Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

அதெல்லாம் களத்தில சகஜமப்பா...!

:P :twisted: :lol:

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

உதைத்தான் நான் அப்பவே சொன்னனே உளுத்துப்போன அரிசி திண்டாலும் குத்துறது வீட்டுக்குதான்

கம்பேசுப் பொடியள்தான் விளக்கமாய் சொன்னவங்கள் ஆமி தன்ரை வீட்டை போகவேணுமெண்டா நீங்கள் எங்கடை வீட்டுக்கு குத்துங்கோ எண்டு

உதை சொல்ல சிங்கப்பூரிலை இருந்து நீங்கள் வேணுமே சிங்கப்பூரிலையும் கருவாட்டு ரத்தம் கிடைக்குதோ?

ஐயா இங்க கருவாட்டு ரத்தம் கிடைக்காது. ஆனா கொசு எலும்பு சூப்பு கிடைக்கும். உங்க இருந்து கொண்டு கள்ளு அடிச்சுப்போட்டு நாட்டு நிலவரம் தெரியாம இருந்துட்டு கம்பஸ் பெடியள் சொல்லித்தான் வீட்டுக்கு குத்தோணும் எண்டு தெரிஞ்சிருக்குது,

தட்டின கேசுகள்..

:lol: :P :D

சரி மன்னிச்சிட்டன்

நீங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்தா யாருக்குக் குத்துவியள் சங்கரிக்கோ

ஐயா இங்க கருவாட்டு ரத்தம் கிடைக்காது. ஆனா கொசு எலும்பு சூப்பு கிடைக்கும். உங்க இருந்து கொண்டு கள்ளு அடிச்சுப்போட்டு நாட்டு நிலவரம் தெரியாம இருந்துட்டு கம்பஸ் பெடியள் சொல்லித்தான் வீட்டுக்கு குத்தோணும் எண்டு தெரிஞ்சிருக்குது,

இஞ்சை இவரை கொசுவுக்கு எலும்பிருக்காம் ஆனானப்பட்ட சங்கரிக்கே முதுகெலும்பில்லையாம் உந்தச் சின்ன கொசுவுக்கு இருக்குமோ

கம்பஸ் பொடியள் சொல்லித்தான் பொங்குதமிழ் ஊரூராய்க் கொண்டாடினியள் உதைச் சொல்ல உங்களுக்கு அவங்களே தேவைப்பட்டவங்கள் நீங்களாத் தொடங்கியிருக்கலாமே

அதென்ன இடைக்க ஒண்டு 6 அடிபட்ட காயத்தோட நிண்டு குலைக்குது....பயந்திட்டுது போல....சாரப்பாம்போ வேலில எண்டு பாருங்கோ....சரசரப்புக்கு பயந்துதான் குலைக்குது போல....!

:P :twisted: :lol:

சரி மன்னிச்சிட்டன்

நீங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்தா யாருக்குக் குத்துவியள் சங்கரிக்கோ

யாரை யார் மன்னிக்கிறது? கள்ளடிச்சா உப்பிடித்தான் எல்லாம் இரண்டு இரண்டா தெரியும்.

ஒழுங்கா களத்தை பாருங்க முனி.

தட்டின கேசுகள்..

:lol:  :P  :D

உங்கடை நிலமையை நினைச்சுப் பரிதாபப்பட்டுத்தான் மருத்துவம் பகுதியிலை அருமந்த குறிப்பொண்டு போட்டனான்

கருவாட்டு ரத்தமும் கறிவேப்பிலைச்சாறும் கலந்து ஒரு மண்டலம் குடிச்சு வாங்கோ

இப்ப 6 எண்டு காட்டுற தட்டல் அளவு 5 ஆவோ 4 ஆவோ குறையுதோ இல்லையோவெண்டு பாருங்கோ

இஞ்சை இவரை கொசுவுக்கு எலும்பிருக்காம் ஆனானப்பட்ட சங்கரிக்கே முதுகெலும்பில்லையாம் உந்தச் சின்ன கொசுவுக்கு இருக்குமோ

