Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி விருப்பம்?

Featured Replies

இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம்

மே 19, 2006

சென்னை:

இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். :lol::D:lol:

முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, அதை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

------------

Thatstamil.com

தமிழனுக்கு என்ன நடக்குது எண்டதே தெரியாத தமிழினதுக்கே தலைவரா...??? (லக்கிலுக் அப்பிடித்தான் சொன்னவர்) வாழ்க...!

முதலில கட்ச்சிக்காறரின் ரௌடிதனத்தை ஒழிக்கிறதாய் சத்தியமும் செய்யட்டும்....!

தமிழனின் தலைவிதி இதுதான்.

இவர் இதுவும் சொல்லுவார் இதுக்கு மேலேயும் சொல்லுவார்.நம்ம முதல்வர்மாருக்கு பிரதமாருடன் ஆலோசனை,தேனீர்,தந்தி,இப்படியா

இவர் இதுவும் சொல்லுவார் இதுக்கு மேலேயும் சொல்லுவார்.நம்ம முதல்வர்மாருக்கு பிரதமாருடன் ஆலோசனை,தேனீர்,தந்தி,இப்படியா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ்நாட்டின் தலைவர், அதுவும் பிரபல்யமான ஊடகங்களுக்கு சொந்தக்காரருக்கு இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்றால் எத்தனை பெரிய புலுடா!!

அரசியலுக்காக ஈழத்தமிழர் வாழ்வை கையில் எடுப்பது என்பது இது நல்ல உதாரணம்!

ஈழத்தமிழருக்காக இவர் கவலைபட்டதே கிடையாது... அவர்களின் இளப்புக்களை புரிந்து கொள்ள யாராவது விளக்கமாக சொல்லவேண்டிய நிலையில்த்தான் இருக்கிறார் உந்த தன்மான தமிழ்தலைவன் எண்று சொல்லிக் கொள்பவர்...! அவரின் இன்னும் ஒரு பக்கம்தான் இது....!

'தேவைப்பட்டால் இலங்கை விடயத்தில் இந்திய அரசை தலையிடக் கோருவோம்' தமிழக முதல்வர்

தேவைப்படும் பட்சத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கத்தை தலையிட வலியுறுத்துவோம் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், அதில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கருணாநிதி அவர்கள், இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியாது என்றும், அது பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்த பிறகே தன்னால் கருத்துக் கூற முடியும் என்றும் பதிலளித்தார்.

முழுமையான நிகழ்வுகளை அறிந்து, தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றும் கருணாநிதி கூறினார்.

மேலேயுள்ளது தான் கலைஞரால் வழங்கப்பட்ட உண்மையான செய்வி. இதில் அவர் தற்போதைய நிலைமைகள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியாது என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுமே தெரியாது என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுமையான தகவல்கள் தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுத் தேர்தலில் முழுமூச்சாக உழைத்தவருக்கு எமது பிரைச்சினையில் முழுவிபரம் அறிவதில் சிரமம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தேர்தலால் வழமையாக குரல் கொடுக்கும் வைகோவும் வாயடைத்திருந்தது மட்டும் நியாயமானது. தற்போதுதானே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பொறுத்திருந்து பார்த்து எமது கருத்துக்களை முன் வைப்பதே நல்லது.

நல்லா சொன்னீங்க வசம்பு ஆனா கலைஞர் ஈழ தமிழ் மக்கள் இறப்பது தனக்கு தெரியாது என்பதும்.... ( அவர்கள் இறப்பது உண்மையா...??) அப்பிடி ஏதும் எண்றால் மத்திய தலைமை அமைச்சருடன் பேசுறாராம்.... அப்பிடி எண்றால் இதுவரை ஈழத்தமிழ் மக்கள் கஸ்ரப்படுவது கலைஞருக்கு தெரியாது ஆகவேதான் இதுவரை அவர் மத்திய தலைமை அமச்சருடன் பேசவில்லை.... (பச்சையாக சொன்னால் முக்கியமான விடயமாக ஈழத்தவர் இல்லை.. அவர்களால் வருமானம் கிடையாது)

தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர் எண்டு சொல்லிக்கொள்ளும் ஒருவரின் கருத்துக்காக சும்மா சப்பைக்கட்டு கட்டாதயும்...

