Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பாடசாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மை காலங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கீதாச்சாரம் மதில் சுவர்கள்,பாடசாலை சுவர்களில் வர்ணங்களாக தீட்டியுள்ளார்கள் இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா???

நாங்கள் படிக்கும் காலங்களில்(மழைக்கு ஒதுங்கிய காலத்தில்) இப்படியான ஒன்றும் இருக்கவில்லை இதுகள் இப்ப போர் சூழலில் வருவதற்குறிய முக்கிய காரணம்???

யாழ் கள உறவுகளே உங்கள் பதில்??????

நீங்கள் கேட்பது உட்பட இதிலே வேறு பல நல்ல விடையங்களும் இருக்கு.

www.tamilsociety.com

நாடும் நடப்பும் - 32

சங்குவேலிச் சாத்தன்

02.05.2006, செவ்வாய்.

http://www.mousegroup.net/tamilsociety/01....6/sathan-01.htm

சில முக்கிய விடையங்கள்:

தென்னிலங்கைக்கு யாழ் குடா ஊடகவியலாளர்கள் கூட்டிச் செல்லப்படுவது பற்றி, new media ஊடகவியலாளர்களுக்குத்; தெரியவர இடமளியாது, இரகசியமாகவே தாம் இதைச் செய்வதாக, ஒழுங்கு படுத்தலைச் செய்திருந்தவர்கள் எண்ணியிருந்தனர்! யாழ் குடாவில் பெயரளவில் இருக்கும் இரண்டு ஊடகவியலாளர் சங்கங்களும், இப்படித்தான் எண்ணியிருந்தன!

....

......

அரசு, கட்சிகள், சமூகம்; என்பவைகளைத் திருத்தும்;, வழிகாட்டும்; அறிவும், நோக்கமும், வல்லமையும் உடைய, democracy, transparency, human rights, good governance என்பவைகளைச் சரியாக விளங்கி, ஏற்றுச் செயற்படும் வல்லமையும், நோக்கமுடைய ஊடகவியலாளர்களை, இவைகளைத் தாம் கடைப்பிடிக்காத யாழ் பல்கலைக் கழகத்தினரும், னுயுனுநுனுயு அமைப்பினரும் உருவாக்குவர் என ஒருவர் கருதினால், அல்லது கூறினால், அவர் ஒன்றில் சித்தப் பிரமை பிடித்தவராகத்தான் இருக்கமுடியும்@ இல்லாதுபோனால், அவர் ஒரு கைக்கூலியாகத்தான் இருக்கமுடியும்!

....

.......

அமெரிக்க அரசும், CIA யும் 17 சமய அமைப்புக்களுக்கு நிதியுதவி செய்து, அவை வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் புூகோள hPPதியாக செயற்பட்டு வருவதாக டீடீஊ ஆய்வில், ஈராக்கிய போர் ஆரம்ப காலத்தில் கூறப்பட்டது ( உண்மையில் இலங்கைக்கான டீடீஊ நிருபராக இரு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து வந்த அந்த ஆராய்வாளனின் ஆய்வில், ஒரு தடவை மாத்திரம்தான் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்த மறு ஒலி - ஒளிபரப்பில், இந்த விடயம் நீக்கப்பட்டிருந்தமை இங்கு அவதானிக்கத்தக்கது ). இந்தச் சமய அமைப்புக்களுள் hari rama hari kirshna வும் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை இங்கு அவதானிக்கத் தக்கது!

கிறீஸ்தவ அமைப்புக்களுக்கு அமெரிக்க ஆதரவளிக்கும் விடயத்தினை இலங்கைக்கும், யாழ் குடாவிற்கும் பல தடவைகள் விஜயம் செய்திருந்த அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதிகாரியான அம்மணி, அண்மைக் காலத்தில் இலங்கையில் நாசூக்காகக் கூறியிருந்தமையும் இங்கு அவதானிக்கத்ததக்கது.

