Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

சர்வதேசம் தமிழருக்கு உதவுவதைத் தடுக்க...

'சுனாமி அனர்த்த நிவாரணப் பணி என்ற பெயரில் சில வெளிநாடுகளும்ää அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்காவிற்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளுக்கு இராணுவ உதவிகளைப் புரிந்து வருவதால் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெளிநாடுகள் மற்றும் அவர்களது பணி குறித்து உடன் விசாரணை செய்யப் படவேண்டும்" எனச் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் ஜே.வி.பி. விடுத்துள்ள கோரிக்கையானது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. ஆயினும்ää எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டதாகும்.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் ஜே.வி.பியின் இந்நிலைப்பாடு வழமையானதுபோல் ஆகிவிட்டது. அதாவதுää சுனாமியினால் ஏற்பட்ட அழிவிற்கான நிவாரணமாகட்டும்ää யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கான நிவாரணம் ஆகட்டும் தமிழ் மக்கள் கைகளில் அவை சென்று சேருவதை அனுமதிக்கும் நிலையில் ஜே.வி.பியினர் இல்லை. இத்தகைய நிலையில்ää தற்பொழுது கிட்டும் மிகச் சிறிய அளவிலான உதவிகள்கூட தமிழ் மக்களைச் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் புனர்நிர்மாணப் பணிகளுக்காகப் பெரியளவிலான நிதிகள் சென்று சேருவதைத் தடை செய்வதே ஜே.வி.பியின் நோக்கமாகும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பாதிப்புக்களுக்கு ஏற்ற வகையில் தமது நிவாரண உதவிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே இலங்கைக்கு உதவி வழங்கிய அநேக நாடுகளின் எதிர்பார்க்கை ஆகும். இது குறித்து சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் அவை வலியுறுத்திக் கூறவும் தவற வில்லை.

இதேசமயம்ää சில மேற்கு நாடுகள் தம்மால் வழங்கப்படும் நிதி உதவிகள் வடக்கு-கிழக்கிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா என்பது குறித்து தமது அவதானிப்புக்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளன. இதேவேளைää ஐ.நா. சபைää உலக வங்கி போன்ற அமைப்புக்கள் வழங்கப்படும் நிதி உரிய முறைகளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கவும்ää கணக்கறிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டும் உள்ளன.

இன்னொரு புறத்தில்ää சில அரசாங்கங்கள் சுனாமி அனர்த்தத்திற்கென அறிவிக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வழங்கவே முன்வந்துள்ளன. உதவி வழங்கும் நாடுகளின் இத்தகைய நிலைப்பாடுகள் தமிழ் மக்களுக்கும் சிறிதளவேனும் சர்வதேச நிதியுதவிகள் சென்றடைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஜே.வி.பி.க்குத் தோற்றிவித்துள்ளது.

இவை யாவற்றிற்கும் மேலாக தற்பொழுது அரசாங்கம் சர்வதேச நாடுகளின் நிதியுதவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஒரு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அரசää புலிகள் சமாதானச் செயலகங்கள் ஊடாக விடுதலைப்புலிகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் ஜே.வி.பி.க்கு மேலும் சினத்தைத் தோற்றுவிப்பதாகியுள்ளது. ஏனெனில்ää இதன் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் நிதி விடுதலைப்புலிகளுக்கும் பங்கிடப்பட வேண்டிய தேவைää காட்டாயம் உருவாகிவிடும் என்ற அச்சத்தை ஜே.வி.பிக்கு ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடுää இவ்விடயத்தில் சந்திரிகா அரசிற்கும்ää விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்படுமானால்ää இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் காணக்கூடியதொரு சூழ்நிலையும் உருவாகலாம் எனவும் ஜே.வி.பி. அச்சமடைந்துள்ளது. அத்தகையதொரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தமது இனவாத அரசியல் பாதிப்பிற்குள்ளாகவும் அது தமது எதிர்கால அரசியலைப் பாதிக்கவும் கூடும் என அது அச்சம் கொண்டுள்ளது. இத்தகையதொரு நிலையில்தான் தமிழ் மக்களுக்குச் சர்வதேச நிதியுதவிகள் எவையும் கிட்டிவிடாது தடுக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நிதியுதவிகள் பயன்பாடு குறித்த பேச்சுக்களில் முன்னேற்றம் காண முடியாத வகையிலும் தடைகளை உருவாகும் வகையில் ஜே.வி.பி. சர்வதேச நாடுகளினதும்ää அரச சார்பற்ற நிறு வனங்களினதும் செயற்பாடு குறித்து விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கை மூலம்ää அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் முட்டுக் கட்டைகளைத் தோற்றுவிக்க முடியும். ஏற்கனவே அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் - குறிப்பாகää கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வந்திறங்கும் நிவாரணப் பொருட்கள் மீதான சுங்கப் பரிசோதனை உட்பட்ட கெடுபிடிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணிகளைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளத

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பொதுக் கட்டமைப்பும் ஜே.வி.பியின் எதிர்ப்பும்

அனர்த்த நிவாரணப் பணிகளை விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசு மேற்கொள்வதற்கு ஜே.வி.பி.யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.

அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் சர்வதேச உதவிகள் பாதிப்புற்ற சகல பிரதேசங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இதே கருத்தையே விடுதலைப்புலிகளும்ää தமிழ் மக்களும்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிவாரணப் பகிர்வு முறையாக மேற்கொள்ளப்படுவதனால் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு இணைந்து ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொ ள்ளவேண்டும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் தேசியத் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விபரம் ஆராயப்பட்டது.

தமிழர் தாயகத்தில் நடந்த ஆழிப்பேரலை அனர்த்தமே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பல தமிழ் பேசும் கிராமங்களை கடல் காவு கொண்டு விட்டது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியாகும். தமிழர் தாயகத்தில் நடந்த அனர்த்தம் மக்கள் அவல நிலைää மீள்குடியேற்றம்ää தொழில்வாய்ப்பு போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதனால் விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை.

விடுதலைப்புலிகளை ஓரங்கட்டிவிட்டு அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ மேற்கொள்ள முடியாது.

அதன் மூலம் முறையான உதவிகள் தமிழ் பேசும் சமூகத்துக்கு கிடைக்கமாட்டாது.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த நாளிலிருந்து இற்றைவரைக்கும் இரவு பகல் பாராது விடுதலைப்புலிகள் முழு அர்ப்பணிப்புடன் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனர்த்தம் நிகழ்ந்த பிற்பாடு அதிகம் பாதிப்புற்ற அம்பாறை மாவட்டத்திற்கு துயர் துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் அவர்கள் பெரும் தொகை நிதி வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.

ஆனால் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. இனவாதத்தை விதைத்து வருகிறது.

தமிழர் தாயக மக்களுக்கு எதிர்காலத்தில் சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கு இவை தடையாக இருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான சமாதான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜே.வி.பி. தடைக்கல்லாகச் செயற்பட்டது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகித்து வருவதால் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசுக்கு கிடைக்கும் உதவிகள் தமிழர் தாயகத்துக்கு கிடைத்து விடக்கூடாது என்பதிலும்ää விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான கூட்டுறவையும் வைத்து பொதுக் கட்டமைப்பை உருவாக்கக் கூடாது எனவும் ஜே.வி.பி.யினர் அரசுக்கு இறுக்கமாகத் தெரிவித்துள்ளது.

அதனை மீறினால் அரசுடனான கூட்டு முகாமிலிருந்து வெளியே றிவிடும் சூழல் உருவாகலாம் எனவும் மறைமுகமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் அனர்த்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசு விடுதலைப்புலிகள் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாகுமானால் எதிர்காலத்தில் சமாதானத்துக்கான அடித்தளமாக அது அமைவதுடன் புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஜே.வி.பி.யின் இன்றைய போக்கு இந்த கட்டமைப்பை செம்மையோடு உருவாக்க உதவுமா என்பது கேள்விக்குறி.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

  • தொடங்கியவர்

சிறீலங்காவின் தேசியக்கொடிக்கு தீ வைப்பு

சிறீலங்கா சுந்திர தினத்தை தமிழர் தாயகப் பகுதி எங்கும் புறக்கணித்து வரும் வேளையில் இன்று யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த சிறீலங்காவின் தேசியக் கொடியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ் மாவட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam

  • தொடங்கியவர்

பெற்றோரை கண்டறியும் மரபணு பரிசோதனை புதனன்று நடைபெறும்

ஆழிப்பேரலையினால் அநாதரவான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள நான்கு மாத குழந்தையின் பெற்றோரை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் வைத்திய ஆய்வுகூடமொன்றில் நடைபெறவுள்ளது.

பேராசிரியை டாக்டர் மாலா குணரட்ன இந்த மரபணு பரிசோதனையை நடத்துவார் என நீதிமன்றம் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு குழந்தையின் மாதிரி இரத்தம் பெறுவதற்கு அங்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் மாதிரி இரத்தத்தை பெறுவதற்காக உரிமை கோரும் பெற்றோரும் அங்கு ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் கல்முனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக கல்முனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அம்புலன்ஸ் வண்டியில் பராமரிப்பாளர் மற்றும் தாதியொருவரின் உதவியுடன் குழந்தை கொண்டு செல்லப்பட்ட வேண்டும். இவர்களுடன் நீதிமன்றப் பதிவாளர்ää சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்ää ஆகியோரும் செல்ல வேண்டும்.

கல்முனை பொலிசாருக்கு பிறப்பித்த உத்தரவில் குழந்தையை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த மரபணு பரிசோதனைக்கான செலவுகளையும் பெற்றோர் என உரிமை கோருபவர்களுக்கான போக்குவரத்து செலவுகளையும் யுனிசெப் பெர்றுப்பேற்க முன்வந்துள்ளது.

