Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka-tea-estate.jpg

[size=4]சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சிறிலங்கா தேயிலைச் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 4.2 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 25.17 மில்லியன் கிலோவாக இருந்தது.

இந்த ஆண்டு ஜுலை மாதம் தேயிலை ஏற்றுமதி 24.11 மில்லியன் கிலோவாக குறைவடைந்துள்ளது.

2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி 3.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2011இன் முதல் ஏழு மாதங்களிலும். 195.83 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் 188.16 மில்லியன் கிலோ தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதல் இருந்து போதிய மழை இல்லாததால், உயர்தர, நடுத்தர, தேயிலையின் உற்பத்தி குறைந்ததாக தேயிலை தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டில் சிறிலங்கா 328.37 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்திருந்தது.

இந்த ஆண்டில் 330 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய சிறிலங்கா திட்டமிட்டிருந்த போதிலும், பின்னர் அந்த இலக்கு 325 மில்லியன் கிலோவாக குறைக்கப்பட்டது.

சென்ற ஆண்டில் சிறிலங்கா தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றது.

இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களிலும் தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10. 8 வீதத்தினால் குறைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி கூறியுள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120824106854[/size]

[size=4]சர்வதேச நாணயங்களுக்கு எதிராக சரிந்த நிலையில் ஏற்றுமதி செய்ய இலகுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தும் தேயிலை ஏற்றுமதி சரிகின்றது. பொருளுதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும். [/size]

[size=4]தேயிலை வளர்ப்பிலும் அதிகளவில் கிருமி நாசினிகள் பய[/size]ன்படுத்தப்படுகின்றதோ? யாரறிவார் :wub:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106922

தேயிலை உற்பத்தி இலங்கையைப் பொருத்தமட்டில் ஒரு பாரம்பரிய ஏற்றுமதி உற்பத்தி.

இந்த வளத்தையும் தவரவிட்டதுக்கு அந்த நாட்டின் ஆளும் அல்லது ஆண்ட தப்புக்களே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலை உற்பத்தி இலங்கையைப் பொருத்தமட்டில் ஒரு பாரம்பரிய ஏற்றுமதி உற்பத்தி.

இந்த வளத்தையும் தவரவிட்டதுக்கு அந்த நாட்டின் ஆளும் அல்லது ஆண்ட தப்புக்களே காரணம்.

விண் வெளிக்குப் போகும்... கனவில் இருக்கும், ஸ்ரீலங்காவுக்கு...

பாரிய ஊற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சியை... கவனிக்க நேரமில்லை.

ஒரு நாள், கனவு கலையும் போது... அதன் தாக்கம் புரியும்.

விண் வெளிக்குப் போகும்... கனவில் இருக்கும், ஸ்ரீலங்காவுக்கு...

பாரிய ஊற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சியை... கவனிக்க நேரமில்லை.

ஒரு நாள், கனவு கலையும் போது... அதன் தாக்கம் புரியும்.

[size=4]அந்த வேளையில் நாடும் பிரியலாம்.[/size]

[size=4]சோவியத் யூனியன் கூட உடைந்தமைக்கு ஒரு காரணம் விண்வெளி உட்பட பல போட்டிகளில் உலகம் முழுவதும் ஈடுபட்டதே. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்து தேயிலையினை புறக்கணிக்கத்தொடங்கி பலகாலம் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் இருப்பது புசல் என்ற அவுஸ்திரெலியாத் தேயிலைதான். சிங்களத்து தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியில் 0.000000001 பங்குக்கு நானும் ஒரு காரணம் என்பதில் பெருமைப்படுகிறேன்.

[size=6]என்ன கொடுமை ?[/size]

[size=5]''Thangavelu, a 60-year-old estate worker, told White: “We receive 515 rupees ($US4) a day but only if we work for 21 days per month. If the number of working days is less than that [even if caused by rain] then the day’s salary is cut to 355 rupees.”[/size]

a30-ampi-240.jpg

http://www.wsws.org/articles/2012/aug2012/meet-a30.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.