Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்

Featured Replies

[size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.[/size]

[size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.[/size]

[size=4]இதற்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் போருக்கு முன்பும், போரின் போதும், போருக்குப் பிறகும் (2008 2012) மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிப்பீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவிருக்கும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.[/size]

[size=4]இக்கூட்டத்தின் போது நவம்பர் 1ம் தேதி இலங்கை மீதான குற்றச்சாற்றுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.[/size]

[size=4]இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வெறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கருத்துக்கள், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 46 அறிக்கைகளை ஐ.நா.விடம் அளித்துள்ளன.[/size]

[size=4]இலங்கை அரசும் 30 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையரின் கள அலுவலகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.[/size]

[size=4]இலங்கை அரசு தாக்கல் செய்த அறிக்கையும், தற்போது இலங்கை சென்றுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையக் குழுவிடம் இலங்கை அளித்துள்ள விளக்கமும் ஐ.நாவை திருப்திப்படுத்தவில்லை.[/size]

[size=4]இலங்கை அளித்த அறிக்கையில் பொய்கள் மட்டுமே இருப்பது தான் இதற்கு காரணமாகும். இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வெறு நாடுகளும் வலியுறுத்தி வருவதால்[/size]

[size=4]இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதை தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினும், பெனினும் ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவை என்பதால், இம்முறையும் நடுநிலையாக செயல்பட்டு தீர்ப்பளிக்க முடிவு செய்துள்ளன.[/size]

[size=4]ஆனால், கடந்தமுறை தங்களுக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து,அதை நீர்த்துப் போகச்செய்த இந்தியா, இம்முறையும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை காக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.[/size]

[size=4][size=5]இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவை திரட்டவே இலங்கை அதிபர் இராசபட்சே நாளை மறுநாள் (செப்டம்பர் 18) இந்தியா வருகிறார். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது[/size].[/size]

[size=4]இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.[/size]

[size=4]ஐ.நா. நெருக்கடியிலிருந்து இந்தியாவின் உதவியுடன் தப்பிக்கும் நோக்குடன் இலங்கை விரித்துள்ள வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது. எனவே, இந்தியா வரும் இராஜபட்சவேவை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும். மேலும், இப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.[/size]

[size=4]இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காமல் தடுக்கும் பொறுப்பு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கும் உண்டு.[/size]

[size=5]இதற்கு முன், ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த மத்திய அரசு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்தியதால் தான் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.[/size]

[size=4]அதேபோல், இம்முறையும் இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது, நடுநிலையாக செயல்பட்டு இலங்கைக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி, மத்திய அரசையும்,பிரதமரையும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.[/size]

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=662178&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • தொடங்கியவர்

[size=4]இந்திய வெளியுறவு கொள்கையில் கடந்த ஐ.நா. மனித தொடரில் ஏற்பட்ட மாற்றங்கள்/பிளவுகள் மேலும் பலமாக்கப்பாடல் வேண்டும். அடுத்த மார்ச் மாத தொடரில் ஐ.நா. ஒரு சுயாதீன விசாரணைக்கு வழிகோல தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு ஆதரவு தர வேண்டும். [/size]

[size=1]

[size=4]இந்த விசாரணை ஐ.நா. சர்வசன சுயநிர்ணய வாக்கெடுப்பிற்கு வழி சமைக்கும். [/size][/size]

