Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ – கருணாநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு! இது எப்படி இருக்கு????

Featured Replies

டெசோ மாநாட்டை நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை (09) விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றில் சட்டத்தரணி ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி சென்னையில் உள்ள ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்தபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, சுதந்திரத்துக்காக போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய இலங்கை ஜனாதிபதிக்கு மறைமுகமாக உதவிகள் செய்தார்.

இவரது கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது, இவர்கள் வாய் திறக்கவில்லை.

நார்வே நாட்டை சேர்ந்த அமைதி தூதுக்குழுவினர், இலங்கை போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியபோது, கருணாநிதி தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ ஒருவர் கூட அந்த இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்துகிறார்.

இந்த மாநாட்டினால், இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த மாநாட்டுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது வரும். மேலும் இந்த மாநாட்டினால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டும்.

இந்த மாநாடு நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் 6.8.2012 அன்று மனு கொடுத்தேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=28218

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ மாநாட்டில் திமுகவின் வாசனையே இருக்கக்கூடாது: கருணாநிதி

டெசோ மாநாட்டில் திமுக தொடர்பான ஒலி முழக்கங்களோ, கோஷங்களோ எழுப்பக்கூடாதென கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் வரும் 12ம் திகதி ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான மாநாடு கருணாநிதியின் டெசோ அமைப்பால் நடத்தப்படுகின்றது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், திமுகவின் கொடிகளையோ, கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையோ கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், மாநாட்டில் கட்சிகள் பற்றிய ஒலி முழக்கங்களோ, கோஷங்களையோ எழுப்பக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.newindianews.com/view.php?20SOl1dbcA40644e3IMQ3022YmD2ddcfDm430eCMAKae4604A4cb3lOm22

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.