Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல்.

- பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10

aus_urumaikural1.jpg

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு)

aus_urumaikural.jpg

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர்.

சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள் படும் துயரங்களையும் காண்பிக்கும் மௌன அரங்கும் அங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். சிறுவர்கள் கறுப்புக் கொடிகளை தாங்கியிருந்தனர்.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துக.

ஐரோப்பிய ஒன்றியமே விடுதலைப் புலிகளைத் தடைசெய்யாதே.

தமிழ்மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

தமிழர் தாயகத்திலிருந்து சிறீலங்கா இராணுவம் வெளியேறவேண்டும்.

ஆகிய கோரிக்;கைகள் உரிமைக்குரலின் அடிநாதமாக இருந்தன.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றின் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளை கண்டித்த அவர்கள் தமிழர்களின் வேதனையை தாமும் உணர்வதாக கூறியதுடன் அவுஸ்திரேலிய அரசு இது போன்ற விடயங்களில் தலையிடுவதில்லை என்பதைச் சுட்டிகாட்டி அதற்கும் தமது கண்டனத்தை தெரிவித்தனர். இங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினரான மருத்துவர் பிறயன் செனிவிரட்னவும் உரையாற்றினார்.

இங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினரான மருத்துவர் பிறயன் செனிவிரட்னவும் உரையாற்றினார்.

சேற்றில் செந்தாமரையும் மலரும் என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடச்சுடத்தந்த தகவல்களுக்கு நன்றி தமிழரசன்.

நீதியும் நேர்மையும் எப்போதும் வெற்றிபெற்றே தீரும்.

நாம் எல்லோருமாகச் சேர்ந்து அந்த வெற்றிக்காகப் பாடுபடுவோம்.

புலம் பெயர்ந்து வாழும் சுவிஸ் ஈழத் தமிழர்களின் எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் சுவிஸில் உணரச்சிபுூர்வமான பேரெழுச்சியுடன் நடைபெற்றது. காலையிலிருந்து இடைவிடாமல் கொட்டிக் கொண்டிருந்த கடும் மழையையும் பொருட்படுத்தாது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து மாநிலங்களிலிருந்தும் மக்கள் குழந்தைகளுடன் வந்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சிங்கள அரசே தமிழினப் படுகொலையை நிறுத்து

[size=16]ஐரோப்பிய ஒன்றியமே விடுதலைப் புலிகளைத் தடை செய்யாதே

தமிழர்களின் தாயகம் தேசியம் ஆகியவற்றை அனைத்துலகமே அங்கீகரி

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுnலைப் புலிகளே

போன்ற பதாகைகளை கலந்து கொண்ட மக்கள் யாவரும் தாங்கி இருந்தனர்.

இறுதியில் தமிழீழக் கொள்கைப் பிரகடனம் ஜெர்மன் மொழியிலும் தமிழ் மொழியிலும் உரத்துப் பிரகடனம் செய்யப்பட்டு மாலை 15.30 மணிக்கு உரிமைக்குரல் நிகழ்வு சுபமே நிறைவுற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொட்டும் மழையையும் பெருட்படுத்தாது உரிமை முழக்கம் எழுப்பி சுவிஸ் நாடாளுமன்றத்தை அதிரவைத்த தமிழர்கள்

புலம்பெயர் தமிழர்களின் ஒட்டுமொத்த எழுச்சியான 'உரிமைக்குரல்" நிகழ்வு சுவிஸ் நாட்டில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழர் பேர்ண் நகரில் அமைந்துள்ள சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் திரண்டு தமது பேரெழுச்சியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளனர். (சுவிஸ் தமிழரின் உரிமைப் பிரகடனம் முழுமையாக உள்ளே)

தமிழர் தன்னாட்சியுடன் வாழ துணை செய் அல்லது பிரிந்து போவதை அங்கிகரி என்ப தை வலியுறுத்தியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் சிங்கள அரசின் படுகொலைகளைக் கண்டித்தும் இந்த பேரெழுச்சி நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

இப்பேரணியில் சுவிஸ் தமிழர்களால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் முழுவடிவம்:

29.05.2006

அன்பார்ந்த மக்களே!

