Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

அது அல்ல எமது கேள்வியின் அர்த்தம்...தமிழலை இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று...அதன் செய்திகள் எப்படி தமிழ் அலை நிழற்பதிப்புடன் கலந்தது என்பதுதான் கேள்வி...புரியுதா...அல்லது புரியாத மாதிரி நடிப்பா....!

:evil:  :idea:  :evil:

கலக்கப்படவில்லை. தனியாகவே போட்டப்பட்டு அதில் வந்த சத்தியமூர்த்தி பற்றிய செய்திக்கு பதிலாக தமிழ் அலை நிழற்பதிப்பு செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புத்தி பேதலித்த குஞ்சும் சதிகார குறவர்களும்

ஒரு முட்டையிலிருந்து

ஒன்பது முட்டைகளும்

ஓராயிரம் குஞ்சுகளும்

பொரித்த பின்பே- தாய்க்

கோழிகளுக்கிடையே

சலசலப்பு....

எப்படி?

பருந்துகளிடமிருந்து

பாதுகாப்பதாக சொல்லி

குஞ்சுகளுக்கு

சாயம் பூசியது

பழைய வீட்டுக்கார

~துரைகளின்| தப்பு

இதில் கோழிகளுக்கு

என்ன பிரிவினை?

~குறுணிகளுக்காக| எடுபட்டு

புத்திபேதலித்து போனது

தனிப்பட்ட பலவீனம்

ஒத்துக் கொள்வோம்

அதனால் ~குழம்பும்|

குடியை ருசிக்க நினைக்கிறதே

ஒரு சதிகார குறவர் கூட்டம்

அனுமதிப்போமா இதை?

இது விதியல்ல: சதி

சதியே சதியே

என் செய்யப்போகிறாய்

எம் தமிழர் சாதியை?

எங்கள் குஞ்சுகளை

விடுதலைக்காய்

அடைகாத்த

அரும் பெருஞ்செல்வங்களை

அடகு வைக்க துணிந்ததன்

பின்னணிகள் என்ன?

முழு விடுதலைக்காய்

போராடிவிட்டு

வெண்ணை திரண்டபின்

தாழி உடைத்த கதையாக

குறைப்பிரசவம் காண்பது

என்றும் ரசிக்கத்தக்கதல்ல

தேவைப்பட்டால்

|கருணைக்| கொலையை கூட

அங்கீகரிக்கிறது

நவீன மருத்துவம்

அன்றில் புற்றுநோயை

பரவாது தடுப்பதே

இன்றைய அவசியம்

கூழ் முட்டைகளை

வெட்டிப்புதைப்பதோ

அல்லது

தூக்கி எறிவதோதான்

எமது வழமையும்!

காலம் விரைந்ததை

செய்யும்.

நன்றி - முத்து விஐயராகவன் / தமிழ் நாதம்

உங்கள் கருத்து ஏதும் இருந்தால் எழுதுங்கள்

குருவிகல் நீங்கள் சொன்னது உண்மை தான் எல்லாம் BBC in நடிப்பு தான்

சத்திய மூர்த்தி என்றால் என்ன ஆட்டு முட்டை என்றால் என்ன தமிழ் அலையில் வருவதெல்லாம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்று இங்கு அது தடை செய்யப்பட்டது...அது தங்களுக்கும் தெரியும்....தற்போது அது ஏன் திடீர் என்று முளைத்தது.....!

கேட்ட கேள்வியைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை அதற்குள் நாலு செய்திகளை வாசித்து விளங்கிறதெண்டது.....???! அதுவும் அரசியல்...???!

:twisted: :evil: :roll:

ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்

மறி ஆட்டின் வயிற்றை வெட்டினால் எடுக்கலாம், ஆட்டு முட்டை....ஆனா அடை வைக்க கடகம் சரிவராது....எங்கேயன் இன்னொரு ஆட்டிலதான் வைக்க வேணும்...!

:P :twisted: :lol:

ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்

:twisted:

அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,

நன்றி குருவிகள் ஏதோ உண்மைதான் சொல்லியிருக்கிறியள் எண்டு விளங்குது அது சரி ஏன் ஒரு மறி ஆட்டு முட்டை எடுத்து இன்னொரு மறி ஆட்டிலை வைக்கவேணும்

ஒரு மறி ஆட்டிலை முட்டை எடுத்து அதே மறி ஆட்டிலையே அடைக்கு வைக்கேலாதோ?

