Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவை அனுமதிக்காதீர்! மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் செளஹானுக்கு, வைகோ கடிதம்!

Featured Replies

அன்புள்ள திரு சிவராஜ்சிங் செளஹான் அவர்களுக்கு,

வணக்கம். தமிழ்நாட்டிலும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் தாங்க இயலாத வேதனையைத் தந்துள்ள, கவலைதரும் பிரச்சினையை, தங்களது உடனடிக் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அதிபர் மகிந்த ராஜபக்சேயின் சிங்களப் பேரினவாத அரசின் மிருகத்தனமான இராணுவத் தாக்குதலால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, இரத்தம் கசியும் இதயத்துடன் சுட்டிக் காட்டுகிறேன்.

இராஜபக்சேயின் இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையை, ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010 இல் நியமித்த மூவர் குழு, தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியது.

இத்தமிழ் இனக்கொலை, சோனியா காந்தி இயக்குகின்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழுமையான உதவியோடும், ஆதரவோடும் நடத்தப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்கிறோம் என்ற போர்வையில், சிங்கள இராணுவம், உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளைப் பயன்படுத்தியும், விமானக் குண்டுவீச்சாலும், தாக்குதலாலும், ஈவு இரக்கம் இல்லாமல், குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் உள்பட, எண்ணற்ற தமிழர்களைக் கொன்று குவித்தது.

2009 மே மாதத்தில் மட்டும், 1,36,000 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதாக, ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்திய அரசின் முழுமையான ஆதரவோடுதான், தனது அரசு யுத்தத்தை நடத்தியதாக, இலங்கையின் நாடாளுமன்றத்திலேயே, அதன் அதிபர் மகிந்த ராஜபக்சே, மிகத்திமிராகச் சொன்னான்.

ஈழத்தமிழர் படுகொலையால், மனம் கொதித்த, 17 தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து, கொழுந்து விட்டு எரிந்த நெருப்புக்குத் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்தனர். இலங்கையில் போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு, இந்திய அரசை வலியுறுத்துவதற்காக, இந்த உயிர்த்தியாகம் செய்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழர்களுக்கு எதிரான, மன்னிக்க முடியாத, துரோகக் குற்றத்தை இழைத்தது.

இப்பொழுது எங்கள் தலையில், மேலும் ஒரு இடி விழுந்து உள்ளது. அதுதான், திருமதி சுஷ்மா சுவராஜ் செய்து உள்ள அறிவிப்பு ஆகும்.

புத்தர் பிரான் ஞானம் பெற்ற 2600 ஆவது ஆண்டை ஒட்டி, புத்த மதம் குறித்த கல்வி ஆய்வுக்கான மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நிறுவுவதற்காக, செப்டெம்பர் 21 ஆம் நாள் நடைபெறுகின்ற அடிக்கல் நாட்டு விழாவில், மகிந்த இராஜபக்சே, திருமதி சுஷ்மா சுவராஜ் அழைப்பின்பேரில், பங்கு ஏற்கப் போகிறார் என்று அறிவித்து உள்ளார். புத்த மதத்தினரின் மிக முக்கியமான புனித வழிபாட்டுத் தலம்தான் சாஞ்சி ஆகும். கிறித்துவுக்கு முன்பு, மூன்றாம் நூற்றாண்டில், எழுப்பப்பட்டது.

இந்த விகாரை, அன்பு, அமைதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மை, கண்ணோட்டம், கருணை, மனிதநேயம், இவற்றைப் பிரதிபலிக்கும் இடம் ஆகும். இதில் முக்கியமான விகாரையை, பேரரசர் அசோகர் உருவாக்கினார்.

அரண்மனை, அரசபோக சுகங்கள் அனைத்தையும் உதறி எறிந்த கெளதம புத்தர், துன்பங்களைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு, மனிதகுலத்துக்கு அன்பையும், கருணையையும் போதித்தார். அந்த புத்த பெருமானின் பெயரைக்கூட உச்சரிப்பதற்கு, எந்தத் தகுதியும் அற்றவன் இராஜபக்சே.

இரத்த வெறி பிடித்த இராஜபக்சே, சாஞ்சியில் நுழைந்தால், புத்தரின் எலும்புகள் நடுங்கும்; இராஜபக்சேயை மட்டும் அல்ல, அவனை அழைத்து வந்தவர்களையும் ஒருபோதும் மன்னிக்காது.

கடந்த ஆண்டுகளில், நாடாளுமன்ற விவாதங்களில், அன்றைய பிரதமரான, மிகவும் போற்றத்தக்க, தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை, நான் ஆணித்தரமாக ஆதரித்த நாள்களை நினைவு கூர்கிறேன். விதிஷா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக அப்பொழுது அவையில் இருந்த நீங்கள், வாஜ்பாய் அவர்களை ஆதரித்து நான் பேசிய உரைகளை மெச்சியதையும், பாராட்டியதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

1998 ஆம் ஆண்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், சிங்கள அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யாது என்றும், ஏன், பணம் கொடுத்தாலும் ஆயுதங்களை விற்பனை செய்யாது என்றும் பிரகடனம் செய்தது, மறுக்க முடியாத உண்மை ஆகும்.

