Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAஐ பதிவுசெய்ய வலியுறுத்தி TNAயின் அங்கத்துவக் கட்சிகள் சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொதுவான யாப்பின் அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி நீண்டகாலமாக உள்ளார்ந்த கருத்தாடல்களை முன்னர் அதன் அங்கத்துவக் கட்சிகளாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) ஆகியன தங்களுடன் மேற்கொண்டு வந்தமையை நீங்கள் அறிவீர்கள். இதனடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டு தை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டமையும் தாங்கள் அறிந்ததே.

இப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையகம் அங்கத்துவக் கட்சிகளின் ஒப்புதல் கடிதத்தைக் கோரியிருந்தமையும் பதினைந்து மாதங்களாகத் தமிழரசுக்கட்சி அத்தகைய ஒப்புதல் கடிதத்தினை வழங்க தாமதம் செய்ததால் பதிவிற்கான விண்ணப்பம் 2012ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டமையும் தங்களுக்குத் தெரிந்ததே.

எனவே பதிவுத்தொடர்பான கருத்தாடல்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முந்தைய அண்மைய விடயமல்ல என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். தமிழ் மக்களை அதிகபட்சம் ஒற்றுமைப்படுத்தி இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டிய தேவை புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல மடங்கு அவசியமாகின்றது என்பதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

புலிகளுக்குப் பின்னர் காத்திரமான தலைமை எமக்கு இருக்கின்றதா என்று விரக்தியடைந்த மக்களின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தைப் போக்கி, அவர்களுக்கு நம்பிக்கையை வளர்த்து உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது சுமத்தப்பட்டது. அவ்வாறான ஒரு கூட்டமைப்பு அதற்குப் பொருத்தமான கட்டமைப்புக்களுடன் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்தால் மட்டுமே எமது மக்களின் பூரண நம்பிக்கையை பெறவும் சர்வதேசத்துடனான முறையான தொடர்பாடல்களை பேணவும் வளர்த்தெடுக்கவும் முடியும்;. மேலும், எமக்குப் பொருத்தமான தீர்வைநோக்கி செயலாற்றவும் ஏதுவாக இருக்கும்.

ஆனால் நாம் கூட்டமைப்பாகச் செயற்படத் தொடங்கி பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை அவ்வாறான ஒருவடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்பதே யதார்த்தமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதற்கான கட்டமைப்புக்களுடன் கூடிய ஓர் அரசியல் கட்சியாகப் பரிணமித்திருக்குமாயின், நாம் இப்பொழுது முகங்கொடுக்கின்ற பல்வேறு விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கடந்த ஆனி மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரி.யு.எல்.எவ், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் ஒன்றுகூடி கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம். அதன் பிரகாரம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற்கு நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் எதிர்மறையான பதிலையே எம்மால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் சட்டபூர்வமான சிக்கல் இருக்கும் என எமக்குத் தெரிவிக்கப்பட்டபோது பதிவு செய்வதில் தடைகள் இருக்குமென்றால், ஒரு கட்சி தன்னுடைய பெயரையும் யாப்பையும் மாற்றியமைப்பதினூடாக கூட்டமைப்பைப் பதிவு செய்யலாம் என்றும் இதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத பட்சத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது பெயரை மாற்றியமைக்க தனது கட்சியின் அனுமதியைப் பெற்றுத்தரத் தயாராக இருந்ததாக திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார் என்பதை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் நன்மைகருதி நாம் அனைவரும் ஒரே கட்சியாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

இப்பொழுது கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்துவிட்டமையினால் கட்சியாகப் பதிவு செய்யும் வேலையை விரைவாகச் செய்து முடிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் அல்லர். பேச்சுவார்த்தைகளைக் குழப்புபவர்களும் அல்லர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் மக்களுக்கு சகல அதிகாரங்களும் அடங்கிய கௌரவமான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் ஐக்கியப்பட்டிருக்கின்றோம்.