:twisted:

அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,

இஞ்சை யாழ்ப்பாணத்திலை கள்ளும் ஆட்டு முட்டையும் தந்துதான் வோட்டு போடேலுமோ இல்லையோ எண்டு கேட்கிறாங்கள் சிங்கப்பூரிலை எப்பிடி?

இதென்ன கேள்வி வயிறை வெட்டினா ஆடு செத்தெல்லே போயிடும்......!எப்படி அதிலையே வைக்கிறது...கொஞ்சம் எண்டாலும் தென்னாலி ராமன் மூளை வேண்டாம்....!

:P :twisted: :lol:

இதென்ன கேள்வி வயிறை வெட்டினா ஆடு செத்தெல்லே போயிடும்......!எப்படி அதிலையே வைக்கிறது...கொஞ்சம் எண்டாலும் தென்னாலி ராமன் மூளை வேண்டாம்....!

:P  :twisted:  :lol:

அப்ப அடுத்த ஆட்டின்ரை வயித்தை வெட்டித்தானே முட்டையை உள்ளை வைப்பியள் அந்த ஆடு சாகாதோ

  • தொடங்கியவர்

கருணாவின் முன்னால் உள்ள தெரிவுகள்.

கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சுவர்னவாகினி தொலைக்காட்சிக்சேவையில் வசங்வாதய என்றொரு நிகழ்ச்சி உண்டு. இது இரவு 9.30 மணியிலிருந்து நடு இரவு தாண்டி ஒரு மணிவரை நீடிப்பதுண்டு. இதில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.அண்மையில் இந்த நிகழ்ச்சியில் யு.எம்.பி.ப்பிரமுகர் ராஜிதசேனாரட்ண கலந்து கொண்டார். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'கடந்த இரண்டு வருடகால சமாதானத்தால் நீங்கள் சாதித்தது என்ன?' என்று அதற்கவர் சொன்னாராம்.வடக்கையும் கிழக்கையும் பிரித்தது தான் என்று.

அதாவது சமாதான காலத்தில் தற்சமயம் கிழக்கில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளைக் கருதியே அவர் இப்படிச் சொன்னாராம். இது முதலாவது.

இண்டாவது அண்மையில் திருகோணமலையில் கிழக்குமக்கள் அமைப்பு என்ற பெயரில் ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாம். இது ஜே.வி.பி.யினுடைய வேலை என்று கூறப்படுகின்றது. அந்தப்பிரசுரத்தில் வந்திருந்த விபரங்களின் ஒருபகுதியின் சாராம்சம் வருமாறு..........இலங்கைத்தீவில் அரச படைகளுடன் தமிழர்கள் யுத்தம் செய்யமுன்பே ஒரு யுத்தம் இருந்தது. அது கிழக்குப்பகுதி தமிழர்களுக்கும் வடக்குப்பகுதி தமிழர்களுக்கும் இடையில் நடந்தது. ஈழப்போர் தொடங்கியபின் அது வெளித்தெரியவில்லை. இப்பொழுது அது வெளியில் வந்துவிட்டது..என்று.

இந்த இரண்டு விசயங்களும் ஒன்றை உணர்த்துகின்றன. அண்மையில் மட்டு-அம்பாறைப்பகுதிகளில் தோன்றியுள்ள பிரச்சினைகளைக் குறித்து கொழும்பு மையச் சிங்களக் கட்சிகள் உள்ளுர் என்ன நினைக்கின்றன என்பதே அது.

அவர்கள் வெளிப்படையாக உத்தியோகபூர்வமாகக் கதைக்கும் போதெல்லாம் கனவான் அரசியலுக்கேயான தொனியுடன் அது புலிகளின் உள்வீட்டுப்பிரச்சினை என்று கூறிவிடுகின்றார்கள். ஆனால்இ உள்ளுர அவர்கள் என்ன விரும்புகின்றார்கள் என்றால்இ இந்தப்பிரச்சினைகள் முற்றி முடிவில் வடக்கும் கிழக்கும் பிரிந்து விடவேண்டும் என்றே. அதாவதுஇ பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுவதுபோல இந்தப்பிரச்சினை என்பதற்குமப்பால் முழு இலங்கைத் தீவினதும் பிரச்சினை என்ற அர்த்தத்தில்.

இதில் முதலில் அவர்கள் ஒன்றைத்தெளிவாகப் புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள். அதாவது இந்தப்பிரச்சினையில் திருகோணமலை மாவட்டம் உள்ளடங்கவில்லை என்பது. இதில் மட்டு-அம்பாறை மாவட்டங்களே சம்பந்தப்படுகின்றன. எனவே இதை முழுக் கிழக்கிற்கும் உள்ள ஒரு பிரச்சினையாகக் காட்டுவதே பிழை. இது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தோன்றியிருக்கும் ஒரு பிரச்சினையே.