மதிப்புக்குரிய சுவிஸ்நாட்டவர்களே!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் நாம் இன்று பேர்ன் பாராளுமன்ற முன்றலில் கூடியுள்ளோம்.. சுவிசுக்கும் சர்வதேசசமூகத்திற்கும் இன்று எமது உளக்கிடக்கையை முன்வைத்து சர்வதேச சமூகத்திடமுள்ள எமது எதிர்பார்ப்பை முன்வைக்க வந்துள்ளோம். தமிழர்களின் ஆர்வலர்களும் சகல சுவிஸ்வாழ் அமைப்புக்களும் இந்த ஒன்று கூடலில் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமாக நிற்பதை நீங்கள் கவனிக்கலாம். சுவிஸ் தமிழர்பேரவையின் அழைப்பை ஏற்று இங்கு ஒருமித்த குரலாக தமிழர்களாகிய நாம் சமூகமளித்துள்ளோம். தமிழர்களின் வரலாற்றுப்பாதையில் இந்நாளும் பதியப்படும் என நம்புகின்றோம். ஏனெனில் இன்றைய நாளில் இத்தருணத்தில் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் அணிதிரண்டு தமது உரிமை குரலை வெளிப்படுத்தி தமிழீழத்தின் விடுதலையை வேண்டி நிற்கின்றனர்.

எமது ஆழ்ந்த கவைலை:

வளர்ந்து வரும் சமாதான முயற்சிகளுக்காண சாத்தியமின்மையும் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்படும் தமிழர்மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் எமக்கு பாரிய துன்பத்தை தருவதோடு எமது எதிர்கால இருப்பு பற்றிய கேள்வியையும் எழுப்பி நிற்கின்றன. ஒவ்பொரு நாளும் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என அப்பாவிபொதுமக்களை இலங்கை அரசபடைகளும் அவர்களது ஒட்டுப்படைகளும் எவ்வித கரிசனையின்றியும் கேட்க ஆளில்லை என்ற துணிவுடனும் கொண்றொழிக்கின்றனர். இந்த அநீதிகளை அறிந்தும் உலகின் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் யாவும் மௌனித்து நிற்கின்றன. இலங்கை தொடர்பில் பல ஊடகங்கள் ஒருபக்க சார்பான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. இந்த செய்திகளிற்கு தமிழர்களின் பிறிதொரு கருத்தும் இருப்பதை ஊடகங்கள் உணர வேண்டுகின்;றோம். இலங்கை அரசின் கருத்துக்கள் எங்ஙனம் செய்திகளில் இடம் பிடிக்கின்றனவோ அவ்வாறே தமிழர்களின் கருத்துக்களும் இடம்பிடிக்க வேண்டும். தற்போதைய செய்திகள் தமிழர்கள் இலங்கையில் ஏதோ இலங்கை அரசிடம் தங்களுக்கு உரிமையற்ற விடயத்தை வேண்டிநிற்பதைபோல் சித்தரிக்கப்படுகின்றன. அல்லது தமிழர்கள் தம்மை காக்கும் பொருட்டு தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை குற்றச்செயல்களாக படம்காட்டப்படுகின்றன.

கடந்த மாதங்களில் தமிழீழத்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளும் அதன்பிண்ணணியிலான ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேசத்தின் நடைமுறைகளும் சுவிஸ் ஊடகங்களினது செய்திகளும்; எமக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் அளிக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் எமது பிரதிநிதிகள் மீதுசெய்ய இருக்கும் தடைச்செய்தியானது எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் பலத்த ஏமாற்றத்திற்கும் இட்டுச்செல்கின்றது. இம்முடிவினால் சமாதான செயல்பாடுகளுக்கு சாவுமணி அடிக்கப்படுவதையிட்டு வேதனையடைகின்றோம்.

