Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் - மற்றுமொரு கைதி மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]dil_CI.jpg

[size=4]வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து சிறைச்சாலையில் கோம நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷான் மரியதாஸ் உயிரிழந்துள்ளார்.[/size]

[size=4]கடந்த ஜூன் மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதச் சம்பவத்தைத் தொடர்ந்து கடும் தாக்குதலுக்குள்ளான நிலையில் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கோமா நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டில்ருக்ஷான் மரியதாஸ் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவிகின்றார்.[/size]

[size=4]டில்ருக்ஷன் கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கொலைக்கும் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் எனவும் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.[/size]

[size=4]தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் சம்வம் தொடர்பில் உயிரிழக்கும் இரண்டாவது கைதி இவர் ஆவார்.[/size]

[size=4]முன்னதாக நிமலரூபன் கடந்த மாதம் 4 ம் திகதி உயிரிழந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=4]தண்டனைகளோ இல்லை பயமோ இல்லாதவரைக்கும் தமிழரை கொல்லுபவர்கள் கொன்றவண்ணமே இருப்பார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்

வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான கைதிகளில் மற்றுமொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்ருக்ஷன் மரியதாஸ் என்பவரே மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது நிமலரூபன் என்ற கைதி மரணமாகியமை குறிப்பிடத்தக்கது

http://virakesari.lk/article/local.php?vid=74

--------------

மரியதாஸ் தில்ரொக்சன் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு: மனோ கணேசன் face.jpg By M.D.Lucias

2012-08-08 16:28:02

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தில் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நேற்று உயிழந்த மரியதாஸ் தில்ரொக்சசனின் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த மரணம் தெருவில் நடந்தது அல்ல. வழமையாக சொல்வதைபோல்,விசாரணைகள் நடக்கின்றது, கொலையாளிகளை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி அரசாங்கம் தப்ப முடியாது. இந்த படுகொலை அரசாங்கத்தின் பாதுகாவலுக்கு உட்பட்ட, சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது என்பதுடன் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலும், வைத்தியசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படை உண்மையை அரசாங்கம் மறைக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யாழ்ப்பாணம் பாஷையூரை பிறப்பிடமாக கொண்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ் தில்ரொக்சசனின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மரியதாஸ் தில்ரொக்சன் கடைசிவரை சுய நினைவற்ற நிலைமையில் இருந்துள்ளார். இந்நிலையிலும் அவரது கால்கள் சங்கிலியால் அவர் படுத்திருந்த வைத்தியசாலை கட்டிலுடன் பிணைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்மை அரசியல் கைதிகள் மீது காட்டப்படும் கொடூரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தாக்குதலுக்கு பிறகும் முறையான வைத்திய சிகிச்சைகள் இல்லாலாமல் சாக விடப்பட்டுள்ளார்கள் என்று நாம், வவுனியாவில் நடைபெற்ற நிமலரூபனின் மரணசடங்கின் போது சொன்ன உண்மை இன்று தில்ரொக்சசனின் மரணத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல், யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் இந்த அரசாங்கம் தமிழர் மீது பழி வாங்கும் எண்ணத்தை கைவிடவில்லை என்ற உண்மையும் நிரூபணமாகியுள்ளது.

http://virakesari.lk/article/local.php?vid=77

தப்பினால் விசாரணை என்ற தலையிடி இருக்கும் என்று வைத்தியசாலையில் வைத்தே முடித்து கட்டிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.