வைத்திய ஆய்வு கூடத்தில் குழந்தையினதும்ää அதற்கு உரிமை கோரும் பெற்றோரினதும் மாதிரி இரத்தம் பெறப்படும் போது யுனிசெப் பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருப்பதற்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக கைதாகி நேற்றிரவு பினையில் விடுதலை செய்யப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர்களான ஜெயராஜா ஜூனித்தா தம்பதிகள் நேற்று கல்முனை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜரானார்கள்.

இவர்களை எச்சரித்த நீதவான் எம்.பி.மொகைதீன் வாரத்தில் 3 தடவைகள் மட்டுமே குழந்தையை பார்வையிட முடியும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் தற்போது வைத்தியசாலையில் உள்ள இந்த குழந்தைக்கு தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் அகதிகள் பணியக அதிகாரி தமிழ்ச்செல்வனுடன் சந்திப்பு

பிரித்தானியாவின் அகதிகள் பணியக, அகதிகள் விவகார ஆலோசகர் கே.எஸ்.நாதன் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து இயற்கை அனர்த்தம் தொடர்பான புள்ளிவிபரங்களை கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து வவுனியா வந்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்து இயற்கைஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளார்.

அதேநேரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Thinakkural

  • தொடங்கியவர்

பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் இருவர் பார்வையிடுவர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஷ் அடங்கிய ஒரு குழுவினர் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நேற்று அறிவித்துள்ளார்.

இம் மாதம் 19ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை மேற்கொள்ளப்பட இருக்கும் இவ் விஜயம்ää இலங்கை இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மாலைதீவு நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

ஆழிப்பேரலை நடந்த ஒரு சில நாட்களிலேயே பில் கிளின்ரனையும் தனது தந்தை ஜோர்ஜ் புஷ்சையும் அமெரிக்காவில் நிவாரண நிதி சேகரிப்பு பணிகளுக்கு பொறுப்பானவர்களாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் நியமித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது போன்றேää ஜக்கிய நாடுகள் சபையும்ää ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களின் புனர் நிர்மாண மற்றும் நிவாரண வேலைகளை மேற்பார்வையிடும் தனது விசேட பிரதிநிதியாக பில் கிளின்ரனை நியமித்திருப்பதும் தெரிந்ததே.

Puthinam

  • தொடங்கியவர்

எதிர்மறையான முடிவுகளைத்தான் சிறீலங்கா அரசு நோர்வே அனுசரணையாளரிடம் தெரிவித்திருக்கிறது -சு.ப.தமிழ்ச்செல்வன்

எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக நோர்வே அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இன்று சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதுவரை சந்தித்த பின்னர் ஊடகவியாலளர்களுக்கு வழங்கிய பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பேட்டியின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:

கேள்வி:- இன்றைய சந்திப்புத் தொடர்பாக?

பதில்;:- இன்று நோர்வே சிறிலங்காத் தூதுவருடனான சந்திப்பு ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்;ட பேரழிவினால் பாதிக்கப்பட்;ட எமது மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பது புலிகளும் சிறீலங்கா அரசம் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது தொடர்பாக கடந்த காலங்களில் உரையாடப்பட்டு வந்தது.

நோர்வே அனுசரணையாளர்கள் என்ற வகையிலும்䤠அதில் நோர்வேத் தூதுவர்; ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்; என்ற வகையிலும் தீர்மானங்களை எடுப்பதற்கும் நடைமுறைச் சிக்கல் தொடர்பாக இன்று கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக இன்றைய சந்திப்பில் எம்மால் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்டது. எம்மக்களுக்;கான நிவாரண மீள் கட்டுமாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச உதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கான எவ்விதமான ஆக்கப10ர்வமான நடைமுறைகள் எதுவும் எட்டப்படாது䤠எமது மக்கள் மத்தியில் விரக்தி நிலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்பதை நோர்வேத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளோம்.

விரைவாக சர்வதேச உதவிகள் எமது பகுதிகளுக்கு திருப்ப வேண்டும் என்பதனையும் இதில் வலியுறுத்தியுள்ளோம். எங்களால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்த வகையில் பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது எந்தளவு சாத்தியம் என்பது பற்றிக் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அரசாங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறதே தவிர பொதுக்கட்டமைப்பினை நிறுவுவதற்கு மனப்ப10ர்வமாக செயற்படுவதாக தெரியவில்லை.

சர்வதேச உதவிகளை விரைந்து நடைமுறை ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்க நேரடியாகக் கிடைக்கக்கூடிய வகைகளை சர்வதேச சமூகம் பரீசிலிக்க வேண்டும் என்பதனையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி:- அரசு ஏதாவது புதிய செய்திகள் அனுப்பி வைத்துள்ளதா?

பதில்:- ஏற்கனவே எமது வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தினுடைய நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை குறிப்பாக ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளையும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்கான ஆலோசனைகளை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாக அரசுக்கு அனுப்பியிருந்தோம்.

எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள். அரசின் முடிவுகள் எமக்கு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. நடைமுறைச் சாத்தியமற்ற முடிவுகளை அரசு தெரியப்படுத்திக் கொண்டிருப்பது இணக்கப்பாட்டிற்கு வந்து செயற்பாடுகளை மந்தப்படுத்தும் நோக்கோடுதான் அரசு செயற்படுவதாக எம்மால் உணர முடிகின்றது என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் ஏனைய வழிமுறைகள் ஊடாகவே வந்து சேரவேண்டும். அதற்கு உரிய வாய்ப்பினை எற்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாக உள்ளது.

கேள்வி:- எந்த வகையில் புலிகளுக்கும் அரசுக்கும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன?

பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். சர்வதேச உதவிகளை தமிழர் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு நடுநிலையான சர்வதேச நிறுவனமே உதவிப்பொருட்களை பகிர்ந்தளிக்க பொறுப்பாக இருக்க வேண்டும். வட கிழக்கிற்கான பாதுகாவலனாக நிவாரண மீள்கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சர்வதேச நிறுவனம் இருக்க வேண்டும் என்பதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறான ஒரு அமைப்பினூடாகத்தான் சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதனை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் எம்மால் வலியுறுத்தப்பட்ட விடயம் ஆகும்.

அரசு எமது முடிவுகளை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் வட கிழக்கிலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சில மாவட்டங்களில் பேணப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் கட்டமைப்பிலே உள்வாங்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவம் சம்பந்தமாக தமிழர் தாயகத்திற்கான மீள்கட்டுமாண நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியத்தின் பாதுகாவலனாக நியமிக்கப்படும் விடயங்களிலும் பல சிக்கல்கள் இருப்பதாகவே எமக்கு தெரிகின்றது.

கேள்வி:- சிரான் அமைப்பு போன்று தான் இவ்வமைப்பிற்கு ஏற்படும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்:- எங்களைப் பொறுத்த வரையில் இதுவொரு உண்மையிலே இயற்கைப் பேரனர்த்தத்தால் பாரியளவு மனிதாபிமான நெருக்கடியைச் சந்திக்கும். மக்களுக்கு உடனடி மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. சிறீலங்காவில் மட்டுமல்ல. தென்னாசியா முழுவதுமே பேரிழப்பினைச் சந்தித்துள்ளது. மனிதாபிமான உதவியை சந்தித்து நிற்கும் சூழலில் இலங்கைத் தீவிலேயும் தமிழர் தாயகம் தான் கூடுதல் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு மனிதாபிமான தேவையாக உள்ளது. மனிதாபிமானத் தேவைகள் எழுந்து நிற்கும் சூழலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் போல் தீர்வு காணப்படாமல் போன விடயங்கள்; போல் இந்த மனிதாபிமான உதவிகளையும் இழுத்தடிக்க முடியாது. உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் முடிவுகள் எப்படி போகும் என்பதை எம்மால் கூறமுடியாது. நடமுறையில் அரசாங்கம் ஒத்துழைப்பு தராத நிலைதான் இன்று வரையுள்ளது.

கேள்வி:- அரசு எடுத்திருக்கும் முடிவுகள் தங்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதா?

பதில்:- நிச்சயமாக அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதாகவும் தாம் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒருதோற்றப்பாட்டை காட்டி வருகிறதே தவிர ஒரு கட்டமைப்பினை நிறுவி விரைந்து மக்களுடைய மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண அரசு முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி சர்வதேச உதவிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முயற்சியில் தான் அரசு இறங்கியுள்ளதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் புரிய வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. அரசின் போக்கு எமக்கு நம்பிக்கை தருவதாகத் தெரியவில்லை.

கேள்வி:- உதவி வழங்கும் நாடுகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது.?

பதில்:- சர்வதேச நிறுவனங்கள் முழு அளவிலான அழுத்தத்தைப் பிரயோகித்துக் கொள்கின்றார்கள். இரண்டு தரப்பும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாகவே சரியான வகையில் சர்வதேச உதவிகள் சரியான முறையில் சேர்க்கப்படும் என்பது ஒரு எண்ணப்பாடாகவும் விருப்பமாகவும் உள்ளது.

ஆனால் பொதுக்கட்டமைப்புக்களுக்கான உருவாக்கத்திற்கான சூழல் உருவாக்கப்படவில்லை. இனி சிறீலங்கா அரசினை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதனையும் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகின்றோம். சர்வதேச உதவிகள் நேரடியாக இங்கு கொண்டு வரக்கூடிய வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்பதனை யதார்த்தத்தின் அடிப்படையில் எம்மால் வலியுறுத்தப்பட்டது.

