Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி?

Featured Replies

[size=4]முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை - இந்திய உறவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

த டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தோடு உள்ள பலரும் அரசியலாமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ள நிலைமையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஆபத்தான ஏட்டிக்குப் போட்டியான நிலைமை தோன்றியுள்ளது.

1987 ராஜிவ் காந்தி –ஜயவர்த்தன ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்ததுடன் தமிழர்களுக்கு வேறு பல நன்மைகளையும் வழங்கியிருந்தது.

இது இறக்குமதி செய்யப்பட்ட தீர்வு என பரிகாசம் செய்யப்பட்டபோதும் ஆளும் கூட்டணியில் உள்ளோர் இப்படி கூறுவதை தவிர்தது வந்தனர்.புதிய நிலைவரத்தையிட்டு ஆச்சரியம் தெரிவித்த இந்திய அதிகாரிகள் சரியான தருணத்தில் இதை கவனித்துக்கொள்வோம் என கூறினர்.

இலங்கையின் நல்லிணக்கம் ஏற்பட 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான அதிகார பகிர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சந்தரப்பங்களில் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். 2008 அணைத்துலக ஆவர்த்தன பரிசீலனையின் போது இந்த கருத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

"இது இந்தியாவுக்க வழங்கிய உறுதிமொழில அல்ல. சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கிய உறுதிமொழி" என இந்திய அதிகாரிகள் கூறினர். 13ஆவது திருத்தத்தை இரத்து செய்வது பற்றிய கருத்து வெளிப்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதி தாழ்மட்டத்துக்கு கொண்டு போகும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51059-2012-10-23-07-41-47.html

[size=4]

த டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
[/size]

[size=4][size=6]India’s concerns[/size][/size]

[size=4] [/size]

[size=4][size=5]In the March session, India got the US to dilute its resolution before voting for it. This time, sources say, India may find it difficult to help the island nation in the light of some developments which it finds disturbing.[/size][/size]

[size=4] [/size]

[size=4][size=5]Foremost among them is Gotabaya Rajapaksa’s reported statement that the 13th Amendment (13A) of the Sri Lankan Constitution, which gives a measure of autonomy to the provinces, should be scrapped because it is fostering “separatism”.[/size][/size]

[size=4] [/size]

[size=4][size=5]The Jathika Hela Urumaya (JHU), a constituent of the government, has started an agitation to get the 13A repealed on the ground that it was enacted at the point of the Indian gun. It has been India’s consistent line that devolution of power to the provinces, including the Tamil-dominated north and east, will bring about peace and ethnic reconciliation to the troubled island.[/size][/size]

[size=4] [/size]

[size=4][size=5]http://newindianexpress.com/nation/article1310873.ece?[/size][/size]

[size=4] [/size]

  • தொடங்கியவர்

[size=5]அரசாங்கத்தினால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய முடியுமா?[/size]

[size=4]இந்தியா 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. இந்தியா 1987ஆம் ஆண்டு தமது விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் பலத்தைக் காட்டி ஏற்படுத்திய நெருக்குவாரத்தின் விளைவாகவே ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் அன்று 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர இணங்கியது. [size=5]சுருக்கமாக இந்தியாவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகப் படுத்தியது எனலாம்.[/size]

[size=5]இந்தப் பின்னணியில் தான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான குரல் வலுப்பெற்று வருகிறது.[/size] எனவே உத்தியோக பூர்வமாக இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்ற விடயத்தில் என்ன செய்யும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் பல சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்ய முன்வருமா என்பது கேள்விக்குறியே. அதேவேளை அரசாங்கத்தினால் இந்தியாவையும் மறந்துவிட முடியாது.

[size=5]அவ்வாறாயின் மேற்கூறிய நெருக்குவாரங்களின் காரணமாக அரசாங்கம் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமா என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். அதுவும் நடக்காது.[/size][/size]

[size=4]முதலாவதாக, அரசாங்கத்தின் தலைவர்கள் இயல்பாகவே அதிகார பரவலாக்கலை விரும்பாதவர்களாவர். உலகுக்குத் தெரியவே அவர்கள் அதைப் பற்றிப் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்கள்;. மறுபுறத்தில் பெரும்பான்மை சமூகத்திற்குள் இருந்து அதிகார பரவலாக்கல் முறைக்கு எதிராக பலமாக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அதனையே சாதகமான நிலைமையாகவே பாவிப்பார்கள்.