தமிழர்களின் வரலாறு:

ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மற்றும் சர்வதேச சமூகத்தினதும் போக்கானது எங்கள் விடுதலைப்போர் சார்ந்த விளக்கமின்மையை உலகம் கொண்டுள்ளதாக எங்களை எண்ண வைக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போரின் நியாயத்தன்மையை எடுத்துக்கூறுவது தவிர்க்க முடியாததாகவுள்ளது. தமிழர்கள் இலங்கையில் கி.பி. 15ம் - 18ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய குடியேற்றவாசிகள் வரும்வரை தமக்கென ஒரு தேசத்துடனும் தேசவழமைச்சட்டத்துடனும் சுயமாக வாழ்ந்து வந்தார்கள். இது 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமிழர் தாயகத்தை சிங்கள இராச்சியத்துடன் இணைக்கும் வரை நிலைத்திருந்தது. இந்த இணைப்பின் பின்னர் தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பு சிங்களவருடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு தமிழ்மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிகழ்ந்ததை நினைவுகூருகின்றோம்.

நீங்கள் யாவரும் அறிவது போல் இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்தது. இக்காலகட்டத்திலேயே இலங்கை அரசானது உலகவங்கியின் பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றத்திட்டங்களை மேற்கொண்டது. அப்போதைய தமிழர் பிரதிநிதிகள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்த போதும் அதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி செய்யப்பட்ட குடியேற்றங்களினால் தமிழர் தாயகத்தின் பத்தாயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பளவு இன்றுவரை அபகரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலப்பரப்பு சுவிசின் நாலில் ஒருபகுதிக்கு ஒப்பானது!

தமிழர்கள் மகாத்தமா காந்தியை முன்மாதிரியாக கருதியமையினால் தமது அரசியல் கோரிக்கைகளை அமைதி வழியிலும் ஐனநாயவழியிலும் சத்தியாக்கிரகம் ஊர்வலங்கள் போன்றவற்றின் மூலம் அடைய முயன்றனர். ஆனால் உண்ணாவிரதமிருந்தவர்கள் பொல்லுக்கொண்டு அடிக்கப்பட்டதும் ஊர்வலம் சென்றோர் பொலிசாரினால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுமே நடந்தேறின. ஊர்வலங்களும் ஒன்றுகூடல்களும் இராணுவத்தினரைக்கொண்டு அடக்கப்பட்டன. 1956, 1958, 1962, 1974, 1977, 1983 ம் ஆண்டுகளில் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதபடுகொலகள் மேற்சொன்னவற்றிற்கு உலகறிந்த சாட்சியங்களாக விளங்குகின்றன. இப்படியாக ஒவ்வொரு அமைதிவழிப்போராட்டாங்களும் வன்முறைமூலம் அடக்கப்பட்டன.

அப்போதைய சிலோன் 1972 ல் புதிய அரசியல் யாப்பு மாற்றத்துடன் சிறீலங்காவாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதுடன் இனமுரண்பாடு புதிய வடிவம் பெற்றது. புதிதாக வடிக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் இதற்கு முன்னிருந்த அரசியல்யாப்பில் சிறுபாண்மை இனத்தவரை பாதுகாக்கவென இருந்த சரத்துகள் முற்றாக அகற்றப்பட்டு புதிய யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் சிங்களமக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான இறுதி நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இத்தருணத்தில் தமிழர்களிண் சகல கட்சிகளும் ஒன்றாக அணிவகுத்து யாழ்-- வட்டுக்கோட்டையில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். அதன்படி அடுத்த தேர்தலில் தமிழீழத்தினை மீள நிறுவுவதற்காண அங்கீகாரத்தை தமிழர்களிடம் கோருவதற்காண முடிவை மேற்கொண்டதுடன் இந்த அரசியல் முறையிலான தீர்வுக்கு இலங்கை அரசு மறுக்கும் நிலையில் இதை ஆயுதவழிப்போராட்டத்தினூடு பெறுவதாகவும் முடிவெடுத்தனர். 1977ல் நடந்த வாக்கெடுப்பில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழீழபிரகடனத்திற்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் கூட்டணியானது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக இடம்பிடித்தது. தமிழர்களது தமிழீழத்திற்காண அனுமதியானது இலங்கை அரசின் மாகாணசபை என்ற புதியதொரு வாக்குமூலத்தினால் கிடக்கையில் போடப்பட்டது. இந்த வாக்குறுதியும் வழமைபோல் பிற்காலத்தில் நிறைவேற்றப்படவில்லை.

