Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்க அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது – ரொபட் ஓ பிளேக்.

Featured Replies

இலங்கையின் அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது என்று தெற்காசியாவுக்கான பிரதி அமரிக்கா ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது

2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே நம்பி செயற்படும் அளவில் நடந்துகொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உரிய தரவுகளை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பிளெக்கிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

அத்துடன் தமிழர்கள் என்ற பெயரை பயன்படுத்தி சிங்கள தேசியவாதிகளின் வாக்குகளை கவரும் நடவடிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ரொபட் ஓ பிளெக், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

இதன் கட்டங்களாகவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பிளெக் குறிப்பிட்டுள்ளார்.

http://thaaitamil.com/?p=32300

  • கருத்துக்கள உறவுகள்

பிளேக்.. தயவுசெய்து தோல்வியை ஒத்துக்கொள்ளவும்..! :D

[size=4]நித்திரை கொள்ளுபவன் மாதிரி நடிப்பவனை எழுப்பவது கடினம். [/size]

இங்கே ஒரு அவசியாமன தரவு வெளிவிடப்பட்டிருக்கிறது.

[size=4]2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.[/size]

[size=4]இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே நம்பி செயற்படும் அளவில் நடந்துகொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளனர்.[/size]

இது போர்குற்ற விசாரணைக்கு தேவையான பகுதி. சம்பந்தப்பட்டவர்கள் இதை கட்டாயம் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

இதில் ரொபேட் பிளேக் கோட்டை விட்டதற்கு காரணங்கள் சில

1. இலங்கையில் சிங்கள அரசு ஒப்பந்தங்கள் எழுதி கிழிப்பவர்கள் என அறிந்தும் தனது நிலையை மாற்ற மறுத்தமை. இதனால் வீணே சிறுபான்மை இனம் ஒன்றை தன் கையால் அழித்த கறையை தேடிக்கொண்டார். ஆரம்பத்தில் இருந்த பாதுகாப்புக்களான, புறுகொடவின் இராணுவக்கண்காணிப்பும், பகவதியின் விசாரணைக் குழுவும், இரண்டும் வெளியேற இவர் பிரதான காரணம். இந்த இரண்டு செயல்ப்பாட்டையும் புலிகள் மீது பழியைபோட்டு செய்து முடித்து தமிழ் மக்களை பாதுகாப்பின்றி நடுத் தெருவில் நிற்கவைத்து இலங்கைக்கு அமெரிக்க அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார். இது சரித்திரத்தை அறிந்தும் மறுத்ததால் வந்த வினை.

2.போரில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அமைச்சு, இராஜாங்க அமைச்சை கடந்து இலங்கையுடன் வைத்திருந்த தொடர்புகளை இவர் அறிந்திருக்க வில்லை. இதை வடிவாக விளங்கிக் கொண்ட மகிந்தா நேராகவே தனக்கு பாதுகாப்பு அமைச்சின் கவசம் இருப்பதாகவும், இவர்களை பற்றி தான் சட்டை செய்ய மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இதனால் இவரை கடந்து பாதுகாப்பு அமைச்சு இலங்கைக்கு உதவி இவரை மெலிய ஆள் ஆக்கிவிட்டது.

