Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில்வியா கிறிஸ்டல் (Emmanuelle, Private lessons படங்களின் கதாயநாயகி)- யமுனா ராஜேந்திரன்

Featured Replies

சில்வியா கிறிஸ்டல் - யமுனா ராஜேந்திரன்

28 அக்டோபர் 2012

lg-share-en.gif

Sylvia-Kristel_CI.jpg

சில்வியா கிறிஸ்டல் (28 செப்டம்பர் 1952- 17 அக்டோபர் 2012) தனது அறுபதாவது வயதில் புற்றுநோயினால் மரணடைந்திருக்கிறார். யாக்கையின் நிலையாமை குறித்த சித்தர் பாடல்களை சில்வியா கிறிஸ்டலின் மரணம் தமிழ் மனதுக்கு ஞாகமூட்டக்கூடும். எழுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு அல்லது அதற்குப் பின்பாக ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்த திரைப்பட ரசிகர்களுக்குச் சில்வியா கிறிஸ்டலைக் கட்டாயம் தெரிந்திருக்கும். சில்வியா கிறிஸ்டல் என்ற பெயர் தெரியாவிட்டாலும் இமானுவெல் எனும் பிரெஞ்சுத் தொடர் படங்களில் நடித்த நடிகை என்றால் கட்டாயம் அவரது புன்னகை கசியும் முகமும் ஆடை நெகிழ்ந்த அவரது உடலும் எவருக்கும் ஞாபகம் வந்துவிடும். மானுவெல் உலக சினிமாவில் ஒரு நிகழ்வு.

திரையில் பாலுறுவுச் சித்தரிப்பு, பாலுறவு வேட்கை, தணிக்கை போன்ற விவாதங்களை இமானுவெல் படத்தொகுப்புக்களையும் சில்வியா கிறிஸ்டலையும் விட்டுவிட்டுப் பேசமுடியாது. சில்வியா கிறிஸ்டல், மர்லின் மன்ரோ, சிலுக்கு ஸ்மிதா போன்ற உலகின் வேறு வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பாலுறவு வேட்கைளைச் சித்தரித்த நடிகைகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உண்டு. சில்வியாவும் மர்லினும் சிறுவயதில் குடும்பத்திற்கு வெளியிலுள்ள ஆண்களால் பாலுறவு அத்துமீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். சில்வியா, மர்லின், ஸ்மிதா மூவரதும் தந்தையர்கள் குடும்பத்தைவிட்டு வெளியேறியதால் மூவருமே தாயினால் வளர்க்கப்பட்டவர்கள். மூவரும் தந்தைமை உருவத்தை ஆண்களுக்கிடையில் தேடியதால் தம்மை விடவும் மும்மடங்கு முதுமை கொண்டவர்களுடன் வாழ்வைப் பகிர்ந்துகொண்டவர்கள்.

சில்வியா கிறிஸ்டல் நடித்து 1974 ஆம் ஆண்டு வெளியான இமானுவெல் எனும் திரைப்படம் உலக சினிமாவில் மென்நீலப்படம் எனும் வகையினத்தைத் தோற்றுவித்தது. திரைகளில் அதுவரை இருந்திராத அல்குல், மாணி போன்றவற்றின் திறந்த நிலைத் தோற்றங்கள், வல்லுறவு, உடலுள் உடல் அமிழும் கலவிக் காட்சி போன்றன இமானுவெல் படத்தில் இடம்பெற்றது. பிரான்சில் ஒரு குறிப்பிட்ட திரையங்கில் 11 வருடங்கள் தொடர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படமாக இமானுவெல் உலக சாதனை படைத்தது. இப்படத்தின் பெற்றி சங்கிலித் தொடர் பாகங்களாக இமானுவெல் திரைப்படத்தினை உருவாக்கக் கூடிய வாய்ப்பை அதனது இயக்குனருக்கு ஏற்படுத்தியது. சில்வியா கிறிஸ்டல் நடிக்க இமானுவெல் ஏழு பாகங்கள் வெளியானது.