மற்றதுஇ இந்தப்பிரச்சினைகளின் இறுதிவிளைவாக வடக்கும் கிழக்கும் பிரியும் ஒரு நிலைவரலாம். அதாவது தமிழர்களின் பலம் உடையும் ஒரு நிலைவரலாம் என்பது அவர்களுடைய விருப்பமும் கனவும் மட்டுமே. யதார்த்தத்தில் அப்படியேதும் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவே.

உடனடியாக சில பின்னடைவுகள்இ தடங்கல்கள்இ உண்டாகலாம்தான். ஆனால்இ நீண்டகால நோக்கில் இது வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் ஒன்றாக வளர்வதற்கான களயதர்த்தம் பலவீனமாய் உள்ளது என்பதே சரி. இது எப்படி என்று பார்ப்போம்.

கிழக்கில் இதற்கு முன்பு பிரதேசவாதத்திற்கு மிகத் தீவிரமாகத் தலைமைதாங்கிய எவருமே அதன்பின் தமிழ்த்தேசிய அரசியலுக்குத் திரும்பிவரமுடிந்ததில்லை. அவர்களுடைய தீவிரபிரதேசவாதம் ஒரு கட்டத்தில் அவர்களை தமிழ் தேசிய அரசியலுக்கு விரோதமான கொழும்புமையக் கட்சிகளுடன் கூட்டுசேர வைத்துவிடுகின்றது. பிரமுகர்கள் கொழும்புமையக்கட்சிகளின் கருவிகளாகமாறி அமைச்சர் பதவிகளையோ அல்லது வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளையோ பெற்றுக்கொண்டு தமிழத்தேசிய அரசியல் அரங்கிலிருந்து மங்கி மறைந்துபோய்விடுகிறார்கள்.

இதுதான் இராசதுரைக்கும் தேவநாயகத்துக்கும் நடந்தது. இப்பொழுது மட்டக்களப்பில் அதிகம் பிரதேசவாதத்தைக் கக்கும் ஒரு அரசியல் பிருமுகர் முன்பு யு.என்.பிப் பிரமுகவராய் இருந்தவர் என்பதே அப்பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

பிரதேசவாதம் எப்பொழுதும் தேசிய ஜக்கியத்தை உடைக்கப் பார்க்கின்றது. பிரதேச வாதமும் தேசிய ஜக்கியமும் ஒன்றாய் இருக்கமுடியாத இரு விவகாரங்கள். இதன் அர்த்தம் ஒரு பலம்வாய்ந்த பிரதேசம் பலம் குன்றிய பிரதேசத்தை விழுங்கலாம் என்பதோ அல்லது அதற்கெதிராக பலம் குன்றிய பிரதேசம் போராடக் கூடாதோ என்பதோ அல்ல.

மாறாக பிரதேசங்களுக்கிடையில் உயர்வுச் சிக்கல் மற்றும் தாழ்வுச்சிக்கல்களின் பிரகாரம் பிரச்சினைகள் தோன்றும்போது அவை சினேக முரண்பாடுகளாய்த்தான் கையாளப்பட வேண்டும். தவிர நிச்சயமாக பகைமுரண்பாடுகளாய் அல்ல. மெய்யான தேசிய ஜக்கியம் என்று வரும்போது பொதுத்தேசிய அக்கறையோடு பரஸ்பரம் விட்டுக் கொடுத்து சில சமயங்களில் சில பிரச்சினைகளை ஒத்திப்போட்டு அல்லது ஆகக்கூடியபட்சம் சகிப்புத்தன்மையோடு நிலைமைகள் கையாளப்பட வேண்டும்.

இதெல்லாம் பிரதேச நலன்கள் பிரதேசவாதமாக மாறாதவரை தான். ஆனால் பிரதேச அபிமானம் பிரதேச வாதமாக விகாரமடையும் ஒரு நிலை வருகின்றது என்றால்இ அங்கே தேசிய ஜக்கியம் கைவிடப்படுகிறது என்றே அர்த்தம். அதாவது தேசியப் பொறுப்புணர்ச்சிஇ தேசியச் சகிப்புத் தன்மைஇ போன்றவை கைவிடப்படுகின்றன என்பதே அர்த்தம்.

