Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

தேர்தல் முடிஞ்சு 3 நாள். இன்னும் பிரச்சாரம் நடக்குது..

:) :P :D

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேர்தல் முடிஞ்சு 3 நாள். இன்னும் பிரச்சாரம் நடக்குது..

:) :P :D

என்ன சொல்கிறீங்க தாத்ஸ்? புரியலையே?

என்ன சொல்கிறீங்க தாத்ஸ்? புரியலையே?

சங்கரியோ தோல்வியை ஒப்புக்கொண்டு சிரிக்கத்தொடங்கீட்டுது.. ஈபீயும் ஒண்டோடை சந்தொஷப்படுது.. மட்டக்களப்பிலையும் எப்பவுமில்லாத அளவிலை 4 பேர் வெற்றி..

அப்பிடியிருக்க இன்னும் அழுவுறாங்கள்.. அதைத்தான் சொன்னேன்..

:D :P :D

  • தொடங்கியவர்

சங்கரியோ தோல்வியை ஒப்புக்கொண்டு சிரிக்கத்தொடங்கீட்டுது.. ஈபீயும் ஒண்டோடை சந்தொஷப்படுது.. மட்டக்களப்பிலையும் எப்பவுமில்லாத அளவிலை 4 பேர் வெற்றி..

அப்பிடியிருக்க இன்னும் அழுவுறாங்கள்.. அதைத்தான் சொன்னேன்..

:D :P :D

4 பேர் வெற்றி பெற்றாலும் அவர்கள் கருணாவின் கட்டளையின் கீழ்தான் செயல்படுவார்கள் போல் இருக்கின்றது. ஜோசப் பரராஜசிங்கம் வெற்றிபெறாதது அவர்களுக்கு இழப்புதான்.

கிங்ஸ்லி கருணா குழுவினரால் சுட்டுக்கொலை.

  • தொடங்கியவர்

கிங்ஸ்லி கருணா குழுவினரால் சுட்டுக்கொலை.

எப்போஓஓஓஒ? எங்கே செய்தி பார்த்தீர்கள் ?

ஐயோ fatheraiyaa....!

:evil: :roll: :?:

  • தொடங்கியவர்
இது எங்கே போய் முடியபோகுதோ

கருணா முடிய எல்லாம் முடியும்...உது அநியாயம்...மனிதத்தை துப்பாக்கியால சுட்டதுக்குச் சமன்....ஓ ஓ....!

:evil: :roll:

http://www.tamilwebradio.com ல் போட்டிருக்கு. ஆனால் முழுமையான செய்தி கிடைக்கவில்லை.

இந்த செய்தியை நண்பர் ஒருவரும் சொன்னார்.

4 பேர் வெற்றி பெற்றாலும் அவர்கள் கருணாவின் கட்டளையின் கீழ்தான் செயல்படுவார்கள் போல் இருக்கின்றது. ஜோசப் பரராஜசிங்கம் வெற்றிபெறாதது அவர்களுக்கு இழப்புதான்.

மட்டக்களப்புவாழ் மக்களதான் அதை தீர்மானித்தார்கள்..

தனக்கு மட்டக்களப்பில் முழுஆதரவு இருப்பதாகக்கூறி வீட்டிலிருந்து பேட்டிகொடுத்ததை கேட்டேன்.. அப்படியிருக்க நான்காவது இடத்தைக்கூட பிடிக்கமுடியவில்லையென்றால் ஏதோ ஒரு இடத்தில் பெரிய பிழை இருக்கின்றது என்று அர்த்தம்..

என்னைப்பொறுத்தவரை கருணாவுக்கு முழுமையான ஆதரவு இருக்கிறது.. அவர்மேல் போடப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏதோ குளறுபடி இருக்கிறது.

:!: :?: :idea:

கிங்ஸ்லி கருணா குழுவினரால் சுட்டுக்கொலை.

நேரடி வர்ணனையின்போது மிண்டி விழுங்கியதை கவனித்தேன் அப்போ இதுவும் மர்மக்கொலைகள் பட்டியலில்..