கூட்டமைப்பைப் பதிவு செய்து உறுதியான கட்சியகாகக் கட்டியெழுப்பும் எமது நோக்கமானது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததே தவிர, எந்தவொரு தனிநபர் நலனையோ, கட்சி நலனையோ முன்னிலைப்படுத்தியது அல்ல. நாம் ஒரே கட்சியாகச் செயற்படுதல் என்பது எமது அரசியல் எதிரியான இனவாத அரசிற்கு அச்சமூட்டுவதாக இருக்குமே தவிர, மகிழ்ச்சியூட்டுவதாக இருக்காது.

கூட்;டமைப்பானது ஒரு கட்டமைப்பற்ற ஒரு ஸ்தாபனமாக இருந்தபோதும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவே இருந்தபோதும் உங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழ் மக்களின் தலைவராகவும் கருதியே நாம் செயற்பட்டு வருகின்றோம்;. அதேவேளை, கூட்டமைப்பிற்கான பொருத்தமான வலுவான ஒரு கட்டமைப்பு உங்கள் மூலம் உருவாகும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் அது நடைபெறவில்லை என்பது எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.

நடந்து முடிந்த யுத்தமானது எமது மக்களை எவ்வளவு மோசமாகச் சீரழித்துள்ளது என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. யுத்தத்தில் நொந்துபோன மக்கள் பல்வேறுவிதமான உதவிகளை கூட்டமைப்பினராகிய எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவற்றைச் செவ்வனே செய்வதற்குரிய பொறிமுறை எம்மிடம் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதாயினும் சரி, நொந்துபோன மக்களுக்கு உதவுவதானாலும் சரி எமக்கு ஒரு வலுவான அரசியல் ஸ்தாபனம் தேவை என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நாங்கள் திடமாக நம்புகின்றோம். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு யாப்பு உட்பட அதற்கான சட்டபூர்வமான ஆவணங்களையும் நாம் தயாரித்து வருகின்றோம். தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் இணைந்து இதனை விரைவாகப் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பாக உங்களுடன் கலந்துரையாட பொருத்தமான நேரத்தைக் கூடியவிரைவில் ஒதுக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

இப்படிக்கு என்றும் உங்கள் அன்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள்.

வீ.ஆனந்தசங்கரி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

த.சித்தார்த்தன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கம்

சுரேஷ்.க.பிரேமச்சந்திரன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

http://www.globaltam...IN/article.aspx

[size=3]தினக்குரல் - 30-09-12[/size]

[size=3]tதமிழ்த் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்துவது தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தராது[/size]

[size=3]சுரேஷின் அறிக்கைக்கு மாவை பதில்[/size]

[size=3]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் சம்பந்தனோடும் பேச்சுவார்த்தை நடத்துமாறு சர்வதேச சமூகம் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைப் பலவீனப்படுத்துவது தமிழ்ச் சமூகத்திற்கு நன்மையைத் தராது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா அழுத்தி உரைத்திருக்கிறார்.[/size]

[size=3]தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான ஈழ மக்கள் புரசிகர விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் விடுத்திருந்த அறிக்கைக்கான பதிலாக மாவை சேனாதிராஜா இக்கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவரின் அறிக்கை வருமாறு :- 25.09.2012 திகதியிட்டு இணையத்தளங்களிலும், இலங்கைப் பத்திரிகைக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக்கட்சியினதும் தலைவரான இரா.சம்பந்தனையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அங்கமான இலங்கைத் தமிழரசுக்கட்சியையும் எழுந்த மானமாகத் தாக்கி ஓர் அறிக்கை சுரேஷ் பிரேமச்சந்திரனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.[/size]

[size=3]2002 ஆம் ஆண்டின் பின் குறிப்பாக 2004 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றபல கட்சி இணைந்த கூட்டமைப்பை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பெருமளவில் ஆதரித்தே வந்துள்ளனர். தமிழ் மக்களிடமும், சர்வதேசத்திடமும் அங்கீகாரம் பெற்ற ஜனநாயக அரசியல் அமைப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இயங்கி வருகிறது.

கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகளிருப்பது ஜனநாயக அமைப்பில் ஒன்றும் புதுமையானதல்ல. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினால் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பேச்சாளரான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் பிரேமச்சந்திரன் எம்.பி கூட்டுக்கட்சிகளின் தீர்மானமோ, இணக்கமோ இன்றித் தன்னிச்சையாக கூட்'டமைப்பின் அங்கமான தமிழரசுக்கட்சியையும், தலைவர் சம்பந்தனையும் காரணமுமின்றி அறிக்கை மூலம் வலிந்து திட்டித்தீர்த்திருப்பது இச்சந்தர்ப்பத்தில் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது மட்டுமல்லாமல் ஏனைய முக்கிய விடயங்கள் சம்பந்தமாகவும் தன்னிச்சையாகவே இவர் அறிக்கைகள் வெளியிட்டு வந்துள்ளார். இத்தகைய அறிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்தவுமே உதவும், இந்த அரசாங்கம் இவ்வாறான செயல்களினால் பல எதிர்க்கட்சிகளைச் சிதைத்து வருவது உலகறிந்த உண்மை.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 22.09.2012 இல் வவுனியாவில் நடைபெற்ற பொழுது ஒரு உறுப்பினர் தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்தி எழுப்பிய கேள்விக்கே சம்பந்தன் பதிலளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டுமென்றே அவர் பேசியிருந்தார். பிரேமச்சந்திரனையோ ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியையோ அல்லது வேறெந்த ஒரு கட்சியையுமோ கருத்தில் கொண்டதாக சம்பந்தன் பேச்சு இருக்கவில்லை. ஆனால் எங்கிருந்தோ கசிந்த பத்திரிகைச் செய்தியை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பேச்சாளர் பிரேமச்சந்திரன் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டமை எந்த வகையிலும் பொருத்தமற்றதாகும்.

பிரேமச்சந்திரன் எக்காரணமும் எழாமல் வலிந்து தனது தலையில் போட்டுக்கொண்டு, அதுவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய அரசு சம்பந்தனை அழைத்திருந்த நேரத்திலும், சர்வதேச அரங்கில் இனப்பிரச்சினை முக்கியத்துவம் பெற்று வருகின்ற நிலையிலும் ஏன் இந்த அறிக்கையை பிரேமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார் என்பதே மக்களிடம் எழும் கேள்வியாகும். இந்த வேளையில் மட்டுமல்ல முன்பும் பல தடவைகள் சம்பந்தனின் தலைமைக்கும் எதிராகப் பிரேமச்சந்திரன் பல உண்மைக்கு மாறான அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார். தலைமையைத் தாக்கி அறிக்கையினை வெளியிடுவது தலைமையை மட்டுமல்ல தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்துவதற்கே உதவும்.[/size]

[size=3]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தல் சட்டங்களின் ஒரு கூட்டமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பதில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுதியாக இருந்து வந்துள்ளது. 22-09-2012 இலும் வவுனியா மத்திய செயற்குழுவிலும் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை, பலம் என்பது பற்றியே பேசியிருந்தார். அதுவேகசிந்த செய்தியாகவும் வந்தது.

2011 ஆம் ஆண்டு கூட்டமைப்பாகப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. கூட்டமைப்பில் இடம்பெறும் கட்சிகளிடையே புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று தேர்தல் ஆணையகத்திற்கு வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே ஒரு இணக்கம் ஏற்பட்டிருந்தது. கூட்டமைப்புக்கு என ஒரு உயர்மட்டப்பீடம் அமைப்பது பற்றியம் இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கட்சிகளிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இ.பி.ஆர்.எப். பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அறிவிப்பதற்கும் தமிழரசுக்கட்சியை விடுத்துப் பதிவு செய்வதற்கும் பிரேமச்சந்திரன் எடுத்துவந்த நடவடிக்கைகளையும் நாம் அறிவோம். அவர் வெளியிட்ட அறிக்கையிலும் தமிழரசுக்கட்சியை வேறுபடுத்திவிட்டுத் தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரென்று அறிவிப்பதானமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் செயலாகும்.