கேள்வி:- சர்வதேச உதவிகள் நேரடியாக வரக்கூடிய சூழல் உள்ளதா?

பதில்:- சர்வதேச சமூகத்திடம் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு மனித இனம் பேரிழிவினைச் சந்திக்கும் நிலையில் உதவிகள் செய்ய வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் பேரழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு சர்வதேச சமூகம் நேரடியாக உதவிபுரியும் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்.

கேள்வி:- ஆழிப்பேரலையின் பின்பு சிறுவர்களை புலிகள் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்:- சிறுவர்களை இணைக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்களே தவிர இந்தப் பேரனர்த்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுப் பணிகளிளும் மறுவாழ்வுப் பணிகளிளும் ஈடுபடுத்தியுள்ளதை குற்றம் சாட்டுபவர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களாக உள்ளனர்.

தற்போது கூட ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோர்களை இழந்து எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பரிதவித்த நிலையி;ல் உள்ளனர். அச்சிறார்களுக்கு ஆக்கப10ர்வ உதவிகள் புரியாமல் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதிலும் சேறு பூசுவதிலும் பொய்ப்பரப்புரை செய்வதிலும் சில அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என்றார்.

Puthinam

  • தொடங்கியவர்

cat.gif

தினக்குரல்

  • தொடங்கியவர்

மற்றொரு போருக்கான ஆயத்தம்!?

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்காக இஸ்லாமாபாத் புறப்படும் ஜனாதிபதி சந்திரிகா...

மற்றொரு போருக்கான ஆயத்தங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பல நாடுகளுடனும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு வரும் அரசு முப்படையினருக்குமான ஆயுதத் கொள்வனவிலும் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகள், அரசு போருக்கான தயாரிப்பில் இறங்கிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்திய ஜனாதிபதி சந்திரிகா, தற்போது பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நாளை 7 ஆம் திகதி 3 நாள் பயணமாக இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.

இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடொன்றில் கைச்சாத்திடுவதில் இலங்கை அரசு, கடந்த வருடம் முழுவதும் தீவிர அக்கறை காட்டி வந்தது. எவ்வேளையிலும் அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திடலாமென்ற நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கெதிராக தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிலிருந்து இந்தியா பின்வாங்கியது. இது இலங்கைத் தரப்பிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது இலங்கையில் உதவிப் பணிகளுக்காக விரைந்து வந்த இந்தியா, அமெரிக்கப் படைகள் இங்கு வருவதைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் அதனையும் மீறி அமெரிக்கப் படைகளை அழைத்ததன் மூலம் இலங்கை அரசு இந்தியா மீதான தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காண்பித்தது.

இது இந்தியாவைக் கடுமையாகச் சீண்டி, இலங்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தங்கள் கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் நிலைக்கு இந்தியாவை தள்ளியுள்ள போதிலும், தங்களுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தயங்கியதற்கான தண்டனையை அமெரிக்கப் படையை இங்கு அழைத்து இந்தியாவையும் மீறி தங்களால் எதுவும் செய்ய முடியுமென்பதை இலங்கை அரசு மிடுக்குடன் காட்டிவிட்டது.

இலங்கை வந்துள்ள அமெரிக்கப் படைகள் இங்கிருந்து செல்லுமா என்ற கேள்வி எல்லாத் தரப்பினரிடமும் எழுந்துள்ள நிலையில் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருங்கிய தோழனும் இந்தியாவின் பரம விரோதியுமான பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா நாளை திங்கட்கிழமை இஸ்லாமாபாத் செல்கிறார்.

கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு, புனர் நிர்மாணப் பணிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி சந்திரிகா தனது பாகிஸ்தான் பயணத்தைத் தொடர்வதன் மூலம், பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி எவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றார் என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கனவே, சீனாவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கைச்சாத்திட்ட இலங்கை அரசு, ஈரானிடமிருந்தும் பல நூறு கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. இலங்கையில் அண்மைக் காலங்களில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில், ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாடொன்றை இலங்கை அரசு மேற்கொண்டது.

இதன்படி, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் அநேநேரம், அதற்கு ஈடாக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்தது. இதற்காக முப்படைகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று ஈரான் சென்று, கொள்வனவு செய்யும் ஆயுதங்களைப் பரிசோதித்த பின்னர் அண்மையில் நாடு திரும்பியது. விரைவில் இந்த ஆயுதக் கொள்வனவு நடைபெறவுள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கைக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கும் நாடுகளில் மிக முக்கிய நாடான பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி செல்கிறார். சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை, நீண்ட காலக் கடனுக்கு வழங்கும் சலுகையை அண்மையில் பாகிஸ்தான் வழங்கியதை அடுத்தே ஆயுதக் கொள்வனவு குறித்தும் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் இலங்கை அரசு பாகிஸ்தானுடன் ஆராயவுள்ளது.

கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தனர். ஆட்லறிகள், பீரங்கி மோட்டார்கள் உட்பட பல கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கடல் காவு கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரும் காணாமல் போய்விட்டனர். பல படை முகாம்கள் இருந்த இடமே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. கடற்படையினரே இதில் பாரிய இழப்புகளை சந்தித்திருந்தனர்.

போர்க் கப்பல், பீரங்கிப் படகுகள் உட்பட பல கடற்படை கலங்கள் உடைந்து நொருங்கின. காலி கடற்படைத் தளமும் திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளமும், பெரும் இழப்புகளைச் சந்தித்தன. இந்த நிலையிலேயே கடல்கோள் அனர்த்தத்திற்காகச் சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுத்த பெரும் நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாவுக்கு போர்க் கப்பல்களைக் கொள்வனவு செய்ய கடற்படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் நிதியில் ஒரு பகுதியை கடற்படையினரின் பலத்தை கட்டியெழுப்ப ஒதுக்க வேண்டுமெனவும் பல பீரங்கிப் படகுகளை கொள்வனவு செய்ய ஒதுக்குமாறும் கூட்டுப் படைகளின் தளபதியும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி கோரியுள்ளார். சுமார் 400 கோடி ரூபா செலவில் கடற்படைக்கான கப்பல்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தமொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் தயாசந்தகிரி தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்துள்ளார்.

சுமார் 300 கோடி ரூபா செலவில் பத்து அதிவேக பீரங்கிப் படகுகளையும் 60 கோடி ரூபா செலவில் துருப்புக் காவி, தரையிறங்கு கலங்களையும் கொள்வனவு செய்வதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகி நான்கு நாட்களில் கடல்கோளினால் கடற்படை பாரிய இழப்பைச் சந்தித்ததால், தற்போது சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுக்கும் நிதியில் ஒரு பகுதியை கடற்படைக்காக கிள்ளியெடுப்பதற்கான திட்டங்களுடன் கடற்படைத் தளபதி காய் நகர்த்தி வருகிறார்.

கடற்படையை கட்டியெழுப்ப முயற்சி ஒரு புறம் நடக்கையில், விமானப் படையினருக்கான போர் விமானக் கொள்வனவில் தீவிர அக்கறை காட்டி வரும் விமானப் படைத்தளபதி ஏயார் மாஷல் டொனால்ட் பெரேரா, பலாலி விமானத் தள ஓடு பாதையையும் பலகோடி ரூபா செலவில் அவசர அவசரமாகப் புனரமைத்து வருகின்றார். இதற்காக அமெரிக்க படையினரின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிக்கென அமெரிக்கப் படைகள் பாரிய சரக்கு விமானங்களிலும் பாரிய கடற்படைக் கப்பல்களிலும் வந்திறங்கிய போது அவர்கள் பெருமளவு இயந்திர உபகரணங்களையும் கொண்டு வந்தனர். ஆனால் அவை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இங்கு கொண்டு வந்த இந்த இயந்திர உபகரணங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் இங்கேயே விட்டுச் செல்லவுள்ளனர். அவை இராணுவத் தளபாடங்களாகக் கூட இருக்கலாம்.

வேறொரு நாளில் அமெரிக்க கப்பல்கள் அல்லது விமானங்கள் வந்தால் அவை மிக நுணுக்கமாக அவதானிக்கப்படும். அவற்றில் என்னென்ன வருகின்றன என்பதும் அறியவரும். ஆனால் நிவாரணப் பணிக்கென நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து வந்திறங்கிய போது அவற்றில் வந்தவை பற்றி எதுவுமே தெரியாது. இராணுவத் தளபாடங்கள் கூட அவற்றில் அடங்கியிருக்கலாம்.

இந்த நிலையில் அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படையினர் போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதுடன், பாரிய சரக்கு விமானமான சி.130 ற்கான உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யவுள்ளனர். அமெரிக்கத் தயாரிப்பான சி.130 ரக ஹேர்குலிஸ் சரக்கு விமானங்கள் இரண்டு தற்போது இலங்கை விமானப் படையினரிடம் இருக்கின்றபோதிலும் அவை பழுதடைந்த நிலையில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை திருத்துவதற்கான உதிரிப்பாகங்களை தந்துதவுமாறு விமானப் படைத்தளபதி கேட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாயிருக்கும் சரக்கு விமானங்களில் ஒன்றையாவது தந்துதவுமாறும் அவர் கேட்டுள்ளார். பல நூறு துருப்புகளையும் யுத்த டாங்கிகள் போன்ற கனரக வாகனங்களையும் ஒரே நேரத்தில் ஏற்றியிறக்கும் வல்லமை கொண்ட இந்தச் சரக்கு விமானங்கள் தரையிறங்கும் வகையிலேயே தற்போது பலாலி விமான ஓடு பாதையும் திருத்தியமைக்கப்படுகிறது.