மதிமுக ஆட்சிமண்றகுழு தீர்மானம் நிறைவேற்றியது வசம்புக்கு தெரியாதப்பா... :lol:

http://thatstamil.oneindia.in/news/2006/05...5/17/vaiko.html

தலா

ஏதாவது எழுத வேண்டும் என்று நீர் எழுதுவது போல் நான் எழுதவில்லை. நீர் சொல்வது போல் சப்பைக்கட்டு கட்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை. மதிமுக எப்போது தீர்மானம் நிறைவேற்றியது தேர்தலின் பின் தானே?? தேர்தல் நடைபெற முன்னரோ அல்லது தேர்தலின் போதோ இலங்கையில் படுகொலைகள் நடைபெறவில்லையா?? அப்போது நெடுமாறன் குரல் கொடுத்தது போல் வைகோவால் ஏன் குரல் கொடுக்க முடியவில்லை. அதனைத்தான் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதைக் கூட உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் வைகோவினால் தீர்மானம் மட்டுமே தற்போது நிறைவேற்ற முடியும். ஆனால் முன்பு போல் மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்த முடியுமா என்பதும் எனி வரும் காலங்களில்த் தான் தெரியும்.

எங்கு கலைஞர் சொல்லியுள்ளார் இலங்கையில் மக்கள் இறப்பது தனக்கொன்றும் தெரியாதென்று?? அவர் சொல்வதை உமது விரும்பம் போல் எல்லாம் திரிபுபடுத்துவதால் ஒரு பிரயோசனமுமில்லை. தற்போது முதலமைச்சர் பொறுப்பேற்றதும் அவருக்கு அங்குள்ள அழுத்தங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?? நளினியின் சகோதரி தயாரித்த படத்திற்கு கதைவசனம் எழுதியதற்கே கலைஞர் தான் முழு உதவியும் அவர்களுக்குச் செய்ததாக ஜெயலலிதா ஜெயா தொலைக்காட்சியில் கலைஞரின் கைமாறு

கலைஞர் வந்துதான் ஈழதமிழன் வாழவைக்கவேணும் எண்டு புலம்பும் கூட்டத்தில சேந்துட்டீரோ...???

இவ்வளவுகாலமும் செய்யாதவர் இனித்தான் செய்வார் எண்டெல்லாம் நீர் மட்டும் உமது மண்டைக்கு மட்டும்தான் சிந்திக்க தோணும்.... இது வரை ஈழத்தவனுக்கு என்ன நடந்ததௌ எண்டு தெரியாதவன் இனி தெரிந்து கொண்டு ( முதியோர் வகுப்புக்கு போய்) பிளேன் பிடிச்சு டில்லி போய் மத்திய தலைமை அமைச்சருடன் பேசுவாராமில்ல...!

கேக்கிறவன் கேணயன் எண்டால் கேப்பையில தேன் வளியுமாம்... அதுமாதிரி நீர் சொல்ல நம்பும் உம்மைச் சேர்ந்த கூட்டத்துக்கு மட்டும் சொல்லும் நம்புவார்கள்... !

40 நாளில் ஒருதடைவை குரல் குடுக்க வில்லை வைகோ என்று சொல்லும் நீர் உமது கலைஞர் மக்களின் இளப்பிற்காய் இதுவரை என்ன செய்தார் கடைசியாக எப்போ செய்தார் என்பது ஞாபகத்தில் இருக்கிறதா...???? எங்களின் பிரச்சினையை பாராளுமண்றம் வரை கொண்டு போன மத்திய அரசாங்கத்தின் (கொள்கைவகுப்பாளரின்) மாற்றத்துக்கு காரணமானவர் வைகோ என்பது தெரியாத பாமரன் தான் நீர்..

சப்பைக்கட்டு கட்டி நிகழ்கால ஜதார்த்தம் புரியாமல் புலம்புறீர்... இனித்தான் கலைஞரின் கஸ்ரகாலமே காங்கிரஸ்காறன் வைக்கிறான் ஆப்பு தெரியாமல் புலம்பாதையும்....

கலைஞர் எம்மவர்களுக்குச் செய்ததையும் அதனால் அவர் பட்ட துன்பங்களையும் உம் போன்றவர்களால் இலகுவாக மறந்து விட்டு எதையும் எழுதலாம் தான். அது உம் போன்றவர்களுக்கு கை வந்த கலை தான்.

கலைஞர் ஒன்றுமே செய்ய மாட்டாரென்றால் ஏன் அதைப் பற்றி விவாதித்து பக்கங்களை வீணடிக்கின்றீர்கள்??

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

¸¨Ä»÷ ¯¾Å¢ ¦ºö¡Ţð¼¡Öõ, ¯Àò¾¢Ãõ ¦ºöÂÁ¡ð¼¡÷ ±ýÚ ¿¢¨É츢§Èý. þЧŠ´Õ ¦Àâ ¯¾Å¢ «øÄÅ¡?