கம்பஸ் பொடியள் சொல்லித்தான் பொங்குதமிழ் ஊரூராய்க் கொண்டாடினியள் உதைச் சொல்ல உங்களுக்கு அவங்களே தேவைப்பட்டவங்கள் நீங்களாத் தொடங்கியிருக்கலாமே

அங்க இருந்தா அந்த வீணாப்போன சங்கரிக்கு யார் குத்துறது. உள்ள கள்ளு கொட்டிலை எல்லாத்தையும் குத்தி தரைமட்டம் ஆக்கோணும்

முனி எண்டா அப்படித்தான்...அது பாவம்...ஆனா முனியப் பாத்து பயந்து ஒண்டு இடையில் குலைச்சுது பயந்திட்டுது போல....! ஓடிட்டுது....!

:P :twisted: :lol:

  • தொடங்கியவர்

பிற மாவட்டத்தவரை வெளியேற்றி பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன

ஜ எழிலோன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 20:33 ஈழம் ஸ

கருணா குழுவால் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல், அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் வேறு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

பிற மாவட்டத்தைச் சேர்ந்தோரை வெளியேற்றி, அவர்களின் சொத்துக்களை கொள்ளையிடும் செயலில் இறங்கியுள்ள கருணா குழுவின் செயற்பாடுகள் கருணா குழு மீதான நடவடிக்கையொன்றிற்கான தேவையை முதனிலைப்படுத்தியுள்ளதாக கொழும்பைச் சேர்ந்த பிரபல்ய விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடித்து வரும் கால கட்டத்தில் சமாதான முயற்சிகளை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை தொடர்பாக சர்வதேச சமூகம் உன்னிப்பான அவதானிப்பை நிச்சயமாக மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனெனில் கருணா குழுவினரின் பிரிவு விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினை என்பதனை ஐப்பான், நோர்வே உள்ளிட்ட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும், குறிப்பாக சிறீலங்காவின் தலைவர்கள் கூட கருணாவின் பிரச்சினையை விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினையே என்று கூறிவருவதையும் நாம் நோக்க வேண்டும் எனவும் மேற்படி விமர்சகர் தெரிவித்தார்.

குறிப்பாக சமாதான காலத்தில் பெருந்தொகையானோரை அகதிகளாக்கிய செயலானது அவர்கள் மீதான தாக்குதலொன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதனை நியாயப்படுத்துவதாகவே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - புதினம்

ஒமோம் எல்லாத்தையும் குத்தோணும் தரமட்டம் ஆக்கோணும் கடைசியிலை ஜனநாயகம் எண்டுவியள்

சங்கரி எங்கை வீணாப் போனவர் காசு வாங்கிக் கொண்டெல்லோ போனவர்

கள்ளடிச்சாலும் நிதானம் தப்பமாட்டுது வல்லை நீங்கள் தான் வெறியிலை இருக்கிறியள் மோகன் யாழ் களத்தைக் கவனிக்கிறதோ முனி கவனிக்கிறதோ என்ன உளர்றியள்

உங்கடை நிலமையை நினைச்சுப் பரிதாபப்பட்டுத்தான் மருத்துவம் பகுதியிலை அருமந்த குறிப்பொண்டு போட்டனான்

கருவாட்டு ரத்தமும் கறிவேப்பிலைச்சாறும் கலந்து ஒரு மண்டலம் குடிச்சு வாங்கோ

இப்ப 6 எண்டு காட்டுற தட்டல் அளவு 5 ஆவோ 4 ஆவோ குறையுதோ இல்லையோவெண்டு பாருங்கோ

விழல் கதை கதைக்காதீங்க முனி ஐயா, கருவாட்டு இரத்தத்தையும் கொசு எலும்பையும் விட்டுட்டு நாட்டு நிலைமை பற்றி கதைப்பம்

பிற மாவட்டத்தவரை வெளியேற்றி பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன  

ஜ எழிலோன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 20:33 ஈழம் ஸ  

கருணா குழுவால் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல், அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் வேறு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.  

