Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல்

Featured Replies

ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல் ரிப்போர்ட்!

இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜென்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்!

இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது!

ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ பல நெளிவு சுளிவுகள் தெரிந்திட வேண்டியது அவசியம்!

Online-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D.jpg

இப்போது ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய பல்வேறு அம்சங்களை விரிவாக காண்போமா!

+2 தமிழ் முதல் தாள் – நெடு வினா – 8 மதிப்பெண்கள்:-

கேள்வி: இணைய வணிகம் பற்றிய ஒரு கட்டுரை வரைக!

என்னடா, தமிழ் எக்ஸாமுக்கு(!) பதில் எழுதுவது போல பதிவை, அம்சம் – துவம்சம் என்று டெர்ரராக ஆரம்பித்திருக்கிறான் என பேஜாராகி அப்பீட் ஆகி விடாதீர்கள்! icon_smile.gif முடிந்தவரை ஒரு கட்டுரை ஃபீல் வராமல் பார்த்துக் கொள்கிறேன் icon_biggrin.gif அதே சமயம், நீங்கள் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் – “ஆண் லயன்” அல்லது “பெண் சிங்கம்” ஆக இருந்திடும் பட்சத்தில் பதிவில் காணும் சில எளிமையான விஷயங்களை பார்த்து கோபத்தில் உறும வேண்டாம்!

மாறாக உங்கள் மேலான கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவியுங்கள்! icon_smile.gif ஆன்லைன் எலி முதல் புலி வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்!

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவிகித பேர் இணைய பயனாளர்களாக உள்ளனர் – தோராயமாக பார்த்தால் பனிரெண்டு கோடி பேர்! அமெரிக்க மக்கள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்கு!! அவ்வளவு ஏன் ஜப்பானின் மொத்த மக்கள் தொகையே இவ்வளவுதான்!!!

சரி காலரை இறக்கி விட்டுக் கொள்ளுங்கள் icon_smile.gif ஏன் என்று கேட்கிறீர்களா? நமது இணைய வணிகத்தின் மொத்த மதிப்பை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கணக்கு தலைகீழாக மாறிவிடும்! இருந்தாலும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய வணிக சந்தைகளில், நிச்சயம் இந்தியாவிற்கு முதல் வரிசையில் இடம் உண்டு!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்த இணைய வணிகத் தளங்கள் தற்போது பல நூறு தடவைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு வளர்ந்து நிற்கின்றன!

தினம் தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் முளைத்துக் கொண்டிருக்கிறது! இரயில் / ஃபிளைட் டிக்கெட் புக்கிங் என்று மற்றும் நின்றிடாமல் ஒரு ஃப்ளைட்டையே புக் செய்து வாங்கிடவும் இன்று இணையத்தளங்கள் இருக்கின்றன! – உதாரணம் சொல்லறேன்னு இப்படியா உதார் விடறது? கொஞ்சம் ஓவரா தெரியல? icon_smile.gif

Online-%E0%AE%8E-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.jpg

சரி கொஞ்சம் சிம்பிளாக – காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், ஃபர்னிச்சர்கள் – இப்படி முடிவில்லாததொரு பட்டியல் இது!

ஆனால், இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? இதனை ‘தானாக்களுக்கும்’ டானென்று ஒரே பதில்தான்! இல்லை!

இவற்றில் பல டுபாக்கூர் கம்பெனிகளும் உள்ளன, பல “ரொம்ப நல்லவன்டா” வகை கம்பெனிகளும் உள்ளன.பணம் வாங்கி விட்டு செங்கல்லை பார்சல் செய்து அனுப்பும் மோசடித் தளங்களும் உள்ளன,

அழகிய ஃகிப்ட் ராப்பரில் அலுங்காமல் பொருட்களை அனுப்பும் தளங்களும் உள்ளன! விழிப்பாக இருப்பது உங்களின் பொறுப்பே!

என்னடா இது இவ்வளவு ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடணுமா என்று கேட்பதற்கு முன் கீழ் கண்ட சில நன்மைகளை ஒரு தரம் மனதில் இருத்துங்கள்!

உட்கார்ந்த இடத்தில் இருந்தே உள்ளூரில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை தருவிக்கலாம்! எந்நேரமும் ஷாப்பிங் செய்திடலாம்!

