Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!

Featured Replies

இந்த நொடியில், என் மனதில் (04 /10 /12 ) >>>>>

சகோதர தமிழ் தேசிய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவன் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு உடன் முடிவு கட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க ஜனநாயக தமிழ் தேசிய அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும்.

அசாத்திய பொறுமையுடனும், ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு நிகழ்வுகளையும், செய்திகளையும் நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் இனம், குறிப்பாக புதிய தமிழ் இளைய தலைமுறை அவதானித்துக்கொண்டு இருக்கின்றது என்பதை கூட்டமைப்பு அரசியல் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

உள்முரண்பாடுகள் பகிரங்கமாகும்போது முதற்பலி (first Causality) மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். சொல்லொணா அகோர நினைவுகளையும், அவல நிஜங்களையும் சுமந்து வாழும் நமது தமிழ் மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த நம்பிக்கையும் கனவாகுமானால், அது துர்பாக்கியமாகும். அது கோர வன்னி யுத்தம் தந்த வலிக்கு சமாந்திரமானதாகும்.

ஒரு அங்குலமும் இறங்கி வர தயார் இல்லை என்று இனவாத அரசு எக்காளமிடுகிறது. இது கண்முன்னே தெளிவாக தெரியும் இன்றைய நிஜம்.

நமது மக்களை கொத்து, கொத்தாக சாகவிட்டு அதற்கு துணை போன சர்வதேசமும், இப்போதுதான் தாமதமாக விழித்து எழுந்து எம்மை சமாதானபடுத்தி கொண்டிருக்கின்றது.

உலக வல்லரசுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முதல் வரிசையில் இருந்தால், தலைமைகள் செயற்படாவிட்டாலும்கூட, தனது தேவைக்காகவே உலகம் எம்மை தள்ளி அழைத்து சென்று தீர்வுக்கு வழி காட்டிவிடும்.

ஆனாலும், உலக வரைப்படத்தில் நமது விவகாரம் முதலிடத்தில் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதுபற்றி தமிழ் மக்களுக்கு பொய்யான நம்பிக்கைகளை தர முடியாது.

இந்த காரணம் ஒன்றே, தமிழர்களின் அரசியல் தலைமைகள், உலகின் ஏனைய ஒடுக்கப்படும் இன விடுதலை இயக்க தலைமைகளை விட, அதிகமாக, காத்திரமாக, முழுநேரமாக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

காத்திரமான முழு நேர உழைப்புக்கும், ஆளுமைக்கும் எம்மிடம் பஞ்சமில்லை என நான் நம்புகிறேன். எமக்கு தேவையானது எமது உழைப்பையும், ஆளுமையையும் முன்னெடுக்கும் புதிய எழுச்சியுடன்கூடிய ஜனநாயக கட்டமைப்பைகொண்ட இயந்திரம்தான். அதுதான் காலத்தின் தேவை. அதுதான் கட்டமைப்புடன்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

ஆனால், இன்று வானத்தில் பறக்கும் பறவையை பிடிப்பது என்பது விடுத்து, கையில் இருக்கும் பறவையும் நம் கையில் இருந்து பறந்துவிடுமோ என்ற பயம் வந்து விட்டது. புதிய எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற இலக்கை நோக்கி நகர்வது என்பதை விடுத்து, இப்போது கையில் இருக்கும் கட்டமைப்பும் சிதையுமானால், வரலாறு எம்மை மன்னிக்காது.

நாளைய வரலாறு எழுதப்படுவதற்கு முன்னர் இன்றைய நிகழ்காலமே நம்மை கூண்டில் நிறுத்திவிடும். ஏனெனில் காலம் புதிய நவீன தளத்தில் வேகமாக நகர்கிறது. இது நமக்கு புரியாவில்லை என்பதற்காக காலம் நமக்காக காத்திருக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஆளுமையும், அர்ப்பணிப்பும், நேர்மையும், தூரப்பார்வையும், துணிச்சலும் கொண்ட கொண்ட தமிழ் தேசிய இயக்கமாக புத்தெழுச்சி பெற வேண்டும் என்பதுவே, சகோதர தமிழ் தேசிய கட்சியான எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

கூட்டமைப்பு தொடர்பான இந்த முரண்பாட்டு செய்திகள் பல வருட காலமாக நீடித்து, இன்று பகிரங்கமாகியுள்ளன. சகோதர கட்சிகளுக்குள் எழுகின்ற உள்முரண்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதை நிச்சயமாக நானறிவேன்.

ஆனால், இன்றைய முரண்பாட்டு செய்திகள், கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று சொல்லொணா துன்பங்களை இதயம் முழுக்க சுமந்து நிற்கும் தமிழர்களின் தேசிய இருப்பு தொடர்பான விடயமாக மாறி வருகின்றன என்பதை கவலையுடனாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகிறேன். இந்த காரணத்தாலேயே, நான் எனது இந்த நல்லெண்ண கருத்துகளை தெரிவித்துள்ளேன் என்பதை கூட்டமைப்பின் சகோதர தலைவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

கூட்டமைப்பில் இடம்பெறும் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எமது கருத்துகள் அமையவில்லை என்பதை, மக்களை சார்ந்தே நமது கருத்துகள் அமைகின்றன என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன். முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தி கூட்டமைப்பை வலுப்படுத்துங்கள்! இது நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. இந்த மக்கள் குரலையே நான் இங்கு எதிரோலிக்கின்றேன்.

மனோ கணேசன்

தலைவர்

ஜனநாயக மக்கள் முன்னணி

leader@dpflanka.org

from FB

தமிழரிடமிருக்கும் பிளவுகள் எதைக் கொண்டும் அடைக்க முடியாதது. ஒற்றுமைப்படுத்துவதற்கு எவன் முயன்றாலும் ஒற்றுமையாய் நின்று அவனை எதிர்த்து தாமும் அழிவார்கள். நானும் தமிழந்தான்.

கூட்டமைப்பின் பிரிவினை எதிரிகளுக்கே சாதகமானது. இதை உணர்ந்து நடக்கவேண்டியது தமிழரசுக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது. கட்சி நலனா அல்லது தமிழ் மக்கள் நலனா என்பதை முடிவு செய்வது சம்பந்தன் கையில்தான் உள்ளது

Edited by ஊர்பூராயம்

இரண்டாயிரம், மூவாயிரம் சிறு சிறு இணையங்கள் கூட்டமைபை உடைத்து அதில் தாம் வளர முயற்சிக்கின்றன. சம்பந்தர் மாநகர சபை தேர்தலின் பின் இரண்டு கட்சிகளை சேர்த்தார். இப்போது தலைமை போட்டி தாண்டவமாடுகிறது. கூட்டணி கூட்டமைப்புக்குள் வந்ததால் ஆனந்த சங்கரி விட்டு கொடுத்திருக்க வேண்டி எதையும் இன்னமும் விட்டுகொடுக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.