Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை- சீமான் உட்பட 1000கும் மேற்பட்டோர் கைது (படங்கள்)

Featured Replies

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே அவரை சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு அதிகாரிகள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டாலும் செந்தூரன் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர் சுமார் 2000 நாம் தமிழர்கள். பெருமளவில் பெண்கள் இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆயிரக்கனில் திரண்ட நாம் தமிழர்களால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலையை சமாளிக்க காவல் துறை அனைவரையும் கைது செய்தது. சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கைது செய்யப்பட்டு செந்நீர் குப்பம் முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி மதிமுக கட்சியினர் பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து கைதானார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இருந்தும் தமிழக அரசு ஏனோ இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருகிறது.

thaaitamilnews-11.jpgthaaitamilnews-10.jpgthaaitamilnews-9.jpgthaaitamilnews-8.jpgthaaitamilnews-6.jpgthaaitamilnews-5.jpgthaaitamilnews-3.jpgthaaitamilnews-2.jpgthaaitamilnews-1.jpg

http://thaaitamil.com/?p=30112

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கை நிறைவேறவேண்டும்,

இதன்போது கைதான சீமான் உட்பட உறவுகள் அனைவரும் விடுதலையாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உண்மையான அரசியல்வாதி சீமானுக்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..! சித்திரவதைக் கூடங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.. போராட்டக்காரர்களும் விரைவில் விடுதலையாக வேண்டும்..!

[size=4]தொடர்ச்சியாக தமிழீழ குடிமக்களை சித்திரவதை முகாம்களில் வைத்து கொடுமைப் படுத்துவதை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் செய்து வருகிறது. அதிமுக, திமுக இரண்டும் தமிழகத்தை ஆளும் போதும் இந்தக் கொடுமைகள் நடக்கிறது.... தமிழ் நாட்டை ஆளும் போது இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு இம்மக்களை கொடுமைப் படுத்துவது நடைபெறுகிறது.. [/size]

[size=4]தமிழக காவல்துறையின் சிறப்பு உளவுப் பிரிவான க்யூ பிரான்ச் இந்த தமிழர்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ராசபக்சேக்கு இணையான கொடுமைகளை செய்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். ஆனாலும் அதிமுகவோ, திமுகவோ இதற்காக ஒருபோதும் கவனத்தை செலுத்தியதில்லை... [/size]

[size=4]தமிழீழம் என்பது இவர்களின் வாக்கு வங்கி அரசியலில் பலியிடப்பட்ட அப்பாவி குழந்தையாகவே இருக்கிறது. அதே சமயம் இப்போது ந்டந்து கொண்டிருக்கிற பூந்தமல்லி-செங்கல்பட்டு முகாம் விடுதலைப் போராட்டத்தில் அதிமுக அரசும், ஜெயலலிதாவும் நேர்மையற்றதாக நடப்பது மட்டுமல்ல கருணாநிதி அரசிற்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.. [/size]

[size=4]தமிழீழத்தை தனது பிழைப்பிற்காக பயனபடுத்தும் இந்த இர்ண்டு கட்சிகளும், இதன் தலைவர்களையும் தமிழினத்தின் விரோத சக்தியாக வரலாறு பதிவு செய்யுமளவு இருக்கின்றன இவர்களின் செயல்கள். தமிழர்களின் தலைவிதியை மாற்றவேண்டுமெனில் மாற்று அரசியல் ஆற்றல்கள் வளரவேண்டும். வாக்கு அரசியல் சாராத இயக்கங்களே இனி வரும் காலத்தில் இந்த அரசியல் சக்திகளுக்கு நெருக்கடியை அளிக்க வேண்டும் என்பது வரலாற்று கட்டாயம். மாவீரன்.முத்துக்குமாரினை நினைவில் ஏந்தி தமிழர்கள் களம் காண வேண்டும்.[/size]

[size=1]-[size=5] மே 17 அமைப்பு [/size][/size]

[size=5]செந்தூரன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் வாசிகளை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாநிலை போராட்டத்தை மதிமுக நாளை முதல் தாயகத்தில் துவக்குகிறது. [/size]

[size=5]அனைத்து அமைப்புகளும் பங்கெடுப்பதாக அறிவிப்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலத்தில் பங்கு பற்றும் உறவுகளுக்கு நன்றிகள்.2000 பேர் 2 லட்சம் ஆகும் போது தி.மு.க என்ன அ.தி.மு.க என்ன பதில் சொல்லியே ஆக வேண்டும்.தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் சுயநல முகம் மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

யாழ் கழத்தில் சீமான்,வை.கோ போன்றோர் சுயநலவாதிகள் என்போம் எப்படி என விளக்கம் தரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.