கடைகளில் நேரில் சென்று வாங்குவதை விட பல சமயம் அதே பொருள், அதே தரத்துடன், கிட்டத்தட்ட 10% முதல் 50% வரை குறைவான விலையில் இணையத்தில் கிடைத்திடும்.போனஸாக, பெட்ரோல் செலவும் நேரமும் மிச்சம்

பத்து கடை ஏறி இறங்கி எங்கே விலை குறைவாக இருக்கிறது என மணிக்கணக்கில் நேரம் விரயமாக்கி செய்திடும் ஆராய்ச்சியை பத்தே நிமிடத்தில் தேடுபொறிகள் மூலம் அறிந்திடலாம்

பொருட்களை வாங்கும் முன் அதை பற்றிய மற்றவர்களின் கருத்தினை இணையம் மூலம் அறிந்திடலாம்! வாங்கிய பொருட்களுக்கு நீங்களும் கருத்திட்டு பிறர்க்கு உதவலாம்

கடைகளில் அனைத்து வகை பொருட்களையும் இருப்பில் வைத்திருக்க மாட்டார்கள், இணையத்தில் அப்படி இல்லை. ஒன்றுக்கு பத்து சாய்ஸ்கள் சுலபமாக கிடைத்திடும்.கடைகளில் விற்பனைக்கு வந்திடாத அல்லது வர தாமதமாகிடும் பொருட்களும் இணையத்தில் உடனே கிடைத்திடும்.விரும்பிய பொருளை வாங்கி பிறர்க்கு பரிசாக அனுப்பிடலாம்

பழைய பொருட்களை விற்கலாம், வாங்கலாம்

கிரெடிட் / டெபிட் கார்டு மூலமாக பண பரிமாற்றம் செய்திடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேங்குகள் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் வழங்கிடும் – இவற்றை பணமாகவோ, பரிசாகவோ பெற்றிடலாம்!

சில இணைய வணிக தளங்கள், COD – Cash On Delivery – அதாவது “கையில காசு, வாயில தோசை” முறையில் பொருட்களை அனுப்புகின்றன! இதற்கு நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்திட வேண்டிய அவசியம் இல்லை!

சில தளங்கள் பொருட்கள் பிடிக்காவிடில் திரும்பபெறும் வசதியையும் அளிக்கின்றன!

முக்கியமாக நேரில் சென்று வாங்க கூச்சப்படும் ‘சமாசாரங்களை’ நெளியாமல் வாங்கலாம்! icon_smile.gif

உஹூம்… பர்ஸை நான் வெளியில் எடுப்பதாய் இல்லை, என் லைன் தனி லைன், ஆன்லைன் ஷாப்பிங் எனக்கு சரிப்படாது! என்னதான் இருந்தாலும் நேரில் சென்று, பொருட்களை தொட்டுப் பார்த்து, 360°-யில் சுற்றிப் பார்த்து வாங்குவது போல் வருமா?’ இப்படி அடம் பிடிப்பவர்களா நீங்கள்?!

Online-Marketing-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D.png

சரி, நேரில் கடைகளுக்கு செல்லுங்கள்! நன்றாக தொட்டு, முகர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள், 3D-யில் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள்! வேண்டுமானால் கட்டிப்பிடித்து முத்தம் கூட கொடுத்துக்கொள்ளுங்கள் (விற்பனையாளரை அல்ல!)

ஆனால் வாங்காதீர்கள்! icon_wink.gif உதாரணத்திற்கு மொபைல் வாங்க வேண்டுமானால் பக்கத்தில் உள்ள ஷோரூம் அல்லது மாலுக்கு சென்று பத்து, பதினைந்து மாடல்களை ஆசைதீரப் பார்த்து, பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து, மாடல் நம்பரை மனதில் குறித்துக்கொள்ளுங்கள்!

கடைக்காரர் வாங்க சொல்லி வற்புறுத்தினால், ‘இந்த மொபைல் போன் ‘ஜிங்கிச்சா பிங்க் + கிளிப்பச்சை’ காம்பினேஷன் கலர்ல கிடைக்குமா, என் கேர்ள் பிரெண்ட் அந்த கலர்தான் வேணும்னு அடம் பிடிக்கிறா!’ என்று ஏதாவதொரு மொக்கை காரணம் சொல்லுங்கள்! நிச்சயமாய் இல்லை என்ற பதில் வரும் – உடனே எஸ்கேப் ஆகி விடுங்கள்!

அப்புறம் வீட்டிற்கு வந்து சாவகாசமாய் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்! ஆனால் ஷோரூமில் என்ன விலை என்று கேட்க மறந்து விடாதீர்கள்! சில சமயங்களில் ஆன்லைனை விட குறைவான விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது!

