Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் சேத விவரங்கள் எதுவும் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

உச்சி குளிர்கின்றதே! உள்ளம் மகிழ்கின்றதே!!

பிச்சை எடுத்து பெரும் கொலை புரிந்தவர்கட்கு

"நச்" என்று விழுந்தே நல்ல அடி!

நாறிப் போகுமே சிங்களப் படை எனி!! :wink: :P

கொல்லபட்டவங்களை பற்றி - நோ கொமன்ற்ஸ்-

காணாமபோனவங்களில - 'மங்களம்' - பாடுறவங்களும்- ஒரு 'மார்க்க' மா இருக்கிறவங்களும் - மாட்டுப்பட்டிருந்தா.........

ம்ம் - அது எங்க நடக்க போகுது- ........

சிங்கள -பவள் ல திரியேக்க-அண்ணாச்சி மாருக்கு !!

நடந்தா சந்தோசம்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

காணமால் போன கருடனும் இருந்தால்

காண்போமே மிகப்பெரும் சந்தோசம்

ஒட்டுபடையின் முகாம் தாக்கியழிப்பு - இருபது ஒட்டுப்படையினர் பலி - விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் அதிரடி

ளுயவரசனயலஇ 29 யுpசடை 2006

பொலநறுவை மாவட்டம், வெலிகந்தைப் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசன்குளம் பகுதியில் அமைந்திருந்த கருணா ஒட்டுப்படையின் முகாம் மீது இன்று அதிகாலை 12.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணி நடத்தி அதிரடித் தாக்குதலில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. (மேலதிக விபரம் 2வது இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு அவர்களின் நேரடி நெறிப்படுத் தலில் அதிகாலை 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்துள்ளது.

இதன்போது அந்த முகாமிலிருந்த அனைத்து ஆயுதங்களும் விடுதலைப் புலிக் கொமாண்டோக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடித் தாக்குதலில் ஒட்டுப்படையினர் தரப்பில் 20ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை படுகாயமடைந்த நிலையில் மேலும் 10பேர் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றிகரத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ ஒருவர் காயமடைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் குறித்த முகாம் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தவேளை சிறீலங்கா படையினர் அவர்களை நோக்கி ஆட்டிலறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட அவர்களின் இரு வாகனங்களும் தாக்கியழிக்கப்பட்ட முகாமில் இருந்ததை விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் அவதானித்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் குறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கையில்...

விடுதலைப் புலிகளிற்கும் கருணா குழுவிற்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இராணுவம் சம்பந்தப்படவில்லையெனக் குறிப்பிடுள்ளார். வெலிகந்தைப் பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவித்தவர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான இங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

http://eelatamil.net/sankathi/index.php?op...=2787&Itemid=26

பொலநறுவையில் துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2006, 06:39 ஈழம்] [தாயக செய்தியாளர்]

பொலநறுவையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரது முகாம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் தாக்கியழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு-பொலநறுவை எல்லையில் வெலிக்கந்தைக்கு கிழக்கில் காசங்குளம் என்ற இடத்தில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானுவின் கண்காணிப்பின் கீழ் இத்தாக்குதல் நடத்தப்பட்டு துணை இராணுவக் குழுவினரது முகாம்கள் அழிக்கப்பட்டன.

இம்முகாம்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் முகாம்கள் இருந்தபோதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதில் துணை இராணுவக் குழுவான ஈ.என்.டி.எல்.எஃப். முக்கிய உறுப்பினர்களும் மற்றொரு துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

தாக்குதல் சம்பவத்தில் காமயடைந்த ஒன்பது பேர் வெலிக்கந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நடைபெற்ற போது முகாமை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம் முகாமில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் இரு வாகனங்கள் இருந்துள்ளன.

தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து ரொய்ட்டருக்கு தொலைபேசியூடாக கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன்,

எமது சிறப்பு விசேட அதிரடிப்படையணியினர் இத்தாக்குதலை நடத்தி மூன்று முகாம்களை அழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலானது துணை இராணுவக் குழுவினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் பாரிய பின்னடைவு என்று கூறினார்.

இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=25881

ஒட்டுப்படை முகாமை தாக்கியவர்கள் மீது படையினர் தாக்குதல்!

ஒட்டுப்படைகளின் முகாம்களை தாக்கி அழித்தவர்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்றபோது ஒட்டுப்படையினருக்கு ஆதரவாக அண்மையில் உள்ள படைமுகாமில் இருந்து எறிகணைத் தாக்குதல் ஆதரவை வழங்கியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க குறித்த இடத்தில் தாக்குதல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உச்சி குளிர்கின்றதே! உள்ளம் மகிழ்கின்றதே!!