 

பிற மாவட்டத்தைச் சேர்ந்தோரை வெளியேற்றி, அவர்களின் சொத்துக்களை கொள்ளையிடும் செயலில் இறங்கியுள்ள கருணா குழுவின் செயற்பாடுகள் கருணா குழு மீதான நடவடிக்கையொன்றிற்கான தேவையை முதனிலைப்படுத்தியுள்ளதாக கொழும்பைச் சேர்ந்த பிரபல்ய விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.  

குறிப்பாக, இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடித்து வரும் கால கட்டத்தில் சமாதான முயற்சிகளை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை தொடர்பாக சர்வதேச சமூகம் உன்னிப்பான அவதானிப்பை நிச்சயமாக மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

ஏனெனில் கருணா குழுவினரின் பிரிவு விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினை என்பதனை ஐப்பான், நோர்வே உள்ளிட்ட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும், குறிப்பாக சிறீலங்காவின் தலைவர்கள் கூட கருணாவின் பிரச்சினையை விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினையே என்று கூறிவருவதையும் நாம் நோக்க வேண்டும் எனவும் மேற்படி விமர்சகர் தெரிவித்தார்.

குறிப்பாக சமாதான காலத்தில் பெருந்தொகையானோரை அகதிகளாக்கிய செயலானது அவர்கள் மீதான தாக்குதலொன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதனை நியாயப்படுத்துவதாகவே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

நன்றி - புதினம்

எரியுற வீட்டிலை புடுங்கிறது லாபமோ பாபமோ அதைச்சொல்லுங்கோ முதலிலை

முனி எண்டா அப்படித்தான்...அது பாவம்...ஆனா முனியப் பாத்து பயந்து ஒண்டு இடையில் குலைச்சுது பயந்திட்டுது போல....! ஓடிட்டுது....!

:P  :twisted:  :lol:

ஐயா குருவி குலைக்கிற நாய் கடிக்காது.

அதை விடுங்க

விழல் கதை கதைக்காதீங்க முனி ஐயா, கருவாட்டு இரத்தத்தையும் கொசு எலும்பையும் விட்டுட்டு நாட்டு நிலைமை பற்றி கதைப்பம்

அததுகளோட அததுதான் கதைக்க வேணும் யாழ் ஓசை(Jaffna voice)...அப்பதான் அதுகளுக்கு விளங்கி விலத்தி நிக்குங்கள்...அல்லது கண்டபடி குலைச்சுக் கொண்டு நிக்குங்கள்...!

:twisted: :P :lol:

விழல் கதை கதைக்காதீங்க முனி ஐயா, கருவாட்டு இரத்தத்தையும் கொசு எலும்பையும் விட்டுட்டு நாட்டு நிலைமை பற்றி கதைப்பம்

கொசு எலும்பு அளவு கூட முதுகெலும்பில்லாத சங்கரியும் கருவாட்டிலை ரத்தமிருக்கெண்டு சனத்தை பேய்க்காட்டுற டக்ளசும் எலக்ஷனிலை போட்டியிடினம் உதைவிட வேறை என்ன நாட்டு நிலமை

சரி கஷ்டப்பட்டு கேட்கிறியள் நாட்டு நிலைமை பற்றி சொல்லுறன்

உந்தக் கருணாவுக்கு மூளை பிசகீட்டுதாம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மையோ

இருக்கும்...அப்ப உங்கட மருத்துவக் குறிப்ப தொப்பிக்கலைக்கு AP ஊடாக அனுப்புவமே....!

:P :twisted: :lol:

  • தொடங்கியவர்

மட்டு-அம்பாறை மக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை!