இதுவே இதுவரைகாலமும் பின்புலத்தில் இருந்த விடுதலைப்புலிகளை தமிழர்களிற்கு தலைமை தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியது. விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள் தமிழீழத்திற்கு அளித்த ஆணையை மதித்து அதை நிறைவேற்றப்புறப்பட்டனர். அதாவது ஒரு சுதந்திர தமிழீழத்தை அமைத்தல். தமிழ்மக்கள் தமது வாக்குகளை தமது ஆங்கிலேயரின் வருகையால் இழந்து போன தாயகத்தை மீளபெறுவதற்கே அன்றி இலங்கை அரசில் எதிர்கட்சி பதவிபெற அளிக்கவில்லை. ஒப்பந்தங்களும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் காற்றிலே பறந்தமையே எமது வரலாற்று அனுபவமாக இருக்கின்றது. அமைதிவழிப்போராட்டங்களும் ஐனநாயக வழிமுறையிலான முயற்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் உள்ளங்களை உசுப்பவில்லை என்பதையுமே வரலாற்றுப்பாடமாக கற்றுக்கொண்டுள்ளோம். இதனால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டனர். அதேவேளையில் சமஅந்தஸ்தத்துடனான எந்தபேச்சுவார்த்தைக்கும் அவர்கள் சமாதான கதவுகளை திறந்தே வைத்திருந்தனர்.

இது தமிழ்மக்களின் விருப்பு:

சற்று யோசித்துப்பாருங்கள்! தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்மக்களிடையே கடந்த 36 வருடங்களிற்கு மேலாக நிலைத்து நிற்று இன்று தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக உயர்வடைந்துள்ளனர். இதற்காக அவர்கள் அளப்பரிய தியாகங்களை செய்ததுடன் பற்றுறுதியுடன் போராடி தமிழர்மனதில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் தமிழர்களின் செல்லப்பிள்ளைகள் இவர்களை அவர்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் மக்களாகிய நாங்களே இவர்களை அரவணைத்து இன்று இவளவு தூரம் வளர்த்து விட்டுள்ளோம். அங்கு களத்தில் நிண்று எமது எதிர்கால வாழ்விற்காக போராடும் அணைவரும் எமது குழந்தைகளே. தமிழர்களாகிய எமது பூரண ஆதரவின்றி இவ்வளவு காலம் இவர்கள் இருந்திருக்க முடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள். உங்கள் புரிந்துணர்விற்காக கேட்கின்றோம். மக்களின் ஆதரவின்றி அன்று சுவிசின் ஓருமைப்பாட்டு வீரர்கள் உங்கள் மத்தியில் வளர்ந்திருக்க முடியுமா? அதற்கான பதில் இல்லை என்றே அமையும். அவர்கள் இன்றி இன்று இந்த சுவிஸ் என்ற நாடும் மக்களும் உருவாகியிருக்க முடியாது. அதோ போலத்தான் எமக்கும். தமிழீழ விடுதலைப்புலிகள் இன்றி தமிழர்கள் இல்லை. அவர்கள் இல்லையெனில் தமிழர்கள் தேசப்படத்தில் இருந்து மறைந்திருப்பார்கள்.

அரசியல்வழிப்போராட்டங்கள் பலனளிக்கவில்லை:

1983ம் ஆண்டிற்கு முன்னர் உங்களில் யாராவது இலங்கையில் பிரச்சனை என்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா? தமிழர்கள் உண்ணாவிரதம் சத்தியாகிரகம் போன்ற அறவழிப்போர்களை தொடுத்ததை எங்காவது வாசித்துள்ளீர்களா? 1952 ம் ஆண்டில் தமிழர் தாயகம் சிங்களவர்களால் குடியேற்றப்பட்டதை அறிந்தீர்களா? 31.05.1981 ல் தென்னாசியாவின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமான யாழ் நூலகம் இலங்கை அரசினால் தீயிடப்பட்டதை அறிந்துள்ளீர்களா? இந்த நூல்நிலையத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழர் வரலாற்று நூல்கள் யாவும் எரிந்து போயின. 1956 ல் தமிழர்கள் மொழிச்சட்டத்தை எதிர்த்து செய்த அறவழிப்போராட்டங்களை அறிந்துள்ளீர்களா? அல்லது 1958 ல் சிங்கள சிறி சின்னத்தை வாகனங்களில் பொருத்த மறுத்து போராடியதனால் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்தீர்களா? அல்லது 1962 ல் ஊர்வலமாக சென்ற தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை அறிந்துள்ளீர்களா? அல்லது 1971 ல் தமிழ்மாணவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களை பற்றி அறிந்துள்ளீர்களா? நாம் நினைக்கின்றோம் இவற்றிக்கெல்லாம் இல்லை என்ற பதிலே உள்ளதென. இந்த சகல அரசியல் போராட்ட வழிமுறைகள் யாவும் எந்தவகையிலும் செவிமடுக்கப்படாமல் போயின. ஆனால் என்று தமிழர்கள் முதன் முதலாக 1983ல் இலங்கை இராணுவத்தின் வாகன தொடரணியை தாக்கினார்களே அன்று நிச்சயமாக இச்செய்தியை வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். அதுவரை உலகம் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் தாக்கப்பட்டும் திரும்பிப்பார்க்கவில்லை.