‘அடப்பாவி, இது அநியாயம் இல்லையா?!’ என்கிறீர்களா? என்னைப் பொறுத்தவரை இப்படி செய்வதை பெரும்பாலும் தவிர்க்கிறேன் என்பதுதான் உண்மை –

ஏனெனில் சில ஆன்லைன் ஷாப்கள் மீது அவ்வளவு நம்பிக்கை, மேலும் 360°-யில் சுற்றிப்பார்க்கும் வேலையை இணையத்திலேயே செய்துவிடுகிறேன்!

‘ஆனா ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி அதைப்பத்தின சில விவரங்களை கேக்கணுமே! பக்கத்துக்கு ஷோரூம்க்கு போய் விசாரிச்சுட்டு வாங்காம வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலே! அதே போல நெட்டில் விவரங்களை தேடிப்பார்க்கவும் எனக்கு பொறுமை இல்லை! என்ன செய்வது?!’ -

இது ஒரு பெரிய பிரச்னையே அல்ல! ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பும் தங்களின் கால்சென்டர் முகவரி விவரங்களை அளித்திருப்பார்கள்! எனவே, ஆர்டர் செய்யும் முன் ஆசை தீர மொக்கை போட்டுக்கொள்ளலாம்! பேசுபவரின் குரல் நன்றாக இருக்கிறது என்பதற்காக கடலை போட முயற்சிக்கவேண்டாம்! icon_smile.gif

‘என்னவோ போங்க சார், ஆன்லைன்ல வாங்குனா பொருட்களை கூரியர்லதான அனுப்புவாங்க? சேதாரம் ஜாஸ்தியா இருக்குமே??’ – நிச்சயமாக இல்லை! பெயர்பெற்ற ஆன்லைன் ஷாப்புகளின், பேக்கிங் முறையை பார்த்து வியந்திருக்கிறேன்! அவ்வளவு பக்காவாக இருக்கும்! தெர்மகோல் எல்லாம் வைத்து, அட்டைபெட்டியில், அச்சடித்த முகவரி ஒட்டி, பில் சகிதம் பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள்!

online-shopping-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.jpg

அதுவும், தரமான கூரியர் சர்வீஸ் மூலம்! பொருட்களை அனுப்பியவுடன், கூரியர் நிறுவனத்தின் பெயரையும், ஷிப்மெண்ட் ட்ராக்கிங் நம்பரையும் மெயிலிலோ அல்லது SMS மூலமாகவோ தெரியப்படுத்திவிடுவார்கள்! அப்புறம் என்ன அதை வைத்துக்கொண்டு பொருள் வந்து சேரும்வரை கூரியர் கம்பெனி கால் சென்டரை படாத பாடு படுத்திவிடலாம்! icon_smile.gif

‘என்கிட்டே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையேப்பா! பிரௌசிங் சென்டர்ல போய் ஆர்டர் பண்ணிக்கலாமா?!’ – நிறுத்துங்ங்ங்ங்ங்ககககக!!! மொதவேலையா அந்த கிரெடிட் / டெபிட் கார்டை பர்ஸுல இருந்து வெளிய எடுக்காதீங்க! இது ஒரு மகா மெகா தவறான காரியம்!

பிரௌசிங் சென்டர்களில் இமெயில் செக் பண்ணுவதை கூட தவிர்த்துவிடுங்கள்! ஏன் என்றால், “Key Loggers” மூலம் உங்கள் பாஸ்வோர்ட் பறிபோகும் வாய்ப்பு உள்ளது! அப்படி இருக்க உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு கணினியில் / இன்டர்நெட் கனெக்ஷனில் உபயோகிப்பது அபாயாகரமானது!

அப்படி செய்தால், திடீரென்று ஒரு நாள் உங்கள் கார்டில் 67608/- க்கு, சென்னை GRT தங்க மாளிகையில் செலவழிக்கப்பட்டிருப்பதாக பேங்கிலிருந்து SMS வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அப்புறம் வேறு என்னதான் வழி? பிரௌசிங் சென்டரில் பொருட்களை தேடுங்கள்! எந்த தளத்தில் வாங்குவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

அவர்கள் Cash On Delivery முறையில் பொருட்களை அனுப்பும் பட்சத்தில் தைரியமாக ஆர்டர் செய்யுங்கள்! சில ஆன்லைன் ஷாப்புகளில் தொலைபேசி மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்!