கடல்கோளினால் கடற்படையினர் பெரும் இழப்பைச் சந்தித்த அதேநேரம் கடற்புலிகளின் பெரும் வளர்ச்சியும், புலிகள் வசம் தற்போது வானூர்திகள் இருப்பதான தகவல்களுமே கடற்படையை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்தே குடாநாட்டுக்கான படையினரின் பயணத்திற்கு இனிமேல் விமானப் படையை நம்பியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த, விமானப் படையினரின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

புலிகளின் வான் படையிடமிருப்பதாக படையினர் கருதும் வானூர்திகள் யுத்த விமானங்களல்ல.அவை இலகு ரக விமானங்களென்பதால் விமானப் படையினரின் போர் விமானங்களுடன் அவை மோதலில் ஈடுபடமாட்டாது. ஆனாலும், அதனைப் பயன்படுத்தி புலிகள் முக்கிய இலக்குகள், படைத்தளங்கள், பாரிய போர்க் கப்பல்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தி விடக் கூடுமென்பதாலேயே விமானப் படையின் பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் அவசர வேண்டுகோளையடுத்து சி.130 ரக போக்குவரத்து விமானத்தை இலவசமாக வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதேநேரம் பெல்-412 மற்றும் `மில் மி-17' ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்களை கூடுதலாக வாங்க வேண்டுமென அமெரிக்கா சிறிய நிபந்தனையொன்றையும் விதித்துள்ளதால் இவற்றில் இரண்டு ஹெலிகொப்டர்களை உடனடியாக கொள்வனவு செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. பெல் விமான நிறுவனமும் தனது ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது.

கடல்கோள் அனர்த்தத்தால் அழிந்து போன தங்கள் தேசத்தின் மீள் கட்டுமாணப் பணிகளிலும் மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் விடுதலைப் புலிகள் மிகவும் தீவிரமாக உள்ள இவ்வேளையில் அரசு ஏன் ஆயுதக் கொள்வனவிலும் யுத்தத்திற்கான தயார்படுத்தலிலும் தீவிரம் காட்டுகின்றதென்ற கேள்வியும் எழுகிறது.

கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியை பயன்படுத்தி முப்படைகளையும் இவ்வேளையில் நன்கு கட்டியெழுப்பி விடலாமென அரசு கருதுவது போல் தெரிகிறது. இந்த நிதியை அரசு போர்த் தளபாடக் கொள்வனவுக்காகப் பயன்படுத்துவதாக விடுதலைப் புலிகளும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் இது குறித்து சர்வதேச சமூகமும் கவனம் செலுத்த வேண்டுமென்ற வற்புறுத்தலும் அதிகரித்து வருகின்றது.

சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகும் வாய்ப்பே இல்லையென்ற நிலையிலும் தங்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகாவிடின் ஈழ விடுதலைப் போராட்டத்தை தாங்கள் தொடரப் போவதாக புலிகள் அறிவித்த நிலையிலும் நாட்டில் மீண்டும் யுத்தம் வெடித்து விடலாமென்ற கடுமையான சூழ்நிலை நிலவியது. ஆனாலும் கடல்கோளானது சமாதான முயற்சிகளை மட்டுமல்லாது யுத்த சூழ்நிலையையும் அடித்துச் சென்றுவிட்டது.

தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகள் போன்று அந்நியப் படைகள் நிலை கொண்டிருக்கையில் இலங்கை அரசு யுத்த முனைப்பிலும் ஆயுதக் கொள்வனவிலும் தீவிரம் காட்டுவது குறித்து கேள்விகள் எழுகின்றன. இது குறித்து இந்தியாவும் மிக அவதானமாக இருக்கின்ற போதும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புகிறதோ இல்லையோ, அரசு படைபலத்தை கட்டியெழுப்புகிறது என்பது அப்பட்டமான உண்மை.

தினக்குரல்

  • தொடங்கியவர்

அரசாங்கத்துக்குள் முறுகல் தீவிரம்

ஜே.வி.பி. தலைவர் திடீரென நாட்டை விட்டு வெளியேற்றம்

சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ...........

தினக்குரல்

  • தொடங்கியவர்

இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி வழங்குவது குறித்து இந்தியா கடும் கவலை

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்கா அதீத அக்கறை காட்டி வருவது குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்து இலங்கை இராணுவம் தனது உயர் அதிகாரிகளை ஹவாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பசுபிக்குக்கான கட்டளைப் பீடம் ஹவாயிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பிரிகேடியர் ஹேந்திர வித்தாரனவை ஹவாய்க்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வழமை நடைமுறைகளின்படி ஒரு அதிகாரிக்கு, இவ்வாறு விசேட பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பான இறுதி முடிவினை விசேட குழுவொன்றே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் பிரிகேடியர் வித்தாரனவை ஹவாய்க்கு அனுப்புவதா என்பது குறித்து விசேட குழுவொன்று கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் குழு பிரிகேடியர் குலதுங்கவே இவ்வாறான பயிற்சிக்கு அனுப்புவதற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ரிச்சட் கிர்வினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க தூதரகம் பிரிகேடியர் வித்தாரனவை பயிற்சிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் வித்தாரன ஹவாய் செல்லவுள்ளார். இதேவேளை, புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரியும் ஹவாய்க்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இராணுவ பாரம்பரியத்தின் படி தேசிய புலனாய்வு பணியக தலைவர் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.

Thinakkural

  • தொடங்கியவர்

சிங்கள நாளேடுகளில் வெளிவந்த செய்தி .........

ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க இருந்தவர் பூசகர்

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்கென வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களுடன் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்றைப் பாரமெடுக்கவிருந்த அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பூசகர் என்பது மேற்படி ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்கக் கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்தும், விசாரணைகளிலிருந்தும் தெரியவந்திருப்பதாக இரகசிய பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதற்கேற்ப, மேற்படி ஹெலிகொப்டர் பற்றிய விடயத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும், தொடர்புள்ளதா என்ற விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் "லங்காதீப"வுக்கு கூறினார்.

மேற்படி சர்ச்சைக்குரிய அரசு சார்பற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் கொண்டுவரப்பட்ட "பெல்" ரக ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்க குறித்த நிறுவனமே நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளராகிய பூசகர் தற்போது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலேயே வசித்து வருவதாகவும், இரகசிய பொலிஸ் அதிகாரிகளால் முன் அறிவிப்புக் கொடுக்கப்பட்டு கடந்த 2 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று குறித்த அப்பூசகரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய வாக்குமூலங்களைப் பதிவுசெய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கொழும்புக்கு கூட்டிவந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.

குறித்த ஹெலிகொப்டரை இந்நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள் அது சட்டவிரோதமானது என்று அறியாமலிருக்க இடமில்லையென்றும், குறித்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந்நாட்டவர்களே என்பதால் ஹெலிகொப்டர்களை இறக்குமதி செய்வதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்டபூர்வ முறைகளை அறிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லையென்றும், அதனால், இது சந்தேகத்துக்குரிய செயற்பாடே என்றும் இரகசிய பொலிஸ் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இதுபற்றி வேறும் சில அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களிடமும் இரகசிய பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இந்த நாட்டுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது ஹெலிகொப்டர் பற்றியும் விசாரணைகளை இரகசிய பொலிஸ் தரப்பு ஆரம்பித்துள்ளது. இந்த ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க நியமிக்கப்பட்டிருந்தவர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரென்றும், இது பற்றியும் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்தரப்பு கூறியுள்ளது.

மேற்படி இரண்டு ஹெலிகொப்டர்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சுப் பிரிவின் பொறுப்பிலுள்ளன. இதுபற்றி இரகசிய பொலிஸ் தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-லங்காதீப 4/2/2005-

  • தொடங்கியவர்

குழந்தையின் மரபணு சோதனை அறிக்கை இரு வாரங்களில்

சுனாமி பேரலை தாக்கத்தால் தனது பெற்றோரை இழந்திருக்கும் "குழந்தை' மரபணு சோதனைக்காக ( டி. என். ஏ) இன்று கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது.

இதே வேளை குழந்தைக்கு உரிமை கோரிய பெற்றோர்களை யுனிசெப் கொழும்புக்கு அழைத்து வரவுள்ளது.

டாக்டர் மாயா டி குணசேகர மரபணு சோதனையை நடத்துவார். டாக்டரின் அறிக்கை இரண்டு வார காலத்திற்குள் கல்முனை நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும

Virakasari

  • தொடங்கியவர்

லெப். கேணல் கௌசல்யன் உட்பட்ட போராளிகளின் வித்துடல்கள்

கொக்கட்டிச்சோலையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை நாமல்கம பிள்ளையாரடியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் போராளிகள் நால்வர் உட்பட ஜவரின் மரண விசாரணைகள் இன்று நண்பகல் நடைபெறவிருக்கின்றது.

தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் இவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் எனப்படும் இளையதம்பி லிங்கராஜாää மேஜர் புகழன்ää மேஜர் செந்தமிழ்ää 2ம் லெப். விதிமாறன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி கே.விநாயகமூர்த்தி ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் அவரது மெய்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிளும்ää போராளியான வினோதனும் இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காயங்களுக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரநேரு அரியநாயகம் தற்போது உடல் நிலை தேறி வருகின்றார்.

ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசத்தில் அதுவும் பிரதான நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு கருணா குழுவினரே பொறுப்பு என படைத்தரப்பு சந்தேகம் தெரிவிக்கின்றது.

இருப்பினும் இச்சம்பவமானது இராணுவத்தினரின் ஒத்துழைப்பின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என குற்றம் சுமத்தும் தமிழ்க் கட்சிகள் இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலங்கா அரசாங்கம் தான் எற்க வேண்டும்.

