Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர,வர சோம்பேறி ஆகிக் கொண்டு வருகிறேன் நான்:220_monkey_face:...ஒரு கிழமை வேலைக்குப் போகாமல் யாராவது நேரத்திற்கு நேரம் சுவையான சாப்பாடு சமைச்சுச் தர:10_wink: சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் எவ்வளவு சந்தோசம் வார்த்தையில் வடிக்கமுடியாது:rolleyes:

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உன் மனசாட்சி தூங்கிக் கொண்டு இருப்பதாக நினைத்து பிழை விடாதே!
அது மட்டும் விழித்துக் கொண்டால் உன்னால் தூங்க முடியாது
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2017 at 5:04 AM, ரதி said:

போலியான உபசரிப்புக்களை விட‌
உண்மையான திமிர் எப்போதும் அழகானது

 

On 1/30/2017 at 1:35 PM, ரதி said:

வெளிப்படையாக இருப்பவர்களை விட வேசம்
போடுபவர்களுக்கு தான்

உலகில் மதிப்பு அதிகம்

இரண்டும் வேறு வேறு புத்தி மதியை போதிக்கிறதே .........??

On 12/16/2016 at 1:08 PM, ரதி said:

வானம் பார்த்த பூமியும்,மானம் பார்க்காத பெண்ணும் அதிகம் பயன்படமாட்டா

கொஞ்சம் சிக்கலா இருக்கு ............

பாவம் சொர்ணா ...
எத்தனையோயோ பேருக்கு ....
இறுதியில் ? 

செய்வினை 
செயல்பாட்டு வினை 

செய்லபாட்டு வினை அதிகம் இருப்பதாகவே தோன்றுது! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொள்வதற்குள்
பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎02‎/‎2017 at 5:30 AM, Maruthankerny said:

 

இரண்டும் வேறு வேறு புத்தி மதியை போதிக்கிறதே .........??

கொஞ்சம் சிக்கலா இருக்கு ............

பாவம் சொர்ணா ...
எத்தனையோயோ பேருக்கு ....
இறுதியில் ? 

செய்வினை 
செயல்பாட்டு வினை 

செய்லபாட்டு வினை அதிகம் இருப்பதாகவே தோன்றுது! 

முதலாவது நான் எப்படி இருக்க வேண்டுமென சொல்கிறது.

இரண்டாவது தான் இன்டைய உலக யதார்த்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தொடக்கத்தை விட முடிவைப் பற்றி
அதிகம் யோசி...
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப்படாதே
நீ நடந்தால் அதுவே பாதை...
 
ஹிட்லர் சொன்னது. எனக்குப் பிடித்தது.:cool:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தில் பிடித்தது...

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பே ரா சை
₹₹₹₹₹₹₹
ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன 
அருமையான கதை.
-------------------------------

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. 

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து,  மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். 

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள். 
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 
99 நோட்டுகள்தான். 
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்............... 

அந்த ஒற்றை பத்துரூபாயைத் 
தேடினான்....  தேடினான்....  தேடினான்....  
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------

--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம் ! ? !-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*NAKED TRUTH*
One day, a school teacher wrote on the board the following:
*9×1=7*
*9×2=18*
*9×3=27*
*9×4=36*
*9×5=45*
*9×6=54*
*9×7=63*
*9×8=72*
*9×9=81*
*9×10=90*
When He was done, he looked back at the students and they were all *laughing at her because of the first equation which was wrong.*
Then the teacher said the following:
I wrote the first equation wrong on purpose, because I wanted you to learn *Something important*..
This was for you to know how the world out there will TREAT you!
You can see that I wrote the *RIGHT thing nine times*, but none of you congratulated me for it..
But you all laughed and criticized me because of *one wrong thing* I did..
*The lesson is:*
The world Will Never Appreciate the Good you DO *a million times*, but will Criticize the *one wrong thing* you DO..
So don't Get Discouraged!
*ALWAYS RISE ABOVE ALL THE LAUGHTER AND CRITICISM.*
Don't *Look Up* to man;
*Look Up to GOD!*            

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சாந்தி

மனஉறுதி

வெற்றி என்பது மிகச்சரியான முயற்சியின் மூலம் பெறப்படுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதற்கு பதிலாக, நமக்கு என்ன கிடைக்கிறது என்பதோடு வெற்றியை தொடர்புபடுத்தி பார்க்கும்  மனப்போக்கு உடையவர்களாக நாம் இருக்கின்றோம். அதனால், நாம் எதிர்பார்த்தவாறு சூழ்நிலைகள் அமையாதபோது, எதிர்மறையான உணர்வுகளோடு வெற்றி கிடைக்காததை தொடர்புபடுத்திக் கொள்கின்றோம். பிறகு, மேற்கொண்டு முயற்சி செய்வதையும் நாம் நிறுத்தி விடுகின்றோம்.