பிச்சை எடுத்து பெரும் கொலை புரிந்தவர்கட்கு

"நச்" என்று விழுந்தே நல்ல அடி!

நாறிப் போகுமே சிங்களப் படை எனி!! :wink:  :P

தூயவனைப் போல், எனக்கு மிகவும் மகிழ்ச்சி! ஆகா, இதேபோல், எல்லா எட்டப்பன் வம்சத்தையே துவம்சம் செய்தொழிக்கவேண்டும். :twisted: இவ்வளவு நாட்களும் துக்கத்தில் இருந்த்த எமக்கு தித்திக்கும் செய்தி!!!

அல்லிகா :lol:

மண்குதிரைகளை நம்பி ஆற்றை கடக்க வெளிக்கிட்டவைக்கு நல்ல அடி. புனர்வாழ்வுகழகத்தினரையும் உவையள்தான் கடத்தி வைச்சிருக்கினம். ஏன் ஊவையள்தான் கொழும்பிலை தற்கொலைதாக்குதல் நடத்தியிருக்க கூடாது?( :lol: ) கருணாவிடமும் தற்கொலை போராளியள் இருந்தவைதானே?

பிரச்சனையை துவக்குவதற்கு உவையள்தான் கொழும்பிலை தாக்குதல் நடத்தியிருப்பினம் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

வாவ்... வொண்டபுள் நியூஸ்!! காலத்தின் தேவை!!! சமாதானத்திற்கான வேள்வி!!! ... தொடர வேண்டும்......

தமிழீழப் பகுதிகளில் மட்டுமல்ல சிறீலங்காவின் தலைநகரிலுள்ள ஒட்டுக்குழுக்களின் தலைமையகங்களும் தாக்கியளிக்கப் பட வேண்டும்!!! "களைகள் அறுவடைக்கு முன்னம் களையப்பட வேண்டியவைகளே"!!!!!!

ஆருக்குத் தெரியும் ... கொழும்பிலை போடப்படுகிற நேரம் உண்டியலானும் போய் தலையைக் கொடுக்கக் கூடும்!!! எல்லாம் ஈழ்பதீஸான் செயல்!!

அரோகரா...

இணைப்பு 2

ஒட்டுப்படையினர் 20 பேர் பலி மேலும் 15 பேர் படுகாயம்: 5 பேர் கைது.

பொலன்நறுவை மாவட்டத்தின் எல்லைக்கிராமான வெலிக்கந்தையிலிருந்து 5 கிலோ மீற்றர் அப்பால் இருக்கும் காசங்குளத்தில் இராணுவத்தினரோடு சேர்ந்து இயங்கும் துணைஇராணுவக்குழுவின் காட்டுப்புற முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அணியால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இரவு வெலிக்கந்தை காசன்குள காட்டுப்புறத்தினுள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் 20 பேர் உள்ளடக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் துணை ஆயுதக்குழுக்களின் காஞ்சஞ்குள முகாமமை அண்மித்ததும் நிலையெடுத்து தாக்குதலுக்கு தாயாராகினர்.

தாக்குதல் நேரம் அண்மித்ததும் சரியாக 1.30 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 7 பேர் பேர் கைது செய்யபட்டுள்ளார்கள் எனவும் அறிய முடிகிறது.

தாக்குதலானது பல மணி மணிநேரம் நீடித்துள்ளது. தாக்குதலில் துணை இராணுவக்குழுக்களின் 3 முகாம்கள் தாக்கி அழிக்பட்டுள்ளன. குறிப்பாக காசங்குளம் முகாம், தீவுச் சேனை முகாம், காக்காடு முகாம் ஆகியனவே தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த துணை ஆயுதக் குழுவினர் சிறீலங்கா படையினரால் வெலிக்கந்தை இராணுவ முகாமுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு ஒருங்கிணைத்திருந்தார்.