சர்வதேச சமூகத்தின் கடமை:

இங்குதான் இன்று தமிழர்களுக்கு நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் சர்வதேசத்தின் பொறுப்புணர்வு சார்ந்து யோசித்துப்பார்க்கின்றோம். 1977ம் ஆண்டில் தமிழர்களின் வாக்கெடுப்பை சரியான முறையில் உலகம் கணக்கெடுத்திருந்தால் இன்று உலகெல்லாம் சிதறுண்டு கிடக்கும் பத்து இலட்சம் தமிழர்கள் தமது தாயகத்தில் இருந்திருப்பார்களே. 70 ஆயிரததுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்: 17000 யிரத்துக்கும் மேற்பட்ட களத்திலே பலியான இளைஞர் யுவதிகள் இன்று ஒரு குடும்பவாழ்வுடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பரே! இவற்றைவிட இன்று உள்நாட்டிலேயே தமது வீடுகளுக்கு செல்லமுடியாமல் அல்லல்படும் பல்லாயிரம் அகதிகள் தமது நாளாந்த கடமையை செய்தவண்ணம் தமது வீடுகளில் இருந்திருப்பரே. இலங்கைத்தீவின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்திருக்காதே. இத்துடன் நியாயமற்ற ஒரு போருக்காக தமது உயிர்களையும் இழந்து நிற்கும் சிங்கள சிப்பாயும் எம் கண்களில் இருந்து மறையவில்லை என்பதை கூறிக்கொள்கின்றோம்.

தெரிந்தும் மௌனம்:

இன்றுவரை சர்வதேச சமூகம் இலங்கையின் இனஅழிப்பு போரை பார்த்து நின்றது மட்டுமல்லாமல் அதற்கு உதவிகளும் அளித்துள்ளது.

ஏன் இந்த தமிழர்விரோத போக்கு?

தமிழர்கள் என்னதான் பிழை செய்து விட்டனர்?

அல்லது இந்த உலகத்திற்கு என்ன தீங்கிழைத்து விட்டனர்?

ஏன் சர்வதேசம் எமது குரலிற்கு செவிசாய்க்கவில்லை?

ஏன் நாம் அமைதியாக வாழக்கூடாது?

ஒரு சாதாரண வாழ்வு வாழ தமிழருக்கு உரிமையில்லையா?

ஐ.நா. மன்றத்தின் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒரு தமிழ் குழந்தையின் அலறல் ஏன் கேட்கவில்லை?

தமிழ்குழந்தையொன்றிற்கு அப்படியான தகுதி எதுவும் இல்லையா?

ஒரு 4மாத குழந்தையும் 2 வயது பாலகனும் உலகத்தின் கண்முன்னால் எப்படி இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்படலாம்.?

பெண்கள் அமைப்புக்கள் என்ற யாவும் தமிழ்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்படும் போது ஏன் மௌனம் காக்கின்றன?

எமது புனர்வாழ்வப்பணியாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகும்போது இந்த தொண்டு நிறுவனங்கள் யாவும் பின்நின்று தயங்குவது எதற்காக?

எமது விடுதலைவிரும்பிகள் தெருவிலே கேட்பாரின்றி சுடப்படுகையில் இந்த ஐனநாயகவாதிகள் எங்கு போயினர்?