எனவேஇ பிரதேசவாதத்திற்கு தலைமைதாங்கும் ஒருவர் தேசிய அரசியல் அரங்கில் அதிககாலம் நின்றுபிடிக்கமுடியாது. அவர் பகைவருடன் கூட்டுச்சேர்வதைத்தவிர வேறுவழியுமிருக்காது.

இப்படிக்கூட்டுச்சேரும் போது அவர் காலப்போக்கில் தேசிய அரசியல் அரங்கிலிருந்து மங்கி மறைந்து போய் விடுவார்.

தற்சமயம் கருணாவின் முன்னாலுள்ள தெரிவுகளும் இத்தகையவைதான்.

சமாதானத்தில் அவரை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ள இனிவரப்போகும் எந்தவொரு அரசாங்கமும் தயக்கம் காட்டும். ஏனெனில் அவரை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்வது என்பது புலிகளை சீண்டக்கூடியது. இது ஒட்டுமொத்த சமாதான முயற்சிகளையே அசைத்துவிடும். புலிகளைப்பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கும் எந்தவொரு அரசாங்கமும் சமாதானத்தை முறிப்பது என்று முடிவெடுத்தாற்தான் கருணாவை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளமுடியும். எனவேஇ கருணாவை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்வதில் இனிவரும் அரசாங்கம் எதற்கும் அடிப்படைப்பிரச்சினைகள் உண்டு.

அதேசமயம் கருணாவால் சண்டையைத்தொடங்கவும் முடியாது. ஏனெனில்இ அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதாயிருந்தால் படைத்துறைப் புவியியல்நோக்கில் பலபிரச்சினைகள் உண்டு.

இது குறித்து இரு கிழமைகளுக்கு முன்பு வீரகேசரி வார இதழில் மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல மீடியாக்காரர் சிவராம் எழுதியிருந்ததை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

வன்னிப் பின்தளத்துடனான தமது தொப்புள்க்கொடி உறவை அறுத்துக்கொண்ட பின்பு மட்டக்களப்பில் ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருப்பதில் இருக்கக்கூடிய வரையறைகளை வைத்துப்பார்க்கும் போது கருணாவுக்குள்ள ஒரே ஒரு தெரிவு அரசபடைகளுடன் நெருங்கிவருவதுதான். இதன்மூலம்தான் பின்தள வசதிகளற்ற அவருடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஓரளவுக்கேனும் தக்கவைக்கமுடியும்.

ஆனால்இ அப்படியொரு முடிவெடுத்தால் அதற்குப்பின் அந்தப்பிரதேசத்தை ஒரு விடுதலைப் பிரதேசதம் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

எனவேஇ சமாதானத்திலும் ஒரு தரப்பாக நிற்கமுடியாது. சண்டைக்கும் திரும்பிச் செல்லமுடியாது. இப்படிப்பார்த்தால் கருணாவின் முன்னால் உள்ள தெரிவுகள் மிகக் குறைவே.

ஒரு புறம் அவர் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் தீவிர பிரதேசவாதம் அவரை தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அதிகம் அந்நியப்பட வைக்கிறது. இன்னொருபுறம் வன்னித் தாய்த்தளத்துடன் தனது தொடர்புகைளத் துண்டித்துவிட்ட ஒரு நிலையில்இ அவருடைய கட்டுப் பாட்டிலிருக்கும் பிரதேசத்தை தக்க வைப்பதற்காக அவர் தமிழ்தேசிய அரசியலுக்கு விரோதமான சக்திகளுடன் கூட்டுச்சேர வேண்டியிருக்கிறது.

எனவேஇ எப்படிப்பார்த்தாலும் அவர் தெரிந்தெடுத்திருக்கும் பாதை அவரை தமிழ்த்தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து தனிமைப்படும் ஓரிடத்துக்கே இட்டுச்செல்லவல்லது.

இந்தநிலையில் தனது இனத்தின் தேசிய அரசியல் தனக்குரிய பாத்திரத்தை இழந்துவரும் ஒருவர்இ தனது பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களிலிருந்து பிரிக்கமுயலும் பெரிய இனமொன்றின் பேராசைகளுக்கு நீண்டகாலம் உதவிக் கொண்டிருக்க முடியாது.

அதாவதுஇ வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு கருணாவை ஒரு கவியாகப்பயன்படுத்துவதில் கொழும்புமையத் தலைமைகளுக்கு அடிப்படை வரையறைகள் உண்டு என்பதே.

