Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் புதிய போராட்டம்: இம்முறை புலிகள் பெயரில் அல்ல"

Featured Replies

[size=4][size=5]ஈழத்தில் புதிய போராட்டம்: இம்முறை புலிகள் பெயரில் அல்ல"[/size]

இலங்கையில் 33 வருடப் போராட்டம் 2009ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என கேணல் ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய சமாதானப்படையின், உளவுப் பிரிவின் தலைவராக இருந்த கேணல் ஹரிகரன் அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நன்கு அறிந்துவைத்திருக்கும் நபர்களில் ஒருவராவர். பிரபாகரன் அவர்களின் நகர்வுகள் அனைத்தையும் அவர் துல்லியமாக ஆராய்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இந்திய இணையச் செய்தி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் இன்னமும் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.[/size]

66170_284571394980113_1913166535_n.jpg

[size=4]இந் நிலை நீடித்தால், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் வெடிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள கேணல் ஹரிகரன் அவர்கள், இம் முறை புலிகளின் பிற அணிகள் பிறிதொரு பெயரில் போரட்டத்தை ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச நாடுகள் பல விடுதலைப் [/size][size=3]

[size=4]புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுள்ள இவ்வேளை, அப்பெயரைத் தவிர்த்து, சர்வதேச அணுசரனை பெற்று, போராட்டத்தை முன்நகர்த ஒரு அணி தயாராகலாம் என்ற பொருளில் அவர் தனது கருத்தை மறைமுகமாக வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவு, தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் இலங்கையில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனை சமீபத்தில், BBC மற்றும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகள் சிலவும் செய்தியாக வெளியிட்டுள்ளது. முன்நாள் போராளிகள், மற்றும் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் படையில் அங்கம் வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், தமது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இவர்களின் விபரங்களைத் திரட்டிவரும் இராணுவத்தினர், பல பெண்களை மிரட்டி தமது பாலியல் தேவைகளுக்காக அவர்களப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.[/size][/size]

[size=3]

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-tamil-separatism-may-resurface-in-lanka-but-not-ltte/20120924.htm[/size]

[size=3]

[size=5]Do you think there is a chance of the LTTE re-surfacing?[/size][/size][size=3]

[size=5]No, not in the near future. The environment in Sri Lanka and the region in 1983 that helped the growth of Tamil militancy do not exist anymore. Strong international protocol to prevent money-laundering and the transnational spread of terrorism adopted after the 9/11 Al Qaeda strikes in the US are in force now. These make flow of international support to insurgencies very difficult and risky. And lastly, a leader with Prabhakaran's charisma and goal orientation is not in the horizon.[/size][/size][size=3]

[size=5]But the Sri Lanka government's indifference to Tamil sensitivities provides enough opportunities for LTTE remnants abroad to use anti-Sri Lanka feeling among the Tamil diaspora to revive separatism as the first step. And this is what is happening. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு - ஹரிஹரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

25 செப்டம்பர் 2012

lg-share-en.gif

Hariharan_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உயரதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

1987 முதல் 1990ம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது கேணல் ஹரிஹரன் சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுவதற்கு காணப்பட்ட சூழ்நிலை தற்போது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2011ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களின் பின்னர் உலகத் தீவி;ரவாத இயக்கங்கள் தொடர்பிலான அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களைப் போன்று புலிகளினால் மீள இயங்கக் கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ்ப் பிரிவினைவாதம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் உணர்வுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு வாழ் புலி ஆதரவாளர்கள் பயன்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து பிரிவினைவாத முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏதேச்சாதிகாரமான தீர்மானங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலமும் பலவீனமுமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளை இல்லாதொழிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் திடசங்கற்பத்தையும், உலகச் சூழ்நிலையையும் பிரபாகரன் கவனத்திற் கொள்ளாத காரணத்தினால் யுத்தத்தில் தோல்வியைத் தழுவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

300,000 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டமை, வீதிகள் பெருந்தெருக்கள் நிர்மானம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் பாரியளவில் யுத்த வலயத்தில் அரசாங்கம் சேவைகளை ஆற்றி வருpகின்றது.

எனினும், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட சில விடயங்களில் அரசாங்கத்தின் முனைப்பு போதுமானதாக இல்லை.

குறிப்பாக சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொழில் வாய்ப்பு இன்றி அவதியுறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம்

மெய்யான கரிசனையுடன் செயற்பட வேண்டுமென கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சி;னையை பயன்படுத்தி ஜெயலலிதா அரசியல் ரீதியான அனுதாபத்தைப் பெற்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: ரெடிப் தமிழில் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83409/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பெரிய இவரு.. சொல்லிட்டாருப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]2011ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களின் பின்னர் உலகத் தீவி;ரவாத இயக்கங்கள் தொடர்பிலான அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களைப் போன்று புலிகளினால் மீள இயங்கக் கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.[/size]

2001..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.