இவர்களின் இந்த பயணம் பற்றி இராணுவ புலனாய்வு அறிந்து தகவல் வழங்கியிருக்கின்றது என்றும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் சந்தேகங்களும் நிலவுகின்றன.

உயிரிழந்தவர்களின் உடலங்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.

விடுதலைப் புலிப் போராளிகளின் வித்துடல்கள் நேரடியாக கொக்கட்டிச்சோலையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்புடன் வித்துடல்களை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொன்டுள்ளனர்.

லெப். கேணல் கௌசல்யன் விடுதலைப்புலிகளின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவர்.

கடந்த ஒரு வார காலமாக வன்னியில் தங்கியிருந்து ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Puthinam

  • தொடங்கியவர்

தாக்குதல் சம்பவத்துக்கு அரச புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளருமான கௌசல்யன் உட்பட நால்வர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவை குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்படுகொலைச் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கௌசல்யன் உட்பட புலிகளின் ஐந்து போராளிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஆயுதக்குழுக்களும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து விடுதலைப்புலிகளை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதிக்கவுள்ளதுடன் இதுவரை காலமும் கட்டியெழுப்பப்பட்டு வந்த சமாதான முயற்சிகளுக்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக்குழுப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்ää யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் இது என்றும்;ää இப்படியான சம்பவங்கள் மேலும் பரவலடையாமல் தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் புலிகளும் உறுதிபூண வேண்டும் என்றும் கூறினார்.

தாக்குதல் சம்பவம் பற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து கூறுகையில்ää இந்தத் தாக்குதல் முன்னரே செம்மையாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் அல்லது பாரிய பதில்த் தாக்குதல் ஏதேனும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசுää தலைநகர் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Puthinam

  • தொடங்கியவர்

வெலிக்கந்தை சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு கண்டனம்

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 6 பேர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோர் கொல்லப்பட்டதை சிறீலங்கா அரசாங்கம் கண்டிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு வெலிக்கந்தைக்கு அருகில் ஏ-11 வீதியில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விவகாரங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வரும் வேளையில் அதனைச் சீர்குலைப்பதற்கு இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெளிவாக புலனாகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் சம்பவங்கள் இடம்பெறுமானால் யுத்தம் மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்ää சமாதான வழிமுறைக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Puthinam

  • தொடங்கியவர்

போராளிகளின் உடலங்களை ஒப்படைப்பதில்

சீறிலங்காப் படையினர் திட்டமிட்டு இழுத்தடிப்பு

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினட் கேணல் இ.கௌசல்யன் மற்றும் 4 போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடத்துமாறு பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த உடலங்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் இராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த உடலங்கள் மீதான பிரேத பரிசோதனை பொலன்னறுவை வைத்தியசாலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பதில் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சிறீலங்கா பொலிசாரின் திட்டமிட்டு இழுத்தடிக்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரனைகளில் இத்தகைய தாமதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் விதிமாறன் மற்றும் உயிரிழந்த போராளிகளின் உறவினர்கள் ஆகியோர் கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வைத்தியசாலைக்குச் சென்று உடலங்களை அடையாளம் காட்டினார்கள்.

இலங்கை நேரப்படி மாலை 5.30ற்கு இந்த உடலங்கள் அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எமது செய்தியாளரின் தகவலின் படி இரவு 7.00 மணிக்கும் 7.30ற்குமிடையில் இவை வந்து சேரும் என்றும்ää அதன்பின்பு மரண விசாரனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று காலை மரணமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு மரண விசாரணையின் பின்பு அவரது சொந்த இடமான திருக்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.

இந்த சம்பவத்தின்போது காயமடைந்த விடுதலைப் புலிப் போராளி வினோதன்ää முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்க் காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள தகவலின் படிää நான்கு முதல் ஐந்து பேர் வரை தமது வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.

இருப்பினும் இது தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு தகவலொன்றின் படி இவர்களது வாகனத்தை மற்றுமொரு வாகனத்தில் பின்தொடர்ந்த கொலையாளிகள் முன்னால் சென்று வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும்ää

இந்த நபர்கள் இராணுவச் சீருடை போன்று உடையணிந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Puthinam

  • தொடங்கியவர்

பாவம் இலங்கை இரண்டு பக்க இடி -செங்குட்டுவன்

இலங்கையின் இனப்பிரச்சினையை மட்டுமல்ல ஏனைய எல்லாப்பிரச்சனைகளையும் பயன்படுத்தி இந்த நாட்டிற்குனுள் தத்தமது இராணுவ அரசியல் இலக்குகளை எட்டவும், பிராந்தியத்தில் தமது மேலாதிக்க சக்தியை வலுப்படுத்தவும் பல்வேறு வகையில் ஊடுருவல்களை, சிலவேளைகளில் வெளிப்படையாகவும் பலசமயங்களில் மறைமுகமாகவும் மூலோபாயங்களை வகுத்து மேற்கொண்டுவருகின்றன.

இதனை அடுத்த நாடுகள் மறுத்தாலும், உண்மைகளை மறக்கமுடியாதுதானே?!

இந்த ஊடுருவல்களுள் சர்வதேச வல்லரசும், பிராந்திய வல்லரசும் ஒருவரையொருவர் பார்த்து புன்முறுவல் பூத்து கைகுலுக்கிய படியே சவால்விட்டுப் போட்டிபோடுவதுதான் முக்கியமான விடயம்

மிக அன்மைக்காலத்தில் இந்த ஆதிக்க சக்திகளின் மேலாதிக்கப்போட்டி பல்வேறு சம்பவங்களில் மிக உத்வேகத்துடன் அதே சமயம் மௌன உறுதியுடன் நிகழ்ந்தே வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சுனாமி நிவாரணப் பணிகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்த வேகத்திலிருந்து படைகளை அனுப்பியதுவரை அந்தப் போட்டி ஆரோக்கியமானதாகதட தெரியவில்லை

நாம் சொல்லுவது இலங்கைமீதான இந்தியாவினதும், அமெரிக்காவினதும் அக்கறையினை பற்றித்தான்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் காரணத்துடனான அக்கறை, காரணத்துடனான உதவி, காரணத்துடனான கருணை, காரணத்துடனான செயற்பாடுகள்? மாதிரிக்கு ஒன்று?

இலங்கையின் அதியுயர் மலைச் சிகரமான ?பேதுறுதாலகால? மலையுச்சியில் கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமொரிக்க அனுமதி கேட்டதாம்.

  • தொடங்கியவர்

லப்டொப் கணினி திருடிய ரூபவாஹினி ஊழியர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான லப்டொப் கணினி இயந்திரமொன்றை திருடி விற்பனை செய்ய முயன்ற அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கறுவாக்காட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1-1/2 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த லப்டொப் இயந்திரம் கூட்டுத்தாபனத்தினால் தென் பகுதியில் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றின் பாவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த போது கடந்த மாதம் காணாமல் போயிருந்தது.

இதேவேளை, காணாமல் போன லப்டொப் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளை நிறத் துணிடொன்று கண்டுபிடிக்கப்பட்டு கூட்டுத்தாபன அதிகாரிகளினால் கறுவாக்காடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, புலன் விசாரனைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வியாழக்கிழமை மாலை காணாமல் போன லப்டொப்பை விற்பனை செய்யவிருந்த கூட்டுத்தாபன உத்தியோகத்தர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள கடையொன்றில் வைத்து கைது செய்து லப்டொப்பையும் மீட்டுள்ளனர்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

உதவி புரிவதாக உறுதியளித்தவர்கள் கைகழுவி விட்ட அவலமான நிலை!

ஈராக் தீவிரவாதிகளினால் பயண கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையை வந்தடைந்த தனக்கு நட்டஈடு, நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த இலங்கை வெளிநாட்டமைச்சு இன்றுவரை எந்தவிதமான உதவிகளையும் வழங்கவில்லையென தெரிவிக்கும் வத்தளையைச் சேர்ந்த தர்மேந்திரா ராஜரட்ணம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை வெளிநாட்டமைச்சருக்கு எடுத்துக்கூற பலமுறை முயன்றபோதும் அம்முயற்சியை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உதாசீனம் செய்வதாக கவலையுடன் தெரிவிக்கிறார்.

குவைத் நாட்டிற்கு தனது குடும்பத்தின் வறிய நிலை காரணமாகவே வருமானத்தைப் பெறுவதற்காக தொழில் செய்ய சென்றதாகவும், குவை நாட்டில் சிலகாலம் தொழில் புரிந்ததாகவும் பின்னர் தான் தொழில் புரியும் கம்பனியின் கட்டாய பணிப்பின் பெயரில் ஈராக் நாட்டிற்கு அமெரிக்க இராணுவத்திற்கான பொருட்களைக் கொண்டு சென்றபோதே ஈராக் தீவிரவாதிகளால் தான் கடத்தப்பட்டு 44 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் மிகுந்த மன விரக்தியையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தான் வீட்டு வறுமையைப் போக்குவதற்காகவே வெளிநாடு சென்றதாகவும் தனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையால் தனது குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது பிள்ளைகள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் உள்ளபோதும் அவர்களை ஒரு உயர்தர பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதி கிடைத்தும், அங்கு அவர்கள் செல்வதற்கு வசதிகள் இல்லாத நிலையில் தாம் இருப்பதாகவும், மிகவும் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தார்.

