Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவி நெகும சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் ஒப்புதல்! - அதிகாரங்களைப் பறிக்க அரசாங்கம் குறுக்கு வழி!!

Featured Replies

திவி நெகும சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் ஒப்புதல்! - அதிகாரங்களைப் பறிக்க அரசாங்கம் குறுக்கு வழி!!

மாகாணசபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறிக்கும் திவி நெகும சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மூலம் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் பெற்றுள்ளது.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான நிர்வாகசபை இதுவரை தெரிவு செய்யப்படாத ஒரு நிலையிலேயே, இந்தச் சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், மாகாணசபைகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்த கையுடன் திவி நெகும சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை, வடமாகாண சபையின் ஒப்புதலைப் பெறாமல், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுனரின் ஒப்புதலுடன் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடமாகாண சபையின் ஒப்புதலைப் பெறாமல் சிறிலங்கா அரசாங்கம் இந்தந் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த வாரம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தச் சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் போது அதனை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குமா என்பது குறித்து அக்கட்சியின் சார்பில் அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் திவி நெகும சட்டமூலத்துக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தால் ஒப்புதல் பெறமுடியாது.

அதேவேளை, ஊவா மாகாணசபையில் நேற்று இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வடமேல் மாகாணசபை மற்றும் மேல் மாகாணசபையில் இச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணசபையில் அடுத்த மாதம் 02ஆம் திகதியும், வடமத்திய மாகாணசபையில் அடுத்த மாதம் 03ஆம் திகதியும் இந்தச் சட்டமூலம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=516056ba-c235-44b3-8d54-ef94f4de2dde

பி.கு:மாகாணசபையை மக்களை சந்திரசிறி என்ற தனி நபர் பிரநிதித்துவம் செய்வதை சுப்பீறிம் கோடு அனுமதிக்க கூடாது. இதை தான் பதவி இழக்க முதல் சிறாணி பண்டாரநாயக்கா தடுக்க வேண்டும். இதை 13ம் திருத்ததை செய்த காங்கிரஸ் வரையும் தெரியப்படுத்த வேண்டும்.

[size=4]மகிந்தர் சட்டத்தின் சுய இயங்கு தன்மையை பறிக்கவேண்டும். [/size]

[size=4]தனது சர்வாதிகார பலத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
cartoon(94).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.