எனவே மொத்தத்தில் தற்போதைய நிலைமை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் 'சும்மா' இருந்து காலத்தை கடத்த பொருத்தமான நிலைமையாகவே இருக்கிறது. அநேகமாக இந்த விடயத்தில் அரசாங்கம் தற்போதைக்கு எதுவும் செய்யாமல் 'சும்மா' இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

[size=5]அதேவேளை 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளிருந்தே தற்போது எழுந்துள்ள குரல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனப் பிரச்சினை தொடர்பான உத்தேச நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் இழுக்கும் கருவியாகவும் அரசாங்கம் பாவிக்கலாம்[/size]. அதாவது நீங்கள் வராவிட்டால் ஒன்றுமே இல்லாமல் போகலாம் என்ற செய்தியையும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான இந்த கொக்கரிப்புக்கள் மூலம் விடப்படுகின்றன.[/size]

[size=4]http://tamilmirror.lk/2010-08-31-14-50-37/51023--13-----.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]என்ன சொல்ல வருகிறது இலங்கை அரசு?[/size]

[size=4]இந்த பிரச்சினைக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று, இனப்போர் முடிந்த காலகட்டத்தில், அண்மையில் பதின்மூன்றாம் திருத்தம் அகற்றப்பட வேண்டும் என்று யாரும் கருத்து கூறவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிப்பது வரை அது பிரச்சினையாகவே இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்,[size=5] சர்வதேச சமூகத்திற்கு கொடுத்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில், உண்மை கண்டறியும் குழுவான எல்.எல்.ஆர்.சி. கருத்துக்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு அடிப்படையே பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தான்.[/size]

தற்போதைய பிரச்சினைகள் இல்லாமலே, நவம்பர் மாதத்திய ஜெனிவா கூட்டத்தில் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த மனித உரிமை பிரச்சினைகள் அலசி ஆராயப்படும். இது கடந்த மார்ச் மாதம் ஜெனிவா வாக்களிப்பிற்கும் அப்பால் சென்று இனப்போரை தாண்டியும் உள்ள உரிமை மீறல்கள் குறித்தும் அலசி ஆராயும் என்பது எதிர்பார்ப்பு. என்றாலும், அனைத்து உறுப்பு நாடுகள் குறித்தும் நான்கு ஆண்டிற்கு ஒருமுறை, வழக்கமாக நடைபெறும் ஆய்வு எந்த வகையில் பத்திரிகை செய்திகள் போன்றவற்றின் அடிப்படையிலான விவாதம் என்ற அளவிலேயே இது இருந்து வந்துள்ளது. [size=5]தற்போது பதிமூன்றாவது திருத்தம் குறித்து அரசின் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெருவித்துள்ள நிலையில், தான் விட்டாலும் கரடி விடாத கதையாக இனப்போரை சுற்றியே ஜெனிவா ஆய்வுகள் இருக்க வேண்டும் என்பது அரசில் சிலரது நிலைப்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.[/size][/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/51012-2012-10-22-14-41-09.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]ஆப்பிழுத்த குரங்கு போல அலறப்போகும் அரசாங்கம்[/size]

[size=4]13ஆவது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காமலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலும் இருந்து வரும் அரசாங்கம், இந்தியாவிடம் பலமுறை ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. அதுதான் 13ஆவது திருத்தத்துக்கு மேலான அதிகாரங்கள் என்ற வாக்குறுதி.

ஆனால், 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது பற்றிப் பேசிய அரசாங்கம், மாகாணசபைகள் வசமுள்ள காணி அதிகாரங்களையும் பறிக்கின்ற திவிநெகும சட்டமூலத்தையே கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சி வெற்றிபெற்றால், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கூட அரசாங்கம் அடுத்ததாக எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய பின்னணியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு தற்காலிகத் தடையொன்றைப் போட்டுள்ளது. இது அரச தரப்புக்கும் சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவின் எதிர்ப்பை மீறி அரசாங்கத்தினால் 13ஆவது திருத்தத்தை ரத்துச்செய்ய முடியுமா என்ற வாதங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு செய்தால் மீண்டும் இந்தியப்படை இலங்கைக்குள் வரும் என்று எச்சரித்துள்ளார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

[size=5]அத்தகைய சூழல், அதாவது இந்தியா தனது படைகளை அனுப்பும் நிலை ஏதும் இப்போது இல்லை என்பது வெளிப்படையான விடயம். அப்படியானதொரு நிலையில், இந்தியா தனது படைகளை அனுப்பும் அளவுக்குப் போகாது விட்டாலும், அதன் கடுமையாக எதிர்ப்பை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த எதிர்ப்பு நேரடியானதாகவும் இருக்கலாம், மறைமுகமானதாகவும் அமையலாம்.[/size]