சொந்தக் குடியிருப்புகள் மற்றும் ஜீவனோபாயம் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கை வந்தபோது தனக்கும் பலர் அறுதல் வார்த்தைகள் கூறியதாகவும், வெளிநாட்ட அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தனக்கு நஷ்ட ஈடும் நிவாரணமும் பெற்றுத் தருவதாக உறுதிமொழிகள் அளித்ததாகவும் ஆனால், தான் நாடு திரும்பி இருமாதங்கள் சென்ற நிலையிலும் எதுவித தொடர்புகளும் தம்முடன் வைக்கவில்லையென்றும் தான் இதுபற்றி வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் விஸ்வ வர்ணபாலாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் கடிதம் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லையென்றும் பின்னர் தான் பலமுறை வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்து தனது நிலையைமை எடுத்துக்கூற அனுமதி கேட்டும் அது பலனளிக்கவில்லையென்று மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய வேதனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவரது குடும்பத்திற்கு உதவ விரும்புவோர் தேசிய சேமிப்பு வங்கியின் வத்தளைக் கிளை 100850265403 என்ற டி.டி.இராஜரட்ணத்தின் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யலாம்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

யதார்த்தத்தை நோக்கி பயணிக்க வேண்டிய இந்தியா. - சிறி.இந்திரகுமார்.

ஆழ் தியானத்திலிருந்த ஒரு முனிவரின் தவம் திடிரென கலைந்து போனது போன்ற ஒரு நிலைமையைத்தான் இந்தியா இப்போது அனுபவிக்கிறது.

ஏன் இந்த தவம்கலைந்த நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால இப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் இந்தியா ஆழ்த்தியானத்திலிருந்ததும் தவறு. தியானம் கலைந்து அந்தரிக்கும் இந்த நிலையும் தவறு.

அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சுனாமி சுழற்றிய சுழற்றல் இந்தோனிசியா, தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என எல்லா இடங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும் இந்த தேசங்களை எல்லாம் இந்த நாடுகளின் பொருளாதாரரீதியிலான இழப்புக்களுக்கூடாக பார்க்கின்ற ஒரு போக்கே இப்போது காணப்படுகிறது.

ஆனால் இந்த சுனாமிப் பேரனர்த்தமானது இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியிலான அழிவுகளுக்கு அப்பால் இந்தியா இந்துசமுத்திரப் பிரந்தியத்தின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வெறும் பொருளாதார ரீதியிலான இழப்புக்களோடு மட்டும் மட்டுப்படுத்தி விடமுடியாது.

இந்த இந்தியாவுக்கான இழப்பை அல்லது தாகத்தை இந்த பிராந்திய வல்லரசின் அரசியல் ஸ்தானத்தில் ஏற்ப்படுத்தியுள்ள பெரியதொரு தாக்கத்திற் கூடாகவே பார்கவேண்டும்.

இப்பொழுது பெருமளவு இராஜதந்திரிகளும், அரசியல் நோக்கர்களும் இந்தியாவுக்கான இழப்பை இப்படித்தான் பார்கிறார்கள்.

இதற்குக் காரணம் இந்த விடயத்தில் இந்தியா சந்தித்துள்ள நவீன தோல்வி ஒன்றாகவே இதனைக் கருதுகிறார்கள்.

இந்தியா எவ்வளவுதான் அமைதியா தன்னைக்காட்டிக் கொண்டாலும் அது உள்ளுர குமறிக்கொண்டிருக்கிறது.

பிரந்திய வல்லரசு என்ற வகையில் அதன் கௌரவத்தில் கீறல் விழுந்து விட்டதாகவே அது கருதுகிறது.

இந்த சுனாமி விவகாரத்தை இந்தியா ஒரு சின்ன நடவடிக்கைமூலம் கையாண்டு விடும் நோக்கில் தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டபோது. அமெரிக்காவோ, தான் எப்படி ஒரு பேரண்ட பேரரசாக தன்னைக்காட்டடிக் கொள்கிறதோ அதே போன்று இந்தப் பிராந்தியத்தில் இந்த விவகாரத்தை கையாள முனைந்தபோதே இதனை ஒரு பிரமாண்டமான விவகாரமாகக் கையாண்டது.

அமெரிக்காவின் இந்த பிரமாண்டமான நடவடிக்கையின் முன் இந்தியா எதுவும் செய்யமுடியாத ஒரு நிலைமையிலேயே இருந்தது.

இந்தியாவால் இந்தியாவுக்குள் மட்டும் தனித்துவத்தைப் பேணிக்கொண்டதே தவிர இந்தப் பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையில் தனது தனித்துவத்தை இழந்துதான் போனது.

இந்தியாவுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களுக்கு சர்வதேச உதவிகள் எவையும் தேவையில்லை எனக்கூறி தனது இழப்பை தானே நிவர்திசெய்து கொள்வதும் சுனாமி எச்சரிக்கை மையம் தொடர்பாக அதனை தானே நிறுவிக்கொள்ளும் எனக் கூறிக்கொண்டதும் இந்தியாவுக்குள் இந்தியாவின் தனித்துவத்தை பேணமட்டுமே இந்த அணுகுமுறை போதுமானதாவுள்ளது.

இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த நவீன இராஜதந்திரத்தோல்வியை எனி எவ்வாறு நிவர்த்திசெய்து கொள்ளப்போகிறது என்பது இந்தியாவுக்கு ஒரு பெரும்பிரச்சனையாக இருக்கும்.

இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த இராஜதந்திர நெருக்கடியானது இந்தியாவின் காலம் கடந்த வெளியுறவுக் கொள்கையின் இளமையின் வெளிப்பாடு என்பதே மெய்.

இதிலும் இந்தியாவின் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கூடாக பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சம அந்தஸ்துக் கொண்டவர்கள் என்பது தான் இப்போதுள்ள கள நிலவரம்.

ஆனால் இந்தவிடயத்தில் இந்தியா இலங்கை அரசை நம்பிச் செயற்பட்டதே தவிர புலிகள் இயக்கத்தை கவனத்தில் எடுக்கவில்லை. இன்னமும் எடுக்கவில்லை.

எண்பத்து ஏழுகளின் பின்னர் இந்தியா இலங்கை விவகாரத்தில் சந்தித்த சில கசப்பான அணுபவங்களின் அடிப்படையில் ஒரு பழிவாங்கும மனோபவத்துடனேயேதான் தனது அணுகுமுறையை மேற்கொள்கிறதே தவிர காலத்துக்கு பொருந்திய புதிய மாற்றத்துக்கம் அணுகுமுறைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை.

இதன் விளைவுகளின் ஒரு படியை இந்தியா இப்டீபாது அனுபவிதிதாகிவிட்டது. இந்தியா அனுபவிக்கும் இந்த நிலைமை இந்தியாவின் கொள்கையின் போக்கில் நீண்டகாலத்துக்கு ஒரு தாக்கத்தை செலுத்தவல்லதாகவே நிச்சயம் இருக்கப்போகிறது.

இந்தியா ஸ்ரீலங்கா அரசை தனது நண்பனாகவே கருதிச்செயற்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ இந்திய நண்பனல்ல என்பதை தெளிவாகவே உணர்திவிட்டது.

இதனை இந்தியாவுடன் ஆலோசிக்காமல் அமெரிக்கப்படைகள் இலங்கைக்கு வருகைதர அழைத்தமையைப் பார்க்கலாம்.

அமெரிக்கபடைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் வரை இந்தியாவுக்கு அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்ருடிப

  • தொடங்கியவர்

எமது இலட்சியப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை

இன்று காலை திருகோணமலை மூதூர் பகுதியில் பொது அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே கருத்துக்கூறிய விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசிற்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மூதூர் கிழக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறீலங்கா அரசின் ஏமாற்று நடவடிக்கைகளை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசின் ஏமாற்று நடவடிக்கைகள் இனிமேலும் தொடரும் பட்சத்தில் நாம் எமது இலட்சியத்தை நோக்கிய பாதையை முன்னெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என்று தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இன்று முற்பகல் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உறவு ரீதியாக இணைந்து செயற்படுவதன் மூலமே ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

புதினம்

  • தொடங்கியவர்

சிறிலங்காவில் அரசியல் வியாபாரமாகும் கரையோர அமைவிடம் - ஞாபகன்

சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் சுனாமி பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுமாக ஏற்பாடுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

முதற்கட்ட மீட்புப்பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட சூழலில் அடுத்த கட்டமான இந்நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கும் தருணத்தில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் கரையோர இட அமைவு பற்றி பெரும் போரே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கடற்கரையோரத்தில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு அப்பால் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது என்ற அதிகார மட்டத்திலான மோதல்கள் ஆளும் கட்சிக்குள்ளே இடம்பெறுகின்றன.

பிரதமர் மற்றும் தீர்மானம் எடுக்கவல்ல தரப்பினர் நூறு மீற்றர் தூரத்துக்குள் எந்தக் கட்டங்களும் அமைக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக அறிவித்துள்ளனர்.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் வேறுசில அரசியல்வாதிகளும் தீவிரமாக எதிர்த்துவருகின்றனர். மக்களின் உயிர், உடமை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே இதனை எதிர்த்து வருகின்றார்கள்.

இந்த ஆண்டில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று கூறும் அனுரா பண்டாரநாயக்க அதை இந்த விதிமுறை நாசமாக்கிவிடும் என்றும் அதனால் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வருமானமும் இழக்கப்படும் என்றும் சொல்கிறனர். அதேவேளை அகதிகளுக்கான ஜ.நா உயர் ஸ்தானிகராலயமும் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு அரசைக் கேட்டிருக்கின்றது.