விசாரணை வருவதன் மூலம் தமிழ் ஈழம் பிறக்குமா? ஏன் என்றால் போர்குற்றம் என்று கூறிப்போட்டு மகிந்தவையும் சில இராணுவ வீரர்களையும் தண்டிப்பதால் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு வராது. ஏன் என்றால் தமிழ் ஈழ போராட்டத்தை முடக்க போர் குற்ற விசாரணையை நடத்தி முடிச்சுப் போட்டு எல்லாம் சரி இனி நீங்களும் சிங்கள மக்களும் சந்தோஷமாக இருங்கோ என்று கூறினால், என்ன செய்வது ??? தமிழ் மக்கள் ஒன்றை மறக்க கூடாது இந்தப் போர் ஆனது விடுதலைப் புலிகள் எதிர் மகிந்த அரசு அல்ல இது தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான போர், ஏப்போது தமிழ் ஈழம் மலர்கிறதோ அல்லது ஆகக் குறைந்து பொலீஸ்,நிலம், வரி வசூலிப்பு, மற்றும் மத்திய அரசுடன் சம்பந்தம் இல்லாத சுய ஆட்சி கிடைத்தால் மட்டுமே த்மைழனுக்க் உண்மையான வெற்றி

  • தொடங்கியவர்

விசாரணை வருவதன் மூலம் தமிழ் ஈழம் பிறக்குமா? ஏன் என்றால் போர்குற்றம் என்று கூறிப்போட்டு மகிந்தவையும் சில இராணுவ வீரர்களையும் தண்டிப்பதால் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு வராது. ஏன் என்றால் தமிழ் ஈழ போராட்டத்தை முடக்க போர் குற்ற விசாரணையை நடத்தி முடிச்சுப் போட்டு எல்லாம் சரி இனி நீங்களும் சிங்கள மக்களும் சந்தோஷமாக இருங்கோ என்று கூறினால், என்ன செய்வது ???

தமிழ் மக்கள் ஒன்றை மறக்க கூடாது இந்தப் போர் ஆனது விடுதலைப் புலிகள் எதிர் மகிந்த அரசு அல்ல இது தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான போர், ஏப்போது தமிழ் ஈழம் மலர்கிறதோ அல்லது ஆகக் குறைந்து பொலீஸ்,நிலம், வரி வசூலிப்பு, மற்றும் மத்திய அரசுடன் சம்பந்தம் இல்லாத சுய ஆட்சி கிடைத்தால் மட்டுமே த்மைழனுக்க் உண்மையான வெற்றி

[size=4]போர்குற்றம் War Crime என்பதில் இருந்து இனவழிப்பு Genocide என்ற நிலைக்கு ஐ.நா. சென்று அதை ஏற்கவேண்டும். [/size]

[size=1][size=4]எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை உலகம் அறியும். தமது நலன்களுக்காக அதை கையில் எடுக்கும்பொழுது அவ்வாறான வாக்கெடுப்பு சாத்தியம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை வருவதன் மூலம் தமிழ் ஈழம் பிறக்குமா? ஏன் என்றால் போர்குற்றம் என்று கூறிப்போட்டு மகிந்தவையும் சில இராணுவ வீரர்களையும் தண்டிப்பதால் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு வராது. ஏன் என்றால் தமிழ் ஈழ போராட்டத்தை முடக்க போர் குற்ற விசாரணையை நடத்தி முடிச்சுப் போட்டு எல்லாம் சரி இனி நீங்களும் சிங்கள மக்களும் சந்தோஷமாக இருங்கோ என்று கூறினால், என்ன செய்வது ??? தமிழ் மக்கள் ஒன்றை மறக்க கூடாது இந்தப் போர் ஆனது விடுதலைப் புலிகள் எதிர் மகிந்த அரசு அல்ல இது தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான போர், ஏப்போது தமிழ் ஈழம் மலர்கிறதோ அல்லது ஆகக் குறைந்து பொலீஸ்,நிலம், வரி வசூலிப்பு, மற்றும் மத்திய அரசுடன் சம்பந்தம் இல்லாத சுய ஆட்சி கிடைத்தால் மட்டுமே த்மைழனுக்க் உண்மையான வெற்றி

மகிந்த தண்டிக்கப்பட்டால் ஜனநாயகம் அங்கு செயற்பாட்டு நிலையில் இல்லை என்பது நிறுவப்பட்டுவிடும்.. அப்படி ஒரு நிலை உருவானால் உறுதியான தீர்வு நிச்சயம்..

