Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம்

"குடி இருந்த திண்ணை"

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் உறவுகளே கலைஞன் அவர்களின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளி வந்த வெள்ளி விழா திரைப்படமான " கடலைக்கு கடலை" திரைப்படத்தின் பின்பு உங்கள் யாழ் வெள்ளித்திரையில் பல வருட இடைவெளியிர்க்கு பின்பு யாழ் கள உறவுகளின் துடிப்பு மிக்க நடிப்பில் அனைத்து அம்சங்களுடனும் கூடிய உன்னதமான திரைக்காவியம்

"குடி இருந்த திண்ணை"

கருத்து சிந்தனை உருவாக்கம் மற்றும் தயாரிப்பு

"சுண்டல்"

எழுத்து மற்றும் இயக்கம்

"நெருப்பு நீலமேகம்"

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு வந்த சோதனை!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் யாழ் கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு வந்த சோதனை!!

ஆகா ஆகா இந்த டைட்டில் கூட நல்லா இருக்கு வரிவிதிப்பில இருந்தும் தப்பிக்கலாம் இத அடுத்த வாட்டி இத பயன்படுத்திக்கிரன் :D

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையின் சாதனை இனி ஒரு பயல் எங்களைப் பற்றி கதைக்க முடியாது திண்ணையில் சும்மா இருந்து கடலை போட்டதா :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப வெளி வருது மச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Production வேலையள் நடந்து கொண்டு இருக்குடா வெகு விரைவில் வரும் மச்சான் மாவீரர் தினம் எல்லாம் முடியட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்கேடா மச்சி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Production மேனேஜர்: நந்தன் அண்ணா

ஒப்பனை: வல்வை அக்கா

இசை மற்றும் பின்னணி இசை: அன்பு அண்ணா மற்றும் தமிழ் சூரியன் அண்ணா

செய்தி தொடர்பு: சுபேஷ்

கலைஞர்கள் வழங்கல்: இசை செல்வன் அண்ணா

சாப்பாடு: தமிழரசு மெஸ்

சண்டைபயிற்சி: விசு மாஸ்டர்

நடன வடிவமைப்பு: சுமேரியர் மாஸ்டர்

Location தெரிவு: சாத்திரி அண்ணா

Stills : பையன்

ஒளிப்பதிவு: ஜீவா

ஒலிப்பதிவு: வந்திய தேவன்

குரல் வழங்குபவர்கள்: வல்வை ஊரான் மற்றும் ஷாந்தி அக்கா

பின்னணி பாடுபவர்கள்: அப்ரஜீதன், ஷோபா, மற்றும் கல்யாணி

தயாரிப்பு பண உதவி: கிருபன் ஜி வங்கி

மற்றும் அர்ஜுன் அண்ட் அர்ஜுன் finance

இப்பவே கண்ணை கட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு: தமிழரசு மெஸ்
:rolleyes:

படத்தின் எழுத்து ஓட்டத்தில் என்ர பெயரை பெரிசா எல்லா மொழிகளிலும் போடவேணும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய திரைப்படம் வரும்வரை 2008 இல் வெளி வந்த கடலைக்கு கடலை திரைப்படத்தை தருகின்றோம்

[size=5]கடலைக்கு கடலை[/size]

[size=4] கதாநாயகன்: சுண்டல்

கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா

கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி)

பாடல்வரிகள்: தமிழ்தங்கை

பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்)

ஒப்பனை: அனிதா

ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி

மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா)

கதை வசனம், இயக்கம்: முரளி

டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல்[/size]

******

காட்சி 01

(குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து அடுப்பில் உள்ள எண்ணைச் சட்டியினுள் எறிகின்றார். சுடுகின்ற எண்ணை தெறித்து முகத்தில் படுகின்றது. வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]காதல் என்னும் அடுப்பில்வேகி

பூத்திருந்த சுண்டல் நான்!

தூயா என்னும் சமையல்காரிக்காய்

காத்திருந்த சுண்டல் நான்!

அவள் சுண்டல் சமைத்தபோது

ஏன் அன்பை ஊற்றவில்லை?