சகோதரருடன் பேரிட மறுத்திருந்த அருச்சுனனுக்கு கண்ணன உபதேசத்தைச் செய்து, அறத்தை நிலைநாட்ட வைத்தான். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள ஒரு சிறு பகுதியைத் தெரிந்தெடுத்து, வடக்குக் கிழக்கில் அடக்கு முறை, ஒடுக்கு முறை, பயங்கரவாதம் என்பவைகளை ஆட்சியாளரிடமிருந்தும், அவர்களின் கூலிகளிடமிருந்தும் எதிர்நோக்கும் மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஏன் ஒரு சாரார் கடும் முயற்சி எடுத்து ஊட்டி வருகின்றனர், ஏன் பாடசாலைகளில் கண்ணன் உபதேச கலர் ஓவியங்களைத் தீட்டியும், கீதை உபதேசங்களை எழுதியும், சிறுவர்களுக்கு திசை திருப்பல் சித்தாந்த ஊட்டுகையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர் என்பது பற்றி ஆராயவேண்டியிருப்பதை, ஒருவர் சுலமாக விளங்கிக்கொள்ளமுடியும்!

இக்கட்டத்தில், hari rama hari kirshna அமைப்புக்கும், அமெரிக்காவிற்கும், ஊஐயு இற்குமிடையில் ஏன், எப்படித் தொடர்புகள் ஏற்படமுடியும்? இது அடிப்படையற்றது என ஒரு சார் திசை திருப்பல்வாதிகளும் கூற முற்றபடலாம்.

தமிழ்த் தேசத்தின் விடுதலைப் போராட்ட முறியடிப்புக்கும், தமிழர்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படாது தடுக்கவும், தமிழ் மாணவர்களை ஒடுக்குமுறை, அடக்குமுறை என்பவைகள் எல்லாவற்றையும் உளவியல் அடிப்படையில் ஏற்பவர்களாக ஆக்கவும், ஆசிரியர்களது கடமையுணர்வற்ற நிலையை நியாயப்படுத்தவும், கீதா உபதேசத்தின் ஒரு பகுதி இவர்களால் மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வர்ணப் படங்களும், போதனைகளும் எப்படியான தனியார் வீடுகளில் ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன என்பதை அறியுங்கள்.

இவைகளிலிருந்து, இவற்றிற்கு மூல காரணிகள் யார் என்பதை நீங்கள் சுலபமாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்!

இவை உங்களை நிச்சயம் பெரும் பிரமிப்பினுள் வீழ்தும். ஏனெனில், நீங்கள் இவற்றால் அறியப்படுபவைகளை ஒருபோதும் சிந்தித்தே இருக்கமாட்டீர்கள், உங்களது முளையில் முன்னர் பதியவைத்த எண்ணங்களையெல்லாம் இவை தவிடுபொடியாக ஆக்கிவிடும்!

இந்த வர்ணப் படங்களுடாகவும், அவற்றில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் ஊடகவும், மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மென்மையாகச் செய்யப்படும் பிரசாரமூடாக, மூன்று விடயங்களை அடையப்பெற இந்தச் சக்திகள் முனைந்திருப்பது தெளிவாகும். அவையாவன:

வலிகாமம் வடக்கு, மற்றும் பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டு, இடம் பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வரும் மக்கள், தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்லப் போராட்டத்தினைத் தீவிரப்படுத்தாது தடுத்து, அவர்களை

“ அமைதியாக “ இருக்க வைப்பது}டாக, High Security Zones இனை நிலைக்க வைத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தில் வெற்றியடைவது

வடக்குக் கிழக்கு மக்கள் இராணுவ, அரச ஒடுக்கு முறைகளை, வர்ணப் படங்களில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் ஏற்று, எதிர்ப்புக்களைத் தெரிவிக்காது, “ அமைதியாக, “ அடிமைகள்போல்; இருக்கவைக்கும் தந்திரோபாயத்தில் வெற்றியடைவது@

மாணவர்களது கல்வி சீரழிக்கப்படுவதையும், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் பொறுப்புணர்ச்சியற்ற போக்குக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காது, மாணவர்களையும், தாய் தந்தையர்களையும் “ அமைதியாக “ இருக்க வைக்கும் தந்திரோபாயத்தில் வெற்றியடைவது.