அரசியல்துறை

தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழம்

31-03-04

அன்பார்ந்த மட்டு-அம்பாறை மாவட்ட மக்களே!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் ஒழுக்காற்று நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்ட்ட கருணா என்ற தனிநபர் தனது இருப்பினை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக மட்டு-அம்பாறை விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பலவிதமான அறிக்கைகளை வெளியிடுவதோடு தனது தவறான நடத்தைக்கு ஆதரவளிக்க மறுக்கும் மக்களது சொத்துக்களை சூறையாடுதல், அச்சுறுத்தல், வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுதல் போன்ற அராஐக நடவடிக்கைகளைத் தனது அடியாட்கள், மாற்றுக்குழுக்கள், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் ஆகியோரின் துணையுடன் மேற்கொண்டு வருகின்றார். எனவே,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உத்தியோகப10ர்வமாக வெளியேற்றப்பட்ட கருணாவினால் வெளியிடப்படும். அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள,; அறிவித்தல்கள், ஆகியவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

இக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நிதிப்பறிப்பு, பொருட்கள் சூறையாடல், வீடுகள் சொத்துக்கள,; அபகரிப்பு என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தால் தேசவிரோத செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.

எனவே மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே! இக்குழுவினால் விடுவிக்கப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டாம்.

இக்குழுவினால் நேரடியாகவும், வேறு பொது நிறுவனங்கள் என்ற பெயரிலும் வெளியிடப்படும் அச்சுறுத்தல்கள், அறிவுறுத்;தல்களுக்கு நிர்ப்பந்தப்பட்டுக் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டாம்.

இக்குழுவினரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சி மட்டு-அம்பாறையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள உங்கள் அயலவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாக வாழ உற்சாகமளியுங்கள.

நன்றி - தமிழ் நாதம்

  • தொடங்கியவர்

எரியுற வீட்டிலை புடுங்கிறது லாபமோ பாபமோ அதைச்சொல்லுங்கோ முதலிலை

நிச்சயமாக அது தவறாக செயல், இப்போது செய்வதும் சரி முன்பு செய்ததும் சரி இரண்டுமே தவறானது,

அததுகளோட அததுதான் கதைக்க வேணும் யாழ் ஓசை(Jaffna voice)...அப்பதான் அதுகளுக்கு விளங்கி விலத்தி நிக்குங்கள்...அல்லது கண்டபடி குலைச்சுக் கொண்டு நிக்குங்கள்...!

:twisted: :P :lol:

அப்ப தமிழோசையை பீ.பி.சியிட்டையும் யாழோசையை இவரிட்டையும் விட்டாச்சோ

அப்ப voice of america மதிவதனனோ

  • தொடங்கியவர்

பிரதமர் ரணில் - ஐனாதிபதி சந்திரிகா

ஒரு கற்பனைச் சந்திப்பு

-வாசகன் ரட்ணதுரை-

ஐனாதிபதி தென்கொரியா பற்றிய, பிபிசி செய்தியை ரிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் தென்கொரிய ஐனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது. அதனை ஐனாதிபதியின் ஆதரவாளர்களான எதிர்க்கட்சியினர் எதிர்த்துக் குரல்கொடுகின்றனர்.

அப்போது அரசாங்கக் கட்சியின் சார்பான சபாநாயகர், ஐனாதிபதியின் கட்சியினரை வெளியேற்றுமாறு பணிக்கின்றார். ஒவ்வொருவராக சபையின் காவலர்கள் வந்து ஐனாதிபதியின் கட்சியின் அங்கத்தவர்களை இழுத்துக்கொண்டு வெளியேற்றுகின்றனர். இறுதியில் ஐனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேணை மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படுகின்றது.

சபையில் மிஞ்சியிருந்த இரு ஐனாதிபதியின் ஆதரவாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக வாக்குப் போடுகின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரிய பிரதமர் காபாந்து ஐனாதிபதியாகப் பதவியேற்று அமைச்சரவைக் கூட்டுகின்றார்.