சுண்டல் சமைத்தபின்னர் - ஏன்

அதை தின்று பார்க்கவில்லை?[/size]

(சுண்டல் தனது பழைய காதலி தூயாவுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

தூயா: டியர் பிரண்ட் சுண்டல், நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் தூயா. கடைசியில என்ன ஆக வெறும் நண்பன் எண்டுமட்டும் சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

தூயா: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு நண்பனா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

தூயா: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

தூயா: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் டியர் பிரண்ட்? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் buddy. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு நண்பனிண்ட வாழ்த்துகள் தூயா! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 02

(கிரிக்கட் விளையாடும் மைதானத்தில் உள்ள ஒரு குந்தில் வானத்தை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து எத்தி எத்தி எறிந்து வாயினுள் போடுகின்றார். அது இலக்குத்தவறி பக்கத்தில் உள்ள ஈரமான சேற்று நிலத்தில் விழுகின்றது. வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]என்னடி இன்னிசை நீ

சொன்னது என்னாச்சு?

நேற்றோடு நீ திண்ட சுண்டல்

சேற்றோடு போயாச்சு![/size]

(சுண்டல் தனது பழைய காதலி இன்னிசையுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

இன்னிசை: என்ன அண்ணா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் இன்னிசை. கடைசியில என்ன அண்ணா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

இன்னிசை: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அண்ணாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

இன்னிசை: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

இன்னிசை: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அண்ணா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அண்ணா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அண்ணாவிண்ட வாழ்த்துகள் இன்னிசை! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 03

(லண்டனில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உள்ள ஒரு வாங்கில் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சாய்ந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து மேசையில் உள்ள சாப்பாட்டு தட்டில் போடுகின்றார். சாப்பாட்டு தட்டின்மீது இலையான்கள் பல வந்து மொய்க்கின்றன. வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]நன நன நன நன

நன நன நன நனா..!

நன நன நன நன

நன நன நன நனா..!

சுண்டலை விரும்பிய கறுப்பியின் உள்ளம்

சுண்டலை முழுதுமாய் உண்ணவில்லை!

சுண்டலை ஒருமுறை விழுங்கிய பின்னர்

சுண்டலை திரும்பதொடவும் இல்லை![/size]

(சுண்டல் தனது பழைய காதலி கறுப்பியுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

கறுப்பி: என்ன தம்பி சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் கறுப்பி. கடைசியில என்ன தம்பி எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

கறுப்பி: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு தம்பியா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

கறுப்பி: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

கறுப்பி: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் தம்பி? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் தம்பி. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு தம்பியிண்ட வாழ்த்துகள் கறுப்பி! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 04

(கடற்கரை ஓரத்தில் உள்ள பாறையில் வானத்தை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் இருக்கும் சுண்டலை கடலினுள் மெதுவாக ஒன்று ஒன்றாக தூக்கி எறிகின்றார்.. வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]நல்லதோர் சுண்டல் சமைத்தே அதை

நலம்கெட கடலினுள் எறிவதுவோ?

சொல்லடி நிலாமதி - நீ இந்த

சுண்டலை ஏன் சுவைக்க இல்லை?[/size]

(சுண்டல் தனது பழைய காதலி நிலாமதியுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

நிலாமதி: என்ன மாமா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் நிலாமதி. கடைசியில என்ன மாமா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

நிலாமதி: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு மாமாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

நிலாமதி: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

நிலாமதி: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் மாமா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் மாமா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு மாமாவின்ட வாழ்த்துகள் நிலாமதி! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 05

(பறக்கும் விமானத்தில் உள்ள இருக்கையில் மேலே வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து பக்கத்து இருக்கையில் உள்ள ஒர் வெள்ளைக்காரியின் வாயில் ஊட்டிவிடுகின்றார். வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]ஓ மானே மானே மானே கவரிமானே - நீ

தின்பதற்கு சுண்டல் தந்தேன்

சின்னப் பெண்ணே![/size]

(சுண்டல் தனது பழைய காதலி கவரிமானுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

கவரிமான்: என்ன அப்பா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் கவரிமான். கடைசியில என்ன அப்பா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

கவரிமான்: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அப்பாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

கவரிமான்: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

கவரிமான்: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அப்பா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அப்பா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அப்பாவிண்ட வாழ்த்துகள் கவரிமான்! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள்: "போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்..." சுண்டலுக்கு இப்போது வாழ்க்கை வெறுக்கின்றது. தனது உண்மையான காதலை ஏற்றுக்கொள்ளாததோடு மட்டும் அல்லாது வெறும் நண்பன், அண்ணா, தம்பி, மாமா, அப்பா என்று எல்லாம் கூறி தன்னை பெண்கள் கிண்டலும் செய்து இருப்பது பற்றி மிகவும் கோபம் அடைகின்றார். சுண்டலுக்கு பெண்களை கண்டாலே இப்போது வெறுப்பு ஏற்படுகின்றது. பழிக்கு பழி வாங்கவேண்டும் என்று துடிக்கின்றார்.)

