Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் உரிமைகளை விலை கொடுத்து வாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு.

Featured Replies

தமிழர் உரிமைகள் பற்றி பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குளை அதிக பணம் கொடுத்து வாங்கிய உரிமைகளை முஸ்ஸிங்களுக்கு தாரைவார்க்க முனைகின்றனர்.

இந்தியாவின் நெறிப்படுத்தலுக்கு இணங்க கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்தியா அரசு கோடிக்கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

பெருமதியே இல்லாத ஒரு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழர்களின் உரிமைகளை அடைமானம் வைத்து வைத்து வெளிநாடுகளை திருப்தி செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை பிழையான பாதையில் வழிநடாத்திச் செல்கின்றது.

அதனடிப்படையில், மூன்று மாவட்டத்திலும் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு 3 இலட்சம் ரூபாபணம் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரமல்ல தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் செலவுகள் என இலட்சக் கணக்கில் செலவாகியள்ளதாக தெரியவருகிறது.

அம்பாறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட ராஜேஸ்வரன் என்பவருக்கு ஒரு கோடி ரூபா செலவாகியுள்ளதாகவும், மட்டக்களப்பில் துரைரெட்ணத்திற்கு அதே அளவான தொகையும், பிரசன்னாவுக்கு 25 இலட்சம் ரூபாவும் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மாத்திரமல்ல, தேர்தலில் போட்டியிடுவதற்காக அதன் அனுமதியைப் பெறுவதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப் பீடத்திற்கு இலட்சமாக அதிகளவான பணம் வழங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.

20 வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு நாடு திரும்பிய ஒருவருக்கு முதல் தடவையிலேயே அதுவும், தேசிய போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கான சீட்டை அதிகளவான பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தேசியம், உரிமை, சுயர்நிர்ணயம் என வார்த்தைக்கு வார்த்தை பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஒரு வாக்குக்கு என்ன விலை என்ற முடிவுக்கு வந்துள்ளது. தற்போது நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை. விலை கொடுத்து வாக்கப்பட்டுள்ளார்கள்.

ஓவ்வொரு வேட்பாளர்களும் உரிமைக்காக வாக்களியுங்கள் எனக் கேட்டிருந்தால். அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்காது. பணம் படைத்தவர்கள் அரசியல் தலைவர்களாகலாம் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் நிருபித்துள்ளன.

பெரும்பான்மையினர் வழமையாகவே பணம் கொடுத்துத்தான் ஆட்சியைக் கைபெற்றுவது வழங்கும் அதனையே, மஹிந்த அரசாங்கம் செய்து வருகிறது. எனினும், அதன் பாணியை தமிழ் தேசிய கூட்டமைப்பும் பின்பற்றுவதுதான் மிகவும் வேதனை தரும் விடயமாகவுள்ளது.

எமது உரிமைப் போராட்டத்திற்கான விலை என்பது ஒரு பால் மா பையும், மதுவும், ஒரு உணவுப் பொதியும், வேட்டியும் சேட்டுமாக மாறிவிட்டது. இந்தியாவிலுள்ள குடிமகனின் உரிமையின் பெருமதி ஒரு ரூபாவுக்கு ஒரு கிலோ அரசி என்ற விலை கொடுத்து உரிமைகள் வாங்கப்படுகின்றன.

இவ்வாறு பணம் கொடுத்து வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படும் திட்டமானது எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பையே இல்லாமல் அழிப்பதற்காக முதற்கட்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது எனலாம்.

http://thaaitamil.com/?p=31797

[size=4]கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது சரியா இல்லை தவறா என்பது பற்றிய பல காடுரைகள் இந்தக்களத்தில் இணைக்கப்பட்டு இருந்தன.[/size]

[size=4]இந்தியாவின் நெறிப்படுத்தலுக்கு இணங்க கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்தியா அரசு கோடிக்கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
[/size]

[size=4]இந்த குற்றச்சாட்டை யார் முன்வைக்கின்றனர்? எந்த ஆதாரங்களுடன் முன் வைக்கின்றனர்? [/size]

[size=4]கிடைத்துள்ள பெறுபேறுகள் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு பலவேறு நெருக்கடிகள் மத்தியிலும் வாக்களித்து தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்கள். [/size]

இங்கேயுள்ள அனைத்துலகத் தொடர்புகம் தன்னைத் தானே தனிமைப்படுத்துகின்ற வேலைகளை வெகு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது.

மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுத்துப் பழகுங்கள் முதலில்.

இங்கேயுள்ள அனைத்துலகத் தொடர்புகம் தன்னைத் தானே தனிமைப்படுத்துகின்ற வேலைகளை வெகு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது.

மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுத்துப் பழகுங்கள் முதலில்.

[size=4]இணைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் யார் அந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் என இல்லையே? [/size]

உங்களுக்கு எனக்கோ தெரியாதா, இவைகள் எல்லாம் எங்கே இருந்து வருகின்றன என்று?

உங்களுக்கு எனக்கோ தெரியாதா, இவைகள் எல்லாம் எங்கே இருந்து வருகின்றன என்று?

[size=4]அப்படி நாமும் சொன்னால் அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.