சரி, வாஷிங் பவுடரில் இருந்து வாஷிங் மெஷின் வரை, சட்டியில் இருந்து ஜட்டி வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கவேண்டுமா? – கூடாது! பொதுவாக குறைவான விலையுள்ள பொருட்களின் விலை ஆன்லைனில் வாங்கினால் ரொம்ப அதிகம்! 40W பல்பை கூட ஆன்லைனில்தான் வாங்குவேன் என்று அடம் பிடிக்க கூடாது – பொடி நடையாக பக்கத்துக் கடை சென்று வாங்கவேண்டும்! icon_smile.gif

அதே போல எடையில் குறைவான ஆனால் வெளி அளவில் அதிகமான (உ.ம். Bean Bag!) பொருட்களையும் வாங்குவதை தவிருங்கள்! குரியர் செலவையும் சேர்த்து உங்கள் தலை மேல் கட்டிவிடுவார்கள்! அதே போல நான் அறிந்த வரை மளிகை சாமான்களின் விலையும் ஆன்லைனில் சற்று அதிகமே!

அதே போல நீங்கள் வாங்க விரும்பும் பொருள் உங்களுக்கு உடனடியாக தேவை என்றால், நேரில் சென்றே வாங்கி விடுங்கள்! ஏனென்றால், ஆன்லைன் ஆர்டர் மூலம் வந்து சேர 2 நாள் முதல் (சில சமயம்) 2 வாரம் வரை பிடிக்கலாம்!

லாப்டாப், டெஸ்க்டாப் இல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங்கா?! அப்ப்டியானால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் உபயோகிக்கும் கணினிகளில், தரமான “Anti Virus & Anti Spyware” சாப்ட்வேர்களை நிறுவுவது! அத்தோடு நில்லாமல் அவ்வப்போது Windows மற்றும் Virus/Spyware Definition-களை அப்டேட் செய்வது அவசியம்

(Linux பிரியர்கள் நக்கலாக சிரிப்பது கேட்கிறது!). மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை ஃபுல் ஸ்கேன் செய்து உங்கள் கணினியின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்கை விட, கிரெடிட் கார்டு உபயோகிப்பதே சிறந்தது என சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்!

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் கொஞ்சம் பழமையானவை! அதாவது டெபிட் கார்டு விவரங்கள் களவு போனால் உங்களுடைய சேமிப்பு கணக்கில் இருந்து பணம் சுத்தமாக வழித்து எடுக்கப்படலாம் என்பதே அது! ஆனால், வங்கிகள் வழங்கும் “ஜீரோ பேலன்ஸ் சேவையை” மிகச்சிறந்த முறையில் உபயோகித்து வரும் எங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த பயம் கொஞ்சமும் இல்லை icon_wink.gif

அவர்கள் கூறும் இன்னொரு காரணம் – கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், கார்டின் வகைக்கேற்ப பல இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்கின்றன. மோசடி நடந்தது தெரியவந்து, நீங்கள் உடனடியாக அவர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் களவு போன தொகையை நீங்கள் கட்டி அழத்தேவையில்லை – அது இன்சூரன்ஸ் மூலம் கட்டப்பட்டு விடும்! இப்போது இந்த வசதியை டெபிட் கார்டிலும் பல வங்கிகள் வழங்குகின்றன.

எதற்கும் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டுகளில் இந்த சேவைகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி உறுதிபடுத்தி கொள்ளுங்கள்!

கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ அல்லது நெட்பேங்கிங்கோ – இவற்றில் எதையும் உபயோகப்படுத்தும் முன் கீழ் கண்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்!

நெட் பேங்கிங் (Net Banking):

உங்களுக்கு இந்த வசதி ஏற்கனவே இல்லாத பட்சத்தில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி உங்கள் நெட் பேங்கிங் சேவைக்கான பயனர் கணக்கு மற்றும் தற்காலிக பாஸ்வோர்டை பெற்று, முதல் வேலையாக பாஸ்வோர்டை கடினமான ஒன்றாக மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். இந்த வசதி மூலம் நேரடியாக உங்கள் சேமிப்புக்கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யலாம்! சில வங்கிகள் கூடுதலாக “பாதுகாப்பு கேள்வி / பதில்கள்” மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வசதியையும் அளிக்கின்றன.

online-%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.jpg

இதன் மூலம் உங்களுடைய பாஸ்வோர்ட் பிறர்க்கு எப்படியோ தெரிந்து விட்டாலும், நீங்கள் ஏற்கனவே உள்ளீடு செய்து வைத்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களால் ஒரு பைசாவையும் எடுக்க முடியாது. அதே போல சில வங்கிகள் கார்டின் பின்புறம் சில ரகசிய எண்கள் கொண்ட Grid-ஐ பிரிண்ட் செய்திருக்கும், நீங்கள் பண பரிமாற்றம் செய்யும் போது பாஸ்வோர்ட் மட்டுமன்றி இந்த எண்களும் கைவசம் இருப்பது அவசியம்!