சுருங்கக் கூறினால், சிங்கள அரசுகள், அவற்றின் படைகளின் செயற்பாடுகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு, தமிழ் மக்கள் தாமாகத் தீர்வுகளை காணா முற்படுவதைத் தடுக்கும் தந்திரோபாயமானது, கண்ணனின் கீதையுூடாக மிகவும் சாமர்த்தியமாக ஒரு சாராரால் மேற்கொள்ளப்படுகின்றது! அதாவது: இங்கு சமாதானம், அமைதி என்பவைகளின் போர்வையினுள், ஒரு உளவியல் போரைச் சர்வதேச சக்திகள் சில குறிப்பிட்ட சமயவாதிகளைக் கொண்டு தீவிரமாக நடாத்துகின்றன@ ஒரு சாராரின் அரசியல் வெற்றிக்கு, சமாதானம், அமைதி என்பவையும் இன்று “ ஆத்மீகத் “ தலைவர்களுடாகப் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகின்றது.

இதைப்போன்ற பல யுக்திகள் பல பல “ஆத்மீகத் “ தலைவர்களைக் கொண்டு வடக்குக் கிழக்கில் இன்று மேற்கொள்ளப்படுவதை ஒருவர் அவதானிக்கமுடியும். இங்குதான் அடிப்படைக் கிறீஸ்தவப் பிரிவுகளின் அதிதீவிர செயற்பாடுகளும் கவனிக்கப்படவேண்டும். இந்த அமைப்புக்கள் அனைத்தும், அடக்குமுறை, ஒடுக்குமுறை, பயங்கரவாதம் என்பவைகளைச் சிங்கள தேசத்திலிருந்தும், அரச படைகளில் இருந்தும் எதிர்நோக்கிவந்துள்ள, எதிர்நோக்கிவரும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கே சமாதானம், அமைதி என்பவை பற்றிப் போதிப்பதில் ஈடுபடுகின்றன.

இவற்றிற்குத் தமிழ் ஊடகங்களும், பெரும் போலி விளம்பரங்களையும், பிரசாரங்களையும் செய்வதைக் காணமுடியும். கற்றோர் எனக் கருதப்படுபவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்!

உதாரணமாக: அண்மையில் பெரும் பத்திரிகை விளம்பரங்களுடன் ஒர் “ ஆத்மீகத் தலைவர் “ யாழ் குடா வந்திருந்தார். அவருடைய வருகையை அடையாளப்படுத்த, யாழ் இந்துக் கல்லு}ரி விளையாட்டு மைதானத்தில் விழா எடுக்கப்பட்டிருந்தது. அந்த விழாவிற்குக் குறிப்பிட்ட சில பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களை அழைத்துச் சென்று, பல நிகழ்ச்சிகளை நடாத்தியும் இருந்தனர். அந்த விழாவிற்குப் பெருந்திரளான மக்கள் குவிந்திருந்தனர் என்ற விளம்பரம,; படங்களுடன் யாழ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால், இலங்கையின் 50 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவதாயின் தென்னிலங்கை மக்கள் மத்தியில் வேறு}ன்ற வைக்கப்பட்டுள்ள து}ய கற்பனை அடிப்படையிலான ஆரியன் -- சிங்களம் -- சிங்களவர் – தேரவாத பௌத்தம் -- லங்கா என்ற சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமேயன்றி, வடக்குக் கிழக்கு மக்;களின் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதில்லை என்ற உண்மையை நன்கு விளங்கிக்கொண்ட மக்கள், இன்று இந்தப்; போலி ஆத்மீகத் தலைவர்கள்; வடக்குக் கிழக்குக்கு ஏன் படையெடுக்கின்றனர் என்பதையும் அறிய ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களது விழாக்களில் பங்கு பற்றுவதைத் தவிர்த்தே வருகின்றனர்.

இதனால், குறிப்பிட்ட “ ஆத்மீகத் “; தலைவரது விழாவிற்கு சில நு}று பேர் மாத்திரமே சென்றிருந்தனர். யாழ் இந்துக் கல்லு}ரியின் விளையாட்டு மைதானத்தில் வெற்றிடங்கள்தான் மிகப் பெரிதாக இருந்தது. இந்த உண்மையைக் கூறுவதைப் பலர் ஏற்கமுடியாது இருக்கலாம். ஆனால், விழானன்று யாழ் இந்துக் கல்லு}ரி மைதானத்தில் எடுக்கப்பட்ட படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்களாகவே முடிவுக்கு வாருங்கள்.

