Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஜெனரல் அசோக் மேத்தா மீது பாயும் சிங்களத் தேசியவாதிகள்.

Featured Replies

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவுக்கு எதிராக சிங்களத்தேசியவாதிகள் கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான விடுதலைப் புலிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், 383 பேர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து அந்தக் கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் அனைவருக்கும் சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், போர்த்தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் அவரகளை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த ஆலோசனை சிங்களத் தேசியவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, சிறிலங்கா எதிர்ப்பு சக்திகளாலும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக பல்வேறு சிங்களத் தேசியவாத ஊடகங்களும் கருத்து வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளை பற்றி அவர் நன்றாக அறிந்திருந்தும், அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை வேடிக்கையான விடயம் என்றும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதைவிட, விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் அவர், முதலில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களுக்கு இந்தியா பொதுமன்னிப்பு அளிக்குமா என்று சிந்திக்க வேண்டும் என்றும் சிங்களத் தேசியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://thaaitamil.com/?p=28504

[size=4]"வரலாம், பார்க்கலாம் ஆனால் அறிவுரைகளை முன்வைக்க கூடாது" என்ற சிங்களத்துடனான ஒப்பந்தத்தை மீறியுள்ளார் இந்த இராணுவ மேதை. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.