ஈழத்தமிழர்களுக்கு, அந்த மாபெரும் தலைவர் வாஜ்பாய் அன்பு உள்ளத்தோடு செய்த உதவிகளுக்கு, தமிழ் மக்களும், நானும் எந்நாளும் நன்றியோடு இருப்போம்.

2001 ஆம் ஆண்டு, கான்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய கூட்டத்துக்கு, பிரதமர் வாஜ்பாய் அவர்கள் என்னை அழைத்துச் சென்று, அங்கே என்னை அறிமுகப்படுத்தும்போது, ‘இராமனுக்கு இலட்சுமணன் வாய்த்தது போல, எனக்குக் கிடைத்த பாசமிக்க சகோதரர் வைகோ’ என்றார்.

வாஜ்பாய் அவர்கள் இன்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதை எண்ணி நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். வாஜ்பாய் அவர்கள், நலனோடும், பேசி இயங்கும் திறனோடும் இருந்தால், ஒருகாலத்தில் அவரை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்து எடுத்த விதிஷா தொகுதியில் உள்ள சாஞ்சிக்கு, மகிந்த ராஜபக்சேயை அழைக்கின்ற துணிச்சல், சுஷ்மா சுவராஜூக்கு ஏற்பட்டு இருக்காது.

2012 மே 18 ஆம் தேதி, இலங்கை அரசோடு இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, புத்தரின் எலும்புகளை, இலங்கையில் காட்சிப்பொருளாகக் காட்டுவதற்கு, கொழும்புக்கு அனுப்ப முடிவு செய்தது. அதனைக் கண்டித்ததோடு, புத்தரின் எலும்புகளை கொழும்புக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி, 2012 மே 19 ஆம் நாள், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, அழுத்தமான ஒரு கடிதத்தை அனுப்பினேன். எனது கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்து உள்ளேன்.

தமிழர்களின் உணர்வுகளைக் காற்றில் வீசி எறிந்த, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையில், ஆகஸ்ட் 19 ஆம் நாள், புத்தரின் எலும்புகளை கொழும்புக்கு அனுப்பி வைத்து, இராஜபக்சேயின் இரத்தம் தோய்ந்த கரங்களில் சேர்த்தது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இங்கிலாந்து நாட்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மகிந்த இராஜபக்சே உரை ஆற்றுவதாக அறிவிக்கப்பட்டு, அங்கு உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்து, அதை எதிர்த்துப் போராடியதால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இராஜபக்சே உரையை இரத்து செய்து, திருப்பி அனுப்பியது. தமிழர்களின் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து தடவும் வகையில், பிரித்தானிய அரசும், இலங்கை அதிபரை நாட்டை விட்டு அனுப்பியது.

மீண்டும் இந்த ஆண்டு, 2012 ஜூன் 6 ஆம் நாள், இலண்டன் மாநகரில், ஒரு கூட்டத்தில் மகிந்த இராஜபக்சே உரை ஆற்றுவதாக இருந்தபோது, தமிழர்கள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அந்தக் கூட்டத்தையும், பிரித்தானிய அரசு இரத்து செய்தது.

இந்தப் பின்னணியில், மகிந்த இராஜபக்சேவுக்கு, சுஷ்மா சுவராஜ் கொடுத்த அழைப்பிதழை இரத்து செய்து, அவனது வருகையைத் தடுத்து, சாஞ்சியின் புத்த மத புனிதத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, மதித்து, இந்தப் பிரச்சினையில் தக்க நடவடிக்கை எடுத்து, சாஞ்சிக்கு இராஜபக்சே வருவதைத் தவிர்த்து விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியில், சில அக்கறை உள்ள சக்திகளின், நியாயம் அற்ற அழுத்தங்களின் காரணமாக, சுஷ்மா சுவராஜூடைய அழைப்பினை ஆதரித்து, புத்தர் விழாவில் அடிக்கல் நாட்டுவதற்கு, மகிந்த இராஜபக்சேயைப் பங்கு ஏற்கச் செய்வீர்களானால், அந்தச் செயல், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் இழைக்கப்படும், மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகி விடும் என்று, வருத்தத்தோடு நான் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

சாஞ்சிக்கு வரும் மகிந்த இராஜபக்சேயை எதிர்த்து, ஜனநாயக முறையில், அமைதி வழியில், என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், செப்டெம்பர் 21 ஆம் நாள், சாஞ்சியில், கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்தும் என்று, நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன்.