சந்திரிகா: அட இந்த ரணில் இந்த மாதிரி என்னைப் பதவியிலிருந்து து}க்கியெறிந்திருக்கலாம். முட்டாள்.. சோம்பேறி..

செயலாளர்: மேடம் பிரதமர் ரணில் வாறார்..

(உடனே சந்திரிகா ரிவியை நிற்பாட்டுகிறார்)

ரணில்: என்ன ரிவியை நிற்பாட்டிவிட்டிர்.

சந்திரிகா: இல்லை.. கதைக்கேக்கை ஏன் இடைஞ்சல் என்றுதான்..

ரணில்: எனக்குத் தெரியும் அதிலை தென்கொரிய செய்தியைப் பார்த்திருப்பீர் அப்செட்டாகிப் போயிருப்பீர்..

சந்திரிகா: அதெல்லாம் ஒன்றுமில்லை.. அந்த ஐனாதிபதி என்னை யோசணை கேட்டிருக்கவேண்டும்.. பிழைவிட்டுட்டார்.

ரணில்: ஐனாதிபதி மீதான நம்பிக்யையில்லாத் தீர்மானம் கொண்டுவர முன் பாராளுமன்றத்தைக் கலைக்கச் சொல்லி ஆலோசணை சொல்லியிருப்பீர்.

சந்திரிகா: சரியாச் சொன்னீர். சூடுபட்டது மறக்கேல்லைபோல..

ரணில்: போன தடவை நான் விட்ட தவறை இம்முறை விடப் போறேல்லை.

சந்திரிகா: என்ன அது?

ரணில்: இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடனேயே உங்கள் மீதான குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிப் போடுவன்.

சந்திரிகா: அப்படியென்றால் நான் மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்துப் போடுவேன்.

ரணில்: அதுதான் முடியாதே! ஒரு வருடத்திற்குப் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதே!

சந்திரிகா: இவ்விரண்டு மாதத்திற்குத்தான் என்னால் ஒத்திவைக்க முடியுமே. ஒரு வருடத்திற்கு அவ்வாறு ஒத்திவைத்துவிட்டு மீளவும் பாராளுமன்றத்தைக் கலைப்பதா பெரிய காரியம். அதுசரி ஏதோ அடுத்த பாராளுமன்றத்தை நீங்கள்தான் அமைப்பதுபோல் பேசுகிறீர்கள்..

ரணில்: ஏன் ஐனாதிபதி ஒழிக என்று மக்கள் கோசம் போடுவது கேட்கவி;ல்லையா?

சந்திரிகா: அதனாலைதான் சொல்லுறன் எனக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று?

ரணில்: எப்படி?

சந்திரிகா: ஐனாதிபதி முறையை பத்து மாதத்தில் ஒழிப்பேன் என்று சொல்லியிருக்கிறனல்லோ?

ரணில்: போன வருடமும் அப்படிச் சொல்லித்தானே தேர்தல் கேட்டனீங்கள்.

சந்திரிகா: அதாலைதான் போன தடவையும் எனக்கு வாக்குகள் கணிசமாய் கிடைத்தது. ஒரு இடத்தாலை தானே நீர் அதிகம் வென்றீர்.

ரணில்: அதுக்கென்ன?

சந்திரிகா: இப்ப புரியுதோ ஐனாதிபதியை வெறுக்கிற சனம், ஐனாதிபதியை ஒழிய வேண்டும் என்று சொல்லுகிற சனம் என்ன செய்யும்.

ரணில்: எனக்கு வாக்குப் போடும்.

சந்திரிகா: அதுதான் இல்லை ஐனாதிபதியை ஒழிக்கிறம் என்று சொல்லுகிறவைக்குத்தான் போடும்.

ரணில்: அதாலை..