இந்தநிலையில், கண்ணனின் கீதை உபதேச வர்ணப்படங்களையும், அதில் எழுதப்பட்டுள்ளவைகளையும் எவர்கள் அச்சிட்டு, பாடசாலைகளிலும், இடம்பெயர்ந்து 15 வருடங்களாக அலைந்து வாழ்பவர்களின் வீடுகளுக்குப் பெருமெண்ணிக்கையில் விநியோகிக்கின்றனர்@ இவர்களுக்கு எவர்கள் நிதி, மற்றும் உதவிகளைச் செய்து வருகின்றனர்@ இவை எங்கே அச்சிடப்படுகின்றன@ இந்தச் செயற்பாட்டினை நியாயப்படுத்தும் பிரசாரத்தில் எப்படியான பிரசங்கிகள் உண்மையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பவைகளை அறிந்தாலேதான், அங்கு ஒரு இறுக்கமான வட்டத்தினை ( ring ) அடையாளங்காண முடியும்@ இந்த வட்டம் சார்ந்தவர்களுக்கு இப்படியான வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் வட்டங்கள் சார்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதும்@ இந்த வட்டங்கள் சார்ந்தவர்களுக்குத்; தென்னிலங்கை, இந்தியா, மற்றும் சர்வதேசங்களுடன் தொடர்பு இருப்பதும் அறியவரும்.

இப்படிக் கூறும்போது, இன்று யாழ் பல்கலைக் கழகச் சுவர்களில் காணப்படும் சுவரொட்டிகளில்; குற்றம் சாட்டப்பட்டிருப்பதுபோல், சாத்தன் சைவத்திற்கும், இந்து சமயத்திற்கும் தீவிர எதிரி! தமிழ்;த் தேசியத்திற்கு முரணான சக்திகளுடன் இரகசியமாக இணைந்து செயற்படுபவன் எனச் சிலர் ஆவேசத்துடன் கூக்குரலிட முற்படுவர்.

ஆனால், இவர்கள், உண்மையில், அறிவிலிகளாக இருக்கவேண்டும்@ அல்லது மறுபுறத்தில், பிற நாட்டுச் சக்திகளின் கைக்கூலிகள்; என்பதுதான் அசைக்கமுடியாத உண்மையாகும்!

இங்கும், யார் இவர்களைத் து}ண்டி விடுகின்றனர், இவர்களுக்கு இரகசியமாக அறிவுரை வழங்குகின்றனர் என்பதை அறிவதுதான் மிகமுக்கியமானது. இதுதான், தமிழ்த் தேச மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வெற்றியடைய வைக்க உதவும்.

இங்கு சுவாரிஷ்யமானது என்னவென்றால், இப்படியான வட்டங்களைச் சார்ந்தவர்கள், தமிழ்த் தேச மக்களுள் ஒரு பகுதியினரால் எப்போதே குறிப்பாக அடையாளங்காணப்பட்டு விட்டனர் என்பதாகும்!

...

.......

எமது இணையத்தளத்தினருக்கு ஒரு email அனுப்பப்பட்டிருந்தது.

அந்த email ஐ அனுப்பியவர் முன்னர் எமது இணையத்தளத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர் அல்லர். ஆனால் யார் எமக்கு அவசரமாக ஒரு email ஐ அனுப்புவார் என்பதை எமது இணையத்தளத்தினர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர். அவர் வேறு யாருமில்லை. அவர்தான் www.nitharsanam.com இணையத் தளத்தினை நடாத்துவதாக ஒரு சாராரால் பரவலாகப் பிரசாரம் செய்யப்பட்டு வந்தவரும், முன்னர் இலங்கையில் கொழும்பிலிருந்துவரும் வீரகேசரிப் பத்திரிகையில் வேலை பார்த்தவருமான சேது என்பவராகும்!

நோர்டிக் தேசமொன்றில் வாழ்ந்து வரும் இவர், அங்கு மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருபவரும், வேறொரு இணையத்தளத்தைப் பதிவு செய்து வைத்திருப்பவுருமாகும்!

சேது அவர்கள் தனது email உடன், இலங்கை அரசியல் பிரச்சனை தொடர்பாக மேற்கு நாடுகளின் நிலைப்பாடு பற்றி சொல்ஹெய்மின் அண்மையில் கூறியிருந்தவொரு செய்தியை இணைத்திருந்தார்.

...

.....

