Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாத்திரிகர்கள் மீதான தாக்குதலினால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் க்கு வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri_Lankan_Airlines_seithy150.jpg

[size=4]இந்தியாவின் தஞ்சாவூரில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் கொழும்பிலிருந்து திருச்சிக்கு விமான மூலம் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. இதனால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் லங்கா ஆகிய விமானக் கம்பனிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றன.[/size]

[size=4]இக்கம்பனிகள் திருச்சிக்கான தமது விமான சேவையை மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டிருந்த வேளையில் இலங்கை யாத்திரிகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றின் வருமானம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.[/size]

[size=4]ஈழ யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொள்ளும் சிங்கள யாத்திரிகர்கள் முதலில் கொழும்பிலிருந்து திருச்சிக்கு பயணமாகினர். இவர்கள் பின்னர் திருச்சியிலிருந்து பௌத்த தலங்களான புத்தகாயா, சர்னாத் ஆகிய பகுதிகளுக்கும் பயணித்தனர். இப்பயணத்தின்போது இவர்கள் பல இந்துக் கோவில்களையும் தரிசித்துச் சென்றனர். இப்போது இவர்கள் கொழும்பிலிருந்து திருச்சி செல்லும் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் பயணிக்கின்றனர்.[/size]

[size=4]இதேபோல கொழும்புக்கு வரும் தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்கு செல்கின்றனர். இதனால் இலங்கை சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகால விடுமுறையில் ஸ்ரீலங்கா செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் தொகை

அதிகரிப்பதால் எதோ ஒருவகையில் அந்த நட்டத்தை ஈடு செய்துவிடுவார்கள் :)

[size=4]தொடர்ந்து புறக்கணிப்போம். [/size]

[size=4]ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் இந்த விமான சேவை இந்திய துறையில் இழைப்பை சந்திப்பது என்பது அதற்கு மரண சாசனமாக அமையலாம். காரணம், இந்தியஉல்லாசத்துறை உல்லாச பிரயாணத்தில் இரண்டாம் இடம் வகிப்பது. [/size]

புலம்பெயர் இடங்களில் சோடை போனாலும் தமிழ்நாட்டில் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தலைவர்களான நெடுமாறன், வைகோ, சீமான்..........முதல் சின்னத் தொண்டர்கள் வரை நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.