சந்திரிகா: பத்து மாதத்திலை ஐனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொல்லும் எனக்கும்தான் வாக்குப் போடும்..

ரணில்: விளங்கேல்லை..

சந்திரிகா: ஐனாதிபதியை ஒழிக்க ஐனாதிபதியின் கட்சிக்கு வாக்குப் போடப்போயினம்.

ரணில்: அதெப்படி ஐனாதிபதியை ஒழிக்க, ஐனாதிபதிக்கு வாக்குப் போடுறது. நடக்கிற காரியமா?

சந்திரிகா: ஏன் நடக்காது.. முன்னயை தேர்தலில் சமாதானத்திற்கான யுத்தம் என்று சொன்னபோது வாக்குப் போட்டவைதானே! அதென்ன சமாதானம் பிறகென்ன யுத்தம் என்று யாராவது கேள்வி கேட்டவையே?

ரணில்: இந்தமுறை அதெல்லாம் சரிவராது. சமாதானத்திற்கு மட்டும் தான் வாக்குக் கிடைக்கும்.

சந்திரிகா: போன தடவை பாராளுமன்றத்தில் உமக்கு என்னை விட ஒரு இடம்தான் அதிகம் கிடைத்தது என்பதை மறந்து போடாதையும். அப்பவும் நீர் சமாதானம் என்று சொல்லித்தான் வாக்குக் கேட்டனீர்.

ரணில்: ஆனால் இந்தமுறை அப்படியில்லை.

சந்திரிகா: அதுதானில்லை.. சிங்களச் சனத்திலை இரண்டு விதமான சனமும் இருக்கு. சமாதானத்தை விரும்பிற சனமும் இருக்கு. தமிழரையும் புலிகளையும் வெறுக்கிற சனமும் இருக்கு.

ரணில்: இரண்டு பேரையும் ஒரே நேரத்திலை திருப்தி செய்ய முடியாதே?

சந்திரிகா: ஏன் முடியாது. நான் முன்னைய தேர்தலில் என்ன செய்தனான்? முதல் தேர்தலிலை சமாதானத்திற்கான யுத்தம் என்று, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் ஒரே நேரத்திலை ஆதரித்துப் பேசினன். அடுத்த தேர்தலிலை. எனது கட்சிக்குள் நான் சமாதானத்தை ஆதரித்துப் பேச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமசிங்கவை தமிழருக்கு எதிராய் - புலிகளுக்கு எதிராய் பேசவைத்தன்.

ரணில்: உண்மைதான் - அந்த மனிசனும் வஞ்சகமில்லாமல், தமிழரை வேர், மரம், செடி, கொடி என்றெல்லாம் கேவலமாய் பேசினார்.

சந்திரிகா: அதாலை இரு தரப்பு வாக்குகளையும் நான் பெற்றுக்கொண்டன்.

ரணில்: இந்தத் தடவை உங்கடை கட்சி ஒட்டுமொத்தமாக சமாதானத்தைப் பற்றித் தானே பேசுகினம்.

சந்திரிகா: அங்கைதான் நீர் தவறுவிட்டிட்டிர். நான் இந்த முறை சமாதானத்தை வலியுறுத்திப் பேசினாலும், நான் கூட்டணி அமைத்த Nஐ.வி.பி. புலிகளை எதிர்த்தல்லே பேசுகினம்.

ரணில்: ஓ!..

சந்திரிகா: புரியுதே முதல் தேர்தலிலை, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் பேசினன். இரண்டாவது தேர்தலிலை, எனது கட்சியில் நான் சமாதானத்தைப் பேச, பிரதமர் யுத்தத்தைப் பேசினார். இம்முறை Nஐ.வி.பி. இப்ப புலிகளையும் தமிழரையும் எதிர்த்து பேசும். நான் சமாதானத்தையும் பேச்சுவார்த்தையையும் அமைதியையும் பேசுவன். இரு தரப்பு சிங்களச் சனமும் எனக்கு வாக்குப் போடும்.