******

காட்சி 06

(வீட்டில் உள்ள கட்டிலில் மேலே கூரையை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் வெண்ணிலா அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து அதன் அழகைப்பார்த்து ரசித்துவிட்டு அதை உண்ணாமல் யன்னலினூடாக வெளியில் எறிகின்றார். வாயில் பாடல் வருகின்றது..)

[size=4]பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன்

நீ வருவாயென...

பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன்

நீ வருவாயென..

சுண்டலாக நீ வருவாயா?

எண்ணையாகிறேன்...

கடலையாக நீ வருவாயா?

வெண்ணையாகிறேன்..[/size]

(வெண்ணிலா தனது பழைய காதலன் சுண்டலுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

சுண்டல்: என்ன வெண்ணிலா சொல்லுறீங்கள்?

வெண்ணிலா: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் சுண்டல். கடைசியில என்ன அக்கா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

சுண்டல்: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அக்காவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

வெண்ணிலா: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

சுண்டல்: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற ஆண் ஒருத்தன் கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பான். அவனப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

வெண்ணிலா: (மெளனமாக இருக்கின்றார்)

சுண்டல்: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அக்கா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அக்கா. குட் லக், டேக் கெயார்.

வெண்ணிலா: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அக்காவிண்ட வாழ்த்துகள் சுண்டல்! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள்: "போடா போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடா நாசமாப் போவாய்.." வெண்ணிலாவுக்கு இப்போது வாழ்க்கை வெறுக்கின்றது. ஆண்களை கண்டாலே வெறுப்பு ஏற்படுகின்றது.)

******

காட்சி 07

(பொல்லை ஊன்றியபடி நெடுக்ஸ் தாத்தா அவர்கள் சுண்டலை நோக்கி வருகின்றார். சுண்டலின் தோள்களில் தட்டி பாராட்டு தெரிவிக்கின்றார். தலையைக் குனிஞ்சுகொண்டு நிற்கும் வெண்ணிலாவைப் பார்த்து இவ்வாறு பாடுகின்றார்..)

[size=4]கடலைக்கு கடலை!

ஆஹா..

கடலைக்கு கடலை!

கடலைக்கு கடலை!

ஓஹோ..

கடலைக்கு கடலை!

கடலைக்கு கடலை!

ஹேஹே..

கடலைக்கு கடலை![/size]

******

காட்சி 08

(ஜம்பு பே(பி) ஒரு கடதாசியை விரித்து அதில் எழுதப்பட்டுள்ள பஞ்சை வாசிக்கின்றது...)

[size=4]கண்ணா, ஒழுங்காக கடலை போடுவதே உனக்கு எப்படி என்று தெரியவில்லை, இந்தக்கேவலத்தில நீயெல்லாம் எப்படி பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடக்கப்போகின்றாய்?[/size]

******

கடலைக்கு கடலை முற்றியது..

நன்றி! வணக்கம்!

:lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

குரல் வழங்குபவர்கள்: வல்வை ஊரான் மற்றும் ஷாந்தி அக்கா

முதலே எழுதினதை தாங்கோ வாசிச்சு மைக்ரெஸ்ட் எல்லாம் சரிபாக்க வேணும். :lol:

கடலைக்குக்கடலை முற்றுப்பெற பொல்லோடு வருகிற தாத்தா இனி[size=6] 'சுடலைக்கு பாடை'[/size] பாகத்தை நிறைவேற்றி வைப்பார். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது முதல் திரைப்பட தயாரிப்பான "குடி இருந்த திண்ணை" திரைப்பட வேலைகள் மிக மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன இயக்குனர் சுனாமி நெருப்பு நீலமேகம் அவர்கள் தென்னாபிரிக்காவின் தென்கோடி மூலை ஒன்றில் அமைத்திருக்கும் அடர்ந்த காட்டின் நடுப்பகுதி ஒன்றில் தன்னுடைய அடிப்பொடி உதவி இயக்குனர்களோடு மூளையை கசக்கி புழிந்து திரைக்கத்தை விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருகின்றார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இப்பொழுது தான் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொண்டு அண்ணை கதை ஒண்டு கற்ப்பூரம் மாதிரி பத்திகிச்சு அதை இன்னும் இன்னும் மசாலா தடவி develop பண்ணிட்டு இருக்கன் எண்டு சொல்லி இருக்கார்.....

