Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னிய முதலீடு: மம்தாவுக்கு முலாயம் திடீர் ஆதரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி:

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி அளித்ததும் ஆகும்.

மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டாலும்,முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசுக்கான ஆதரவை வெளியிலிருந்து தொடர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மம்தாவின் குடைச்சலிலிருந்து மீண்டு ஆசுவாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முலாயம் இன்று திடீர் குண்டை போட்டுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முலாயம் சிங் யாதவ், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மம்தா கட்சி தீர்மானம் கொண்டுவந்தால்,தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.

"மம்தா மதச்சார்பற்றவர்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கான அனுமதியை எதிர்த்து அவர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் அதனை நாங்கள் எதிர்க்கமாட்டோம்.இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட உள்ளோம்.இந்த பிரச்னை தொடர்பாக ஒத்த கருத்துகொண்ட கட்சிகளுடன் பேச உள்ளோம்.மேலும் நாங்களே கூட மேற்கூறிய தீர்மானத்தைக்கொண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக எங்கள் கட்சி எப்போதுமே குரல் கொடுக்கும்.மத்திய அரசுக்கு நாங்கள் தற்போது ஆதரவளிப்பது, மதவாத சக்திகளை விலக்கிவைப்பதற்காகத்தான்.

[size="2"] [/size]

எனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கான அனுமதியை திரும்பப்பெறுமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.இது விஷயத்தில் மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெறும் என நம்புகிறோம்” என்று முலாயம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் குழப்பம்

இந்நிலையில் முலாயமின் இந்த அறிவிப்பினால் காங்கிரஸ் கட்சி சிறிது அதிர்ச்சியும்,குழப்பமும் அடைந்துள்ளபோதிலும்,அரசு கவிழும் அளவுக்கு முலாயம் நடந்துகொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையையும் அதற்கு உள்ளது.

http://news.vikatan.com/?nid=10527#cmt241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.