ம.தி.மு.க.வின் 1000 க்குக் குறையாத தொண்டர்களோடு, இப்போராட்டத்துக்கு நான் தலைமை தாங்குவேன்.

ஜனநாயக உரிமைகளை மறுக்கின்ற வகையில், எந்தவிதமான அடக்குமுறைகளிலும் உங்கள் அரசாங்கம் ஈடுபடாது என்று நான் நம்புகிறேன். இந்தப் புனிதப்போரில், எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.

நன்றி,

தங்களன்புள்ள

வைகோ.

http://thaaitamil.com/?p=31271

Rajiv1987hit.jpg

raja.png

உண்மைகள் பொதிந்த உணர்வுள்ள கடிதம்!

உரிய நேரத்தில் அனுப்பபட்டுள்ளது.

வைகோ வுக்கு நன்றிகள்!

தமிழக முதல்வர்களின் போலிக் கடிதங்களுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது!

இதையும் மீறி ஒரு பயங்கரவாதியை மத்திய பிரதேச அரசு அனுமதிக்கும் என்றால் அவர்கள் நிச்சயம் காட்டுமிராண்டிகளாகவே கணிக்கப்படுவர்!

[size=3]கொடுங்கோலன் ராஜபக்சே இந்திய நாட்டிற்கு வருவதை தமிழர்கள் கண்டிக்கும் வகையில் மத்திய பிரதேச முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி நம் எதிர்ப்பை தெரிவிப்போம். கீழுள்ள கடிதத்தை அப்படியே குறிப்பிட்டுள்ள மின்னச்சளுக்கு உங்கள் பெயரை பதிவு செய்து அனுப்பவும். நன்றி. கடித உதவி : நாம் தமிழர் கட்சி. [/size]

[size=3]Shri Shivraj Singh Chauhan,[/size]

[size=3]Chief Minister of Madhya Pradesh[/size]

[size=3]Vallabh Bhavan[/size]

[size=3]Madhya Pradesh[/size]

[size=3]Fax 0755-450 501;[/size]

[size=3]Pho[/size][size=3]

ne 91-755-450500; 91-755-(450502 to 450504)

Email cm@mpchiefminister.com OR cs@vallabh.mp.nic.in

Respected Chief Minister,

We are writing this letter to display our condemnation regarding your state government extending out invitation to the President of Srilanka Mahinda Rajapakse. You would have been aware that in the year 2008/2009, he had unleashed a state sponsored terror that the world has never seen before. This blood-raged genocide had claimed the lived of hundreds of thousands of innocent Tamil children including women and children. Many women and young girls and had faced tremendous sexual abuse and exploitation. Those who have lived through this bloody hunt had been kept in concentration-style bard-wired camps and had been left in bad state of mental depression. Even today, there are widespread events of cultural, historical and language based genocide of Tamils. Land grabbing, sexual violence, kidnapping and killing of Tamils is still quite common. In Sri lanka, these crimes lead to the very top government officials, i.e., the President and his family members (who are part of the government).

War crime accusations over Mahinda Rajapakse and his brothers have been put forward by UN panel’s report in 2011. His involvement in genocide and evidences of war crimes has been exposed by Wikileaks website and U.K’s Channel 4 news channel. A special news report on the same was also done by India’s Headlines Today news channel. Ireland’s Internation War Crimes tribunal has convicted him of war crimes and crimes against humanity. Even, in the US there is a humanitarian case filed against Mahinda Rajapakse. However India, a nation that has 8 billion Tamils is considering him as a strong ally and friend. How can someone who’s navy has murdered close to 560 Indian Fishermen (who are also citizens of India) can be considered a “friend”?

The Indian government, without paying litte attention to the sentiments of Tamil community, has already offered red-carpet welcome to Rajapakse thrice. This is a huge insult to the feelings of Tamil population in India and across the world.

We ask that you reconsider your invitation to Mahinda Rajapakse. If not, we Tamils would have to take up widespread protests and boycotts. An attack on our Tamil brothers and sisters in Sri lanka is an attack on the Tamil community as a whole. Self-respect and Dignity is more important to us Tamils than life itself. We hope that you would make the right decision.

Thanking you,

(Your Name)[/size]

[size=4]நன்றி வேந்தன். அனுப்பிவிட்டேன்.[/size]

[size=1]

[size=4]இந்த முகவரியில் தவறு உள்ளது : cm@mpchiefminister.com[/size][/size]

[size=4]நன்றி வேந்தன். அனுப்பிவிட்டேன்.[/size]

[size=1][size=4]இந்த முகவரியில் தவறு உள்ளது : cm@mpchiefminister.com[/size][/size]

நன்றி அகூதா சரியான முகவரியை தரமுடியுமா ....

மின்னல் அஞ்சலுக்கு ஒரு புதுத் திரி ஆரம்பித்தால் எப்படி?

நன்றி அகூதா சரியான முகவரியை தரமுடியுமா ....

சரியான முகவரி அகூதா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.