ரணில்: அதுதான் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனீரோ?

சந்திரிகா: (ஹா ஹா சிரிப்பு) இப்பத்தான் உமக்கு அரசியல் புரியுது. எப்படி எனது கெட்டித்தனம். புலிகளுடன் நிபந்தனையில்லாமல் பேசுவன் என்று - ஒரு தேர்தல் விஞ்ஞாபனம், நிபந்தனையோடை பேச்சு இல்லாவிட்டால் சண்டை என்ற ரீதியில் இன்னொரு விஞ்ஞாபனம்..

ரணில்: அதுசரி! அப்ப தேர்தலிலை வென்றால் என்ன - சண்டை பிடிப்பீரோ? சமாதானமாய்ப் போவீரோ?

சந்திரிகா: நானென்ன, நீரென்ன, யார் இனி ஆட்சிக்கு வந்தாலும், இனிமேல் புலிகளோடை சண்டை பிடிக்கேலாது. அதுதான் இன்றைய இலங்கையின் யதர்த்த நிலை.

ரணில்: அப்படியென்றால் உடனை சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கவல்லோ வேணும்..

சந்திரிகா: அதுக்கென்ன கஸ்டம்.

ரணில்: Nஐ.வி.பி. அதற்குச் சம்மதிக்குமோ?

சந்திரிகா: Nஐ.பி.சி சம்மதிக்கா விட்டால், அவை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டியதுதான்.

ரணில்: Nஐ.வி.பி வெளியேறினால் பாராளுமன்றில் யார் உமக்கு ஆதரவு தரப்போகிறார்கள்.

சந்திரிகா: ஏன் தமிழக் கட்சிகள் இல்லையே?

ரணில்: யாரைச் சொல்கிறீர் டக்ளசையோ?

சந்திரிகா: சீ தமிழ்க் கூட்டமைப்பை.

ரணில்: அவை ஏன் உமக்கு ஆதரவு தரப்போகினம்?

சந்திரிகா: போன வருசம், ரவ10ப் ஹக்கீம் உம்மோடை பிரச்சினைப்பட்டு - தான் அரசாங்கத்திற்கு தாற ஆதரவை விலக்கப் போவதாகச் சொன்னபோது, தமிழ்க் கூட்டமைப்பு என்ன சொன்னது?

ரணில்: அவருக்குப் பதிலாய் தாங்கள் எனக்கு ஆதரவு தாறமெண்டவை.

சந்திரிகா: ஏன்?

ரணில்: சமாதான நடவடிக்கைகள் இடையில் குழம்பக் கூடாது என்றபடியால், அரசாங்கம் விழாமல் இருக்கத் தாங்கள் ஹக்கீமிற்குப் பதிலாக ஆதரவு தாறமெண்டவை.

சந்திரிகா: ஆ.. இப்ப புரியுதே! சமாதான நடவடிக்கையை நான் ஆரம்பித்து, அதனாலை Nஐ.வி.பி என்னை விட்டுப் போனால், அந்த இடத்தை உடனை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரப்பும்? புரியுதே?

ரணில்: சரி,. நீர் போடுற நிபந்தனைகளைப் பார்த்துப் புலிகள் பேச்சுக்கு வர மறுத்தால்..

சந்திரிகா: ஏன்? என்ன நிபந்தனை நான் போட்டனான்?

ரணில்: புலிகளோடை மட்டுமல்ல எல்லாத் தரப்போடையும் பேசுவம் என்டெல்லே கதிர்காமர் சொல்லியிருக்கிறார்.

சந்திரிகா: நீர் தவறாய் புரிந்துகொண்டிர். நாங்கள் அப்படிச் சொல்லேல்லை. புலிகளோடை பேசுவம். மற்றத் தரப்போடு கலந்தாலோசிப்போம் என்றுதான் சொன்னனாங்கள்..