அத்தகைய ஓர் ஆபத்தான காரியத்தை எதிர்கொள்ள அரசாங்கம் துணியுமா என்பது கேள்வி. அதேவேளை, இப்போது அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் வரப்போகிறது. கொஞ்சம் அடங்கிக் கிடந்த சிங்களத் தேசியவாத சக்திகளை அது தட்டியெழுப்பி உசுப்பி விட்டு விட்டது. அவர்கள் இனிமேல் சும்மாயிருக்கமாட்டார்கள். உச்சாணிக் கொம்பில் இருந்து ஆடப்போகிறார்கள்.

2002இற்குப் பிற்பட்ட போர்நிறுத்த காலத்திலும், போர் உச்சத்தில் இருந்த காலத்திலும் நோர்வே, ஐ.நா. தூதரகங்கள் எதிர்கொண்டதைப் போன்ற போராட்டங்களை, இந்தியத் தூதரகம் வரும் காலங்களில் சந்திக்கலாம்.

அதுபோலவே, சிங்களப் பேரினவாதிகளை அடக்கவும் முடியாமல் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாத திரிசங்கு நிலை ஒன்றை அரசாங்கம் விரைவில் எதிர்கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, இந்த சிங்களத் தேசியவாத எழுச்சியானது, தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளின் மீதுள்ள நியாயத் தன்மையையும் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்தும் அரிய வாய்ப்பாகவும் அமையப் போகிறது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/50981-2012-10-22-08-32-56.html[/size]

  • தொடங்கியவர்

D31079804.jpg

  • தொடங்கியவர்

[size=5]தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன் [/size]

[size=4]13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ௭டுக்கப்படும் முயற்சி தமக்குத் தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

13வது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் ௭ன்று அமைச்சர் விமல்வீரவன்ச ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கடிதம் ௭ழுதியுள்ளார். இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் ௭ம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் அதிகம் பேச நான் விரும்பவில்லை. 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும் ௭ன்றார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1238

[size=4]தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன் [/size]

[size=4]13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும் ௭ன்றார்.[/size]

சிங்களப் பயங்கரவாதிகள் தமக்குத் தாமே குழி தோண்டுவது இருக்கட்டும்!

சம்பந்தர் தனக்கும், தமிழர்க்கும் குழி தோண்டுவதை நிறுத்த வேண்டும்!

சம்பந்தர் ராஜதந்திரம் உள்ளவர் என்றால், சிங்களப் பயங்கரவாதிகள் தமக்குத் தாமே குழிபறிப்பதைப் பற்றி கவலைப்படாமல், அவர்களால் முடிந்தால் உடனடியாக 13வது திருத்தத்தை நீக்கிக் காட்டட்டும் என்று சவால் விட்டு உசுப்பேத்தியிருக்க வேண்டும்.

சோனியாவின் காதிலும் மன்மோகனசிங்கின் காதிலும் 13+ என்று பெயரிய பூவை ராசபக்சாவைக்கிறமாதிரி ஒரு காட்சி :D :D :D

  • தொடங்கியவர்

cartoon-24.10.2012.jpg

  • தொடங்கியவர்

[size=5]தேவையென்றால் 13ஆவது திருத்தம் ரத்து பற்றி பரிசீலிப்போம்: பசில்[/size]

[size=4]இலங்கையின் வட மாகாணத்தில் சமுர்த்தி திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கும், திவிநெகும சட்டத்துக்கும் என்பனவற்றுக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தடையாக இருக்கும் என்று கருதப்பட்டால், அதை ரத்து செய்ய இலங்கை அரசு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆராயும் என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான , பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.[/size]

[size=4]நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் சில தமிழ் ஊடகவியலாளர்களிடையே பேசிய பசில் ராஜபக்ஷ , இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் சீனாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதாகவும் குற்றம் சாட்டினார்.[/size]

[size=5]சம்பந்தன் பதில்[/size]

[size=4]இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு தவறானது, பொறுப்பற்றது என்று நிராகரித்தார்.[/size]

[size=4]தாங்கள் இந்திய மற்றும் சீன ராஜிய அலுவலர்களை சந்தித்தபோது, இலங்கைக்குப் பொருளாதர உதவிகள் வழங்க வேண்டாம் என்று கோரவில்லை என்றும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்தே பேசினோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.[/size]