கிரெடிட் / டெபிட் கார்டு பாஸ்வோர்ட்:

சேமிப்பு கணக்கை நெட் பேங்கிங் பாஸ்வோர்ட் மூலம் காப்பது போல, கார்டுகளுக்கும் பாஸ்வோர்ட் வைத்துக்கொள்ளலாம்! உங்களுடையது Visa கார்டாக இருக்கும் பட்சத்தில் Verified by Visa வசதி மூலமும், Master கார்டாக இருக்கும் பட்சத்தில் MasterCard SecureCode மூலமாகவும் பாஸ்வோர்ட் செட் செய்து கொள்ளலாம். முதன் முறை நீங்கள் கார்டை ஆன்லைனில் பயன்படுத்தும் போதே உங்கள் வங்கி இந்த வசதியை உபயோகிக்கச் சொல்லி அதற்கான ஸ்டெப்புகளை விளக்கும்!

விர்ச்சுவல் கீபோர்ட் (Virtual Keyboard):

மேற்கண்டவாறு நீங்கள் செட் செய்த பாஸ்வோர்ட்டை, பண பரிமாற்றம் செய்யும்போது கீபோர்ட் மூலம் டைப் செய்யாமல், ஸ்க்ரீனில் தெரியும் விர்ச்சுவல் கீபோர்ட் மூலம், மௌஸின் துணையுடன் உள்ளீடு செய்யுங்கள்! விர்ச்சுவல் கீபோர்ட் மூலம் அடிக்கப்பட்ட பாஸ்வோர்ட்களை “Key Logger” சாப்ட்வேர்களால் கண்டுபிடிக்க இயலாது!

SMS / Email அலெர்ட்டுகள் (Alerts):

உங்களுடைய இ-மெயில் முகவரியையும், மொபைல் நம்பரையும் பேங்கில் பதிவு செய்து உங்களுக்கு அக்கௌன்ட் யூசேஜ் அலெர்ட் வருமாறு செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய கார்டிலோ அல்லது சேமிப்புக் கணக்கிலோ என்ன transaction நடந்தாலும் அடுத்த சில நொடிகளிலேயே உங்களுக்கு SMS மற்றும் இ-மெயில் மூலம் தெரிந்து விடும்!

வங்கி தொடர்பு எண்கள் / இ-மெயில் முகவரிகள்:

உங்கள் அனுமதியின்றி நடக்கும் transaction-களை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது! அதை உடனே வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்! எனவே வங்கியின் போன் பேங்கிங் நம்பரை உங்கள் போனிலும் மற்றும் உங்கள் கிரெடிட் / டெபிட் / சேவிங்க்ஸ் அக்கௌன்ட் எண்களை உங்கள் நினைவிலும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். ‘நினைவில் ஏன் வைக்க வேண்டும், அந்த எண்கள்தான் கார்டிலேயே பிரிண்ட் ஆகி இருக்குமே?’ என்கிறீர்களா? கார்டோடு சேர்ந்து பர்ஸையும் பறிகொடுத்தால் என்ன செய்வீர்கள்?! உங்களால் அவ்வளவு எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்ற பட்சத்தில் யாரும் அறியாத வண்ணம் ஒரு பேப்பரிலோ அல்லது மொபைலிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அதற்காக “My Citi Bank Credit Card Number: 1234 2345 3456 4567 / Password: anushka143″ என்றெல்லாம் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்துக் கொள்ளக் கூடாது! முடிந்தால் சங்கேத மொழியில் ராணுவ ரகசியம் போல் குறித்துக் கொள்ளுங்கள்! (இதற்கே ஒரு தனிப்பதிவு தேவைப்படும்!) icon_smile.gif

போன் பேங்கிங் (Phone Banking):

அதே போல உங்கள் சேமிப்புக் கணக்கை போன் மூலம் உபயோகிக்க போன் பேங்கிங் PIN நம்பரை செட் செய்ய வேண்டியது அவசியம். இந்த வசதி நீங்கள் போன் மூலம் ஆர்டர் செய்தால் உபயோகப்படும் – இருந்தாலும் இந்த முறை அவ்வளவாக பிரபலமாகவில்லை!.