தாக்குதலில் ஈ.என்.டி.எல்.எவ் இன் முக்கிய உறுப்பினர் ஒருவரும் கருணா அணியினரின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் கொல்லபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

www.newstamilnet.com

ஈழநாதம் நாளேட்டில் 29.04.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்

புலிகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் தேவை

இந்நிலையில் தற்பொழுது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகவுள்ளது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை சிறிலங்கா இராணுவத்திற்கு மட்டும் பொருந்துமா? அன்றி விடுதலைப் புலிகளுக்கும் பொருந்துமா? என்பதே. ஏனெனில் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான விடயத்தில் சில மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/editorial/eela...2006_APR/29.htm

இதுதான் சிங்களத்தின் சரியான அடி. தலவரை யார் எண்டு நினைச்சாங்கள். ஆனால் சிங்கள ஊடகங்கள் பொய்மூட்டைகளின் கோட்டைகளாக வலம் வருவதை பார்க்கையில். சிரிப்பு சிரிப்பா வருகுது. :lol::lol::lol:

நிலக்கண்ணி வெடியில் இரு இராணுவ ரக் வண்டிகள் சிதறியது : சம்பவம் படையிரால் மூடிமறைப்பு.

விடுதலைப் புலிகளால் துணை ஆயுதக் குழுக்களின் மூன்று முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதை அடுத்து விடுதலைப் புலிகலிகள் முகாம்களிலிருந்து வெளியேறும் போது வாகன் கண்ணிவெடிகளை நிலத்தில் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர். துணை ஆயுதக்க குழுக்களின் முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதை அறிந்த சிறீலங்கா படையினர் இரு ரக் வாகனத்தில் காசங்குள முகாம் நோக்கி விரைந்த போது இரு ரக் வாகனமும் நிலக்கண்ணி வெடியில் வெடித்துச் சிதறியுள்ளது. இதனை விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். சேதவிபரங்கள் இதுவரை தெரியவில்லை. இத்தாக்குதலை சிறீலங்கா படையினர் மூடி மறைத்துள்ளனர்.

nitharsanam.com

இதுதான் சிங்களத்தின் சரியான அடி. தலவரை யார் எண்டு நினைச்சாங்கள். ஆனால் சிங்கள ஊடகங்கள் பொய்மூட்டைகளின் கோட்டைகளாக வலம் வருவதை பார்க்கையில். சிரிப்பு சிரிப்பா வருகுது.  :lol:  :lol:  :lol:

சிறிலங்காவின் நிலமை திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட இராணுவப் பேச்சாளர் அடிக்கின்ற நகைச்சுவை தான் தாங்கேலாமல் இருக்குது. இன்றைக்கு தாக்குதல் நடந்த பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இல்லையாம். அது விடுவிக்கப்படாத பிரதேசமாம் என்று கதையளந்து கொண்டிருக்கின்றார். :idea:

அனால் காயப்பட்டவை எல்லலோரும் பொலநறுவை வைத்தியசாலையில் தான் விட்டிருக்கினமாம். அது எப்படி சாத்தியமாகும் என்று விளங்கவே இல்லை. :idea: :?:

இதை விட 15 பேரின் சடலங்களைப் பொறுக்கி எடுத்தவையாம் இராணுவத்தினர். விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இராணுவம் எப்படிப் போகும்? யுத்த நிறுத்த மீறலாக திவு செய்வமா?? எனிமேல் தீவுச் சேனையை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக புலிகள் அறிவிக்கச் சொல்லிக் கேட்க வேணும். :wink:

ஆனால் இராணுவப் பேச்சாளர் தான் மிகவும் பாவம். முந்தி சரத் முனசிங்க இருக்கும் போது கூட அவருக்கு இப்படிச் சங்கடங்கள் வந்ததில்லை. ஆனால் இவர் தினமும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூறி ஒவ்வொரு நாளும் கதையை மாத்தி மாத்தி கதைக்க வேண்டியதாகக் கிடக்குது!! :cry: 8)

நாளைக்கே பதவியில் இருந்து விலத்துகின்றாரோ தெரியவில்லை!!! :wink:

விடுதலைப்புலிகளின் தாக்குதலின் போது ஒட்டுக்குழு உறுப்பினர்கள் ஐவர் கைது: வர்த்தகர் மீட்பு

இன்று பொலநறுவ பகுதியில் ஒட்டுக்குழுக்களின் முகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் போது ஒட்டுக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடைசியாக கிடைத்த தகவல்களின் படி கொல்லப்பட்ட ஒட்டுப்படையினரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை வவுனியாவில் வைத்து ஒட்டுப்படைகளால் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் கிருஸ்ணா, வண்ணாளன் ஆகியவர்களும் அடங்குவர். கிருஸ்ணா கருணாவின் மெய்ப்பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளால் ஒட்டுப்படையினரின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகர் புலிக்குட்டி என்று நம்பப்படுகின்றது.