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

ஏன் காங்கிரஸ் இதுவரைக்கும் கலைஞருக்கு ஆப்பு வைத்ததே இல்லையா? அரசியல் தெரியாதவர்கள் கதைக்ககூடிய கதை இது. :lol:

ரஜீவ் காந்தி, சிறுபான்மை அரசான சந்திரசேகரின் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று சொல்லி, அரியனை ஏற்றிவிட்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கலைந்திருக்கிறது என்று சொல்லி, கலைஞரின் ஆட்சியை கலைத்துவிட்டு, பின்னர் சந்திர சேகருக்கு கொடுத்த ஆதரவையும்மீளப்பெற்று, அவரது ஆட்சியையும் பெரும்பாண்மை இல்லை என்று சொல்லி, வீட்டுக்கு அனுப்பி டபிள் கேம் ஆடியவர், அரசியலை கற்றுக்கொண்டு பேச வாருங்கள், நிறைய பேசலா. :wink:

அப்பு பிருந்தன்

உம் போன்றோர் கலைஞரை எப்படியும் விமர்சிக்க வேண்டுமென்றே கருத்தெழுதுபவர்கள். உம்மிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிச்சயமாக நான் இல்லை.

முதலில் ஆப்பு வைப்பதென்பதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொண்டு கருத்தெழுதப் பாரும். இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். யாருக்கு அரசியல் அறிவு போதாது என்பதை இனி நடப்பவையை வைத்து புரிந்து கொள்ள முயற்சியும்.

அப்பு பிருந்தன்

உம் போன்றோர் கலைஞரை எப்படியும் விமர்சிக்க வேண்டுமென்றே கருத்தெழுதுபவர்கள். உம்மிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிச்சயமாக நான் இல்லை.

முதலில் ஆப்பு வைப்பதென்பதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொண்டு கருத்தெழுதப் பாரும். இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். யாருக்கு அரசியல் அறிவு போதாது என்பதை இனி நடப்பவையை வைத்து புரிந்து கொள்ள முயற்சியும்.

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இது ஆப்பில்லாமல் என்ன?

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோருகிறது

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் பரிசீலனைக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதர்தனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற

காங்கிரஸ் எம் எல் ஏக்களின் தீர்மானம், 39 ஆண்டுகளாக ஆட்சிக்

கட்டிலில் இல்லாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்றும் சுதர்சனம் தெரிவித்தார்.

நன்றி>பிபிசி

பிருந்தன் எழுதியது:

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். இதுதான் நான் ஏழுதியது. நான் மிகத்தெளிவாகவே எழுதியுள்ளேன். குளம்பிப் போயுள்ள உமக்கு எல்லாமே குளப்பமாகத் தான் தெரியும்.

தமிழ்நாட்டுத் தேர்தலின் முன்பிருந்தே ஆட்சியில் பங்கு வேண்டுமென்று குரல் கொடுத்த இளங்கோவன் இறுதியில் மன்னிப்புக் கேட்டதை மறந்து விட்டீரா?? தொகுதிப்பங்கீட்டின் போது 48 இடங்கள் போதாது என்று ஆர்பாட்டம் செய்து தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினார்கள். அது போல் தொகுதிகளை ஒதுக்கிய போதும் செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது. தற்போதைய நிலையில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆதரவை விலக்கினாலும் திமுக ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால் புதுவையில் திமுக ஆதரவை விலக்கினால் காங்கிரஸ் ஆட்சி கவிழும். இதன் எதிர்விளைவுகள் மத்திய ஆட்சியிலும் தொடரும். அதனால் காங்கிரஸ் அடக்கி வாசிக்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அதைவிட சோனியா குழப்பங்களை ஏற்படுத்தி அதிரடி அரசியல் செய்ய விரும்பாதவர். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவால் அவர் பட்ட அவமானங்களும் கலைஞரின் பண்பும் அவரை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் கலைஞருடன் சுமூகமான உறவையே பேண விரும்புகின்றார்.

`ஈழத்தமிழருக்கோ புலிகளுக்கோ தி.மு.க.வும் நானும் எதிரிகளல்ல'

[21 - May - 2006] [Font Size - A - A - A]

-`உரிய வேளையில் தகுந்த நடவடிக்கை'

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ விடுதலைப் புலிகளுக்கோ திராவிட முன்னேற்றக் கழக அரசோ அல்லது தானோ ஒருபோதும் எதிரிகளல்ல என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழ் மக்களின் தலைவருமான மு.கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.

`தினக்குரல்' சிரேஷ்ட செய்தியாளர் எம்.ஏ.எம்.நிலாமுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறு செவ்வியொன்றை வழங்கிய கலைஞர் கருணாநிதி, இலங்கையில் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், அங்கு சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே தனது பெருவிருப்பம் என்று கூறினார்.

இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தேர்தல் சமயம் நான் பிரஸ்தாபிக்கவில்லை, குரல் எழுப்ப வில்லை என்பதற்காக அதனை தவறாகக் கருதிவிடக்கூடாது. ஏனெனில் தமிழகத் தேர்தலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் வேறுபட்ட விடயங்கள். தேர்தல் சமயம் ஈழத் தமிழரின் பிரச்சினையை எமது தி.மு.க. பிரஸ்தாபிக்கவில்லையென்றும் நான் மௌனம் சாதித்தேன் என்றும் குற்றம் சாட்டவேண்டாம்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தி.மு.க. அரசாங்கமோ அல்லது நானோ ஒருபோதும் எதிராளிகள் அல்ல.