Online-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg

முன்னர் குறிப்பிட்டது போல், பிரௌசிங் சென்டர்களில் பண பரிமாற்றம் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்! வீட்டில் அல்லது அலுவலகத்தில் உங்களுக்கு பிரத்தியேகமான கணினி இருக்கும் பட்சத்தில் மட்டும் அதை செய்யுங்கள்!. பேங்க் / கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்களை கவனமாக படித்து, அதில் காணும் transaction-கள் யாவும் சரியானவையா என உறுதி செய்து கொள்ளுங்கள்! ஸ்டேட்மென்ட் வரும்வரை காத்திருக்காமல் நெட் பேங்கிங் மூலம் அவ்வப்போது transaction-களின் மேல் ஒரு கண் வைத்திருப்பது அவசியம்.

இந்த பதிவின் நீளம், ரொம்ப அகலமாக ஆகிவிட்டதை தவிர்க்க இயலவில்லை! icon_smile.gif ஆனாலும் இந்த விவரங்கள் யாவும் மிக அவசியம் என்பதாலேயே இத்தனை நீளம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான ஆன்லைன் ஷாப்புகள் இயங்கி வருகின்றன! ஒரு சின்ன பத்துக்கு பத்தடி அறையில் (அல்லது வீட்டிலேயே இருந்து கூட!), ஒரு இ-காமர்ஸ் டொமைன் அல்லது ebay போன்ற தளத்தில் விற்பனையாளர் கணக்கு, ஒரு இன்டர்நெட் கனெக்ஷன், ஒரு போன், ஒரு இ-மெயில் முகவரி இவை இருந்தாலே யார் வேண்டுமானாலும் ஒரு ஆன்லைன் ஷாப் துவங்கி விடலாம் என்பதால் இன்டர்நெட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஆன்லைன் ஷாப்புகள்தான்!

இதற்கிடையில் ஆன் லைன் ஷாப்பிங்க்கில் டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்கை விட, கிரெடிட் கார்டு உபயோகிப்பதே சிறந்தது என சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்!அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் கொஞ்சம் பழமையானவை! அதாவது டெபிட் கார்டு விவரங்கள் களவு போனால் உங்களுடைய சேமிப்பு கணக்கில் இருந்து பணம் சுத்தமாக வழித்து எடுக்கப்படலாம் என்பதே அது! ஆனால், வங்கிகள் வழங்கும் “ஜீரோ பேலன்ஸ் சேவையை” மிகச்சிறந்த முறையில் உபயோகித்து வரும் எங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த பயம் கொஞ்சமும் இல்லை icon_wink.gif

அவர்கள் கூறும் இன்னொரு காரணம் – கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், கார்டின் வகைக்கேற்ப பல இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்கின்றன. மோசடி நடந்தது தெரியவந்து, நீங்கள் உடனடியாக அவர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் களவு போன தொகையை நீங்கள் கட்டி அழத்தேவையில்லை – அது இன்சூரன்ஸ் மூலம் கட்டப்பட்டு விடும்! இப்போது இந்த வசதியை டெபிட் கார்டிலும் பல வங்கிகள் வழங்குகின்றன.

எதற்கும் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டுகளில் இந்த சேவைகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி உறுதிபடுத்தி கொள்ளுங்கள்!

கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ அல்லது நெட்பேங்கிங்கோ – இவற்றில் எதையும் உபயோகப்படுத்தும் முன் கீழ் கண்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்!

நெட் பேங்கிங் (Net Banking):

உங்களுக்கு இந்த வசதி ஏற்கனவே இல்லாத பட்சத்தில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி உங்கள் நெட் பேங்கிங் சேவைக்கான பயனர் கணக்கு மற்றும் தற்காலிக பாஸ்வோர்டை பெற்று, முதல் வேலையாக பாஸ்வோர்டை கடினமான ஒன்றாக மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். இந்த வசதி மூலம் நேரடியாக உங்கள் சேமிப்புக்கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யலாம்! சில வங்கிகள் கூடுதலாக “பாதுகாப்பு கேள்வி / பதில்கள்” மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வசதியையும் அளிக்கின்றன.

நன்றி : கார்த்தி சோமலிங்கா in BLADEPRIDA

http://www.aanthaireporter.com/?p=11170

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை. இணைப்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.