Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினம் வாழ வேண்டும் என்றால் நாட்டைவிட்டு தப்பியோடாது போராட வேண்டும்; த.தே.கூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைவிட்டு தப்பியோடாமல் எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இது எங்களுடைய மண் எங்களுக்குச் சொந்தமான மண் இங்கிருந்து ஓடிவிடாமல் தமிழினம் வாழ போராட வேண்டும். இதனை ஒவ்வொரு தமிழ் இளைஞர்களும் தமது கடமையாக கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

மிகக் குறைந்தளவு காசில் நாட்டை விட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

மீன்பிடிக்குப் பயன்படுத்தும் இழுவைப்படகுகளில் சென்று கடலில் உயிரைப் பறிகொடுக்கின்றனர்.

இதுவரை எத்தனை பேர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்ததனர் எத்தனை பேர் கடலில் மூழ்கினர் என்ற விபரம் யாருக்கும் இதுவரை தெரியாது.

நாட்டில் பிரச்சினைகள் இல்லை என்று நான் கூறவில்லை பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதற்காக நாட்டை விட்டு வெளியேறாது உரிமையுடன் போராட வேண்டும்.

பணத்தைச் செலவழித்து உயிரைப் பணயம் வைத்து சென்றும் அங்கும் சிறையில்தான் அடைக்கப்படுகின்றது. அவர்கள் உடனடியாக புகலிடம் வழங்க மாட்டார்கள். நீங்கள் அங்கு போய் சாதிக்கப் போவதற்கு எதுவும் இல்லை.

இருப்பினும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களது நோக்கம் அடுத்தடுத்த தலைமுறையினரை நாட்டில் இருந்து அனுப்புவதே அவர்களுடைய இலக்காக உள்ளது.

இதன் போது ஏற்படும் விளைவுகள் எதுக்குமே அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல. ஆப்புவது மட்டுமே அவர்களது இலக்கு.

இதனால் இளைஞர்கள் உயிரைப் பறிக்கும் கடல் பயணத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழினம் வாழ்வதற்கு அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்.

இந்தப் பயணங்களை நாம் ஆதரிக்கக் கூடாது. த.தே.கூ என்ற அடிப்படையில் இளைஞர்களுக்கு உண்மை நிலையினை நாம் எடுத்துக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=303801323314352299

தேவை இல்லாததை சுரேஸ் பேசினால் போக மறுப்பவர்களின் வீடுவாசல் பறிமுதல் செய்யப்படலாம். உயிர் கூட பறிக்கப்படலாம். இப்படி விசையங்களுக்கு இப்போதைக்கு அரசியல் தீர்வு முயற்சிக்க கூடாது. இதில் பெரிதாக தமிழ் மக்களின் பிழை ஒன்றும் இல்லை. அதாவது தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது அவுஸ்திரேலியா JVPக்கு ஆதரவு அளிக்க முயன்றதால் ஆகும். அவுஸ்திரேலிய தூதுவரால் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படுவதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் பழிவாங்குப்பட்டது JVP யின் குணரத்தினத்தை விடுவித்ததால். எனவே சங்கிலித் தொடர் போல செய்யப்படும் இந்த அடாவடிதனங்களில் ஒன்றை மட்டும் வெளீயே இழுத்து அரசியல் தீர்வு காண முடியாது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.