Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபைத் தேர்தலும் தமிழரின் அரசியல் தீர்வும் - ஈழமுரசு

Featured Replies

[size=4]இலங்கையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அரசியற்கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வாக்குவேட்டைக்காகக் களமிறங்கியுள்ளன. யாருடன் யார் கூட்டுச் சேர்வது, எப்படி அதிகாரங்களைப் பங்கிடுவது, யாரை முதலமைச்சராக்குவது என்று கட்சிகள் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டன. வழமைபோல் தேர்தல் வன்முறைகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் இந்தத் தேர்தல் திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட குழந்தைபோல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருப்பது தமிழினம்தான். மாகாணசபை என்ற அரசியற் சித்து விளையாட்டில் மாட்டுப்பட்டு பகடைக்காயாகப் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினமும் அதன் அரசியல் அபிலாசைகளும். இம்முறை நடைபெற இருக்கும் தேர்தல் கிழக்கு மாகாணசபைக்கான மூன்றாவது தேர்தல். 1989, 2008 இல் நடைபெற்ற தேர்தல்களில் முறையே வரதராஜப் பெருமாளும் ‘பிள்ளையான்’ எனப்படும் சந்திரகாந்தனும் முதலமைச்சரானார்கள். இப்போது நடைபெற இருப்பது மூன்றாவது தேர்தல்.

இவற்றில் முதலிரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியத்தை ஆதாரமாகக் கொண்ட கட்சிகள் எவையும் பங்குபற்றவில்லை. மாகாணசபைத் தேர்தல்களை அவை புறக்கணித்தன. ஆனால் இம்முறை தமிழ்மக்களுக்கான அரசியற்பலமாகவுள்ள ஒரேகட்சி என்று சொல்லப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

மாகாணசபை என்ற அரசியல் அதிகாரப் பரவலாக்க வடிவமானது சிறுபான்மை இனங்களைச் சிறுமைப்படுத்தி உப்புச்சப்பற்ற ஓர் அரசியற் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். கூர்ந்து நோக்கினால் இந்தக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அதிகாரமெதுவும் வழங்கப்பட்டிருக்காது. பெயருக்கு ஒரு முதலமைச்சரும் மாகாணசபையும் இயங்கிக் கொண்டிருக்குமேயன்றி வேறெந்தப் பலனும் இதனால் கிட்டப்போவதில்லை.

ஆளுநர் என்ற பதவியிலிருப்பவருக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதும், ஆளுநராக நியமிக்கப்படுபவர் தீவிர இனவாதியாக இருப்பதும் - குறிப்பாக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியாகவோ அதிகாரியாகவோ இருப்பதும் இலங்கையின் நடைமுறையாகவுள்ளது. இந்நிலையில் ஆளுநரின் தலையீடு எல்லாவிடத்திலும் இருக்கக்கூடியதாகவுள்ள மாகாணசபைக் கட்டமைப்புக்குள் சிறுபான்மை இனங்கள் எவ்வாறு தமது அரசியல் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்? காணி அதிகாரங்களும் காவற்றுறை அதிகாரங்களும் முழுமையாக இல்லாத மாகாணசபை எப்படி ஓர் அரசியல் தீர்வாக அமைய முடியும்?

ஏற்கனவே இந்த மாகாணசபைத் தேர்தல்களில் பங்குபற்றி வென்று முதலமைச்சரான இருவருமே இதுகுறித்த்துத் தமது விசனங்களை அவ்வப்போது வெளியிட்டிருக்கிறார்கள். முதலாவது முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், மாகாணசபை அதிகாரங்களில் காவற்றுறைக்கிருக்கும் அதிகாரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, எதையுமே செய்ய அதிகாரமில்லாத காவற்துறை எதற்காக? சும்மா இருந்து சம்பளம் வாங்கவா? எனக் காட்டமாகவே கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

உண்மையில் மாகாணசபை என்பது தமிழரின் இலங்கைத்தீவிலுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வாகாது, தமிழ்மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுமாகாது. இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழ்மக்களுக்கான நிரந்தரமான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வாய்ப்பே இல்லை. ஒற்றையாட்சி முறைமைக்கு வெளியேதான் தமிழ்மக்களுக்கான அரசியல்தீர்வு பெற்றுக்கொள்ளப்பட முடியும். ஆனால் மாகாணசபையோ அல்லது 13ஆம் திருத்தச்சட்டமோ ஒற்றையாட்சி முறைமையின் கீழான ஓர் அதிகாரப் பரவலாக்கமே. எனவே ஒற்றையாட்சி முறைமையும் அதன்கீழான மாகாணசபையும் நிராகரிக்கப்பட வேண்டும்.

நிலைமை இப்படியிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதென்று தீர்மானித்தது தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரையும் கவலைகொள்ள வைத்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம் வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொள்வதோடு, மாகாணசபைத் தீர்வுத்திட்டத்தையும் ஏற்றுக்கொள்வதாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயமுண்டு. அரசாங்கம் இதைவைத்தே தனது பரப்புரைகளை முடுக்கிவிடும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததே தமிழரின் தாயகம் என்பதையும் தற்போதைய ஒற்றையாட்சி முறைமையின் கீழான எந்தத் தீர்வுத்திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அழுத்தம் திருத்தமாக உலகுக்குச் சொல்ல வேண்டிய தருணமிது. இதையேதான் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறைகொண்ட பலரும் சொல்லி வந்தார்கள். மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பங்குபற்றக்கூடாது என்று முன்பே சொல்லப்பட்டு வந்தது. தமிழ்ச் சிவில்சமூகம் இதை ஆணித்தரமாக முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைவிட தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி இக்கொள்கையைத் தீவிரமாக முன்வைத்துச் செயற்பட்டிருந்தது.

வேறு சக்திகளிடம் மாகாணசபை அதிகாரம் போகக்கூடாது என்பது யோசிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமே. அதற்கான தீர்வாக சிவில் சமூகமும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் முன்பே ஒரு தீர்வை வெளியிட்டிருந்தன. அதாவது தமிழ்த்தேசியத்தில் பற்றுள்ளவர்களைக் கொண்ட ஒரு சுயேட்சைக்குழுவைப் போட்டியிட வைப்பதென்று. ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்த யோசனையையும் செவிமடுக்காது தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. இது தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் ஒரு வடுவாகவே அமையக்கூடும்.

இந்நிலையில், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பரப்புரைகளிலும் தமிழரின் இணைந்த தாயகத்தையும், ஒற்றையாட்சி முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டையும் ஆணித்தரமாக முன்வைத்துச் செயற்பட வேண்டும். அதுதான் இப்போதைய நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புச் செய்யக்கூடிய பிராயச்சித்தம் ஆகும்.

-ஈழமுரசு ஒஸ்ரேலியா ஆசிரியர் தலையங்கம்

http://tamilleader.c...0-06-59-03.html[/size]

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.