பாதுகாப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை இன்னும் பலரை ஏதிலிகளாக்கி நிர்க்கதி நிலைக்குள் தள்ளும் என்று அது தெரிவித்திருக்கின்றது. இப்போதைக்கு ஒரு சுனாமி அலை இலங்கைத்தீவைத் தாக்கும் என்பதற்கான திடமான கணிப்புக்களோ தாக்காது என்பதற்கான நம்பிக்கையோ இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவரவர் தத்தமது நோக்கில் விமர்சித்து வருகின்றனர். அதற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார காரணங்களும் காட்டப்படுகின்றன. ஆனால், மிகப்பெரும் உயிரழிவைச் சந்தித்தபகுதி மக்களிடம் இருந்துதான் இந்த எதிர்ப்புக்கள் வருகின்றனவா என்பது தெளிவாக இல்லை. உண்மையில் அத்தகைய தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பிடம் இருந்து எதிர்ப்புக்கள் வரவில்லை. ஆயினும், சாத்தியமான வழிமுறைகளில் கூடியளவுக்கு அவரவரின் பழைய இடங்களுக்கே திரும்பிச் செல்லக்கூடியதான முறையையே கையாளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.

இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு, அழிவை மிகப் பெரிதாக்கி இருக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வழிவகைகளைக் கையாண்டு கூடுதல் நிலப்பரப்பை இழக்காது பாதுகாக்கும் செயற்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று பேசப்படுகின்றது.

ஆனால், அது தொடர்பாக முன் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் கரையோரப் பாதுகாப்புக் கருதிய கரையோர நிலங்களை வெறுமையாகவிடும் திட்டம்கூட பாரபட்சமானதாகவே உள்ளது. கிழக்கு மற்றும் வடக்கின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளில் இருநூறு மீற்றர் தூரம் வரை குடியிருக்கவோ கட்டடங்கள் அமைக்கவோ அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கைப் பகுதியில் அதிகம் நிலத்தை கைவிட விரும்பாத அரசு அதனை நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை கையாளவுள்ளது என்றும் தமிழர் தாயகப் பகுதிகளை அது விடயத்தில் மாற்றாந்தாய் முறையில் அணுகும் நோக்கோடு கூடுதல் நிலப்பகுதியை கைவிடச்செய்கின்றது என்றும் விமர்சனங்கள் உண்டு.

அதைவிடவும் நல அபகரிப்பிற்கான உள்நோக்கமும் அதற்குள் உண்டு. ஏற்கனவே பேரலைகள் தாக்கி இடம்பெயர்ந்த பகுதிகளில் சிறிலங்கா படையினர் புதிதாக படைநிலைகளை அமைப்பதும் மக்களின் எஞ்சிய உடமைகளை அதற்கு பயன்படுத்துவதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது வீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி கையகப்படுத்தி வைத்துள்ளனர். அதுபோன்று வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களிலும் அதிகளவான மக்கள் குடியிருப்புக்களை கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அதனால் பல இலட்சம் மக்கள் ஏதிலிகளாக தமது பொருளாதார அடிப்படைகளையே இழந்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகத் தொடரும் இந்த துன்பியல் வாழ்வும் அதற்கு எதிரான குரல்களும் சிறிலங்காவினாலும் உலகத்தினாலமு; கண்டுகொள்ளப்படாது உள்ளன.

சமாதானத்துக்கான இக்காலத்திலும் அதில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமின்றி அழுங்குப் பிடியாக சிறிலங்காப் படைகள் இருக்கின்றன. அதற்கு எதிராக எந்தக் குரலும் எழும்பத்தெரியாத, கண்டுகொள்ளாத சக்திகள் பெரும்பான்மையினரின் பொருளாதார நலன்களை வாழ்வுரிமையை மையப்படுத்தி இப்போது குரல் எழுப்புவது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையே ஆகும்.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் மீள்குடியேற்றத் திட்டம் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்ட தமிழர் தாயகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டதாக இருப்பதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசிடம் இருந்து போதிய உதவிகள் மறுவாழ்வுத் திட்டங்கள் எதனையும் எதிர்பார்ப்பது இத்தனை காலப் பட்டறிவுக்கும் முரணானது. அதனால் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களை வகுக்கக்வேண்டியவர்களாக தமிழர்கள் இருக்கின்றனர்.

அதன் முன்னோடித் திட்டத்தை இப்போது விடுதலைப்புலிகள் முன்னெடுக்கின்றனர். அவர்கள் கரையோரத்தில் இருந்து சுமார் 400 மீற்றருக்கு அப்பால் மீள்குடியேற்றத்தை நிறுவுவதற்கு தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். கரையோரத்தில் இருந்து 300 மீற்றருக்கு அப்பாலேயே இப்பகுதிகளில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதென முதலில் தீர்மானித்திருந்தபோதிலும் பாதுகாப்புக் கருதி தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதனால் சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்து தமது நிரந்தர பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்தும் அச்சுறுத்தல் இல்லை. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே எடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தாயகத்துக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களுடன் அமைந்த வாய்ப்புக்கள் கிடைக்கும்போது கரையோரம் முழுவதையும் பயன்பாட்டுக்கு உட்படுத்த இயலும்.

இது தொடர்பாக எந்த எதிர்வினைகளும் கண்டனங்களும் இல்லாதபோது தென்னிலங்கையில் ஏன் இந்தக் கூக்குரல்கள்? ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள்? அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதுவிடயத்தில் வேறுபாடான கருத்துக்களும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து பேசும் வார்த்தையாடல்கள்?

இது ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகின்றது. தென்னிலங்கையின் ஆளும் தரப்பையோ எதிர்த் தரப்பையோ சேர்ந்த முக்கிஸ்தர்கள் எவருமே மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவில்லை. வெறுமனே தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முதலாளிய சமூகத்தின் நலன்களை பிதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.

அல்லது அதன் மறுபக்கமாக நோக்கின் உண்மையில் மக்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றார்களேயானால் எந்த மக்களின் நலனை அவர்கள் கருதுகின்றார்கள். தமது நீண்ட கால வாழ்வமைந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதனால் அவர்களது பல்வேறு நலன்களும் சேதமடையும் என்று எண்ணுகின்றார்களா?

யாரும் கட்டுப்படுத்தவியலாதது என்று இப்போது கருதப்படும் இயற்கை அனர்த்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்காகக் கவலைப்படுபவர்கள் தமிழ் மக்கள் பற்றி இந்த இருபது ஆண்டுகாலமாக கவலைப்படாமல் இருப்பது ஏன்?

வலிந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பையும் தமிழர்களின் பொருளாதார, கலாசார கூறுகளையும் இல்லாதொழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? இது பற்றிய கவலையற்ற மகிழ்ச்சிகரமான அவர்களது வெளிப்பாடே உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழர்களது தாயகப் பகுதிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாகும்.

இது தொடர்பாக எத்தனை இலட்சம் மக்கள் தமது அதிருப்திகளையும் வேதனைகளையும் சொல்லிவிட்டார்கள். இவை யாவும் செவிசாய்க்கப்பட்டனவா? மனிதாபிமான ரீதியிலோ அல்லது குறைந்த பட்சம் அவர்களது சட்டத்தின் படியோதானும் தீர்க்கப்பட்டதா?

இப்போது வலிகாமம் வடக்குப் பகுதியில் தமிழ் மக்கள் தம்மை மீளக்குடியே அனுமதிக்கக்கோரி தொடுத்த வழக்கிற்கு கூட வலிந்து திணிக்கப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

மனங்கள் திறந்தால் திறக்கக்கூடிய வழிகளையே திறக்க மறுக்கும் இந்த ஆட்சியாளர்கள், இயற்கையை வெல்லமுடியாது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அது அப்பட்டமான இனவாத அரசியல் வியாபாரமாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?

  • தொடங்கியவர்

தமிழ்ச்செல்வனின் மலையக பயணத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? பிக்கு எம்.பி.பாராளுமன்றத்தில் கேள்வி

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத இயக்க தலைவரொவர் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை உண்மைதானா? என்பது குறித்தும் இவரது பயணத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? என்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர். அத்துருலிய ரத்ன தேரர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று செவ்வாக்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் லொக்குபண்டார தலைமையில் கூடி கேள்வி நேரம் முடிந்த பின்னர் அத்துருலிய ரத்ன தேரர் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். அக்கூற்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார். இது யுத்த நிறுத்தத்தை மீறும் ஒரு செயலாகும். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் அழைப்பையேற்று மலையகத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ்ச்செல்வன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிகிறோம். வடபகுதியில் ஆயுதங்களுடன் திரியும் ஒரு அமைப்பு தென்பகுதியிலும் சுதந்திரமான நடமாட அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தமிழச்செல்வனின் இந்த விஜயத்திற்கு அனுமதி வழங்கியது யார்? இது தொடர்பாக பாதுகாப்பமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, அச்சமயம் பாதுகாப்பமைச்சரோ, பிரதிப் பாதுகாப்பமைச்சரோ சபையிலில்லாத காரணத்தினால் இது குறித்து சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

பிணம் தின்னும் கழுகுகள் வழங்கும் மூன்றாவது சுனாமி

தமிழும், தமிழினமும், தமிழரின் தேசங்களும் முன்னரும் பலதடவைகள் கடற்கோள் தந்த அவலங்களுக்கு முகம் கொடுத்ததாக கருத்துக்கள் பல உண்டு. பண்டைய காலத்தில் 'சம்புத்தீவு" என்கின்ற நாவலந்தீவின் தெற்குப்பகுதியே தமிழகம் ஆகும். வடக்கே விந்தியமலை, தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிக்கா, கிழக்கே சீனம்- என்கின்ற இலெமூரியாக் கண்டம், முதலில் ஏற்பட்ட கடற்கோளினால் துண்டாடப்பட்டது. இதனால் விந்தியத்திற்கு வடக்கே இருந்த கடல் வற்றியது. இமயமலை தோன்றியது. பின்னர் ஏற்பட்ட இரண்டாவது கடற்கோளில், மூதூருடன் கூடிய தமிழகத்தின் பெரும்பகுதியைக் கடல் கொண்டது. இம்மூதூரே பின்னாட்களில் பாண்டிய அரசனால் ஆளப்பட்ட மதுரையாகும். இப்பெரு ஆழிப்பேரலையின் போதே இலங்கை தமிழகத்தினின்று பிரிந்தது.