:idea: :idea: :idea:

இவர்களால் தர்மராஜ்யத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி

இவ்வளவு நாளும் அரசியலில் தலையிட்டு வந்தார்கள் இன்று அவர்களே வந்துவிட்டார்கள் தர்மராஜ்ஜிய ஸ்தாபிப்பு என்ற பெயரில் இரத்தக்களரி காணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது

அசோகச்சக்கரவர்த்தியே கலிங்கப் போரில் வெறுப்புற்று அன்பு அகிம்சை சகிப்புத்தன்மை போதித்த பௌத்த மதத்தை தழுவினார் என வரலாறு கூறுகின்றது

அவரால் ஸ்தாபிக்க முடிந்ததுதான் தர்மராஜ்ஜியம் இன்று இவர்கள் வேண்டி நிற்பது ?

புத்தரின் பெயரால் (in the name of budhdha)என்ற திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது

-------------------------------------------------

தர்மமா??? அது என்கிருக்கிறது இலங்கையில்.. அவர்களின் பாசையில் தர்மமெண்டா விகாரைக்குள்ள பெண்களை வைத்து கேளிக்கையில் ஈடுபடுவது, பல்கலைக்க்ழகம் சென்று ஓசியில் காவி உடுத்தி படித்துவிட்டு முடிந்தவுடன் எல்லாத்தையும் கழட்டி எறிந்துவிட்டு ஒடுவது, அரசியல்வாதிகளுக்கு எப்படி தமிழனுக்கு அடிக்க வெட்ட வேண்டும் என்று சொல்லுவது --- மொத்ததில் இரத்தக் கறை காண்பதே அவ்ர்களின் தர்மம்... இவர்களெல்லாம் தர்மவான்கள் என்டு ரோட்டுக்கு வந்திட்டார்கள், அவ்ர்களை தூக்கிவைத்தாட ஒரு பொரிய கூட்டமே அங்க இங்க என்டு அலையுது...அட போங்கப்பா இவங்களும் இவங்கட ஆட்டமும் இனி எங்க போய் முடியப்பொகுதோ தெரியாது... :twisted:

புத்தர் இப்ப இருந்தா தன்ன தானே வெட்டிச் செத்திருப்பார்.. :)

Mattakalapu MP Refuses to Meet Karuna - Monday, April 05, 2004 at 12:41

Mr. Jeyananthamoorthy who was elected in Mattakalapu by the recent polls did not participate in the meeting with Karuna group today. Karuna's group had a meeting with the elected members of Parliament today in their hideout in Tharavai, Mattakalapu.

The elected members of Mattakalapu and Amparai were called to attend the meeting. But Mr. Senathirajah Jeyananthamoorthy did not attend the meeting today and he is believed to be left Mattakalapu today.

Some close associates of the member told that Mr. Jayananthamoorthy would have joined with the leadership of the LTTE.

source: http://english.eelamnation.com/news_item.a....asp?NewsID=674

அட என்னப்ப எல்லாரும் நல்லாக் குழப்புறயள்.

கிங்ஷ்லி என்பது father இல்ல. வெரோருவர்..கீழுள்ளதை வாசிக்கவும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++

இது இவ்விதம் இருக்க, கருணா கும்பலின் பிடியில் இருந்து, மற்றுமொரு முக்கிய உறுப்பினர், தப்பி, வன்னி சென்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பாவாவே, இன்னும் சில போராளிகளுடன் தப்பிச் சென்றிருப்பதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட கருணா கும்பல், பாவாவின் சகோதரரும், கலைபண்பாட்டுக்கழக முன்னாள் உறுப்பினருமான கிங்ஸ்லி என்பவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை தலைமைப் பீடம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

source: http://www.tamildailynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilwebradio.com ல் போட்டிருக்கு. ஆனால் முழுமையான செய்தி கிடைக்கவில்லை.

இந்த செய்தியை நண்பர் ஒருவரும் சொன்னார்.