வழமைபோன்ற ஏமாற்றுக்களை நிதர்சனம் தொடர முற்படுவதைத்தான், சேதுவின் பெயரில் அனுப்பப்பட்ட email முயற்சி அப்பட்டமாகக் காட்டுகின்றது. ஆனால், இந்த ஏமாற்று வித்தையை, D.B.S Jeyarajah வும், நிதர்சனம் இணையத்தளமும் தொடர முற்படுவது பகிடிக்கிடமானதே!

....

......

இன்றைய நவீன உலகில் ஊடகங்கள் எப்படியான வேலைகளுக்;குப் பயன்படப்படுத்துகின்றன என்பதை விடுதலைக்குப் போராடும் தமிழ் மக்கள் அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்..

இல்லாது போனால், முக்கியமான ஒரு காலகட்டத்தில், சில இணையத்தளங்கள் திசை திருப்பல்களில் ஈடுபடுவதைத் தமிழ் மக்கள் அறிய முடியாது போய்விடும்.

பலாலியிலிருந்து முன்னர் இப்படியான ஒரு ரேடியோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதுபோல் இயக்கப்பட்டு வந்ததை, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவர்கள் நன்கறிவர். பின்னர் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தால் செய்யப்பட்ட ழுpயசயவழைn டுiடிசயவழைn காலத்தில்தான் அவ் வானெலியின் உண்மை முகத்தினை மக்கள் அறிய முடிந்திருந்தது!

....

......

எமது இணையத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியா செல்லவென வீசாவிற்குக் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானியத்திற்கு விண்ணப்பிக்கவிருந்தார்.

அப்பொழுது, அவருக்கு 3 நாட்களின் பின்னர்தான் வீசா வழங்கப்படமுடியும் எனக் கூறப்பட்டது.

இதைக் அறிந்த அவர், இந்திய உயர் ஸ்தானியருக்கு ஒரு email அனுப்பியிருந்தார்.

பிற நாட்டவர்களுக்கு ஐந்து நாட்களிலும், தென்னிலங்கையர்களுக்கு ஒரு நாளிலும் வீசாவை வழங்கும் இந்தியாவானது, வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு 1 நாளில் கொடுக்காது 3 நாட்களில் கொடுப்பது, வடக்குக் கிகை;கினை இந்தியா தென்னிலங்கையிலிருந்து வேறுபட்டவொரு தனி நாடாகக் கருதுவதாலா எனக் கேட்டிருந்தார்.

ஆனால், அந்த இணையத்தளத்தினருக்கு 2 வேறு emails அனுப்பப்பட்டிருந்தன. அதில் ஒருவர் www.tamilnation.com இணைத்தளத்தின் இயக்குனராகவும், செய்திகள் அனுப்புவராகவும், மற்றவர் www.tamilcircle.net என்ற இணையத்தளத்தினைச் சேர்ந்தவராகவும் அறிமுகப்படுத்தினார். இன்னெருவர் எமது இணையத்தளத்திற்கும் செய்தி நிருபராகத் தாம் செயற்பட விரும்புவதாகவும், அது பற்றி பேச விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இன்றுவரை எமது இணையத்தளங்கள், செய்திகளைப் பிறரிடமிருந்து பெற்றுப் பிரசுரிப்பதும் இல்லை ஆய்வுக் கட்டுரைகளை பிறரிடமிருந்து பெற்றுப் பிரசுரிப்பதுமில்லை.

யாழ் குடாவைச சேர்ந்த குறிப்பிட்டவர்களே, அவற்றில் கட்டுரைகள், ஆக்கங்களை எழுதுவர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்ட email இல் இருந்து address ஐ இவர்கள் பெற்றிருந்துள்ள நிலையில், இவர்கள் வேறு யாராக இருக்கமுடியும்?

இதனால், எமது இணையத்தளத்தினர்கள் www.tamilnation.com, www.tamilcircle.net என்ற இணையத்தளங்களில் எவைகள் வெளியிடப்படுகின்றன என்பதையும், மேலதிகமாக ஆராயவேண்டிய நிலை உருவாகியுள்ளது! இது நேர, பணச் செலவைத்தான் அதிகரித்துள்ளது!

....

.......