நன்றி - நிலாந்தன்,ஈழநாதம் / சூரியன் வெப்தளம்

அப்ப அடுத்த ஆட்டின்ரை வயித்தை வெட்டித்தானே முட்டையை உள்ளை வைப்பியள் அந்த ஆடு சாகாதோ

ஆ...ஆ...சாகாது...முட்டையை எடுக்கிறத்துக்குத்தான் வயிறை வெட்ட வேணும்...உள்ளுக்க வைக்க வெட்டத் தேவையில்லை....! அதை ஒரு மாதிரி உள்ளுக்க நுழைச்சுக் கிழைச்சு தள்ளிடலாம்.....!

அல்லது உடைச்சுப் போட்டு வாய்க்கிள்ள ஊத்த வேண்டியதுதான்....அது வயித்துக்க போகும் தானே...!

:twisted: :P :D

இஞ்சை யாழ்ப்பாணத்திலை கள்ளும் ஆட்டு முட்டையும் தந்துதான் வோட்டு போடேலுமோ இல்லையோ எண்டு கேட்கிறாங்கள் சிங்கப்பூரிலை எப்பிடி?

உங்களை போல ஆட்டு முட்டைக்கும் பவுடர் கள்ளுக்கும் வோட்டு போட்டா எப்படி தமிழ் ஈழம் எங்களுக்கு கிடைக்கும் வல்லை முனி ஐயா

என்ன வல்லை முனி ஐயா சத்தமே இல்லை. பவுடர் கள் முடிஞ்சுட்டுதோ? ஓடிப் போய் சங்ககடையில வாங்கி இரண்டு கரண்டி கரச்சு குடிச்சுட்டு தெம்பா வெள்ளிக்கிழமை போய் வோட்டை போடுங்கோ.

உங்களை போல ஆட்டு முட்டைக்கும் பவுடர் கள்ளுக்கும் வோட்டு போட்டா எப்படி தமிழ் ஈழம் எங்களுக்கு கிடைக்கும் வல்லை முனி ஐயா

சிங்கப்பூரிலை இருந்து சவுண்டு மட்டும் விட்டுக்கொண்டிருந்தால் தமிழீழம் எப்பிடிக் கிடைக்கும் தம்பி

கள்ளையும் ஆட்டு முட்டையையும் வாங்கி ஓட்டுப் போட்டாலும் நான் சரியா வீட்டுக்கு மேலை தான் குத்துவன்

மழைக்கால் இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது பாருங்கோ

பவுடர் கள்ளும் ஆட்டு முட்டையும் டெக்னோலஜி விசயங்கள் தமிழீழம் தேசிய விசயம் ரண்டையும் ஏறுக்குக்கு மாறா கலக்கக்கூடாது

கலந்தா கொஞ்ச நாளிலை தமிழீழம் எங்கை கிடைக்கும் எண்டு கேட்பியள்

என்ன வல்லை முனி ஐயா சத்தமே இல்லை. பவுடர் கள் முடிஞ்சுட்டுதோ? ஓடிப் போய்  சங்ககடையில வாங்கி இரண்டு கரண்டி கரச்சு குடிச்சுட்டு தெம்பா வெள்ளிக்கிழமை போய் வோட்டை போடுங்கோ.

உங்களுக்கு டக்ளசு தார சங்கக்கடை நிவாரணமும் வேணும் தமிழீழமும் வேணுமெண்டால் தேக்கரண்டியிலையென்ன மேசைக்கரண்டியிலையே விலை பேசுவியள் நாங்கள் அப்பிடியே வல்லை முனி சொல்லுத் தவறாது எண்டு தெரியாதோ

டக்கிளசு எங்க உடைச்சு எடுக்கிறவர் உந்த நிவாரணங்கள....அல்லது தியேட்டருக்க பதுக்கினதுகளில உழுத்தது புழுத்தத தள்ளிவிடுறவரோ....அப்படித்தான் இருக்கும் அவரே உழுத்துப் போய்த்தான் கிடக்கார்...உழுத்ததத் திண்டு...!

:P :twisted: :lol:

டக்கிளசு எங்க உடைச்சு எடுக்கிறவர் உந்த நிவாரணங்கள....அல்லது தியேட்டருக்க பதுக்கினதுகளில உழுத்தது புழுத்தத தள்ளிவிடுறவரோ....அப்படித்தான் இருக்கும் அவரே உழுத்துப் போய்த்தான் கிடக்கார்...உழுத்ததத் திண்டு...!