பஃறுளி, குமரி ஆறுகளும் குமரிக்குன்றமும் அழிந்து போயின. முத்துக்குப் புகழ் பெற்ற பாண்டியனின் தலைநகரான கபாடபுரம் மூன்றாவது கடற்கோளின் போது அழிவைச் சந்தித்தது.

இவ்வாறு தொல்காப்பியப் பாயிரச் செய்யுளையும் சிலப்பதிகாரத்தையும், புறநானூறையும் மேற்கோள் காட்டி பேராசிரியர் பெ. ராசாராமன் போன்றோர் குறிப்பிடுவதுண்டு. ஆனால் கிறிஸ்துவுக்கு பின் மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் கடற்கோள் பற்றிய குறிப்புக்கள் கிடையாது. என்றும் சிலப்பதிகாரம், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் உள்ள குறிப்புக்களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர்கள் மிகைப்படுத்தினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியம் போன்றோர் கூறுவதுண்டு. பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழ்தெங்கம், ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்குறும்பனை... என்ற பட்டியலில் உள்ள ஏழ்தெங்க நாட்டை, ஈழவர் வாழ்ந்த தெங்க நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும் - என்ற ஆய்வுக் கருத்தையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எவ்வாறு பாண்டியர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு என்ற பெயர் பெற்றதோ அதேபோல் ஈழவர் வாழ்ந்த நாடு, ஈழநாடு என வழங்கப்பட்டது. எழு அல்லது இழு என்ற வினையடியே திரிந்து ஏழ் என்ற ஆனது என்பதே பொருத்தமானதாகும். ஈழர் அல்லது ஈழவரே, ஈழத்தின் ஆதிக்குடியினர் ஆவர்கள். ஈழர் என்பவரையே ஆரியர், இயக்கர் என்று அழைத்தார்கள். மகாவம்சமும் சிங்களவர் குடியேறுவதற்கு முன்னரேயே அங்கு இருந்த இயக்கர் குறித்துக் கூறுகின்றது.

ஆழிப்பேரலை தந்த அழிவினால் தமிழீழமும் தமிழீழத்தவரும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் கடற்கோள் குறித்த விரிவான வரலாற்று ஆய்வைச் செய்வது அல்ல எமது நோக்கம். அதற்கு வேறு சந்தர்ப்பம் உண்டு. ஆனால் சமீபகால வரலாற்றில் இப்படிப்பட்ட இயற்கை அனர்த்தம் எதுவும் தமிழீழ மண்ணில் நிகழ்ந்ததில்லை. தவிரவும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட அனர்த்தங்கள் யாவும் இயற்கையோடு மட்டுமே சம்பந்தப்பட்டவையாக இருந்ததைச் சுட்டிக் காட்டுவதுதான் எமது நோக்கமாக இருந்தது. முன்னைய கடற்கோள் அழிவுகளின் போது இயற்கை தந்த அவலங்களை மட்டுமே பண்டைத் தமிழகம் எதிர் கொண்டது. ஆனால் இன்று தமிழீழமும் தமிழினமும் எதிர்கொள்வது ஆழிப்பேரலை அனர்த்தங்கள் மட்டும்தானா? என்ற கேள்விக்குரிய விடையைத் தர்க்கி;ப்பதே எமது நோக்கமாகும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழர் தாயகத்தை கட்டி எழுப்புவதற்காக சகல வளங்களையும் ஒன்று திரட்டித் தீவிரமாக உழைக்குமாறு தமிழீழத் தேசியத் தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பின் போது தேசியத்தலைவர் ஒரு முக்கிய விடயத்தை மிகத்தெளிவாகக் கூறியிருந்தார். எமது மக்களின் துயர் குறித்தும், பாதிப்புக் குறித்தும் தலைவர் கீழ்வருமாறு கூறியிருந்தார்:-

'அழிவுகளும் இழப்புகளும் எமது மக்களுக்குப் பரீட்சயப்பட்டுப்போனவை. எனினும் சுனாமியால் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பும் இடப்பெயர்வும் இயற்கையின் சீற்றத்தால் மிகவும் குறுகிய நேரத்தில் நிகழ்ந்ததென்ற வகையில் அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது. கடந்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளாலும் இராணுவ தந்திரோபாயங்களாலும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயரவும் சொத்துக்களை இழக்கவும் நேரிட்டது. இது சர்வதேசமும் அறியப்படாமல் மௌனமாக எமது மக்களையும் தேசத்தையும் சிதைத்த முதலாவது சுனாமியாகும்! இந்நிலையில் டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற அனர்த்தம், எமது மக்களைப் பொறுத்தவரையில் இரண்டாவது சுனாமியே!"

சகல வளங்களையும் திரட்டி தமிழர் தாயகத்தைக் கட்டி எழுப்பி, எமது மக்களின் துயர் துடைத்து அவர்களைத் துரிதகதியில் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்வதற்கான முயற்சிகளில் தமிழீழத் தேசியத்தலைவரும், அவருடைய வழிநடத்தலில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் மற்றும் தொண்டர் நிறுவனங்களும் பணி புரிந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மூன்றாவது சுனாமி ஒன்றை உருவாக்குகின்ற செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் காணக்கூடியதாக உள்ளது.

சிங்கள பௌத்தப் பேரினவாத அரசும், அதன் தமிழ்விரோத அரசியல் கூட்டணியும், இவர்களுக்கு துணைபோகின்ற புலம் பெயர்ந்த பிணம் தின்னிக்கழுகுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான மூன்றாவது சுனாமியொன்றை உருவாக்கும் செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது.

தமிழீழ மக்களுக்குச் செல்லக்கூடிய நிவாரணப்பணிகளையும் நிவாரண நிதிகளையும் தடுத்து நிறுத்துவதே இந்தப் பிணம் தின்னும் கழுகுகளின் முக்கியமான பணியாக இருக்கின்றது. இந்த கேவலமான செயல்பாட்டிற்கு உறுதுணையாகப் புலம் பெயர்ந்த சில கதிர்காமக் கனவான்கள் திகழ்வது இன்னும் வேதனையாகத்தான் உள்ளது. ஆனால் இது இனியும் வியப்பூட்டுவதாக இல்லை. ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் நாட்டுப்பற்றாளர்கள் மீதும் இக்கனவான்கள் கொண்டுள்ள தனிப்பட்ட சுயநலக் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்கள் தமிழ்த் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதும் செயல்பட்டு வருவதும் தெரிந்த விடயங்களே!. ஆனால் இம்முறையோ, இக்கனவான்கள் ஆழிப்பேரலை தந்த அனர்த்தங்களுக்கும் மேலான அனர்த்தங்களைத் தமிழ் மக்களுக்குத் தருவதாக முடிவு செய்து விட்டார்கள் போலும்.

ஆமாம், தமிழீழ மக்களின் துயர் துடைப்பதற்காகத் திரட்டப்படும் நிதியை எவ்விதமாகவாவது தடுப்பதன்மூலம் தமிழர் தாயகத்திற்கு மேலும் அழிவைக் கொண்டுவருவதே இவர்களின் மேலான நோக்கமாகும். அதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில் ஒன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற உத்தமமான நிறுவனங்களுக்கு எதிராகப் பொய் பிரசாரம் செய்வதாகும்.

பிணம் தின்னும் கழுகுகள் வழங்குகின்ற-வழங்க முயற்சிக்கின்ற-மூன்றாவது சுனாமி இது.

சுனாமி என்ற ஆழிப்பேரலை, டிசம்பர் மாதம் 26ம் திகதி தமிழர் தாயகத்திற்கும் தாயகத்து உறவுகளுக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோது துடித்து எழுந்தது உலகத்தமிழ் இனம்.

அவுஸ்திரேலியா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழினம் உடல் சிலிர்த்து உள்ளம் குமுறி தம் உடன்பிறப்புக்களுக்கு உதவமுன் வந்தது. ஆண்டாண்டு காலமாக தன்னலமற்ற உயரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக உலகளாவிய ரீதியில் உலகத்தமிழர்கள் தமது தார்மீக பங்கினை வழங்கினார்கள். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள்.

இது பொறுக்கவில்லை, இந்த கதிர்காமக் கனவான்களுக்கு. ஏற்கனவே பொருமிக் கொண்டிருந்த ஜே.வி.பியினருக்கும் மேலாக இந்தக் கதிர்காமக் கனவான்கள் பொங்கி எழுந்தார்கள்! சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தமிழீழப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்ததை உலகச் செய்தியாளர்களே வெளிக்கொண்டு வந்திருந்தபோதும் இந்தக் கதிர்காமக் கனவான்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை! மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உயரிய மனிதாபிமானப் பணிகளை இயலுமான வரையில் தடை செய்வதே இவர்களது முழுநேரப் பணியாக இருந்தது. அங்கே தமிழர் தாயகத்தில் எமது உடன்பிறப்புக்கள் சொந்தம் இழந்து சொத்து இழந்து உடுக்க உடையின்றி உறைவிடம் எதுவும் இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்கையி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.