அப்படித் தமிழ் மொழியில் 1991ஆம் ஆண்டு நவெம்பர் மாதத்தில் யாழ் குடாவில் ஐளெவவைரவந ழக ளுவசயவநபiஉ ளுவரனநைள என்ற அமைப்பினல் வெளியிடப்பட்டிருந்த 92 பக்கங்களைக் கொண்ட “ நியுூக்கிளியர் ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க புதிய கொள்கைத் திட்டங்களும், எதிர்கால உலகமும் நாமும் “ என்ற நு}லின ஆய்வுகளையும், முடிவுகளையும் படித்திருந்த சாத்தனுக்கு, இன்றைய அரசியல் நிலையானது, அந்த ஆய்வு நு}லில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளையும், முடிவுகளையும்தான் அடிக்கடி சிந்திக்க வைத்தது.

அந்த ஆய்வு நு}லின் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன ( பக்கம் - 90 முதல் ):

“ நியுூக்கிளியர் ஆயுதங்கள் தொடர்பான ஜோர்ஜ் ப்புஷ் இனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கொள்கைத் திட்டங்களை ஆராயும்போது, இத்திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படுமேயானால், அமெரிக்காவானது இராணுவ தந்திரோபாய hPதியிலும், புூகோள அரசியல் hPதியிலும் முழுமையான ஆதிக்க நிலையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அறிய முடிகிறது. எதுவித்திலும், அமெரிக்;காவினது புதிய இராணுவக் கொள்கைத் திட்டங்கள் வளைகுடாப் பகுதியிலும், பசுபிக் பிராந்தியப் பகுதியிலும், நியுூக்கிளியர், இரசாயன ஆயுத உருவாக்கப் போட்டியினைத் தீவிரப்படுத்தும் சாத்தியங்களை அதிகரிக்கும் ஆபத்தும் எழ முடியும்.

செல்வந்த கைத்தொழில் நாடுகளின் பொருளாதார இலாபப் போட்டியானது, பசுபிக் பிராந்திய நாடுகளிலும், தென் - ஆசிய நாடுகளிலும், சோவியத் யுூனியன், கிழக்கு ஐரோப்பா. வளை குடாப் பகுதிகளிலும், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும், உறுதியற்ற நிலையை அதிகரிக்கவே சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றது. இந்து சமுத்திர பிராந்தியமானது, புூகோள அரசியல் hPதியிலும், புூகோள இராணுவ தந்திரோபாய hPதியிலும் மிகவும் முக்கியமான பிராந்தியமாகும் நிலை காணப்படுகின்றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா – பாகிஸ்தான் - சிறீ-லங்கா - இலங்கைத் தமிழர்கள் என்பவை தொடர்பாகவும், கைத்தொழில் நாடுகள் தொடர்பாகவும், அரசியல் விரிசலடையும் சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றன. இந்தியா, இலங்கை என்பவைகளின் பிராந்திய ஒருமைப்பாடுகள் பாகிஸ்தான், இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பவைகளால் பெரிதும் நிர்ணயிக்கபடும் நிலையே உருவாகிறது. ஆகையால், அமெரிக்கா, சிறீ லங்கா, இந்தியா என்பவைகளிடையே ஏற்படும் ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவ hPதியில் முறியடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படலாம். குறிப்பாக: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட முயற்சிகள் தீவிரப்படுத்தப்படலாம்.

இலங்கைத் தமிழர்கள் தனிநாடு அமைத்துக் கொள்வதும், நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ‘தமிழீழம்’ நிலைத்து நிற்பதும், இலங்கைத் தமிழர்கள் இந்தியா – சிறீ லங்கா – அமெரிக்க உறவுகள் தொடர்பாகவும், இந்தியா – சிறீ லங்கா என்பவைகளின் அரசியல் உறுதி நிலை தொடர்பாகவும், விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் எப்படியான தந்திரோபாயத்தினைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதிலும், தமிழ்ச் சமூகத்தினது அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த எபபடியான தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்கப் போகினறனர் என்பதிலும்தான் பெரிதும் தங்கியுள்ளது.

சுருங்கக் கூறினால்: எமது வருங்காலமானது, உண்மையில், எமது ஆராயும் தன்மையிலும், விஞ்ஞான hPதியாகஆராய்ந்து வந்த முடிவுகளுக்கு ஏற்றவிதத்தில் செயற்பாட்டுத் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் வல்லமையிலும், திறமையிலுமே பெரிதும் தங்கியுள்ளது.

.....

........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.