Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தடையைத் தாண்டுவதற்கு அரசின் தந்திரங்கள் வெற்றிபெறுமா?

Featured Replies

[size=2]

[size=3]ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய இலங்கை அரசாங்கம், இப்போது தன்னுடைய நிலைப்பாட்டைப் பெருமளவுக்கு மாற்றிக்கொண்டுவிட்டது. ஐ.நா.வின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டுள்ள ஒரு நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இது உண்மையா அல்லது எதிர்வரும் நவம்பரில் ஜெனீவாவில் எதிர்கொள்ளப்போகும் அடுத்த கட்டத் தடையை எதிர்கொள்வதற்கான உபாயமா என்பதுதான் இன்று எழும் கேள்வியாகவுள்ளது.[/size][/size]

[size=2]

[size=3]ஐ.நா. விவகாரத்தில் இணங்கிப்போகும் உபாயத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கு அரசாங்கம் வகுத்துள்ள செயற்திட்டம் எந்தளவுக்கு உதவும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்திருக்கின்றது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்திருக்கின்றது. அதேவேளையில், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்;பிள்ளையின் ஆலோசனைகளையும், உதவியையும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அரசாங்கம் இப்போது இணங்கியிருக்கின்றது.

இந்த இரு விடயங்களையும் உள்ளடக்கியதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்த அரசாங்கம் இப்போது தனது நிலைப்பாட்டை அவசரமாக மாற்றிக்கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்குழு ஒன்று செப்டம்பர் மாதம் கொழும்பு வரவிருக்கின்றது. இந்தக்குழு வடக்;கு கிழக்குப் பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடவிருக்கின்றது. அத்துடன் பல தரப்பட்டவர்களையும் இந்தக் குழு சந்திக்கும். இந்தக் குழுவின் விஜயத்தைத் தொடர்ந்து நவநீதம்பிள்ளையும் கொழும்பு வரவிருக்கின்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு உள்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட பாரிய ஆதரவை அடிப்படையாக வைத்து ஐ.நா. வின் தீர்மானத்தை நிராகரித்து அதனை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்த அரசாங்கம், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. ஐ.நா. மற்றும் ஏனைய மேற்கு நாடுகளுடன் இணங்கிப்போவது தமக்கு நல்லது என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துகொண்டிருக்கலாம்.

சர்வதேச ரீதியாக உருவாகிவரும் அழுத்தங்கள் என்பவற்றுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்த போதிலும், தம்மால் தயாரிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அழுத்தங்களை அரசாங்கத்தினால் சமாளித்துவிட முடியுமா என்பது ஆராயப்படவேண்டியதாகவே உள்ளது.

இந்த வகையில், அரசாங்கத்தின் செயற்திட்டம் பற்றிய விபரங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்களும் பலகேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. முதலாவதாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் வெளிப்படுத்தும் தன்மைக்கும் யதார்த்த நிலைமைக்கும் இடையில் ஒரு இடைவெளி காணப்படுகின்றது.

அதாவது, இலங்கை நிலைமையைப் பொறுத்தவரையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தனக்குள்ள பற்றுறுதியை அரசாங்கம் வெளிப்படுத்தினாலும், கள யார்த்த நிலைமைகள் எந்தளவுக்கு இதற்குச் சாதகமாகவிருக்கும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது. இதனைவிட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் போரால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் எந்தளவுக்கு உள்ளடக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் வகுத்துள்ள செயற்திட்டத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பிரதான பரிந்துரைகளும், ஏனைய உப பரிந்துரைகளும் ஐந்து தலைப்புக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமைகள், காணி மீளளிப்பும்- மீள்குடியேற்றமும், நிவாரணம் மற்றும் நல்லிணக்கம் என்ற தலைப்புக்களில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான செயற்திட்டக்குழு ஒன்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் உள்ளதாகவும், சில பரிந்துரைகள் இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மேலும் சில பரிந்துரைகள் அடுத்த வருடத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, இந்த நடைமுறைப்படுத்தல்களின் பெறுபேறுகளை அறிய அடுத்தவருடமும் காத்திருக்க வேண்டும்.

அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரு தேசிய செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டாலும், இதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமையை ஒரு குறைபாடாகவே குறிப்பிட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு கிழக்கு மக்கள்தான். பரிந்துரைகளின் மூலமாக அந்த மக்களுடைய காயங்களுக்கு மருந்து போடவே அரசாங்கம் முற்படுகின்றது.

இந்த நிலையில் இதற்கான செயற்திட்டத்தை வகுக்கும் போது தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்படன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கம் இவ்விடயத்தில் திட்டமிட்டே ஒரு புறக்கணிப்பைச் செய்திருக்கின்றது என்பது உண்மை. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்காமல் அந்த மக்களுக்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் எவ்வாறு வகுத்துக்கொள்ள முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதில்லை என்பதில் அரசாங்கம் பிடிவாதமாக நிற்கின்றது என்பது புதிய செய்தியல்ல. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே கூட்டமைப்புடன் ஒரு வருட காலமாக நடத்திய பேச்சுக்களை அரசாங்கம் இடைநிறுத்திக்கொண்டது.

இருந்தபோதிலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கத்தரப்பில் எந்தவித அக்கறையும் காட்டப்படவில்லை. உள்நாட்டு அரசியலில் பாதகமான விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்பதையிட்டு அரசாங்கம் அவதானமாக இருந்துள்ளது. அதாவது, சிங்கள மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்புக்கள் உருவாகக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் வகுத்துக்கொண்டிருந்தாலும், இலங்கை தொடர்பான மீளாய்வு மதிப்பீட்டைச் செய்வதற்கான குழு தொடர்பில் தமது அதிருப்தியையே அரசாங்கம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. இந்தக் குழுவில் இந்தியா, பிரேசில் மற்றும் ஆபிரிக்க நாடான பெனின் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஆதரித்து வாக்களித்த நாடுகளாகும். அதனால் குறிப்பிட்ட நாடுகளை இந்த மீளாய்வு மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக நியமித்திருப்பது இலங்கைக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை அரசாங்கம் வெளிப்படையாகவே தெரியப்படுத்தியிருக்கின்றது.

இருந்தபோதிலும் அரசாங்கம் வெளியிட்ட செயற்திட்டத்தில் காணப்படும் பிரதான குறைபாடுகள் சர்வதேச கவனத்தைக் கவரலாம் என்பதும் இலங்கை அரசாங்கத்தின் இந்த சீற்றத்துக்கக் காரணமாக இருக்கலாம். வெறுமனே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை முன்வைப்பதும், நவநீதம்பிள்ளையின் குழுவினருக்கு அனுமதியளிப்பதும் மட்டும் நிலைமைகளை சமாளிப்பதற்கு உதவப்போவதில்லை.

அரசின் செயற்திட்டத்தை சர்வதேச நாடுகள் பல வரவேற்றாலும் கூட, அதன் உள்ளடக்கம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது என்பதையிட்டு பெரும்பாலான நாடுகள் இதுவரையில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. குறிப்பிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் அரசாங்கம் அஞ்சுவதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.[/size]

- தமிழ்லீடருக்காக[/size][size=2]

கொழும்பிலிருந்து பார்த்தீபன்.[/size]

http://tamilleader.com/mukiaya/5589-2012-08-19-13-34-38.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.