எமது பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஐசிங்கம் போன்றோர் தேவாலயத்தில் நத்தார் பிரார்த்தனையில் இருந்த போதுகூட சுட்டெறியப்பட்ட போது எல்லோரும் எங்கு சென்றனர்? தமிழர்களின் உயிர் என்ன அவளவு மலிவானதா?

வேலை செய்யும் போதும் நித்திரையிலும் வழியிலும் கோயிலிலும் தமிழர்கள் கொல்லப்படுகையில் உலகின் மனச்சாட்சி எங்கு போனது?

இதைகண்டும் ஏன் உலகம் மௌனித்து நிற்கின்றது?

தமிழர்களிற்கு நியாயம் என்பது கிடையாதா? இவற்றிற்கு உங்களது பதில்தான் என்ன??

எமக்கு தேவை இயல்புநிலை:

தமிழர்களுக்கு இயல்பு நிலை என்பது இருட்டிலும் இறப்பிற்குள்ளும் வாழ்வதாகவே உள்ளது. நாங்கள் வேண்டுவதெல்லாம் ஒன்று மட்டுமே. அதாவது

காலையில் எழும்போது சிப்பாய் இல்லாத ஒரு வீட்டு முற்றம் வேண்டும்

தடுப்புகள் இல்லாத அன்றாட வாழ்வு வேண்டும்

அச்சமின்றி எமது பிள்ளைகள் பள்ளி சென்றுவர ஒரு பாதுகாப்பான தெரு வேண்டும்

எமது உழவன் வயலில் செல்கையில் கண்ணிவெடி இல்லாத ஒரு தரை வேண்டும்

எமது மீனவர்கள் கடலில் செல்லும் போது தாக்கப்படாத ஒரு அமைதியான நாள் வேண்டும்

எமது பிள்ளைகள் வீதியில் அச்சமின்றி செல்லகூடிய ஒரு இயல்பு நிலை வேண்டும்.

எமது பெண்பிள்ளைகளை பயமின்றி வெளியே அனுமதிக்க கூடிய ஒரு இயல்பு நிலை வேண்டும். கொலையும் வன்முறையுமற்ற அன்றாட வாழ்வு வேண்டும்..

பயமும் இடப்பெயர்வுமற்ற ஒரு பொழுது வேண்டும்.

அமைதியாக மதியஉணவு அருந்திட ஒரு கணம் வேண்டும்.

நண்பனுடன் தெருவீதியில் பயமின்றி நின்று கதைத்திட ஒரு நாள் வேண்டும்.

எமது பிள்ளைகள் தனியாக பள்ளிசென்று வர ஒரு அமைதி வேண்டும்.

முற்கம்பிவேலிகளும் மண்மூட்டைகளுமற்ற ஒரு நாள் வேண்டும்.

சொந்த வீட்டில் வாழ்வதற்கு ஒரு நாள் வேண்டும்.

சொந்த மண்ணில் வாழ்ந்திட ஒரு நாள் வேண்டும்.

இந்த புலம்பெயர் வாழ்விற்கு ஒரு முடிவு வேண்டும்.

இந்த இயல்பு நிலையை தான் நாம் வேண்டி நிற்கின்றோம். வேறொன்றுமில்லையே.

முடிவு இன்னும் தெரியவில்லை:

இந்த இயல்புநிலை எம்மிடமிருந்து 30 வருடங்களிற்கு முன்னமே பறிக்கப்பட்டு விட்டது. பிரத்தியேகமாக கடந்த நான்கு வருட சமாதான காலத்தில்கூட இது எட்டப்படவில்லை. மாறாக இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரிக்கப்பட்ட படைவலுவினால் இன்னும் கூடியுள்ளன.முற்கம்பி வேலிகளும் பாதுகாப்பு அரண்களும் மேன்மேலும் அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. போராட்ட காலத்தைவிட இன்று அதிகளவிலான மக்கள் காணாமல் போகின்றனர். பெண்கள் தினமும் பாலியல் கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. விடுதலை ஆதரவாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் மிருகங்களை போல வேட்டையாடப்படுகின்றனர். இவை யாவும் நோர்வேயின் அனுசரனையுடன் ஐரோப்பா சமாதானத்தை முன்னெடுக்கும் சமகாலத்தில் அரங்கேறுகின்றன. நான்கு வருட சமாதன முயற்சியின் பின்னரும் தமிழருக்கு அவர்களது வாழ்வியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. தொடாந்தும் அவர்கள் போர்ச்சூழலிலேயே வாழ்கின்றனர். இத்தகைய சூழலில் சர்வதேச சமூகத்தின் பார்வையாளர் மனோபாவமானது தமிழர்களாகிய எமக்கு ஆழந்த கவலையையும் அதேநேரத்தில் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. இன்னும் எவ்வளவு காலம் உலகம் பார்த்துகொண்டு பொறுமை காக்க விரும்புகின்றது? கடசி தமிழன் இறந்த பின்னரா இலங்கை அரசை தடுத்து நிறுத் போகின்றீர்கள்? எங்கள் பொறுமை எல்லை மீறுகின்றது. எமது அவலக்குரலை தயவு செய்து கேளுங்கள். இலங்கை அரசின் அழிப்புவேலைகளையும் இராணுவபலப்படுத்தலையம் தடுத்து நிறுத்துங்கள்.

பொறுத்தது போதும்:

இன்றுவரை எந்த நாடும் எமது போராட்டத்திற்கு உதவியதோ அங்கீகாரம் அளித்ததோ கிடையாது. இருந்தும் நாம் சுயமாக வளர்ந்து சொந்த காலில் எம்மை நாம் பாதுகாக்கும் தகமையுடன் நிமிர்ந்து நிற்கின்றோம். இந்த தருணத்தில் உலகம் எமது கவசமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்து எமது கவசத்தை கலைய முனைவது எமக்கு வேதனைளிக்கின்றது. இந்த நடவடிக்கை மூலம் எம்மை எதிரியிடம் பலியாக்கவே உலகம் விரும்புவதாக எண்ணத்தோன்றுகின்றது. இத்தகைய போக்கை தமிழர்களாகிய நாம் என்றும் அனுமதிக்கப்போவதில்லை.

கடந்த நான்கு வருட யுத்துநிறுத்த காலத்தில் சர்வதேசசமூகம் இலங்கை ஆட்சியாளர்களின் விரோத மனப்பாங்கையும் அமைதிதீர்வில் அவர்களுக்குள்ள நாட்டமின்மையையும் அறிந்திருப்பார்கள் என நம்புகின்றோம். எந்த ஒப்பந்தத்தையும் இவர்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதே இந்நிலமை எடுத்துக்காட்டுக்கின்றது. இந்த பாராமுகமான போக்கையே நாம் கடந்த அரைநூற்றாண்டு காலமாக அனுபவித்து பொறுமையின் எல்லைக்கு வந்துள்ளோம். இதுவரைகாலம் போல் இனியும் இலங்கை அரசானது உலகையும் தமிழர்களையும் ஏமாற்றவே முயலுவர்.இதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதே எமது அவா.

அதனால் இனியும் பொறுமை காக்காது சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் தலையிட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த அடிப்படையிலேயே ஒரு நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும். சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது இனியும் பிரயோசனமற்ற சாத்தியமற்ற விடயம் என்பதை விளக்க இன்னும் உதாரணங்கள் தேவையில்லை. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நாம் கற்றுக்கொண்டது இதை தவிர வேறில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளை ஐரொப்பிய ஒன்றியம் தடைசெய்தல் பிழையான முடிவாகும்:

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை சார்ந்த தலையீடும் அனுகுமுறையும் நடுநிலைமையின் பாட்பட்டதாக இருக்க வேண்டும் என வேண்டுகின்றோம்: சமநிலையற்ற அனுகுமுறையினால் இலங்கையின் இனப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் நிலை தோன்றும். தமிழீழ விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. மாறாக இலங்கை அரசானது தனது போக்கில் மூர்க்கம் கொண்டு தனது இனஅழிப்பு நடவடிக்கையை இதன்மூலம் துரிதப்படுத்த இது வழி வகுப்பதுடன் தமிழர்களின் பாதுகாப்பு அகற்றப்படுகின்ற நிலை தோன்றும். அதன்பின் தமிழர்களை காக்கவென யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளை தவிர்ந்த பாதுகப்பு தமிழர்களுக்கு வேறெதுவுமில்லை.