:P  :twisted:  :lol:

அபிவிருத்தியோ அதிகாரமோ எண்டு கேட்க முதலிலை அபிவிருத்தி பிறகு அதை வைச்சு அதிகாரம் எண்டு சொன்ன அரசியல் தீர்க்கதரிசி மாண்புமிகு டக்ளஸ்

பிறகு சனம் நிவாரணம் வாங்கிக்கொண்டு அப்ப அதிகாரம் எண்டு கேட்க அதுதான் உங்களுக்கு மேலை காட்டுறதுக்குப் பெயர்தான் அதிகாரம் எண்டு விளங்கப்படுத்திய மாமேதை

அந்தாளைப்போய் உழுத்துப் போச்செண்டு சொன்னால் சாய்ய்ய் தம்பி அரசியல்ல புழுத்துப் போச்சு

உங்களுக்கு டக்ளசு தார சங்கக்கடை நிவாரணமும் வேணும் தமிழீழமும் வேணுமெண்டால் தேக்கரண்டியிலையென்ன மேசைக்கரண்டியிலையே விலை பேசுவியள் நாங்கள் அப்பிடியே வல்லை முனி சொல்லுத் தவறாது எண்டு தெரியாதோ

பவுடர் கள்ளும் ஆட்டு முட்டையும் நானே கேட்டனான் ஐயா? அது டெக்குனோலஜி எண்டு எனக்கு தெரியும். அதுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? டெக்குனோலஜிக்கும் தமிழீழத்துக்கும் என்ன சம்மந்தம் எண்டு கேக்கிறியள். அது இல்லை எண்டா நீங்க இந்த தளத்தில் இருந்து ஆட்டு முட்டையும் பவுடர் கள்ளையும் பத்தி பேச முடியுமா?

அபிவிருத்தியோ அதிகாரமோ எண்டு கேட்க முதலிலை அபிவிருத்தி பிறகு அதை வைச்சு அதிகாரம் எண்டு சொன்ன அரசியல் தீர்க்கதரிசி மாண்புமிகு டக்ளஸ்

பிறகு சனம் நிவாரணம் வாங்கிக்கொண்டு அப்ப அதிகாரம் எண்டு கேட்க அதுதான் உங்களுக்கு மேலை காட்டுறதுக்குப் பெயர்தான் அதிகாரம் எண்டு விளங்கப்படுத்திய மாமேதை

அந்தாளைப்போய் உழுத்துப் போச்செண்டு சொன்னால் சாய்ய்ய் தம்பி அரசியல்ல புழுத்துப் போச்சு

அப்ப நல்லாத்தான் உழுது உலுத்திருக்கிறார் போல.....!

:twisted: :P :D

டக்கிளசு எங்க உடைச்சு எடுக்கிறவர் உந்த நிவாரணங்கள....அல்லது தியேட்டருக்க பதுக்கினதுகளில உழுத்தது புழுத்தத தள்ளிவிடுறவரோ....அப்படித்தான் இருக்கும் அவரே உழுத்துப் போய்த்தான் கிடக்கார்...உழுத்ததத் திண்டு...!

:P  :twisted:  :lol:

எனக்கு அந்த உளுத்துபோன டக்கசுன்ற சங்க கடை நிவாரணம் இங்க எதுக்கு. குருவி சொன்ன மாதிரி அந்த உளுத்துப் போன நிவாரணத்தை சாப்பிட்டிடு வீட்டுக்கு மேல குத்துங்க ஐயா

உதைத்தான் நான் அப்பவே சொன்னனே உளுத்துப்போன அரிசி திண்டாலும் குத்துறது வீட்டுக்குதான்

கம்பேசுப் பொடியள்தான் விளக்கமாய் சொன்னவங்கள் ஆமி தன்ரை வீட்டை போகவேணுமெண்டா நீங்கள் எங்கடை வீட்டுக்கு குத்துங்கோ எண்டு

உதை சொல்ல சிங்கப்பூரிலை இருந்து நீங்கள் வேணுமே சிங்கப்பூரிலையும் கருவாட்டு ரத்தம் கிடைக்குதோ?

குத்தைக்க கை பத்திரம்...அம்மாவோ ஐயாவோ...2007க்க இன்னுமொருக்கா குத்த வைப்பினம் போலத்தான் கிடக்கு....அப்பையும் குத்தைக் கை வேணும் எல்லே....!

:P :twisted: :lol:

ஐயா குருவி தவறுதலாக வல்லைக்கு எழுதவேண்டியதை உங்களுக்கு எழுதிவிட்டன். மன்னிச்சுங்க ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.