செயல்முறை:

ஒரு காரியத்தில் வெற்றியடைவதற்கு நான் சரியான முயற்சியை மேற்கொள்ளும்போது, என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்கின்றேன். இந்த பங்களிப்பின் காரணமாக, அக்காரியத்தை வெற்றியடைய செய்வதற்கு மற்றவர்களும் அவர்களால் முடிந்தவரை பங்காற்றுவார்கள். வெற்றி பின்தொடர்கிறது. நான் சரியானவற்றை செய்யும்போது, நான் எதிர்பார்த்தவாறு முடிவு இல்லாவிட்டாலும் கூட, நான் தொடர்ந்து சுய-முன்னேற்றத்தை அனுபவம் செய்வேன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதிலும் தோற்பதில்லை
ஒன்று வெற்றி கொள்கிறோம்
இல்லை கற்றுக் கொள்கிறோம்
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவைக்கு மேலே பொருளும்,
திற்மைக்கு மேலே புகழும்
கிடைத்து விட்டால்
பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாய்த் தெரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நட்பை தேடிக் கொள்ள பல வருடம் போதாது.
அந்த நட்பை எதிரியாக்க ஒரு நிமிடம் போதும்
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில படங்களை பார்த்தால் சில பேர் ஞாபகத்தில் வருவார்கள்...அண்மையில் அருண் விஜய்யின் !குற்றம் 23" பார்த்தேன்... படம் பெண்கள் குழந்தைகள் பெறுவதற்கு 23 குரோம்சம் இருந்தால் போதும்:rolleyes:. ஆண்களோடு படுக்கத் தேவையில்லை:mellow: என்பதை சொல்கிறது...இப்ப உங்களுக்க்கு தெரிந்திருக்குமே..நெடுக்கரை இந்த படத்தை பார்க்குமாறு கேட்கிறேன்<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நீ வெளிச்சத்தில் நடந்தால் இந்த உலகமே உன்னை பின் தொடரும்...
ஆனால்,அதே நீ இருட்டில் நடந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்க்கும் போது நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லை.
நல்ல நண்பர்கள் எதையும் எதிர் பார்ப்பதில்லை.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கோபம் என்னும் கொடிய அமிலமானது
அது எறியப்படும் இடத்தை விட‌
அதை  வைத்துக் கொண்டு இருக்கும் உள்ளத்தையே
பெரிதும் நாசப்படுத்தி விடும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் ஏழை  ❓❓❓

?ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

?சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் 
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

?3'ஸ்டார் ?ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

?ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் ?வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் ?பாலுக்கு நீங்கள் தணியாக ?பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் ?பணத்தை செலுத்தி ?பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

?ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ?ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் ?பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு ?பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் ?காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்? உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் ?கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
????????????????????
பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்றவனுக்கு கொடுக்க மனசிருக்காது .... நல்ல மனசிருக்கிறவனுக்கு கொடுக்க பணமிருக்காது. இதுதான் நியதி.

அருமை அருமை ரதி தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு இனிய மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... பல தடைகளை தாண்டி சாதனை படைத்த யாழ் இணையம் இன்னும் சாதனை படைக்க வேண்டுமானால் சில பக்கச் சார்பான மட்டுக்களை யாழை விட்டு நீக்கினாலே போதும். இன்னும் சாதிக்கலாம்.
யாழால் இணைவோம்
தமிழராய் ஒன்றிணைவோம்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது  நீ
சாகும்  வரை அல்ல...
நீ மற்றவர்கள் மனதில்
வாழம் வரை.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வாழ்க்கை என்பது  நீ
சாகும்  வரை அல்ல...
நீ மற்றவர்கள் மனதில்
வாழம் வரை.
 

100% உண்மை.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அன்பு தான் உன் பலவீனம் என்டால்
இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்
வாழும் வாழ்க்கையை விரும்ப கற்றுக் கொள்ளுங்கள்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.