கருணாகுழுவினரால் கிங்ஸ்லி சுட்டுக்கொலை.

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அவர்களும் மற்றுமொரு போராளியும் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றிய பாவா அவர்களின் வெளியேற்றமானது கருணா தரப்பை மிகவும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பாவா அவர்களின் சகோதரரை திருக்கோவில் பகுதியில் வைத்து கருணா குழு சுட்டுக்கொன்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கிங்ஸ்லி அவர்கள் பின்னர் அமைப்பைவிட்டு விலகி குடும்பவாழ்வில் ஈடுபட்டுவந்தார். இவரை விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் கருணா குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அறியப்படுகிறது.

இவை தொடர்பான தகவல்கள் விரைவில் தரப்படும்.

(இச்செய்தியானது பதியப்பட்ட நேரம் ஐரோப்பிய நேரம் 17.47)

- தமிழ்வெப்றேடியோவுக்காக புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு கூட்டமைப்பு எம்.பிக்களும் தமிழ்த்தேசியத்துக்கே பாடுபடுவார்கள்

கருணாவின் துரோகத்துக்குத் துணைபோகமாட்டார்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன்

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களி;லிருந்து தெரிவான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் கருணாவின் பிரதேசவாதத்துக்கு எடுபடமாட்டார்கள். அவரின் துரோகத் துக்குத் துணைபோகமாட்டார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப் பட்ட அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார்கள். தமிழ்த் தேசி யத்துக்காகப் பாடுபடுவார்கள் என் றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன். பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கிளிநொச் சியில் தமிழ்ச்செல்வனைச்சந்தித்துப

  • தொடங்கியவர்

தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகள்

வடக்கு - கிழக்கில் ஒவ்வொருவருக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் எம்.பி.பதவிகள் வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொருவருக்கு வழங் கப்படவுள்ளன. இந்தப் பதவிகளை யார் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாகச் சில தினங்களில் முடிவு செய்யப்படும் என்று தமிழரசுக் கட்சிப் பொதுச்செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான மாவை.சேனாதிராசா தெரிவித் தார். கிழக்கில் அண்மைக்காலமாக இடம் பெற்ற சிக்கல்களின்போது தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தியவர்கள் யார் என்பதை இனம்கண்டு இந்தப் பதவியை அவருக்கு வழங்குவது குறித்து ஆராயப்படுவதாக அவர் மேலும் கூறினார். முஸ்லிம் ஒருவருக்கு உறுப்பினர் பதவியை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப் பட்டு வருகின்றது என்று அவர் சொன்னார். பெரும்பாலும் ஜோசப் பரராஜசிங் கத்துக்கு ஓர் இடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தவாரமளவில் இதுதொடர் பாக இறுதிமுடிவு எடுக்கப்படவிருக் கிறது.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

fronts.gif

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,

படம் - டெய்லிமிரர்

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

புதிய அரசாங்கத்திற்கு ம.ம.மு. ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை

மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதோடு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று மலையக தொழிலாளர் முன்னணி, ம.ம.மு. தலைவர் பெ.சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலையக தொழிலாளர் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் முன்னணியின் துணைத் தலைவர் ரி.அய்யாத்துரை, உபதலைவர் பி.எஸ்.கிருர்;ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பெருந்தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விபரம் வருமாறு:

இன்றைய நிலையில் மலையக தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் மதிப்பீடு செய்து பார்த்தால் மலையக தமிழர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூýடுதலான சேவையாற்றியிருப்பது }லங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியுமே என்பதை நாம் அறிவோம்.

பொ.ஐ.மு.அரசாங்கமே பெருந்தோட்டப் பாடசாலைகளை அரச பாடசாலைகளாக்க நடவடிýக்கை எடுத்தது, பெருந்தோட்டப் பகுதிக்கு மின்சாரம் வழங்க நடவடிýக்கை எடுத்தது, மலையகத்திற்கு தமிழ் கிராமசேவகர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களில் கிராம வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, தோட்டப்புறங்களில் முகவர் தபால் நிலையங்களை அறிமுகப்படுத்தியது.

