார். யாரிடமும் எதையும் கேட்காத செம்மல் “இது குட்டி போட்டால் ஒன்று கொடுங்கள்” என்று கேட்டார். அவரும் “தாராளமா” என்றார்.

ஆலயத்தைச் சுற்றிக் காண்பித்தார்கள். செம்மல் மண்டியிட்டு முறைப்படி ஏசுவை வணங்கினார். கன்னிகா ஸ்திரீகள் வாழுமிடம், அனாதை குழந்தைகள் வசிக்குமிடம் அனைத்தையும் பார்த்த பின் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். “ இங்கு செலவழித்த இரண்டு மணி நேரத்தில் கண்ட நிம்மதியை எங்கும் காணவில்லை” என்று சொன்னார் செம்மல்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் அப்பேராயரின் அன்பு, அடக்கம், அழகு, கம்பீரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். ”மக்களுக்கு நேரிடையாக நின்று அருள்பணி புரிபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்த்தால் கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு அவர்கள் முகம் இருக்க வேண்டும்” என்றவர், அத்துடன் ”இப்பெரியவரைப்பார்த்த பின் எனக்கும் பாதிரியாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்றார். இதுதான் ‘பரமபிதா’ படத்துக்கு அடிப்படை.

டிசூஸா என்ற கிருஸ்துவப் பெரியவர் லயோலா கல்லூரியின் முதல்வர். கறாரும் கண்டிப்பும் மிக்கவர். அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள பன்னிரண்டு கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு ரோமுக்கு போக இருக்கையில், டாக்டர் ரெக்ஸ் அவரை செம்மலிடம் அழைத்து வந்தார்.

mgr-mass.jpgசெம்மல் முறைப்படி வரவேற்று ”என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தால் அதுவே முறையாக இருந்திருக்கும்” என்றார்.

அதற்கு அவர் “இல்லை, இல்லை, நான் ஒரு காம்பவுண்டுக்குப் பெரியவர், நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்” என்றார்.

அதற்கு செம்மல் ”மிக்க நன்றி” உங்களை விட நான் எந்த வகையில் பெரியவர் என்று எனக்கு தெரியலை” என்றார்.

அதற்கு அப்பெரியவர் “இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும், யார் என்று சொல்லிவிடுவார்கள். மக்களால் சூழப்படுபவன் எவனோ அவனே மகான்” என்றார். செம்மல் வழக்கம் போல் சிறு புன்னகை செய்து கொண்டார்.

அங்கு பேச்சு வாக்கில் ‘பரமபிதா’ படத்தின் பேச்சும் நடந்தது. அதன் கதையமைப்பை டிசூஸா கெட்டார். ”பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது. கதையின் படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான். அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்க லாகாது. அப்படிப்பட்டவன் பாதிரியாக வர முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது” எனச் சொன்னார் டிசூஸா. அதைக் கேட்டபின் இரண்டாயிரம் அடி எடுத்திருந்த ’பரமபிதா’ படத்தை கைவிட்டார் செம்மல். வெகு நாட்கள வரை டிசூஸாவின் பேச்சு கம்பீரம், அறிவு, அழகுக் கலையைப் பற்றியே பேசிக் கொண்டே இருந்தார் செம்மல்.

நன்றி: கலைமாமணி கே.ரவீந்தர் (விழா நாயகன் எம்.ஜி.ஆர்)[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முட்டாளாக இருந்தால் எல்லோரும் மகான் தான்....

இந்த முந்தானை உண் கணவருக்கே சொந்தம். நான் கை எழுத்திட மாட்டேன்.” என்று தன் டைரியிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை கிழித்துப் போட்டுக் கொடுத்தார்

நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார்

ஐயோ தாங்கமுடியல்ல....என்ட பரமபிதாவே

[size=5]அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.[/size]

உண்மையில் எனக்குப்பிடித்த ஓர் கலைஞ்சர். அரசியல்வாதி ,மனிதர்,தமிழன் ..............சிரித்து வாழ வேண்டும், சிலர் சிரிக்க வாழ்ந்திடாதே ......உழைத்து வாழ வேண்டும் சிலர் உழைப்பில் வாழ்ந்திடாதே ....................இப்படி வாழ்ந்து காட்டிய இந்த பொன்மனச்செம்மலை பற்றி இணைத்த தமிழீழன் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.