சம்பவத்தில் கொல்லப்பட்ட 29 ஒட்டுப்படையினரின் உடல்கள் ஒட்டுப் படையினரால் தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பல ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களின் விபரங்கள் வருமாறு:-

PKLMG – 02

81mm

மோட்டர் – 01

R.P.G – 01

T-56-2 LMG – 02

T-56-2 – 16

கைத்துப்பாக்கி - 02

தொலைத்தொடர்பு சாதனம் - 01

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

பாவம் சிறிலங்கா ஒட்டுக்குழுவை மலைபோல நம்பியிருக்க :!: ஆனால் புஸ்வாணமாய் போட்டுது. :P

இதுதான் சிங்களத்தின் சரியான அடி. தலவரை யார் எண்டு நினைச்சாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிங்கள கப்டனும், 4 சிப்பாய்களும், இவங்கள்ட உடலங்களை தூக்க வந்த போது கண்ணிவெடியில் சிக்கி செத்துதொலைந்தானுகள் என்று தமிழ் நெட் செய்தி!

இந்திய பிரஜையும் ஈ.என்.டி.எல்.எப், புளொட் மத்தியகுழு உறுப்பினருமான றோ அதிகாரி ரீகன் பலி.

புதன்கிழமை 1 நவம்பர் 2006 மௌலானா

30-04-2006 ஞாயிறு அதிகாலை இரண்டுமணியளவில், மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அரச உளவுப்பிரிவின் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பலத்த தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இந்தியாவின் பிரஜா உரிமை பெற்ற இந்தியாவில் இருந்து ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் இந்திய புலனாய்வு பிரிவான றோ அமைப்பினரை நேரடியாக வளிநடத்த வந்திருந்த செல்வராஜா ரீகன் முக்கியமானவர். இவர் கொல்லபட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்ததுடன் இந்திய இராணுவ காலத்தில் சும்மார் 500 அப்பாவி தமிழ் மக்களை கற்பளித்தும் சுட்டும் கொலை செய்தவர். ஈ.என்.டி.எல்.எவ் மத்தியகுழு உறுப்பினராகவும் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காளியாக இருந்தவர். பரந்தன் முருகண்டி பகுதியில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை கோடாலியால் கொத்தி கொலை செய்ய இவர் ஆணந்த சங்கரியின் மெய்பாதுகாவலனாகவும் இருந்துவந்தவர். இவருடைய உடலை உடனடியாக விசேட விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான இவர் புளொட் அமைப்பில் இருந்து பிரிந்து ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் உருவாக்கத்திற்கு துனைநிண்றவர் கடந்த 19 வருடமாக இந்தியாவில் வாழ்ந்துவரும் இவர் பெரிய கல்லாற்றை தனது பிறப்பிடமாக கொண்டவர்.

http://www.nitharsanam.com/?art=16928

ஓம் ரிபிசி யிலை அஞ்சலி செய்தவை

முக்கயமான 3...4 பேர் அம்பிட்டுவிட்டினம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர் விபரங்கள் வெளியிடும் அளவிற்கு சரியான திட்டமிடலுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

The LTTE sources in Kokkaddicholai in Batticaloa district identified the Sri Lankan captain killed in action as LLoyd Fernando (5VIR RSP) from Kalwatte, Kurunegala.

The other soldiers killed in the confrontation were identified as Upul, Jeyakody, Tissanayake and Anura.  

ஆனால் எனக்கு ஒன்று விளங்கவில்லை. ஒட்டுப்படைகளை முற்றாக அழிப்பதோடு அரசின் போலி முகத்தை சரிவதேசத்துகு கிழித்து அம்பலப்படுத்த வேண்டிய உச்ச கட்ட பிரச்சார யுத்த நேரத்தில் ஏன் புலிகள் தாக்குதல் நடந்த இடத்தையும், தாக்குதலில் கொல்லப்பட்ட ஒட்டுப்படைகளும் இராணுவமும் சேர்ந்து கிடப்பதையும் 'வீடியோ'வில் எடுத்து அம்பலப்படுத்தக் கூடாது. உக்கிர தாக்குதலின் போது 'வீடியோ' எடுப்பது என்பது ஆபத்தானது தான், ஆனால் புலிகளின் திறமைக்கு முன்னால் இது கஸ்டமான காரியமாக தெரியவில்லை.

முன்பொரு முறை கள உறவொன்று கூறியது போல, தனியே எழுத்தில் இருப்பதை விட புகைப்படங்களும், வீடியோக்களும் உண்மைகளை ஆணித்தரமாக சொல்ல வல்லன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.