2012 மார்ச் 02 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜெனீவா மனித உரிமைப் பேரவை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. அதன் பின்னரும் அவ்விடயத்தில் சம்பந்தனை குற்றம் சுமத்தி ஏன் அறிக்கை விட வேண்டும்? அக்காலத்தில் ஜெனீவா செல்வது பற்றி எதிர்த்தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

இராஜதந்திர அணுகு முறைகளில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஏற்புடையதாக இருப்பதை அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டு சம்பந்தனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான், இலங்கை அரசு பேச்சு நடத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்று வற்புறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. மிக அண்மையிலும் 18.09.2012 அன்று இந்தியா செல்லுமுன் ஜனாதிபதி ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் சம்பந்தன் அவர்களுடன் பேச வேண்டுமென்று அழைத்ததன் பேரில், ஜனாதிபதியைச் சந்தித்த சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்த விடயங்களை அன்று மாலையிலேயே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லியிருந்தார். அவை தொடர்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது யாவரும் அறிந்ததே. அதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு, சம்பந்தனோடு பேசவேண்டுமென சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அழுத்தம் கொடுத்துவரும் வேளையில் அந்தக் கருமத்தில் நாம் எந்த வகையிலும் தவறிழைக்காமல் இராஜதந்திர நோக்கத்தோடு செயற்படுவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இப்படியான நுணுக்கமான இராஜ தந்திரச் செயற்பாடுகளில் எமது தலைவர் தமிழ் மக்கள் சார்பில் ஈடுபட்டு காரியங்களை முன் நகர்த்துவதைப் பொறுக்க முடியாத பேரினவாத அரசாங்கத்தினுடைய சதித்திட்டங்களுக்கு ஆளாகிவிடக்கூடாது. தமிழரின் தலைமையைத் தாக்கிப் பலவீனப்படுத்துவது தமிழருக்கு நன்மை பயக்கும் செயலாக இருக்க முடியாது. இப்படியான செய்கைகளில் பிரேமச்சந்திரன் இனியும் ஈடுபடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற போர்வையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் கேடுவிளைவிக்கும் செய்கைகளுக்காக உபயோகிப்பதை உடன் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

மாவை.சோ.சேனாதிராஜா பா.உ பொதுச்செயலாளர் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[/size]

[size=3]எழுத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.[/size]

Edited by நியானி

[size="5"]வணக்கம் நியானி [/size][size=1]

[size="5"]நன்றிகள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமச்சந்திரன் கூட்டமைப்பைப் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தாரே ஒழிய கூட்டமைபபைப் பிளவுபடுத்துமாறு கேட்க வில்லை.அந்த வேலையைச் செய்வதை விட்டு நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த தமிழரசுக்கட்சிக்கு மாநாடு நடத்துவதுவம் அதனைப் முன்னிலைப்படுத்துவதும் கூட்டமைப்பை; படிப்படியாக அழிப்பதற்கே உதவும்.சம்பந்தர் சிங்கக்கொடியைத் துக்கிப் பிடிக்க தெரியாமல் பிடித்தார் என்று மாவை சமாளிக்க தெரிந்துதான் பிடித்தேன் சம்பந்தர் சொன்னது எல்லோரும் அறிந்த விடயம்.ஆக கூட்டமைப்பை பிளவுபடுத்தும் வேலையை சம்பந்தனும் மாவையுமே செய்கிறார்கள்.சம்பந்தருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சம்பந்தமான வழக்கும் இருக்கிறது.சம்பந்தர் தமிழரசுக்கட்சியின் தலைவரா?தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரா?தமிழர் கூட்டமைப்பின் தலைவரா?என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.தமிழர்களின் தலைவர் என்று சொல்லி சமாளிக்க வேண்டும்.இங்கே சுரேசுக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. இந்தியா இராணுவத்தின் காலத்தில் அவர் பேச்சிய பேச்சுக்கள் தமிழர்கள் நெஞ்சில் இருக்கின்றன.ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை முன்னிறுத்தியே சுரேசின் தற்போதைய நிலைப்பாட்டை வரவேற்கிறேன். அத்துடன் கஜேந்திரகுமார் அணியையும் ஒன்று சேர்த்து பலம் வாய்ந்த கட்டமைப்பாக கூட்டமைப்பை மாற்ற வேண்டும்.அவர்களை வெளியேற்றி கூட்டமைப்பை முதலில் பிளவு படத்தியது சம்பந்தரே.உளறுவாயர் சுமத்திரனக்கு கட்சியில் மக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.ஆக தமிழர் கூட்டமைப்பை தாங்களே பிளவுபடுத்தி விட்டு பழியை சுரேசில் போடுவது ஏற்புடையது அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.