இந்தோனிசியாவில் வாழநேர்ந்த ஒரு சலிப்புற்ற பிரெஞ்சு ராஜதந்திரியின் மனைவியை அவரது கணவரே பாலுறவுச் சாகத்தைத் தேடிக் கண்டடையுமாறு உற்சாகப்படுத்துகிறார். வலியும் உடல்சுகமும் எனும் நோக்கில் மார்கிஸ் டீ சேட் பிரெஞ்சுப் பாரம்பர்யத்தில் முன்வைத்த சிந்தனைப்போக்கின் நிகழ்முறையாக இமானவெலின் சாகசங்கள் அமைந்தன. இந்தோ சீனா, கரீபியத் தீவுகள், வட ஆப்ரிக்கா போன்ற பிரான்ஸ் அல்லாத நாடுகளின் உள்ளார்ந்த வனங்களுக்கும் கடற்கரைப் பிரதேசங்களுக்கும் பயணம் செய்து அங்குள்ள ஆண்பெண்களுடன் இமானுவெல் மேற்கொள்ளும் இருபாலுறவு, சமப்பாலுறவு, கூட்டுக்கலவி போன்ற பாலுறவுச் சாகசங்களை இம்மானுவெல் தொகுதிப்படங்கள் சித்தரித்தன.

பயணம், யாரும் கண்காணிக்காத தனிமை, உடலின்பம், ஐரோப்பா அல்லாத நிலப்பரப்புகள் உருவாக்கும் ஏகாந்தம் போன்றவற்றின் சாகச வேள்வியாக இமானுவெல் தொகுதிப்படங்கள் இருந்தன. கிறக்கமூட்டும் இசை, அடர்ந்த கானக மரங்கள், பசுமையான செடிகொடிகள், ஈரம் படர்ந்த நிலங்கள், பளீரென்ற சூரிய வெளிச்சம், உயரமான சில்வியா தனது பிருஷ்டங்ளை அசைத்து நடக்கும்போது நெகிழும் மெலிய ஆடைகள் போன்றவற்றினால் உருவான இமானுவெல் பாகத்திரைப்படங்கள் கலைப்படத்திற்கும், மென் நீலப்படங்களுக்கும், பிற்பாடு சந்தையாக ஆகின வன்மையான நீலப்படத்திற்கும் இடையிலான எல்லைகளை முயங்கச் செய்வனவாக இருந்தன.

ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டி சில்வியா கிறிஸ்டலை அமெரிக்காவுக்கும் கொண்டு சேர்த்த 1981 ஆம் ஆண்டுத் திரைப்படம் பிரைவேட் லெசன்ஸ். பாலுறவு வேட்கை அரும்பத் துவங்கியிருக்கும் ஒரு செல்வந்தரது மகனை தனது சாகசவலைக்குள் வீழ்த்தும் தாதிப் பெண்ணாக இப்படத்தில் சில்வியா நடித்திருந்தார். அமெரிக்காவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்தத் தொண்னூறு நிமிடப்படம் பதின்ம வயதின்வேட்கை, தனக்கு அருகாமையில் வாய்க்கும் தன்னைவிட மூத்த பெண்ணிடம் தோன்றும் மோகம், பணக்கார விட்டுப் யைனைத் திட்டமிட்டு வலையில் வீழவைத்து அவனிடம் பணம் பறிக்கும் பயந்தாங்குளி வீட்டு வாகனஓட்டி, விலைமாதருடன் திரியும் தகப்பன் என இதனோடு மெலிதான நகைச்சுவையும் சேர்த்து கலவிக் காட்சிகளும் கொண்டதாக இருந்தது.

பாலுறவின் இன்பநோக்கத்திற்கு முதல் நிபந்தனையாக இருப்பது பொதுசமூகத்தின் மீதான அறமீறல். இந்த அறமீறல் இயல்பாகவும் கள்ளம் குறித்த குற்றவுணர்வு அற்றதாகவும் முறைசாரா உறவுகளில் இயங்குகிறது. இந்த மனநிலையை அனைத்துவிதமான சில்வியா கிறிஸ்டல் பாத்திரப்படைப்புக்களிலும் நாம் காணலாம். இந்தப்படத்தில் பதின்வயதுப் பையன் தாதிப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஆவலை வெளியிடுகிறான். வெகு இயல்பாக அது சாத்தியமில்லை என்கிறாள் தாதிப்பெண். படத்தின் இறுதியில் அவள் வீட்டைவிட்டுப் போகிறாள். தனது இருப்பிடத்தை அவனுக்குத் தெரிவிப்பதாகவும் அவள் தெரிவிக்கிறாள். அறம் முன்னிலைப்படுத்தப்படாமல் வேட்கையும் மிகச் சிக்கலான ஆண்பெண் இணைவிழைச்சும் முன்னிலைப்படுத்தப்படுவதனால்தான் பரதனின் ரதிநிர்வேதமும், பாலுமகேந்திராவின் அழியாக கோலங்களும் சில்வியாவின் பிரைவேட் லெசன்சும் ரசனைக்குரியதாகவும் பேசத்தக்க திரைப்படங்களாகவும் இருக்கின்றன.