இதேவேளை இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்க இருக்கும் தமிழ் சூரியன் அண்ணாவும் அன்பு அண்ணாவும் தங்களுக்கு தாய்லாந்த் இல் போய் இருந்து இசை அமைச்சா தான் நல்ல இசை எல்லாம் வரும் எண்டு அடம்பிபிக்கினம் இவையள் தாய் லாந்திர்க்கு இசை அமைக்க போயனமா இல்லை வேற எனத்திர்க்காவது போயனமா என்று ஒளிச்சு நிண்டு கவனிக்க தயாரிப்பாளர் சார்பில் தமிழ் Sri அண்ணாவும் அணுப்பி வைக்கப்படுகின்றார்கள்

ஏலே ..... சக்கரை பாண்டி ......... என்னோட ரோலை சொல்லும்லே :lol: :lol: :D .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏலே என்னவே இப்பிடி கேட்டுபுட்டிக என்னோட இணைந்து இணை தயாரிப்பு நீர்தானவே அட தவிடு வித்த காசெல்லாத்தையும் கொட்டி இந்த படம் எடுக்கிறோம்னு கவலை படதிருமோய்.... நம்ம டைரக்டர் நெருப்பு எல்லாத்தையும் பாத்துப்பான் வே

ஏலே ஹீரோயின் செலக்ட் பண்ணிடும்லே . நீரு பெரிய கிங்குலே ; நல்லா சலிச்சு செலெக்ட் பணும்லே :lol: :lol: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒளிப்பதிவு செய்யத் தயார் ஆனால் ஒரு பெட்சீனாவது இருக்கணும் சொல்லிட்டேன்.. :D:lol::icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Production மேனேஜர்: நந்தன் அண்ணா

ஒப்பனை: வல்வை அக்கா

இசை மற்றும் பின்னணி இசை: அன்பு அண்ணா மற்றும் தமிழ் சூரியன் அண்ணா

செய்தி தொடர்பு: சுபேஷ்

கலைஞர்கள் வழங்கல்: இசை செல்வன் அண்ணா

சாப்பாடு: தமிழரசு மெஸ்

சண்டைபயிற்சி: விசு மாஸ்டர்

நடன வடிவமைப்பு: சுமேரியர் மாஸ்டர்

Location தெரிவு: சாத்திரி அண்ணா

Stills : பையன்

ஒளிப்பதிவு: ஜீவா

ஒலிப்பதிவு: வந்திய தேவன்

குரல் வழங்குபவர்கள்: வல்வை ஊரான் மற்றும் ஷாந்தி அக்கா

பின்னணி பாடுபவர்கள்: அப்ரஜீதன், ஷோபா, மற்றும் கல்யாணி

தயாரிப்பு பண உதவி: கிருபன் ஜி வங்கி

மற்றும் அர்ஜுன் அண்ட் அர்ஜுன் finance

பிரச்சனையே இல்லை மச்சி எனக்கு...

எங்கட குமாரசாமி தாத்தா ..தமிழ் சிறி அண்ணா..இவைக்கு கூட ஸ்ரையில உடுப்படிச்சு அவையையும் இளம் பஸ்சங்கள் மாரி ஆக்கி காட்டுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏலே ஹீரோயின் செலக்ட் பண்ணிடும்லே . நீரு பெரிய கிங்குலே ; நல்லா சலிச்சு செலெக்ட் பணும்லே :lol: :lol: .

எலே என்னலே அதெல்லாம் டைரக்டர் ஏற்கனவே செலக்ட் பண்ணிடாருவே :D

நான் ஒளிப்பதிவு செய்யத் தயார் ஆனால் ஒரு பெட்சீனாவது இருக்கணும் சொல்லிட்டேன்.. :D:lol::icon_mrgreen::icon_idea:

உன்னோட ஆசைக்கு எடுக்கலாம் தான் மச்சி பட் தணிக்கை குழு பாத்திட்டு எல்லாத்தையும் கட் பண்ணிடும் டா எதுக்கும் டைரக்டர் கிட்ட கேப்பம்

பிரச்சனையே இல்லை மச்சி எனக்கு...

எங்கட குமாரசாமி தாத்தா ..தமிழ் சிறி அண்ணா..இவைக்கு கூட ஸ்ரையில உடுப்படிச்சு அவையையும் இளம் பஸ்சங்கள் மாரி ஆக்கி காட்டுவேன்

தாங்க்ஸ் த மச்சான் இவை ரெண்டு பேருக்கும் விக் தேடி களைச்சு போனந்தா ரஜனிக்கு விக் செய்யறவர் தான் தங்களுக்கும் செய்யணும் எண்டு அடம் பிடிகிறாங்க மச்சி :D

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை எடுக்க இருந்த ரைடக்ரரோடை சுண்டல் வாக்குவாதம் பட்டதால் படம் இப்போதைக்கு வெளி வராது என்பதை மன வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளுகிறேன்.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.