மேலும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதன் மூýலம் மாடிý வீட்டுத் திட்டத்தை உடனடிýயாக இரத்துச் செய்ய நடவடிýக்கை எடுத்தல், தோட்டப்புறத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளோடு செய்துள்ள கூýட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்தல். பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான கடனை இரத்துச் செய்தல் ஆகிய நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை, தேயிலை சம்பள நிர்ணய சபையை மீண்டும் உயிர்ப்பித்தல், வரவு செலவுத்திட்டத்தின் மூýலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குதல், பெருந்தோட்டப்புறங்களில் தொழில்பேட்டைகளை அமைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்த்து வைப்பது ஆகிய கோரிக்கைகளை புதிய அரசாங்கத்திடம் முன் வைத்து அவற்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி - தினக்குரல்

சந்திரசேகரனின் கட்சி சந்திரிகாவுக்கு ஆதரவு? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

  • தொடங்கியவர்

புலித்தேவன் தென்னாபிரிக்கா பயணம்

விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவருடன் பெண் போராளியொருவரும் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று அதிகாலை 3.24 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து டுபாயை நோக்கி புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ய10.கே. 347 இலக்க விமானத்திலேயே இவர்கள் சென்றுள்ளனர்.

டுபாயில் தரையிறங்கும் இந்த விமானத்திலிருந்து இவர்கள் இருவரும், தென்னாபிரிக்காவை நோக்கிச் செல்லும் விமானத்தின் மூலம் அந்த நாட்டுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் தெரிவித்தன.

கடந்த வாரம் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் கரிகாலன் உட்பட முக்கிய உறுப்பினர் சிலர் ஐரோப்பா சென்றதும் தெரிந்ததே.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

வெள்ளை வான், ஆட்டோவில் துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளில் சென்றோர்மீது சூடு

இருவர் படுகாயம், ஒருவர் கடத்தப்பட்டார்

மட்டக்களப்பு மாமாங்கம் புன்னைச்சோலை வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த அதேநேரம், இவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது:

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் புன்னைச்சோலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை, வெள்ளை வான் மற்றும் ஆட்டோ ஒன்றில் பின் தொடர்ந்து சென்றவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதனால், மாமாங்கத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சிவகுமார் (30 வயது) என்பவர் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டில் படுகாயமடைந்த நிலையில், பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரா குபேந்திரா (32 வயது) என்பவர் துப்பாக்கி நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதில் குபேந்திரா என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே அதிலிருந்து விலகி புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டதுடன், 2001 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும், தற்போது இவர் எந்த அமைப்புடனும் தொடர்புகளின்றி வாழ்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் கருணா குழுவினரின் பிரதேசவாதத்தை இவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

நடுநிலையும் பக்கச் சார்பும்

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிýருந்த ஐரோப்பிய ஒன்றிய அவதானிகள் குழுவின் தலைவரான ஜோன் குர்;னாகன் கடந்த ஞாயிறன்று கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டிýல், தங்களது கண்காணிப்பு பணிகள் தொடர்பிலான ப10ர்வாங்க அனுமானங்களை வெளியிடுகையில், இலங்கையின் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்க ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சார்பாகச் செயற்பட்டதாகவும் தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்ததாகவும் இது ஆரோக்கியமானதொரு நிலைமை அல்லவென்றும் குர்;னாகன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தேர்தல் செயற்பாடுகளின் ஏனைய அம்சங்கள் குறித்து பெருமளவுக்கு திருப்தி தெரிவித்திருந்த அவர். ஊடகங்களின் விடயத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதல்ல எனினும், சில பிரதிபலிப்புக்களை வெளியிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

இந்தத் தேர்தல் பிரசாரங்களின்போது அரசாங்கக் கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க்கட்சிக்குரிய மனோபாவத்துடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்புக்குரிய மனோபாவத்துடனும் செயற்பட்டதைக் காணக்கூýடிýயதாக இருந்தது.

கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணி அராங்கத்திடம் இருந்து பாதுகாப்பு, உள்துறை அமைச்சுக்களுடன் சேர்த்து மக்கள் தொடர்பாடல் அமைச்சையும் தன்வசம் எடுத்துக் கொண்டதன் பின்னர், அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கக் கட்டுப்பாட்டிýல் உள்ள இரத்திரனியல் ஊடகங்களும் பத்திரிகைகளும் பிரசாரங்களை முடுக்கி விட்டன. அரசாங்கக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தும் பாத்தியதையே இழந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தனது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கான பிரசாரங்களுக்கு தனியார்துறை இலத்திரனியல் ஊடகங்களையும் பத்திரிகைகளையுமே நம்பியிருக்க வேண்டிýய நிலை ஏற்பட்டது.

அரசாங்க ஊடகங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 'இருட்டடிýப்புச்" செய்யப்பட்ட அதேவேளை, ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் புதிய நேச சக்தியாக ஜனதா விமுக்தி பெரமுனைக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை திருமதி குமாரதுங்க வெளியிட்ட தினம் மாலையில் அவரது ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான லடீ;மன் கதிர்காமர் தகவல் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவையில் பிரதான எதிர்க்கட்சியான }லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அங்கம் வகித்த 'விநோதத்தை" நாடு கண்டு கொண்டது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அரச கட்டுப்பாட்டு ஊடகங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் இல்லாத அரசாங்கமாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளங்கிய இன்னொரு 'விநோதத்தையும்" கண்டு கொண்டோம். இலங்கையின் அதிகார வர்க்கக் குடும்பங்களில் ஊடகத்துறையில் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் இத்தகையதொரு 'பரிதாப நிலைக்குத்" தள்ளப்பட்டமை இன்னொரு 'விநோதமான" ஒப்புவமையாகும்.

தேர்தல் பிரசார காலத்திலே அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வெகுவிமரிசையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சார்பாகச் செயற்பட்ட அதேவேளை, தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பான அணுகுமுறையையே கடைப்பிடிýத்தன. தேர்தல் முடிýவுகள் வெளியாகிக் கொண்டிýருந்த வேளையில் கூýட, சுதந்திர முன்னணி பிரமிக்கத்தக்க வெற்றியொன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாகவே அரச ஊடகங்கள் வர்ணனை செய்து கொண்டிýருந்தன.

இலங்கையைப் பொறுத்தவரை, தனியார் துறை ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகியமை மிகவும் அண்மைக்காலத் தோற்றப்பாடாகும். பெரு முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஆதிக்கத்திலான இந்த ஊடகங்கள் இயல்பாகவே தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின

  • தொடங்கியவர்

கருணாவுக்கு இராணுவத் தளபதி புகழாரம்

கருணாவின் மனப்பான்மையே வேறு. அவர் வரி அறவிடுவதில்லை. ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கொல்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே நிறுத்திவிட்டார் என்று இராணுவத் தளபதி லயனல் பலகல்ல புகழாரம் செய்திருக்கிறார்.

இந்திய செய்தியாளர் ராமானந்தா செஸ்தப்தாவுக்கு அளித்த பேட்டிýயில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் எவ்வாறெனினும் அவரின் எதிர்காலம் பற்றித் தன்னால் எதுவும் பேச முடிýயாது என்றும், ஆனாலும் ஓரளவிலான ஆதரவை அவர் பெற்றுக் கொள்வார் என்று தோன்றுவதாகவும் கூýறினார்.

கருணாவின் நெருக்கடிý விடுதலைப் புலிகளின் சண்டையிடும் ஆற்றலில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்று கேட்டதற்கு, புலிகளை இது பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கூýறினார்.

கருணா தொடர்ந்தும் பிரபாகரனை எதிர்த்து வந்தால் அது நிச்சயமாக அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் அவர்கள் ஒரு பலவீனமடையும் அணியாகவே இருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.