3.இலங்கையின் இனத்துவேசம்-இடதுசாரி இயக்கம் இரண்டுக்குமிடையிலான உறவை விளங்கத்தக்க சரித்திரத்தை அறிந்திராமை. பிளேக் பதவியேற்ற காலங்களில் JVP பல வெற்றிகளை ஈட்டியிருந்தது. இதன் காரணம் பிறேமதாசாவுக்கு பிறகு JVPக்கு கிடைத்த மூலதனங்களை விமல் இனத்துவேசத்திற்கு பயன் படுத்தியமை. அத்துடன் SLFPயும் தனது வெற்றிகளை தொடர்ந்திருந்தது. இதை, பிளேக், நாடு தூய இடதுசாரித்துவங்களை (சீனா,ரூசியா போன்று) அரவணைப்பதாக கணக்கு போட்டிருந்தார். சிங்கள மக்கள் நினைப்பது தாங்கள் ஏழைகள் என்றும் தமிழர்கள் முதலாளிகள் என்றும். இதனால் அவர்கள் இனத்துவேசம் கதைக்கும் இடதுசாரிகளை, இனத்துவேசம் கதைக்கும் UNP யை விட விரும்புவதுண்டு. ஆனால் பிரதானம் இனத்துவேசம், உண்மையான சோசலிசம் அல்ல. இதை பிழையாக விளங்கியதால் இவர், JVP, SLFP யுடன் தனது உறவுகளை பலப்படுத்தி அவர்களை தூக்கிவிட்டர். இதனால் தான் அறிந்தே எதிர்க்கட்சியான முதளாளித்துவக்கட்சி UNPயை அழிக்கத் துணை போனார். ரணில் பலதவைகள் அமெரிக்கா போயும், புஸ்சை சந்தித்தும் எந்தவிதமான ஆதரவையும் அமெரிக்காவில் பெறவில்லை. ரணிலுக்கு அமெரிக்கவில் உதவாமல் பின்னர் அதீத இடதுசாரியான பொன்சேக்கவை முதன்மைப்படுத்த, அமெரிக்காவிலும் உதவி, இலங்கையில் கூட்டமைப்பு வரையுமபுதவ வைக்க தன் பலப்பிரயோகங்களையும் பாவித்தார். புலிகள்தான் ராசபக்சாவை வெல்ல வைத்தாக கூறி, கூட்டமைப்பை வலிந்து எதிர்க்கட்சிகளுடன் சேர்த்து தேர்தலில் இறக்கி, பொன்சேக்காவுக்கு கிடைத்திருக்க இருந்த சிங்கள அனுதாப வாக்குகளையும் சிதைத்து கடைசி நேரத்தில் சிங்களவரை பொன்சேக்காவுக்கு எதிராக திருப்பினார். எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு பொன்சேக்காவை தேர்தலில் ஆதரித்திருக்க கூடாது. அது மகிந்தாவை ஆதரித்திருந்தால் கட்டாயம் அவர் விழுந்திருப்பார். இப்படி தேவையில்லாமல் தமிழரை எதிர்க்கட்சிக்குள் புகுத்தி இலங்கையில் எதிர்க்கட்சியான UNP அழிக்க சேவைகள் செய்தார்.

4. நாம் கிட்டடியில் பார்த்த டேவிட் குமாரின் ஆய்வுகளில் காணப்படுவது இலங்கையின் 8% வளர்ச்சியின் பெரும்பாகம் கிராமப்புறங்களில் காணப்படுவதென்பதாகும். இதை அவர் ஆலை உற்பத்திக்கரையில் போடவில்லை. இது அமெரிக்க பொருளாதார முதலீடுகள் தற்போதைய வளர்ச்சிக்கு அவசியமில்லை என்பதை காட்டுகிறது. இதைக் கட்டாயம் இலங்கை அரசு தெரிந்து வைத்திருக்கும். இதனால் இவர் தனது அரசியல் செயல்பாடுகளை மட்டும் வைத்து இலங்கையில் முதலிட காத்திருந்துவிட்டார் என்பதை காட்டுகிறது. உண்மையான பொருளாதார அறிஞ்ஞர்களை இவர் இலங்கை பற்றி படித்து தனக்கு அறிவுரை கூற கொண்டுவந்திருக்கவில்லை. அப்படியாயின் இலங்கை இடது பக்கம் போக சந்தர்ப்பம் இருப்பதையும் அமெரிக்க தொழில் துறை முன்னேறங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை எனபதையும் இவருக்கு அவர்கள் நிச்சயம் விளங்க வைத்திருப்பார்கள்.

மொத்ததில் பாதுகாப்பான பதையை தெருவில் இருந்த அம்புக்குறி இவருக்கு தெளிவாகக்காட்டியிருந்தும் (மகிந்தாவால் இந்திய மும்மூர்த்திகள் போன்று இவரும் வாங்க பட்டிருக்கவில்லையாயின்) தனது தான்தோன்றி நடத்தையால் வணடியை மலைச்சரிவின் (cliff) பக்கம் செலுத்தி தன் சரிவைத்தானே தேடினார்.

Edited by மல்லையூரான்

இங்கே ஒரு அவசியாமன தரவு வெளிவிடப்பட்டிருக்கிறது.

இது போர்குற்ற விசாரணைக்கு தேவையான பகுதி. சம்பந்த பட்டவர்கள் இதை கட்டாயம் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறான ஆவணங்களை சேகரித்து பாதுகாக்க வேண்டியது கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசினர் போன்ற சகல தமிழ் மக்களின் பிரதிநிதிகளினதும், பிரதிநிதிகளாக தம்மைக் கருதுபவர்களினதும் முக்கிய கடமைகளில் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.