விரைவில் புதுடில்லிக்கு நான் செல்கிறேன். அங்கு பிரதமர் உட்பட மத்திய அரசாங்கத்தின் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அச்சந்திப்பின்போது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன். இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விபரத்தை அறிந்துவருகிறேன். விரைவில் உரிய வேளையில் உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு ஒருபோதும் தயங்காது. இந்திய மத்திய அரசாங்கத்தினூடாக இலங்கை அரசின் கவனத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இது ஆப்பில்லாமல் என்ன?

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோருகிறது

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் பரிசீலனைக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதர்தனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற

காங்கிரஸ் எம் எல் ஏக்களின் தீர்மானம், 39 ஆண்டுகளாக ஆட்சிக்

கட்டிலில் இல்லாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்றும் சுதர்சனம் தெரிவித்தார்.

நன்றி>பிபிசி

பிருந்தன்!

எங்கள் நைனாவின் கரெட்டரையே புரிந்து கொள்ளமாட்டேன் என்கின்றீர்களே! அவர் சொன்னது இரும்பினால் செய்யப்பட்ட ஆப்பு! அதை காங்கிரஸ் என்னும் திமுகாவிற்கு வைக்கவில்லையாம்!!

:wink: :P

ஆப்பு பற்றிய டிப்ளோமா முடித்து வந்துள்ள நைனாவை ஏமாற்றவா பார்க்கின்றீர்கள்!! :evil: :evil:

கருணாநிதி கூறியது:

முழுமையான நிகழ்வுகளை அறிந்து தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன்.

உமது பேரறிவிற்கு விளங்கியது:

ஒரு தமிழ்நாட்டின் தலைவர் அதுவும் பிரபல்யமான ஊடகங்களுக்கு சொந்தக்காரருக்கு இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்றால் எத்தனை பெரிய புலுடா!!

சத்தியமாக உமதளவிற்கு எனக்குப் புத்திசாலித்தனம் போதாதப்பா :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். :lol::lol::(

------------

Thatstamil.com

கருணாநிதி கூறியது:

முழுமையான நிகழ்வுகளை அறிந்து தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன்.

தற்ஸ் தமிழ்காரரங்கள் தான் புலுடா!! விடுகின்றாங்கள் என்று பார்த்தால் பிபிசியும் அதே வசனத்தை சொல்லியிருக்கே நைனா!!

இது எல்லாம் அரசியலில் சகஜம் தானே!! நம்ம தமிழ்சிங்கம் ஒரு நாள் சொன்னதையே மற்றநாள் மாத்தி சொல்வதில் 50 வருட அரசியல் வாழ்வில் குறை வைக்கவில்லை பாருங்கோ!!

மற்றது நைனா பத்திரிகைக் காரங்கள் சொல்வதைத் தான் நாம் விவாதிக்கின்றோமே தவிர நாமாக கதை விடுவதில்லை. மேலே சொன்ன மாதிரி தற்ஸ் தமிழ் தான் அதைச் சொல்லியிருக்குது!!

ஆனால் பாருங்கோ கருணாநிதி இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்று உமது அதி புத்திசாலித்தனத்தில் தோன்றிய மாதிரி எந்த ஊடகமும் செய்தி போடவில்லை. :!: :?:

அடடா நீர் உமது பங்கிற்கு புலுடா விட்டீரோ?? சரி :P சரி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ!! அலரிமாளிகையில் தினமும் நடக்கும் கூத்துக்களைப் பற்றி அறியவா மத்தியஅரசின் உதவியைக் கேட்டார்? விளக்க சக்தி குறைவா!! :wink: :P

ஐயா அதிபுத்திசாலி

எங்கே கருணாநிதி இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்டிருக்கின்றார்?? இலங்கை விடயத்தில் இந்தியாவை தலையிட வைப்பதற்காக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதைத் தான் அவர் குறிப்பிட்டார்.

பி.கு: எதற்கும் உமக்கு தமிழை மீண்டும் தெளிவாக விளக்கிச் சொல்ல ஒரு உதவியாளர் வைத்துக் கொள்ளும். இல்லையேல் பாவமப்பா உமக்கு தமிழ்மொழி கற்பித்த ஆசிரியர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நைனா தமிழிலில் கெட்டிக்காரர் தான்.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார்.

------------

Thatstamil.com

என்று சொன்னால் இலங்கை விடயத்தில் தலையிடத் தான் என்று எமக்கு புரியவைத்த நைனாவை வாயர வாழ்த்துகின்றேன்!! :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.