இமானுவெல் எனும் பெயரில் பிற்காலத்தில் பிரான்சிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியான தொலைக் காட்சிப் படங்களும் குறுவட்டுக்களும் வன்மையான நீலப்படக் காட்சிகளையும் நேரடியிலான கலவிக் காட்சிகளையும் கொண்டிருந்தன. பிரான்சில் தயாரிக்கப்பட்ட தொலைக் காட்சிப் படங்களில் வன்மையான கலவிக் காட்சிகளில் பிற நடிகைகள் இடம்பெற, மென்காட்சிகளில் மட்டுமே சில்வியா கிறிஸ்டல் தோன்றினார். இந்தப் படங்கள் தொலைக் காட்சியாகவும் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டபோது வன்மையான கலவிக் காட்சிகள் இருக்கவில்லை. குறுவட்டுக்களில் மட்டுமே அக்காட்சிகள் இணைக்கப்பட்டன. எவ்வகையிலாயினும், சில்வியா கிறிஸ்டலின் பெயர் ஒரு போதும் வன்மையான நீலப்படங்களோடு முன்வைத்துப் பேசப்படுவதில்லை.

இமானுவெல், பிரைவேட் லெசன்ஸ், டி.எச்.லாரன்சின் லேடி சாட்டர்லீஸ் லவர்(1981) படவடிவம் போன்றவற்றை முன்வைத்தே அவர் உலக சினிமா ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார். பாலுறுவு வேட்கையின் ஆழத்தில் பொதிந்திருக்கும் அறமீறலுக்கும் கள்ளமின்மைக்கும் ஒரு முகத்தை நாம் கற்பனை செய்துகொள்ள முடியுமானால் நிச்சயமாக சில்வியா கிறிஸ்டலின் தோற்றம் அதில் அற்புதமாகப் பொருந்துவதை நாம் காணமுடியும். சில்வியா கிறிஸ்டலுக்கு ஆர்தர் என ஒரு வளர்ந்த மகனும் இருக்கிறார். அவருடனான அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படங்களைக் கொண்டது சில்வியாவின் வாழ்க்கை வரலாற்றுப் (Undressing Emmanuelle : A Memoir) புத்தகம்.

சில்வியா கிறிஸ்டல் மரணமுற்றபோது அவரது முதல் படமான இமானுவெல் ஞாபகம் வருகிறது; கூடவே அவரது அறுபது வயதிலான, புற்றுநோயின் வலி செரிந்த, சோர்ந்த முதுமையான முகமும் ஞாபகம் வருகிறது. சில்வியா கிறிஸ்டல் சந்தேகமில்லாமல் திரைவரலாற்றின் ஒரு மகோன்னத நிகழ்வு.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84739/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவரின் அதிகமான படங்களை பார்த்திருக்கின்றேன். :D

  • தொடங்கியவர்

நான் இவரின் அதிகமான படங்களை பார்த்திருக்கின்றேன். :D

இவரது Private lesson படத்தை பார்க்க கொழும்பில் சவோய் தியேட்டரில் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தை நெருங்கும் போது house fullல் போட்டு வெறுப்பேத்த, என் முயற்சியில் மனம் தளராமல் அடுத்த காட்சி மட்டும் அதே வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து படம் பார்த்த இவரது பரம் ரசிகன் நான். !! இமானுவல் படத்தின் அத்தனை பகுதிகளையும் பார்த்து பெரு மகிழ்ச்சி கொண்டதும் நினைவில் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கடை அழியாதகோலங்கள்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றத் திரியில் சண்டை போடுபவர்கள் இந்த திரியில் ஒன்றும் சொல்லக் காணோம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.