[size=4]போர்குற்றம் War Crime என்பதில் இருந்து இனவழிப்பு Genocide என்ற நிலைக்கு ஐ.நா. சென்று அதை ஏற்கவேண்டும். [/size]

[size=1][size=4]எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை உலகம் அறியும். தமது நலன்களுக்காக அதை கையில் எடுக்கும்பொழுது அவ்வாறான வாக்கெடுப்பு சாத்தியம். [/size][/size]

ஆனால், வாக்கெடுப்பு நடத்தினால் வெற்றி கிட்டுமா, நிச்சயமாக ரஸ்ஸியா, சீனா மற்றும் நட்பு நாடுகள் இதற்கு ஆதரவு அளிக்காது, அதே போல் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாக்கெடுப்பு நடத்தினாலும் கிழக்கு மாகாண சிங்கள மற்றும் முஸ்ஸ்லீம்கள் ஒரு போதும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை அதே போல் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கூட நம்க்கு ஏன் இந்த வீண் வம்பு என வாக்களிக்காமல் இருக்கலாம் அல்லது ஒட்டுக் குழுக்களால் தடுக்க/மிரட்டப்படலாம், அப்படி வாக்கலிப்பு வெற்றி பெற்றாலும் சிங்கள இராணுவம் தமிழர் தேசத்தை விட்டு சும்மா வெளிக்கிடுமா. என்னைப் பொறுத்தவரை சர்வதேசம் ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்துவிட்டு அதை சிங்கள தேசம் மீது திணிப்பதே சரியான முடிவாய் இருக்கும், இது தான் யுகொஸ்லாவியாவில் நடந்தது.(இப்போது அது 6 நாடுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது)

ஒவ்வொரு நாட்டின் தீர்வும் வித்தியாசமானதாக இருக்கலாம். எமது தீர்வானது சிக்கல் நிறைந்த ஒன்றாக அமையலாம்.

[size=4]உருசியா, சீனா போன்ற நட்பு நாடுகளையும் தாண்டித்தான் ஐ.நா. தென் சூடானில் சர்வசன வாக்கெடுப்பை நடாத்தின. [/size]

[size=1][size=4]கோசவா இறுதியாக, ஆனால் முழுமையாக சுதந்திரம் இன்னும் அடையாத முன்னாள் யூகோசிலாவியா நாடு. இங்கும் இனத்தால், மொழியால், மதத்தால் ஒன்றுபட்ட உருசியாவின் பலமான ஆதரவையும் தாண்டி மேற்குலகம் அங்கீகரித்துள்ளது. [/size][/size]

[size=5]

இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.

இதற்கு முன், ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த மத்திய அரசு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்தியதால் தான் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

[/size]

[size=5]இந்தியர்கள் - இந்திய அரசு எனப்படுவோர்

* தமிழின விரோதிகள்

* காட்டுமிராண்டிகள்

* மனிதப் படுகொலையாளர்கள்

* பொய்யர்கள்

* போலி ஜனநாயகவாதிகள்

* போலி அகிம்சாவாதிகள்

* போர்க்குற்றவாளிகள்

* பயங்கரவாதிகள்

போன்ற பல உண்மைகள், யதார்த்தங்கள் யாராலும், எங்கும் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]போர்குற்றம் War Crime என்பதில் இருந்து இனவழிப்பு Genocide என்ற நிலைக்கு ஐ.நா. சென்று அதை ஏற்கவேண்டும். [/size]

[size=1][size=4]எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை உலகம் அறியும். தமது நலன்களுக்காக அதை கையில் எடுக்கும்பொழுது அவ்வாறான வாக்கெடுப்பு சாத்தியம். [/size][/size]

War Crime, Genocide இரண்டையும் தனித் தனியாக, சமகாலத்தில் கொண்டு செல்வதே சிறந்தது!

1948 முதல் Genocide தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்து புதிய பிரேரணை கொண்டுவர முயற்சிப்பது தான் நல்லது!

ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற முயற்சிப்பது சிலவேளைகளில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.