இதனடிப்படையில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் சர்வதேசசமூகத்தையும் வேண்டிக்கொள்வது யாதெனில்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைகளை அகற்றுவதுடன் அவர்களுக்கு அரசியல் வழியிலான தீர்வுகளுக்கு தகுந்த அகன்ற பாதையை அமைத்துக்கொடுத்து எமது பிரதிநிதிகள் சம பங்காளிகளாக பேச்சுவார்த்தை மேசையில் அமர வழிசெய்யவும்: அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது பிரதிநிதிகள் இரண்டாந்தரப்பிரiஐகளாக பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதை நாம் ஒருபோதும் அனுமதியோம். அப்படியொரு நிலைவரின் அவர்களை நாம் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப தலைப்படோம்.

தமிழீழவிடுதலைப் புலிகளை தடைசெய்வதால் முழு தமிழ்சமூகமுமே பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளினால் அமைதிவழித்தீர்வுகள் பாழடிக்கப்படும் என்பது திண்ணம். இத்தகைய அதிகாரபிரயோகத்தால் அமைதிப்பேச்சுக்கள் பாதிக்கப்படுவதுடன் முறிவடைந்து முழமையான யுத்தம் ஒன்றே ஏற்படும்: இவற்றிற்கும் மேலாக இத்தடையின் நோக்கம் என்னவென தமிழ்மக்களாகிய எமக்கு புரியவில்லை. ஐரோப்பா வாழ் தமிழர்களாகிய நாங்கள் என்றும் எங்கள் போராளிகளை அரவணைத்தே வருகின்றோம். இச்செயல்பாடானது அவர்கள் இங்கு வந்தாலும் வரமுடியாமல் போனாலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. இ;த்தடைமூலம் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்ப்பந்திக்க முயற்சிப்பின் இது ஒரு பிழையான அணுகுமுறையாகவே இருக்கும். அதைவிட ஐரோப்பிய ஒன்றியம் எமது போராட்ட பரிணாமத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுமே கொள்ளத்தகும். எமது வளர்ச்சியானது எந்து புற ஒத்துழைப்பும் இன்றி சொந்த உழைப்பில் மக்கள் சக்தியினால் எட்டப்பட்டதாகும். மக்கள் சக்தியின் மகத்துவத்தை யார் விளங்காவிட்டாலும் ஐரோப்பா விளங்கும் என எதிர்பார்க்கின்றோம். இந்த மக்கள் சக்தியையும் அவர்களது அபிலாசைகளையும் மதிக்கும் படி தாழ்மையுடன் கோருகின்றோம். இந்த கணத்தில் நாங்கள் தெளிவாகவும் அறுதியாகவும் சொல்ல விரும்புவது:

எங்கள் அபிலாசைகளும் விருப்புகளும் தமிழீழ விடுதலைப் புலிகளையே மையமாக கொண்டுள்ளது.

தமிழீழமே எமது இறுதி முடிவு:

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர்களின் அடிப்படைஉரிமைகள அங்கீகரி. அதாவது எமது சுயநிர்யஉரிமை, தேசியம் மற்றும் தாயகத்தை அங்கீகரி!

எமது ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரி தடை செய்யாதே!

எமது ஏக பிரதிநிதிகளை தடைசெய்யாதே!

எமது ஏக பிரதிநிதிகளின் பிரயாணங்களையும் அரசியல் வேலைகளையும் இடைநிறுத்தாதே!

தமிழர்களின் விடுதலைச்சின்னம் தமிழீழ விடுதலைப்புலிகளே!!

மனிதபடுகொலைகளை நிறுத்த உதவுங்கள்! இலங்கை இராணுவத்தின் தமிழ்மக்கள் மீதானதும் போராளிகள் மீதானதுமான தாக்குதல்களை நிறுத்த வழி செய்யுங்கள்!

இலங்கையின் அரசபயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வை!

தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்களும் வேறல்ல!

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளானால் நாங்களும் பயங்கர வாதிகளே!

எல்லோரையும் சமமாக நடத்து!

தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாட்டை நன்கு உணர்ந்து செயல்படு!

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.