ரணில்: எவ்வளவு காலத்திற்கு ஆலோசணை நடத்திக்கொண்டிருப்பீர்கள்..

சந்திரிகா: நீர் எப்படி இரு வருடமாய் ஆலோசணை மட்டும் புலிகளோடை நடத்திக்கொண்டிருந்தீர். அப்படித்தான் நானும் அடுத்த தேர்தல் வரை காலம் கடத்துவன்.

ரணில்: நீர் ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தல் வர ஐந்து வருடம் ஆகும். அதுவரை காலம் கடத்தேலுமே? நானே ஒரு வருடத்திற்கு மேல் காலம் கடத்தேலாமல் கஸ்டப்பட்டன். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் தப்பினன்.

சந்திரிகா: என்ன?

ரணில்: புலிகளோடை இனிமேல் காலங்கடத்தேலாது. அவர்கள் நல்லவர்கள். ஆனால் முட்டாள்களல்ல. அவர்கள் இடைக்கால வரைபை தந்து என்னை பொறியிலை மாட்டிப் போட்டாங்கள். அதுவும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து அதைத் தயாரித்தார்கள். அதனாலை, அதை அவர்கள் தயாரிக்கவில்லை - சர்வதேச நாடுகள்தான் தயாரித்தது என்ற ஒரு மாயையையும் அவர்கள் உருவாக்கிக்போட்டார்கள். அதனாலை அதை நான் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பட்ட கஸ்டம் எனக்கெல்லோ தெரியும். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் நான் கொஞ்சம் மூச்சுவிடக் கூடியதாய் இருக்கு.

சந்திரிகா: என்ன சொல்லுறீர்.

ரணில்: நான் இப்ப இஞ்சை வந்ததே உம்மை தேர்தலிலை வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தத்தான். நிச்சயமாய் நீர்தான் வெல்வீர். நான் வாரன்..

சந்திரிகா: எங்கை போறீர்?

ரணில்: கதிர்காமத்தானை வேண்டப் போறன். நான் தோற்கவேணுமென்று. நான் வாரன்.

சந்திரிகா: நானும் கதிர்காமத்தானை - சீ, கதிர்காமரைத் தான் கேட்கவேணும். (தொலைபேசியில்) ஹலோ கதிர்காமர்..

கதிர்காமர்: என்ன மேடம்?

சந்திரிகா: இந்தமுறை நாங்கள் தேர்தலிலை வெல்லுவமே?

கதிர்காமர்: பயப்படாதையுங்கோ Nஐ.வி.பி இருக்கு, நாம்தான் வெல்லுவம்.

சந்திரிகா: ஐயோ! வேண்டாம் நாங்கள் தோற்கவேணும்.

கதிர்காமர்: பயப்படாதையுங்கோ அனுரா இருக்கிறார். நாங்கள்தான் தோற்பம்.

நன்றி: ஈழமுரசு / தமிழ் நாதம்

இருக்கும்...அப்ப உங்கட மருத்துவக் குறிப்ப தொப்பிக்கலைக்கு AP ஊடாக அனுப்புவமே....!

:P  :twisted:  :lol:

ஏப் எண்டா மனிசக் குரங்கெல்லோ அதிலை இருந்துதானே எயிட்ஸ் வந்தது அப்ப அதை கருணாவிட்டை அனுப்பலாம்

அவரென்ன தொப்பிக்கலையிறாரோ ஆர்ற தொப்பிக்கு

அவையவையா எடுத்துக் கொண்டு திரியினம் நாம் என்ன செய்ய முடியும்...பாப்பம் உங்கட மருத்துவக் குறிப்பு வேலை செய்யுதோ எண்டு....!

:P :twisted: :lol:

புலியின்ர தொப்பிக்குத்தான்...இவர் கருணா தன் வாயால தானே ஊதின ஊதலில அது பறந்தெல்லே போட்டுது.....!

:P :twisted: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.