[size=4]13வது அரசியல் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கூறப்படுவது பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், இது குறித்து அரசு உறுதியான முடிவெடுக்கும் நிலையில் தனது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121023_basil13th.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன்

[size=4][size=4]13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும் ௭ன்றார்.[/size][/size]

[size=4][size=4]சம்பந்தன் இந்தியாவில் இருந்து திரும்பியதும் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பது இங்கு முக்கியம். தமிழர் கூட்டமைப்புக்கு அரசு மற்றும் சிங்கள அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இந்தியா நிச்சயம் இதுபற்றி கரிசனையுடன் உள்ளது.[/size][/size]

[size=4][size=4]அம்னெஸ்ரி இன்ரநெசனல் இந்தியகிழை ஒழுங்குசெய்த புதிய தலைமுறை டிவி விவாதத்தில் நமது பிரச்சனை தொடர்பாக ஜெனீவாவில் இந்தியா என்ன நிலைபாடி எடுக்கிறது என்பதைதான் ஈழ தமிழர்களும் உலகத் தமிழர்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறினேன். எங்கள் பிரச்சினை தொடர்பாக மட்டுமல்ல இந்திய தமிழனை நாய்கள்போல கடலில் சுடுவது தொடர்பாகவும்இலங்கைக்கு சரியான சமிக்கையை கொடுப்பதற்க்கு இந்தியா ஐநா மனித உரிமைகள் மீழாய்வை பயன்படுத்த வேண்டும் எனக் கோரினேன். [/size][/size]

[size=4][size=4]இன்னும் சில நாள்தானே பொறுமையுடன் காத்திருப்போம்.[/size][/size]

Edited by poet

தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன்

[size=4][size=4]13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும் ௭ன்றார்.[/size][/size]

[size=4][size=4]சம்பந்தன் இந்தியாவில் இருந்து திரும்பியதும் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பது இங்கு முக்கியம். தமிழர் கூட்டமைப்புக்கு அரசு மற்றும் சிங்கள அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இந்தியா நிச்சயம் இதுபற்றி கரிசனையுடன் உள்ளது.[/size][/size]

[size=4][size=4]அம்னெஸ்ரி இன்ரநெசனல் இந்தியகிழை ஒழுங்குசெய்த புதிய தலைமுறை டிவி விவாதத்தில் நமது பிரச்சனை தொடர்பாக ஜெனீவாவில் இந்தியா என்ன நிலைபாடி எடுக்கிறது என்பதைதான் ஈழ தமிழர்களும் உலகத் தமிழர்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறினேன். எங்கள் பிரச்சினை தொடர்பாக மட்டுமல்ல இந்திய தமிழனை நாய்கள்போல கடலில் சுடுவது தொடர்பாகவும்இலங்கைக்கு சரியான சமிக்கையை கொடுப்பதற்க்கு இந்தியா ஐநா மனித உரிமைகள் மீழாய்வை பயன்படுத்த வேண்டும் எனக் கோரினேன். [/size][/size]

[size=4][size=4]இன்னும் சில நாள்தானே பொறுமையுடன் காத்திருப்போம்[/size][/size][size=4][size=4].[/size][/size]

அப்பாட இவ்வளவு நாளும் தொப்பி பிரட்டிய இந்திய, இனி கட்டாயம் எதாவது செய்யும். ஆனால் இந்த சம்பந்தரும் இதற்குள் தலை நீட்டி தனக்கும் புகழ் தேட என்று அந்தரப்படுகிறாரோ? இனி ஏன் ஜெயலலிதா மீனவர் பிர்ச்சனை பற்றி டெல்கிக்கு கடிதம் எழுதுவான்?

இப்போ நயீப் மயீத் இந்தியாவின் 13ம் திருத்தத்தை வடக்கையும் கிழக்கையும் இணத்து அமூல் படுத்துவார். சம்பந்தர் இந்தியா போகமல் நயீம் மயீத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை உணர மறுக்கிறார்.

சில மனிதரகள் weathercock ஆக இருக்கிறார்கள். காற்று எந்த பக்கம் அடிக்கிறது என்று அறிய வேண்டுமாயின் நீங்கள் அவர்கள் பக்கம் திரும்புங்கள்.

Edited by மல்லையூரான்

[size=5]ஈனப் பிழைப்பு நடத்தி தமிழின அழிப்புக்கு துணைபோன இடைத் தரகர்களின் குத்தாட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.